About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 18 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 125

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 95

அநந்தோ ஹுத பு⁴க்³ போ⁴க்தா 
ஸுக²தோ³ நைகஜோ க்³ரஜ:
அநிர் விண்ண: ஸதா³ மர்ஷீ 
லோகா தி⁴ஷ்டா நமத்³ பு⁴த:||

  • 889. அநந்தோ ஹுத பு⁴க்³ போ⁴க்தா - மிகவும் மகிமையுள்ள இந்திரனையும், பிரமனையும் உடையவர். எல்லையற்றவர். எங்கும் நிறைந்தவர். நிலைத்திருப்பவர். காலம் மற்றும் இடத்தின் வரம்புகளைத் தாண்டிச் செல்லும் திறன் நிறைந்தவர். பூமியை அதன் தலையில் சுமந்து செல்லும் பாம்பாகிய ஆதிசேஷனாக (அனந்தன்) வெளிப்படுபவர். யக்ஞத்தைப் பாதுகாக்கிறார். 
  • 890. ஸுக²தோ³ - சுகத்தை அளிப்பவர். பக்தர்களுக்கு பேரின்பத்தை அளிப்பவர். பக்தர்களை மோட்சத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறார். 
  • 891. நைகத - ஒன்று மட்டும் கொடாதவர். பலவும் தருபவர். மீண்டும் மீண்டும் அவதாரம் எடுப்பவர். மீண்டும் மீண்டும் வரங்களை வழங்குபவர். 
  • 892. அக்³ரஜஹ - அடியார்க்கு முன்பாக விளங்குபவர். முதன்முதலில் பிறந்தவர். 
  • 893. அநிர் விண்ணஸ் - துயர் அற்றவர். அவநம்பிக்கை இல்லாதவர். பதட்டம் இல்லாதவர். மனச்சோர்வு அற்றவர்.
  • 894. ஸதா³ மர்ஷீ - பொறுமையுள்ளவர். மன்னிப்பவர். அனைத்து கைங்கர்யங்களையும் பொறுமையுடன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார்.
  • 895. லோகா தி⁴ஷ்டாநம் - உலகங்களைத் தாங்குபவனாய் இருப்பவர்.
  • 896. அத்பு⁴தஹ - அற்புதமாய் உள்ளவர். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார். செயல்கள், படைப்புகள் அனைத்தும் அற்புதமானவை

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.62

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.62
 
த்⁴யாயதோ விஷயாந் பும்ஸ: 
ஸங்க³ஸ் தே ஷூப ஜாயதே|
ஸங்கா³த் ஸஞ்ஜாயதே காம: 
காமாத் க்ரோ தோ⁴பி⁴ ஜாயதே||

  • த்⁴யாயதோ - சிந்திக்கும் போது  
  • விஷயாந் - புலன்நோக்கு பொருட்கள் 
  • பும்ஸஹ - மனிதனின்
  • ஸங்க³ஸ் - பற்றுதல்
  • தேஷு - புலன்நோக்குப் பொருட்களில் 
  • உபஜாயதே - வளர்கின்றது
  • ஸங்கா³த் - பற்றுதலில் இருந்து 
  • ஸஞ்ஜாயதே - வளர்கின்றது 
  • காமஹ - காமம் 
  • காமாத் - காமத்திலிருந்து 
  • க்ரோத⁴ஹ - கோபம்  
  • அபி⁴ஜாயதே - தோன்றுகின்றது

உலகியல் விஷயங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு அந்த விஷயங்களில் பற்றுதல் உண்டாகி விடுகிறது. பற்றினால் ஆசைகள் தோன்றுகின்றன. ஆசைகள் நிறைவடைவதில் தடையேற்பட்டால் கோபம் உண்டாகிறது. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.15

ஸ கதா³சித் ஸரஸ் வத்ஸ்யா 
உபஸ் ப்ருஸ்²ய ஜலம் ஸூ²சி:|
விவிக்த ஏக ஆஸீந 
உதி³தே ரவி மண்ட³லே||

  • ஸ - அப்படிப்பட்ட வியாஸ பகவான்
  • கதா³சித் - ஒரு சமயம்
  • ஸரஸ் வத்ஸ்யா - ஸரஸ்வதி என்ற நதியின்
  • ஸூ²சிஹி ஜலம் - பரிசுத்தமான தீர்த்தத்தில்
  • உபஸ் ப்ருஸ்²ய - ஸ்நானம் ஆசமனம் முதலியன செய்து
  • ரவி மண்ட³லே உதி³தே - சூரிய உதயத்தில்
  • விவிக்த - ஏகாந்தமான ஓர் இடத்தில்
  • ஏக - தனியாக
  • ஆஸீந -  உட்கார்ந்து கொண்டிருந்தார்

அப்படிப்பட்ட வியாஸ முனிவர் ஒரு சமயம் ஸரஸ்வதி நதியின் தூய்மையான நீரில் நீராடி, தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு சூரியன் உதயமாகும் நேரத்தில் தனித்து ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.60

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.60

ஆதி³ தஸ்தத்³ யதா² வ்ருத்தம் 
ஸீதா யாஸ்²ச விஸே²ஷத:|
ஸுக்³ரீவ ஸ்²சாபி தத் ஸர்வம் 
ஸ்²ருத்வா ராமஸ்ய வாநர:|| 

  • ஆதி³ தஸ் ச - ஆதி முதலாய்
  • தத்³ - அந்த
  • யதா² வ்ருத்தம் - நடந்த செய்தி
  • விஸே²ஷதஹ - முக்கியமாய்
  • ஸீதாயாஸ்² - ஸீதையைப் பற்றிய விவரங்களைச் சொன்னார்
  • ஸுக்³ரீவஸ்² - ஸுக்ரீவர் என்ற 
  • வாநரஹ அபி - வானரரும்
  • ராமஸ்ய - ஸ்ரீ ராமருடைய
  • தத் ஸர்வம் ச - விபரங்கள் எல்லாவற்றையும்
  • ஸ்²ருத்வா - கேட்டு

தொடக்கத்தில் இருந்து, குறிப்பாகச் சீதை குறித்தும் விரிவாகச் சொன்னார். வானரனான ஸுக்ரீவனும், ராமன் சொன்னவை அனைத்தையும் முழுமையாகக் கேட்டு,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 103 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 103 - சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

மிக்க பெரும் புகழ்* மாவலி வேள் வியிற்*
தக்கது இது அன்று என்று* தானம் விலக்கிய* 
சுக்கிரன் கண்ணைத்* துரும்பாற் கிளறிய* 
சக்கரக் கையனே! அச்சோ அச்சோ* 
சங்கம் இடத்தானே! அச்சோ அச்சோ!

  • மிக்க பெரும் புகழ் - ஔதார்யத்தால் மிகுந்த கீர்த்தியை உடைய
  • மா வலி - மஹா பலி செய்த
  • வேள்வியில் - யாகத்திலே வாமநனாய்ச் சென்ற உனக்கு அந்த மஹாபலி நீ கேட்டதைக் கொடுக்க முயன்ற அளவிலே
  • இது - நீ கொடுக்கிற தானம்
  • தக்கது அன்று - தகுதியானதன்று
  • என்று - என்று முறையிட்டு
  • தானம் - பூமி தானத்தை அவன் தத்தம் பண்ணும் போது நீர் விழ வொட்டாமல்
  • விலக்கிய - விலக்க முயன்ற
  • சுக்கிரன் - பூச்சி வடிவு கொண்ட சுக்கிராச்சாரியனுடைய
  • கண்ணை - ஒரு கண்ணை
  • துரும்பால் - உன் கையிலணிந்திருந்த தர்ப்ப பவித்ரத்தின் நுனியால்
  • கிளறிய - கலக்கின
  • சக்கரம் கையனே - சக்ராயுதம் ஏந்திய கையை உடையவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • சங்கம் - பாஞ்ச சன்னியம் எனும் சங்கை
  • இடத்தானே - இடக்கையில் ஏந்தினவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

பெரும் புகழ் வாய்ந்த மஹாபலி சக்கிரவர்த்தி செய்த யாகத்தில் அன்று வாமனனாய் நீ சென்று மூவடி மண் கேட்க, அவனும் தானமாகக் கொடுக்க முன்வந்து ஜலத்தை தாரை வார்க்கும் சமயம், அவனுடைய ஆசார்யன் சுக்கிரன் இந்த தானம் தகுந்ததல்ல எனக் கருதி ஜல பாத்திரத்தின் துவாரத்தில் சூட்சுமமாய் நுழைந்து அதை அடைத்துவிட, நீயோ கையில் அணிந்திருந்த தர்ப்பையால், அடைப்பை எடுப்பது போல், சுக்கிரனுடைய கண்ணை குத்திக் கெடுத்தாய். சக்கராயுதத்தை வலக்கையில் ஏந்தியவனே! என்னை அணைத்துக் கொள்ள ஓடி வர வேண்டும். இடக்கையில் பாஞ்சஜன்யத்தை ஏந்தியவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 031 - திருச்செம்பொன்செய் கோவில் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

031. திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ பேரருளாளன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ அல்லிமாமலர் தாயார் ஸமேத ஸ்ரீ பேரருளாளன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: பேரருளாளன்
  • பெருமாள் உற்சவர்: செம்பொன்னரங்கன், ஹேரம்பர்
  • தாயார் மூலவர்: அல்லி மாமலர்
  • திருமுகமண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி: நித்ய 
  • தீர்த்தம்: கனக 
  • விமானம்: கனக
  • ப்ரத்யக்ஷம்: ருத்ரன், த்ருடநேத்ர முனி
  • ஆகமம்: பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் "பேரருளாளன்" ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

இழந்த செல்வத்தை மீட்டுத் தரும் தலம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன் என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார்.

ராவணனுடன் யுத்தம் முடித்த பின் ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி தங்கத்தினால் மிகப் பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்தார். அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம் செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்கு தானமாகக் கொடுத்தார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால் இத்தலம் "செம்பொன்செய் கோயில்' என வழங்கப்படுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 69

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 14

ஸ்கந்தம் 03

சுழலும் தாமரை

காதலியின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும் காதலர் மனம் துள்ளுவது போல், பகவானின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும் பக்தர் மனம் எழும்பிக் குதிக்கும். வைகுந்த வாசலை அடைந்து விட்ட ஸனகாதியரின் மன நிலையை எப்படிச் சொல்வது? அங்கிருக்கும் எந்த அற்புதப் பொருளின் மீதும் அவர்களது கவனம் செல்லவில்லை. ஓட்டமும் நடையுமாக, ஆனந்தக் கண்ணீரோடு, ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு ஆறு வாயில்களைக் கடந்து விட்டனர். ஏழாவது வாயில் அருகே வந்தாயிற்று. 


ரத்தினங்கள் பதித்த தகதகக்கும் தங்க வாயில். ஆச்சு! இதோ இன்னும் இரண்டு நிமிடத்தில். இந்த வாசலைத் தாண்டினதும் பகவத் தரிசனம். ஆஹா! நினைக்கும் போதே மேனி சிலிர்த்தது. ஒரே ஓட்டம், தாண்டப் போனால், சட்டென்று குறுக்கே தங்கப் பிரம்புகள். ஒன்றும் புரியவில்லை. மீண்டும் போக முயற்சித்தால் மறுபடி தடுக்கப்பட்டனர். ஐந்து வயது பாலகர் உருவத்தில் இருப்பவர்கள், திகம்பரர்கள், பரம பக்தர்கள், ஆர்வத்தினால், எதையும் கவனியாதவர்கள், எங்கும் எதிலும் ஒரே விஷயத்தையே காண்பவர்கள், தங்கு தடையின்றி எல்லா இடங்களுக்கும் செல்பவர்கள், தாங்கள் தடுக்கப் படுகிறோம் என்றதும் சட்டென்று சினம் வந்து விட்டது. யாரென்று நிமிர்ந்து பார்த்தால், நெடி துயர்ந்த பெரிய உருவங்கள், பகவானை ஒத்த திருமேனி, விலை உயர்ந்த ஆபரணங்கள், குண்டலங்கள், கிரீடங்கள், கையில் கதை. நீலமேனியர்கள், நான்கு திருக்கரங்கள், கழுத்தில் தவழும் வனமாலை. கண்கள் சிவந்து, சற்றே சினந்து காணப்பட்டனர். ஸனகாதியர் அவ்வாறு தடுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். பகவத் தரிசனத்திற்கு வந்த இடையூறு கண்டு ஒரே ஒரு கணம் சினந்ததில், வார்த்தைகள் சீற்றமாய் வந்து விழுந்தன.

