||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
024 ஆயனை வளர்த்தேனோ யசோதையாரைப் போலே|
ஒருத்தி மகனாய் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்தவன் கண்ணன்.
கண்ணன் குழ்ந்தைப் பருவத்தை அனுபவித்தவள் யசோதை மட்டுமே! அனைத்து பலன்களையும் யசோதை பெற்றிருக்கிறாளே! என்னால் அப்படி தாலாட்டு பாட முடியவில்லையே! என்று தேவகி நினைத்துக் கொள்வாளாம். இந்த ஆதங்கம் தேவகிக்கு இருந்தது. அந்த அளவுக்கு கண்ணனை வளர்க்கும் அனைத்து பலனையும் பெற்றவள் யசோதை. கிருஷ்ணர் கம்சனை வதம் செய்து, பெற்றோரை சிறை மீட்ட போது, தேவகி கேட்டுக் கொண்டதால், தான் பிறந்த கணத்திலிருந்து, அந்தக் கணம் வரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்ணன் தாய்க்குக் காட்சிப் படுத்திக் காட்டினான்.
யசோதை எப்பவும் தானே சாப்பிட மாட்டாள். கண்ணன் சாப்பிட்ட மீதியை சாப்பிட்டு தான் வழக்கம். ராட்ஷர்களை பார்த்து கண்ணன் பயந்து விட போகிறானே என்று பார்த்து பார்த்து தாயத்து காட்டி, பயந்து விடாமல் இருக்க என்னென்னவோ செய்வாளாம் யசோதை. அதே போல ஆழ்வார்கள் தங்களை யசோதையாகப் பாவித்து கண்ணனைக் கொண்டாடினார்கள்
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படி ஒரு பலனையும் நான் பெறவில்லையே! கண்ணனை குழந்தையாக எண்ணி வளர்க்கும் பரிவு என்னிடம் இல்லையே! அந்த அளவிற்கு பெருமை வாய்ந்த யசோதையா நான் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment