About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 20 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 126

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 96

ஸநாத் ஸநாதந தம: 
கபில: கபிரவ் யய:|
ஸ்வஸ்தி த³: ஸ்வஸ்தி க்ருத் ஸ்வஸ்தி 
ஸ்வஸ்தி பு⁴க் ஸ்வஸ்தி த³க்ஷிண:||

  • 897. ஸநாத் - அநுபவிக்கப்படுபவர். பழமையானவர்.
  • 898. ஸநாதந தமஹ் - மிகப் பழமையானவர்.
  • 899. கபிலஹ் - விளக்கம் உற்றவர். அழகான நிறமுடையவர்.
  • 900. கபிரவ்யயஹ - அழிவில்லா ஆனந்தத்தை அனுபவிப்பவர். எப்போதும் குறையாத பேரின்பத்தை அனுபவிப்பவர்.

(ஒன்பதாம் நூறு திரு நாமங்கள் நிறைவு)

  • 901. ஸ்வஸ்தி த³ஸ் - மகத்தான மங்களத்தைக் கொடுப்பவர். மங்களத்தை அளிப்பவர்.
  • 902. ஸ்வஸ்தி க்ருத் - மகத்தான மங்களத்தைச் செய்பவர். பக்தர்களுக்கு நன்மை செய்பவர்.
  • 903. ஸ்வஸ்தி - தானே மங்கள வடிவமாயிருப்பவர்.
  • 904. ஸ்வஸ்தி பு⁴க் - மங்களத்தைப் பரிபாலிப்பவர். பேரின்பத்தை அனுபவிப்பவர். பக்தர்களை, அவரது மகிமையை அனுபவிக்க உதவுபவர்.
  • 905. ஸ்வஸ்தி த³க்ஷிணஹ - இந்த மங்களத்தை யாக தக்ஷிணையாகத் தருபவர். தனது பக்தர்களுக்கு மங்களகரமான விஷயங்களை தக்ஷிணையாக வழங்குபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.63

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.63 

க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: 
ஸம்மோ ஹாத் ஸ்ம்ருதி விப்⁴ரம:|
ஸ்ம்ருதி ப்⁴ரம் ஸா²த்³ பு³த்³தி⁴ நாஸோ² 
பு³த்³தி⁴ நாஸா²த் ப்ரணஸ்² யதி||

  • க்ரோதா⁴த் - கோபத்திலிருந்து 
  • ப⁴வதி - ஏற்படுகிறது 
  • ஸம்மோஹஹ - பூரண மயக்கம் 
  • ஸம்மோஹாத் - மயக்கத்தினால் 
  • ஸ்ம்ருதி - நினைவின் 
  • விப்⁴ரமஹ - நிலை இழப்பு 
  • ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த் - நினைவு குழம்பிய பின் 
  • பு³த்³தி⁴ - அறிவு 
  • நாஸ² - இழப்பு 
  • பு³த்³தி⁴ - அறிவு 
  • நாஸா²த் - இழப்பிலிருந்து 
  • ப்ரணஸ்²யதி - வீழ்ச்சியடைகிறான்

கோபத்தால் பெரும் மூடத்தனம் உண்டாகிறது. மூடத்தனத்தால் நினைவாற்றல் தடுமாறுகிறது. நினைவாற்றல் தடுமாறிப் போய் விடுவதால் யோகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த புத்தியானது அழிவடைந்து போகிறது. புத்தி நாசத்தால் மனிதன் அழிகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.16

பரா வரஜ்ஞ: ஸ ருஷி: 
காலே நாவ்யக் தரம் ஹஸா|
யுக³ த⁴ர்ம வ்யதி கரம் 
ப்ராப்தம் பு⁴வி யுகே³ யுகே³||

  • பரா வரஜ்ஞஸ் - இறந்த கால நிகழ் காலங்களை அறிந்த
  • ஸ ருஷிஹி - அந்த வியாஸ பகவான்
  • அவ்யக் தரம் ஹஸா - யாராலும் அறிய முடியாத வேகத்தோடு கூடிய
  • காலேந -  காலத்தால்
  • பு⁴வி - நில உலகத்தில்
  • யுகே³ யுகே³ - ஒவ்வொரு யுகத்திலும்
  • ப்ராப்தம் -  உண்டாகிய
  • யுக³ த⁴ர்ம வ்யதி கரம் -  யுக தர்மங்களின் ஸங்கரத்தையும்

அனைவருக்கும் உபகாரமாக இருக்கும் தத்துவத்தை உணர்ந்து, அதையே மனனம் செய்கின்ற முனிவரும், பகவானை உள்ளபடி உணர்ந்தவரும், முக்காலமும் உணர்ந்தவருமான, இந்நிலவுலகில் அறியவொண்ணாத வேகமுடைய காலத்தின் கோலத்தினால், யுக தர்மங்களாகிய புண்ணிய - பாவங்கள் அடையும் மாறுதலையும், 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.61