பகவானிடம் பயன் கருதாது பக்தி செய்பவர்க்கே வைகுந்த வாசம்‌ கிட்டும். அவர்களிடம் தீய குணங்களே இராது.  அப்படி இருக்க உங்களுக்கு இறைவனைச் சந்திக்க வருபவரைத் தடுக்கும் புத்தி எவ்வாறு ஏற்பட்டது? நீங்கள் உண்மையான பகவத் பக்தர்களாக இருப்பின் எங்கள் மீது சந்தேகம் வந்து தடுத்திருக்க மாட்டீர். பகவானைச் சேர்ந்தவர்கள் அனைவரிடமும் அவனையே காண்கின்றனர். நீங்கள் எங்களை வேறாகப் பார்ப்பதாலேயே தடுத்தீர். பார்ஷதர்களாயினும் உண்மைப் பொருளை உணராது நிற்கிறீர். வேற்றுமை எண்ணம் இருப்பதால், வைகுந்தத்தை விடுத்து காம, க்ரோத, லோப மோஹம் நிறைந்த அசுரப் பிறவிகளாகக் கடவீர்கள். இது உங்களுக்கு நன்மையே பயக்கும். இது வரை எந்த அஸ்திர, சஸ்திரத்தாலும் தடுக்க முடியாத அந்த பகவத் பார்ஷதர்கள் சாபத்தைக் கேட்டு நடுநடுங்கிப் போனார்கள். சட்டென்று அவர்களது பாதங்களில் வீழ்ந்தனர்.

ஐயன்மீர்! எங்கள் தவற்றுக்கு ஏற்ற தண்டனை தான் இது. பகவானின் கருத்தை அறியாது தடுத்து விட்டோம். எங்கள் பாவங்கள் தாங்கள் தந்த தண்டனையால் தீரட்டும். எங்கள் மீது சற்றே பரிதாபம் கொண்டு, ஒரே ஒரு க்ருபை செய்யுங்கள். நாங்கள் எந்த லோகத்தில் எவ்வளவு கீழ்த்தரமான பிறவி உற்றாலும், இறைவனின் நினைவு எங்களை விட்டு அகலாமல் இருக்க வேண்டும்.

இவ்வளவையும் அறிந்த கபட நாடக ஸூத்ரதாரியான பகவான் திருமகளுடன் அங்கு வந்தார்.

அவர் வரும் முன்னரே திருவடிக் கமலங்களில் திருமகள் அர்ச்சனை செய்த துளஸியின் கந்தம் முன்னறிவிப்பு செய்ய, புளகாங்கிதம்‌ அடைந்து மூர்ச்சை அடைந்தனர் முனிவர்கள். பின்னர் மூர்ச்சை தெளிந்து, இது வரை இதயத் தாமரையில் கண்டு கொண்டிருந்த பகவான் இப்போது ஸனகாதியரின் கண்களுக்கு விருந்தாக எதிரே. 

பார்ஷதர்கள் வெண் கொற்றக் குடை பிடிக்க, ராஜ ஹம்ஸத்தின் இறக்கைகள் போல இருமருங்கும் சாமரங்கள் வீச, வெண் கொற்றக் குடையின் முத்துக்கள், சந்திரனிலிருந்து அமுதம் சொட்டுவது போல் காற்றில் இங்குமங்கும் அசைய. 

என்னே ஒரு காட்சி!!

நீலத்திருமேனி, மார்பில் தங்க ரேகையாய் ஒளிரும் திருமகள், அழகிய உருண்ட இடுப்பில் பீதாம்பரம், அரையில் கனக மேகலை, வண்டுகள்‌ சூழ்ந்து பாடும் வனமாலை, திருக்கைகளில் கங்கணங்கள், மின்னொளியை விஞ்சும் மகர குண்டலங்கள், அதை விஞ்சும் பளபளக்கும் கன்னங்கள், எடுப்பான அழகிய நாசி, கண்ணைப் பறிக்கும் அழகிய திருமுக மண்டலம், அழகிய முத்து மாலைகள், மார்பில் கௌஸ்துப மணி, அவரது ஒளியால் வைகுந்தம் மேலும் அழகுபெறுகிறது. ஒரு கையை கருடனின் தோளில் ஊன்றிக் கொண்டு, மறு கையால் தாமரை மலரைச் சுழற்றிக் கொண்டு வருகிறார். போதுமென்றே தோன்றாமல் பார்க்கத் தூண்டும் திருமேனியழகு. சட்டென்று தலை தாழ்த்தி வணங்கினார்கள் ஸனகாதியர்.

அதென்ன? தாமரைப் பூவைச் சுழற்றுவது?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்