About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 9 April 2022

ஸ்ரீ தசாவதாரம் ஜெயந்தி

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. ஸ்ரீ மச்ச அவதாரம்

சித்திரை மாதம் சுக்ல பட்சம் த்ரயோதசி திதி 
அமாவாசைக்குப் பின் 13 - ஆவது நாள்

ஓம் சமுத்ரராஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ மத்ஸ்ய ப்ரசோதயாத்ll

சைத்ரே மாசி சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் திதௌ விபு:
உதபூம் மத்ஸ்ய ரூபேண ரக்ஷார்தம்  அவனேர்ஹரி:

2. ஸ்ரீ கூர்ம அவதாரம்

ஆனி மாதம் க்ருஷ்ண பட்சம் த்வாதசி திதி 
பௌர்ணமிக்குப் பின் 12 - ஆவது நாள்

ஓம் தராதராய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்ம ப்ரசோதயாத்ll

ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம்  பகவான் அஜ:
மந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ

3. ஸ்ரீ வராக அவதாரம்

சித்திரை மாதம் க்ருஷ்ண பட்சம் பஞ்சமி திதி
பௌர்ணமிக்குப் பின் 5 - ஆவது நாள்

ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி
தன்னோ வராஹ ப்ரசோதயாத்ll

சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம் ஜக்ஞே நாராயண ஸ்வயம்
புவம் வராஹரூபேண  ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத்

4. ஸ்ரீ நரசிம்ஹ அவதாரம்

வைகாசி மாதம் சுக்ல பட்சம் சதுர்தசி திதி
அமாவாசைக்குப் பின் 14 - ஆவது நாள்

ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ணதங்குஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்ll

வைசாக சுக்லபக்ஷே து சதுர்தஸ்யாம் இனே அஸ்தகே
உத்பபூவ  அசுரத்வேசீ ந்ருசிம்ஹோ பக்தவத்சல:

5. ஸ்ரீ வாமன அவதாரம்

புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் த்வாதசி திதி 
அமாவாசைக்குப் பின் 12 - ஆவது நாள்

ஓம் கமண்டலஹஸ்தாய வித்மஹே சூக்ஷ்மதேஹாய தீமஹி
தன்னோ வாமந ப்ரசோதயாத்ll

மாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:
அதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா

6. ஸ்ரீ பரசுராம அவதாரம்

மார்கழி மாதம் கிருஷ்ண பட்சம் த்விதியை திதி 
பௌர்ணமிக்குப் பின் 2 - ஆவது நாள்

ஓம் அக்னி சுதாய வித்மஹே வித்யாதேஹாய தீமஹி
தன்னோ பரசுராம ப்ரசோதயாத்ll

மார்கசீர்ஷே த்வீதிய்யாயாம் க்ருஷ்ணபக்ஷே து பார்கவ:
துஷ்ட க்ஷத்ரிய வித்வேசீ ராமோ அபூத் தாபசாக்ரணீ:

7. ஸ்ரீ ராம அவதாரம்

சித்திரை மாதம் சுக்ல பட்சம் நவமி திதி
அமாவாசைக்குப் பின் 9 - ஆவது நாள்

ஓம் தாசரதாய வித்மஹே சீதாவல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோதயாத்ll

சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:
தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:

8. ஸ்ரீ பலராம அவதாரம்

வைகாசி மாதம் சுக்ல பட்சம் த்ருதியை திதி
அமாவாசைக்குப் பின் 3 - ஆவது நாள்

ஓம் ஹலாயுதாய வித்மஹே மஹாபலாய தீமஹி
தன்னோ பலராம ப்ரசோதயாத்ll

வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:
சம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:

9. ஸ்ரீ க்ருஷ்ண அவதாரம் 

ஆவணி மாதம் க்ருஷ்ண பட்சம் அஷ்டமி திதி 
பௌர்ணமிக்குப் பின் 8 - ஆவது நாள்

ஓம் மஹாபுருஷாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத்ll

மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே
ப்ரஜாபத்யக்ஷர் சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்

10. ஸ்ரீ கல்கி அவதாரம் 

புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் த்விதியை திதி
அமாவாசைக்குப் பின் 2 - ஆவது நாள்

ஓம் பரமபுருஷாய வித்மஹே பாபஹராய தீமஹி
தன்னோ கல்கி ப்ரசோதயாத்ll

மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:
ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹர் மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்।
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்।।

கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ‘ஸர்வதோமுகம்’ எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரஸிம்மரை நான் வணங்குகிறேன்.

2. வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம் 
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்।
நிநாதத் ரஸ்த விஷ்வாண்டம் 
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்।।

பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

3. ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம் 
ஸபலோகம் திதே ஸுதம்।
நகாக்ரை சகலீ சக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்।।

திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.

4. பதா வஷ்டப்த பாதாளம் 
மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ் டபம்।
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திஸம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்।।

விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரஸிம்மரை நான் வணங்குகிறேன்.

5. ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்।
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்।।

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

6. ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா।
ஜாநாதி யோ நமாம் யாத்யம்
தமஹம் ஸர்வதோ முகம்।।

சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

7. நரவத் ஸிம்ஹ வச்சைவ
ரூபம் யஸ்ய மஹாத்மநஹ।
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்।।

பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரஸிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்..

8. யந்நாமஸ் மரணாத் பீதாஹ
பூத வேதாள ராக்ஷஸாஹ।
ரோகாத் யாஸ்ச ப்ரணஷ் யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்।।

உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், ‘நரசிம்மா’ என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

9. ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மஷ்நுதே।
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்।।

அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் ‘பத்ரை’ என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

10. ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்த்யும்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்।
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யோர் ம்ருத்யோ நமாம்யஹம்।।

மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்கு பவருமான நரஸிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

11. நமஸ்காரத் மகம் யஸ்மை
விதாயாத்ம நிவே தநம்।
த்யக்ததுக் கோகிலாந் காமாந்
அச்நுதேதம் தம் நமாம்யஹம்।।

எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரஸிம்மரை வணங்குகிறேன்.

12. தாஸபூதா ஸ்வதஸ் ஸர்வே 
ஹ்யாத்மாந பாமாத்மநஹ।
அதோஹமபி தே தாஸந: 
இதி மத்வா நமாம்யஹம்।।

இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரஸிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.

13. சங்கரேணா தராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்।
த்ரிஸந்த்யம் ய படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ் ஸ்ரீஸ்ட வர்த்ததே।।

ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.

॥ இதி ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹர் மந்த்ர ராஜ பத ஸ்தோத்திரம் சம்பூரணம்॥

மாதா நரசிம்ஹ! பிதா நரசிம்ஹ!
ப்ராதா நரசிம்ஹ! ஸகா நரசிம்ஹ,
வித்யா நரசிம்ஹ! த்³ரவிணம் நரசிம்ஹ!
ஸ்வாமி நரசிம்ஹ! ஸகலம் நரசிம்ஹ!
இதோ நரசிம்ஹ! பரதோ நரசிம்ஹ!
யதோ யதோ யாஹி: ததோ நரசிம்ஹ!
நரசிம்ஹ தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ ஸுதர்ஸந அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீமதே நிக³மாந்த மஹாதே³ஸிகாய நம:

ஸ்ரீமாந்  வேங்கட நாதா²ர்ய: கவிதார்கிக  கேஸரீ।
வேத³ந்தாசார்ய வர்யோ மே ஸந்நித⁴த்தாம் ஸதா³ ஹ்ருʼதி³॥

1. ப்ரதி ப⁴டஸ்ரேணி பீ⁴ஷண வரகு³ணஸ் தோம பூ⁴ஷண
ஜநிப⁴ யஸ்தா²ந  தாரண ஜக³த³ வஸ்தா²ந  காரண ।
நிகி²லது³ஷ்  கர்ம கர்ஸந  நிக³மஸத்³ த⁴ர்ம  த³ர்ஸந
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥ (2)
 
திரு ஸுதர்ஸன பெருமானே!  உனது ஒளிமிக்க கடைக்கண் நோக்கால் பகைவர்கள் அஞ்சி நிற்கும் காட்சியைக் கொண்டவனே! அரிய நற்குணங்களின் திரல்களை அணிகலங்களாகக் கொண்டவனே! ஆற்ற முடியாத பிறவிப்பிணியைக் களைந்து எங்களைக் காப்பவனே! நெருப்பைப் போல அடியார்களின் எல்லாப் பாவங்களையும் அழித்து ஒழிக்கும் இனியவனே இவ்வுலகில் நாங்கள் வாழ்வில்  வெற்றி பெற எங்களுக்கு அருள்புரிவீராக!!