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.61

சகார ஸக்²யம் ராமேண 
ப்ரீதஸ்² சைவாக்³நி ஸாக்ஷிகம்|
ததோ வாநர ராஜேந 
வைரா நுகத²நம் ப்ரதி|| 

  • ராமேண - ஸ்ரீராமரோடு 
  • ப்ரீதஸ்² ச - திருப்தி அடைந்தவராயும் 
  • ஏவ - உடனே 
  • அக்³நி ஸாக்ஷிகம் - அக்னி சாக்ஷியாய் 
  • ஸக்²யம் - ஸ்நேக உடன்படிக்கையை 
  • சகார - செய்தார் 
  • வாநர ராஜேந - வானர ராஜனாலே 
  • ததோ - பிறகு 
  • வைரா நுகத²நம் - த்வேஷத்துக்கு அனுகூலமான வார்த்தையை 
  • ப்ரதி – குறித்து

அக்னியை சாட்சியாகக் கொண்டு ராமனுடன் மகிழ்ச்சியாக நட்பை ஏற்படுத்திக் கொண்டான். பிறகு அந்த வானர ராஜன் ஸுக்ரீவன் வாலியுடனான தன் பகை குறித்த,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 104 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 104 - மகாபலியின் மகன் நமுசியை 
வானில் சுழற்றியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்

என்னிது மாயம்?* என்னப்பன் அறிந்திலன்*
முன்னைய வண்ணமே* கொண்டு அளவாய் என்ன*
மன்னு நமுசியை* வானிற் சுழற்றிய* 
மின்னு முடியனே! அச்சோ அச்சோ* 
வேங்கட வாணனே! அச்சோ அச்சோ!


வாமநனாய்ச் சென்ற திருமால் மாவலியிடத்தில் நீரேற்றுத் திரிவிக்கிரமனாய் வளர்ந்து அளக்கப் புகும் போது அது கண்ட மஹாபலி புத்ரனான நமுசி ஓடி வந்து

  • இது - யாசிக்கும் போதிருந்த வடிவம் மாறி அளக்கிற இது
  • என் மாயம் - என்ன மாயச் செய்கை!
  • என் அப்பன் - என் தந்தை
  • அறிந்திலன் - நீ செய்யும் இந்த மாயத்தை அறியவில்லை
  • முன்னைய -  நீ யாசிக்க வந்த போதிருந்த
  • வண்ணமே -  வாமனன் உருவையே
  • கொண்டு அளவாய் - கொண்டு அளப்பாயாக
  • என்ன - என்று சொல்ல
  • மன்னு - இப்படி பிடிவாதமாய் நின்ற
  • நமுசியை - அந்த நமுசி என்பவனை
  • வானில் - ஆகாசத்திலே
  • சுழற்றிய - சுழற்றி எறிந்தவனான
  • மின்னு முடியனே - ஜொலிக்கும் கிரீடத்தை அணிந்தவனே!
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • வேங்கடம் - திருமலையிலே
  • வாணனே - வசிப்பவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

எம்பெருமான் மஹாபலியிடன் பூமியை யாசிக்கும் போது சிறிய உருவினனாய் இருந்தவன் மூவடியை அளக்கும் போதோ திரிவிக்ரமனாய் அளவிடமுடியாத மிகப் பெரியவனாய் வளர்ந்தான். இது என் தந்தை அறியாத மாயச் செயல், யாசித்தபோது இருந்த சிறிய உருவத்தைக் கொண்டே அளக்கவேண்டும் என மகாபலியின் மகன் நமுசி என்பவன் கண்ணனை எதிர்த்து வற்புறுத்த, கண்ணன் நமுசியை ஆகாசத்திலே சுழற்றி எறிந்தான். ஜ்வலிக்கும் கிரீடத்தை உடையோனே, என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும். திருமலையில் வசிப்பவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 031 - திருச்செம்பொன்செய் கோவில் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

031. திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1268 - 1277 - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

ஊர்வேன் மடலை ஒழிவேன் மடம் நாணம்*
சேர்வேன் கரிய திருமாலை பார் அறிய*
அம்பொன் செய் கோயில் அரங்கன் அணி நாங்கூர்ச்*
செம்பொன் செய் கோயிலினில் சென்று*