2. ஸுப⁴ ஜக³த்³ ரூப மண்ட³ந ஸுரக³ ணத்ராஸ க²ண்ட³ந
ஸதமக²ப்³ ரஹ்ம  வந்தி³த  ஸதபத² ப்³ரஹ்ம நந்தி³த ।
ப்ரதி² தவித்³ வத் ஸ பக்ஷித ப⁴ஜத³ஹிர்பு³த்⁴ந்ய  லக்ஷித
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥

திருசக்கரத்தாழ்வாரே! மங்களகரமான உலகத்தைத் திருமேனியாகக் கொண்ட திருமாளுக்கு ஏற்ற அணியானவனே!  தேவர்களின் மனபயத்தை நீக்குபவனே! முன்பு மேன்மைமிக்க நூறு வேள்விகளைச் செய்த இந்திரனாலும், நான்முகனாலும், வணங்க பெறுமாறு அமைந்தவனே! உலகம் போற்றுகின்ற மெய்ஞாணியர் வைகுண்டகதி  பெற உனது திருவடிகளை  ஏற்றுக் கொண்டனர். நாமும் அவர் திருவடிகளை பற்றி நம் வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெற பிரார்த்திப்போம்.

3. ஸ்பு²டதடிஜ்ஜால பிஞ்ஜர ப்ருʼது²தரஜ்வால பஞ்ஜர
பரிக³த ப்ரத்நவிக்³ரஹ பதுதரப்ரஜ்ஞ து³ர்க்³ரஹ ।
ப்ரஹரண க்³ராம மண்டி³த பரிஜந த்ராண பண்டி³த
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥

பேரொளி வீஸும் மின்னற் கூட்டத்தையொத்துப் பொன்போல் ஒளிவீஸும் திருவடிகளையுடையவனே! வாய்திட்ட வெவ்விய கொழுந்துகளாகிய அழற்கூட்டை இனிதே பெற்றவனே!  அன்பொழுக தொழும் அடியார்களை உனது எந்திரத்தைச் ஸுற்றிலும் கொண்டுள்ள திருமேனியை உடையவனே! நிலைபெற்ற அடியவர்களைக் காக்கின்ற குறைவற்ற தனித்தன்மை பெற்றவனே! ஸுதர்ஸன சக்கரமே! இவ்வுலகில் நீ வெற்றி பெற்றது போல் நாங்களும் நாராயணனின் அருளால் வெற்றி பெற எங்களுக்கு துணையாக இருப்பாயாக!!

4. நிஜபத³ப்ரீத ஸத்³க³ண நிருபதி⁴ஸ்பீ²த ஷட்³கு³ண
நிக³ம நிர்வ்யூட⁴ வைப⁴வ நிஜபர வ்யூஹ வைப⁴வ ।
ஹரி ஹய த்³வேஷி தா³ரண ஹர புர ப்லோஷ காரண
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥

மெய்ப்பொருளாகிய உனது திருவடித் தாமரைகளை விரும்பித் தவம் மேற்கொள்ளும் அடியவர்கள்  சூழ்ந்திருக்கப் பெற்ற பரம்பொருளே! ஐயப்பாடுகளைக் களைந்து எம்மை ஆட்கொள்ள வேண்டி இயற்கையாகவே ஆறு திருக்குணங்கள் அமைந்து அருள் செய்யும் பெருமானே! பேசப்படுகின்ற பரம், வியூகம் என்ற அழகிய திருமேனியின் பெருமை மிக்கவனே! இந்திரனின் பகைவர்களை ஒழித்தவனே! திருவாழி பரனே! இவ்வுலகில் நீ வெற்றி பெற்றது போல் நாங்களும் கிருஷ்ணனின் அருளால் வெற்றி பெற எங்களுக்கு துணையாக இருப்பாயாக.

5. த³நுஜ விஸ்தார கர்தந ஜநி தமிஸ்ரா விகர்தந
த³நுஜவித்³யா நிகர்தந ப⁴ஜத³வித்³யா நிவர்தந ।
அமர த்³ருʼஷ்ட ஸ்வ விக்ரம ஸமர ஜுஷ்ட ப்⁴ரமிக்ரம
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥

அரக்கர்களை மேன்மேலும் வளர்ச்சி பெறதாவாறு வேரறுப்பவனே! அடியவர்கள் பந்தத்தினால் ஏற்படுகின்ற பிறவி இருளை நீக்கும் செஞ்சூரியனைப் போன்றவனே!  அஸுரர்கள் செய்கின்ற மாயைகளை முற்றிலும் நீக்குகின்ற தந்தையே! உன்னை அபயமென அண்டியவர்கள் அஞ்ஞானத்தை நீக்குகின்ற அறிவனே! தேவர்கள் வியந்து நிற்குமாறு ஓங்கிய வீரத்தன்மை கொண்ட ஸுதர்ஸன பெருமானே! போரில் ஸுற்றிவரும் பகைவர்களிடையே ஸுழன்றாடி, அவர்கள் உன் காலில் வீழ்ந்து வணங்குமாறு வெற்றி கொள்ளும் தலைவனே! பண்புடைய நீ நன்முறையில் மென்மேலும் வெற்றி பெற்று எங்களையும் உன் அருளால் வாழ்வில் வெற்றி பெற செய்வாயாக!!

6. ப்ரதி²முகா²லீட⁴ ப³ந்து⁴ர ப்ருʼது²மஹாஹேதி த³ந்துர
விகடமாய ப³ஹிஷ்க்ருʼத விவித⁴மாலா பரிஷ்க்ருʼத ।
ஸ்தி²ரமஹாயந்த்ர தந்த்ரித த்³ருʼட⁴ த³யா தந்த்ர யந்த்ரித
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥

சமயோசிதமாக செயல் பட்டு முன்னடி எடுத்து வைப்பவனே!. ஒரு திசையை நோக்கி முன்னடி வைத்து செல்ல ஆரம்பித்து விட்டால் பின் வாங்காமல் முடிப்பவனே!  இப்படிப்பட்ட நடை அழகை உடையவர் சக்கரத்தாழ்வார். மாயத்தினால் செய்கின்ற துரோக செயல்களை செயல் இழக்க செய்பவனே!  பல விதமான வண்ண மலர்களை சாற்றி கொண்டிருப்பவனே! மிக வலிமை கொண்ட ஸுதர்சன யந்திரத்தை ஸ்திரமாக நல்ல யூகத்தோடு தந்திரமாக, அதே சமயம் இரக்கத்தோடு சேர்த்திருக்குமாறு பிரயோகப் படுத்துபவனே! திருஆழியனே! நீ உலகில் வெற்றி பெற்றது போல் நாங்களும் எங்கள் வாழ்வில் வெற்றி பெற அருள்வாயாக!

7. மஹித ஸம்பத் ஸத³க்ஷர விஹிதஸம்பத் ஷட³க்ஷர
ஷட³ரசக்ர ப்ரதிஷ்டி²த ஸகல தத்த்வ ப்ரதிஷ்டி²த ।
விவித⁴ ஸங்கல்ப கல்பக விபு³த⁴ஸங்கல்ப கல்பக
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥

பெருமைமிக்க ஞானிகட்கு என்றும் பெறற்கரிய வைகுண்டத்தை நல்கும் இனியவனே!  செல்வச் சிறப்பைக் கொண்ட ஆறெழுத்து மந்திரத்தையுடையவனே! நிலைபெற்ற அருகோணத்தில் உலகம் வியக்க நிலைத்தவனே! உலகிலுள்ள எல்லா தத்துவங்களிலும் உட்பொருளாக அமைந்திருந்து, விரும்பிய பல்வேறு செயற்பாடுகளை நன்கு செய்து முடிப்பவனே!  ஞான விண்ணவர்கட்குக் சிறந்த கற்பகத்தருவாக அமைந்து அவர்கள் வேண்டியவைகளைக் தருபவனே! ஆழியப்பா! எங்களுக்கும் உன் கருணை கடாக்ஷம் கிடைக்க அருள் புரிவாயாக!

8. பு⁴வந நேத்ர த்ரயீமய ஸவந தேஜஸ்த்ரயீமய
நிரவதி⁴ ஸ்வாது³ சிந்மய நிகி²ல ஸக்தே ஜக³ந்மய ।
அமித விஸ்வக்ரியாமய ஸமித விஸ்வக்³ப⁴யாமய
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥ (2)

உலகில் கண்ணாக அமைந்தவனே! வேதங்களையே திருமேனியாகக் கொண்டவனே! புனித வேள்விகளில் முத்தீயாக விளங்குபவனே! ஒப்பற்ற இன்பஞான வடிவானவனே! எதனையும் செய்து முடிக்கும் வலிமை பெற்றவனே! புதுமைசேர் உலகமே வடிவாக அமைந்தவனே! நலத்தைத் குலைக்கும் பிணிகளோடு பயத்தையும் ஒழிப்பவனே!  திருஆழியனே! நீ உலகில் வெற்றி பெற்றது போல் நாங்களும் எங்கள் வாழ்வில் வெற்றி பெற அருள்வாயாக!