  • பார் அறிய – உலகத்தவர் எல்லாம் உணரும் படி வெளிப்படையாக
  • மடம் நாணம் ஒழிவேன் – மடப்பத்தையும் நாணத்தையும் துறந்தவளாகி
  • மடலை ஊர்வேன் – மட லூர்ந்து செல்வேன். அதனாலேனும்
  • அம்பொன் செய் கோயில் அரங்கன் – அழகிய பொன்னினால் செய்யப்பட்ட கோயிலை உடைய திருவரங்க நாதனது
  • அணி – அழகிய
  • நாங்கூர் – திருநாங்கூரைச் சேர்ந்த
  • செம்பொன்செய்கோயிலினில் – திருச்செம்பொன் செய் கோயில் என்னும் ஸ்தலத்தில்
  • சென்று – போய்
  • கரிய திருமாலை – அங்கு எழுந்தருளியுள்ள கரு நிறம் உடைய எம்பெருமானை
  • சேர்வேன் – அடைவேன் யான்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 70

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 15

ஸ்கந்தம் 03

பகவானின் விநயம்

தம்மை வைகுந்த வாயிலில் தடுத்த பார்ஷதர்களான ஜெய விஜயர்களை ஸனகாதிகள் அசுரர்களாகும்படி சபித்தனர்.


ஸகல ஜீவர்களின் அந்தராத்மாவாக விளங்கும் பகவானுக்கு வாசலில் நடப்பது தெரியாதா. எல்லாம் முடிந்த பின்னர், தாமரைப் பூவைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரது திருவிளையாடலுக்கு வேறு யார் வசனம் எழுத இயலும்? புதிய அவதாரங்களுக்காக விதை போட்டவர் அவரே. பகவானின் அத்யந்த பக்தர்களான பார்ஷதர்களுக்கு வந்திருப்பவர்களைப் பற்றித் தெரியாதா? அப்படித் தெரியாதவர்கள் பார்ஷதர்கள் ஆக முடியுமா?

ஸனகாதியர் பெரும் ஞானிகள். அவர்களுக்குத் தான் ஒரு இடத்திற்குப் போனால், அங்குள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரியாதா? வாயிற் காவலரின் வேலை வருபவர்களை விசாரிப்பது என்று அறியாதவர்களா?

இரு பக்கமும் அவர்கள் தன்னிலை இழந்து இப்படி நிகழ்ந்ததன் காரணம் என்ன? அனைவரின் ஹ்ருதயத் தாமரைகளையும் ஆட்டுவிப்பவன் நானே என்பதாக தாமரையைச் சுழற்றிக் கொண்டு வந்தார் போலும். அதற்கேற்ற படியே பேசவும் செய்கிறார். பகவானைப் பார்த்ததும் ஸனகாதி முனிவர்கள் பிறந்த பயனை அடைந்ததாக மகிழ்ந்தனர். துதி செய்யத் துவங்கினர்.

முதலும் முடிவுமற்ற இறைவா, நல்லோர் தீயோர் அனைவர் மனத்திலும் விளங்கும் அந்தர்யாமி தாங்களே. ஆனால், ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்கிறீர்கள். எங்கள் தந்தையான ப்ரும்மா, தங்களைப் பற்றிய தத்துவங்களை எங்களுக்கு உபதேசித்தார். அப்போதே எங்கள் ஹ்ருதயத்தில் வந்து அமர்ந்து விட்டீர்கள்.

இன்று பரம ஸத்வ ரூபமான தங்களை தரிசிக்கும் பேறு பெற்றோம். யான் எனது என்ற அஹங்காரத்தையும், விருப்பு வெறுப்பையும் விட்ட முனிவர்களும் பக்தி யோகத்தின் வாயிலாகவே தங்களின் இந்த ரூபத்தைக் காண்கிறார்கள்.
நாங்கள் இதற்கு முன் செய்த பாவங்களால் நரக வாசம் கிட்டினாலும் பரவாயில்லை. ஆனால், எப்போதும் எங்கள் மனம் வண்டு போல் தங்கள் திருவடித் தாமரைகளையே சுற்ற வேண்டும். எங்கள் வாக்கு தங்களையே பாட வேண்டும். செவிகள் தங்கள் திருப்புகழையே கேட்கவேண்டும். தங்களைத் திரும்ப திரும்ப வணங்குகிறோம். இதைக் கேட்ட பகவான் மிகவும் மகிழ்ச்சியடைந்து கூறலானார்.

முனிவர்களே, என் பார்ஷதர்கள், என் எண்ணம் அறியாது, தங்களுக்கு அபசாரம்‌ செய்து விட்டனர். உங்களை அவமதித்த இவர்களுக்கு நீங்கள் விதித்த தண்டனை உகந்ததே. உங்களுக்கு இழைக்கப்பட்ட அபசாரம் உண்மையில்‌ எனக்கிழைத்தது      ஆகும். அவர்கள் சார்பாக நான் உங்களிடம்‌ மன்னிப்பு வேண்டுகிறேன். வேலையாள் செய்த தவற்றை எஜமானனின் குற்றம் என்று தான் பொது மக்கள் சொல்வார்கள். அது யஜமானனின் நற்பெயரை அழித்து விடும். அந்தணர்களிடம் அபசாரப் படுபவர்களை நான் வெறுக்கிறேன்.