ப²ல ஸ்ருதி

9. த்³விசதுஷ்கமித³ம் ப்ரபூ⁴தஸாரம் 
பட²தாம் வேங்கடநாயக ப்ரணீதம் ।
விஷமேபி மநோரத:² ப்ரதா⁴வந் 
ந விஹந்யேத ரதா²ங்க³ து⁴ர்ய கு³ப்த: ॥

ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் அருளிய ஸ்ரீ ஸுதர்ஸன அஷ்டகத்தை குற்றமற்ற மெய்யன்போடு மனத்திடையே ஓதுவார்களாயின், வாசிகையான் திருவருளே நமக்கு எல்லையற்ற பேரின்பத்தை அருள்வதோடு நாளும் நம் விரும்பியனவைகளையும் கிடைக்க ஸ்ரீ ஸுதர்ஸன பெருமானை வேண்டுவோம்..

॥ இதி ஸ்ரீ ஸுத³ர்ஸநாஷ்டகம் சம்பூரணம்॥

கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஸாலிநே ।
ஸ்ரீமதே வேங்கடேஷாய வேதா³ந்தகு³ரவே நம: ॥

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

இந்த்³ர உவாச

1. நமஸ்தேஸ்து மஹாமாயே 
ஸிபீடே² ஸுரபூஜிதே|
சங்க² சக்ர க³தா³ஹஸ்தே 
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||

வணக்கத்திற்கு உரியவளே! சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயையே! ஸ்ரீசக்கர பீடத்தில் நிலைத்து வசிப்பவளே! தேவர்களால் வழிபடப்படுபவளே! சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருக்கும் மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் தாயே!

2. நமஸ்தே க³ருடா³ ரூடே⁴ 
கோலாஸுர ப⁴யங்கரி|
சர்வ பாப ஹரே தேவி 
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||

எல்லோரும் வணங்கும்படியாக கருட வாகனத்தில் ஆரோகணித்து வருபவளே! கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளே! எல்லா பாவங்களையும் அழிக்கும் தேவியே! மஹாலக்ஷ்மி தாயே! உன்னை வணங்குகின்றேன் அம்மா!

3. ஸர்வஜ்ஞே ஸர்வ வரதே³ 
ஸர்வ து³ஷ்ட ப⁴யங்கரி|
ஸர்வ து³꞉க² ஹரே தே³வி 
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே|| 

உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவளே! அனைத்து வரங்களையும் அளிப்பவளே! எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளே! எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

4. ஸித்³தி⁴ பு³த்³தி⁴ ப்ரதே³ தே³வி 
பு⁴க்தி முக்தி ப்ரதா³யினி|
மந்த்ர மூர்தே ஸதா³ தே³வி 
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||   

அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தக்கூடிய தெய்வீக வெற்றியினை அருள்பவளே! மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளே! மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் அம்மையே!

5. ஆத்³யந்த ரஹிதே தே³வி 
ஆதி³ஸக்தி மஹேஸ்வரி|
யோக³ஜ்ஞே யோக³ ஸம்பூ⁴தே 
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||  

முதலும் முடிவும் அற்ற தேவியே! பிரபஞ்சத்தின் முதல் சக்தியான ஆதிபராசக்தியே! யோக நிலையில் தோன்றியவளே! யோக வடிவாகத் திகழ்பவளே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் மாதாவே!

6. ஸ்தூ²ல ஸூக்ஷ்ம மஹாரௌத்³ரே 
மஹாஸக்தி மஹோத³ரே|
மஹா பாபஹரே தே³வி 
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||  

பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவளே! எளிதில் உணரப்பட முடியாதவளே! (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் கொள்பவளே! அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளே! பெரும் பாவங்களை அழிப்பவளே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் அம்மா!

7. பத்³மாஸன ஸ்தி²தே தே³வி 
பரப்³ரஹ்ம ஸ்வரூபிணி|
பரமேஸி ஜக³ன்மாத꞉ 
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||  

பத்மாசனத்தில் அமர்ந்தவளே! பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவளே! பரமேஸ்வரி என விளங்குபவளே! அகில உயிர்களுக்கும் அன்னையே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் தாயே!

8. ஸ்வேதாம் ப³ரத⁴ரே தே³வி 
நானாலங்கார பூ⁴ஷிதே|
ஜக³த்ஸ்தி²தே ஜக³ன்மாத꞉ 
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே||  

தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவளே! பலவிதமான அலங்காரங்கள் கொண்டு திகழ்பவளே! பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளே! அகில உலகங்களுக்கும் அன்னையே! மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன் அன்னையே!

பலஸ்ருதி:

9. மஹாலக்ஷ்ம் யஷ்டகம் ஸ்தோத்ரம் 
ய꞉ படே²த்³ப⁴க்தி மான்னர꞉|
ஸர்வஸித்³தி⁴ மவாப் னோதி 
ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா³:||

மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.

10. ஏக காலே படே²ந் நித்யம் 
மஹாபாப வினாஸனம்|
த்³வி காலம் ய꞉ படே²ன்னித்யம் 
த⁴னதா⁴ன்ய ஸமன் வித꞉||

தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.

11. த்ரிகாலம் ய꞉ படே²ந் நித்யம் 
மஹாஸத்ரு வினாஸனம்|
மஹாலக்ஷ்மீர் ப⁴வேன்னித்யம் 
ப்ரஸன்னா வரதா³ ஸுபா⁴||

தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீமஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.

||இதி ஸ்ரீ மஹா லக்ஷ்மி அஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ இராம புஜங்க அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. பஜே விசேஷ சுந்தரம்: ஸமஸ்தபாப கண்டனம் |
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்||

அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

2. ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்:
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹ ராம மத்வயம்||

அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிப்போம்.

3. நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்:
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராம மத்வயம்||

ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையில் இருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குவோம்.

4. ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்:
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராம மத்வயம்||

உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுது முள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிப்போம்.

5. நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்:
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராம மத்வயம்||

பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிப்போம்..

6. பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்:
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்||

சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுவோம்.

7. மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை:
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராம மத்வயம்||

மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிப்போம்.

8. சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்:
விராஜமான தேசிகம் பஜேஹ ராம மத்வயம்||

நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிப்போம்..

9. ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம்:
வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய|
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்திம்:
ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்||

வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம் !!

||இதி ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. அந்த வகையில் ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். 

சந்திரானனம் சதுர் பாஹும் ,
ஸ்ரீ வத்ஸாங்கித வக்ஷஷம்
ருக்மிணி சத்யா பாமாப்யாம் 
ஸஹிதம் கிருஷ்ணமாஸ்ரியே

1. வசுதேவ ஸூதம் தேவம் 
கம்ஸ சாணூர மர்த்தனம் 
தேவகீ பரமானந்தம் 
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

2. அதஸீ புஷ்ப ஸங்காசம், 
ஹாரநூபுர சோபிதம்  
ரத்ன கங்கண கேயூரம் 
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

3. குடிலாலக ஸம்யுக்தம் 
பூர்ண சந்த்ர நிபானனம் 
விலஸத் குண்டல தரம் 
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

4. மந்தார கந்த ஸம்யுக்தம் 
சாருஹாஸம் சதுர்ப்புஜம் 
பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் 
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

5. உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் 
நீல ஜீமூத ஸந்நிபம் 
யாதவானாம் சிரோ ரத்னம் 
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

6. ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் 
பீதாம்பர ஸூசோபிதம் 
அவாப்த துளசீ கந்தம் 
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

7. கோபிகாநாம் குசத்வந்த்வ 
குங்குமாங்கித வக்ஷஸம் 
ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் 
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

8. ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் 
வநமாலா விராஜிதம் 
சங்க சக்ரதரம் தேவம் 
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

பலச்ருதி 

9. க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் 
ப்ராதருத்தாய ய படேத் 
கோடி ஜந்ம க்ருதம் பாபம் 
ஸ்மரணேன விநச்யதி

எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!


||இதி ஸ்ரீ க்ருஷ்ணாஷ்டகம் ஸம்பூரணம்||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||