நான் உங்களைப் போன்ற முனிவர்களுக்குச் செய்யும் பணி விடையால் தான் என் திருவடிகளுக்கு இவ்வளவு மகிமை. திருமகளும் எனை விட்டு அகலாமல் இருக்கிறாள். வேள்விகளால் நான் நிறைவு பெறுவதில்லை. தங்களைப் போன்ற பக்தர்கள் நல் உணவைப் புசித்தால் ஒவ்வொரு பிடியையும் நானே உண்பது போல் மனநிறைவு அடைகிறேன்.

யோக மாயையின் எல்லையற்ற சக்திகள் அனைத்தும் எனக்கு அடிமை. ஆனால் நானோ தங்களைப் போன்ற அடியார்களின் திருவடித் தூளியை என் சிரசில் தாங்குகிறேன். அந்தணர்களும், பசுக்களும், காப்பவர் அற்றுத் திரியும் ஸகல ப்ராணிகளும் என் திருமேனியே ஆகும். அவற்றை என்னிடமிருந்து வேறாய்க் காண்பவர்களை யம தூதர்கள் கிழிப்பார்கள். என் பார்ஷதர்கள் தவற்றை உணர்ந்து வணங்கி நிற்கிறார்கள். அவர்களது சாபத்திலிருந்து சீக்கிரமாக விமோசனம் அடைய வேண்டும். அதற்கு நீங்கள் தயை கூர்ந்து அருள் புரிய வேண்டும்.

ஈரேழு லோகங்களையும் அதன் ஜீவன்களையும் படைக்கும் பகவான், எப்படி தான் என்ற எண்ணம் துளியும்‌ இல்லாமல் தன் பக்தர்களிடமே விநயமாய்ப் பேசுகிறான். ப்ரும்மா மேலும் சொல்கிறார். தேவாதி தேவனைக் கண்டதுமே ஸனகாதியரின் சினம் மறைந்து விட்டது. அவர் அந்தணர்களைப் புகழ்ந்து பேசியதும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்து நின்றனர். பின்னர் உடல் புல்லரிக்கக் கை கூப்பிய வண்ணம், பகவானைப் பலவாறு துதி செய்தனர். பின்னர், தாங்கள் இந்த பார்ஷதர்களுக்கு வேறு தண்டனை அளித்தாலும் சரி, அல்லது தங்களிடமே வைத்துக் கொண்டாலும் சரி. இவர்களைச் சபித்ததற்காக எங்களுக்கு ஏதேனும் தண்டனை அளித்தாலும் சரி. எதுவாயினும் ஏற்கிறோம் என்றனர்.

பகவான் சொன்னார், "அந்தண ஸ்ரேஷ்டர்களே, தாங்கள் இவர்களுக்கு அளித்த தண்டனை முன்பே நிச்சயிக்கப்பட்டது. தாங்கள் வருந்த வேண்டா. இவர்கள் அசுரப் பிறப்பை அடைந்து என்னையே ஒருமுகமாய் நினைத்து விரைவில் என்னை அடைவார்கள். அதன் பின் ஸனகாதியர் பகவானை மீண்டும் வணங்கி விடை பெற்றுக் கொண்டு சென்றனர்.

அவர்கள் சென்றதும் பகவான் ஜெய விஜயர்களைப் பார்த்து, நீங்கள் பயமின்றிச் செல்லுங்கள். நீங்கள் வாயிற் காவல் பணியில் இருப்பதால் உங்கள் கடைமையைத் தான் செய்தீர்கள். நான் எல்லாம் வல்லவன் ஆயினும், அந்தண சாபத்தை மாற்ற விரும்பவில்லை. முன்பு நான் யோக நித்திரையில் இருந்த போது, மஹாலக்ஷ்மியை இவ்வாறு தடுத்தீர்கள். அப்போது அவளும் இதே சாபத்தை அளித்தாள். எனவே, அசுரராய்ப் பிறந்து என்னிடம் பகைமை கொண்டு வேறு எண்ணமே இல்லாமல் என் தியானத்திலேயே இருங்கள். அதுவே யோகமாகி, பாவம்‌ நீங்கப் பெற்று என்னை அடைவீர்கள்." என்று அவர்களுக்கு ஆறுதல் தரும் வண்ணம் கனிவுடன் பேசி விட்டு, தன் இருப்பிடம்‌ சென்றார். சமயத்திற்குத் தக்கவாறு, எதிரிலிருப்பவரின் மனோபாவம் தெரிந்து ஆறுதலாய்ப் பேசும் கலை பகவானுக்கே உரியது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்