||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீமதே நிக³மாந்த மஹாதே³ஸிகாய நம:
ஸ்ரீமாந் வேங்கட நாதா²ர்ய: கவிதார்கிக கேஸரீ।
வேத³ந்தாசார்ய வர்யோ மே ஸந்நித⁴த்தாம் ஸதா³ ஹ்ருʼதி³॥
1. ப்ரதி ப⁴டஸ்ரேணி பீ⁴ஷண வரகு³ணஸ் தோம பூ⁴ஷண
ஜநிப⁴ யஸ்தா²ந தாரண ஜக³த³ வஸ்தா²ந காரண ।
நிகி²லது³ஷ் கர்ம கர்ஸந நிக³மஸத்³ த⁴ர்ம த³ர்ஸந
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥ (2)
திரு ஸுதர்ஸன பெருமானே! உனது ஒளிமிக்க கடைக்கண் நோக்கால் பகைவர்கள் அஞ்சி நிற்கும் காட்சியைக் கொண்டவனே! அரிய நற்குணங்களின் திரல்களை அணிகலங்களாகக் கொண்டவனே! ஆற்ற முடியாத பிறவிப்பிணியைக் களைந்து எங்களைக் காப்பவனே! நெருப்பைப் போல அடியார்களின் எல்லாப் பாவங்களையும் அழித்து ஒழிக்கும் இனியவனே இவ்வுலகில் நாங்கள் வாழ்வில் வெற்றி பெற எங்களுக்கு அருள்புரிவீராக!!
2. ஸுப⁴ ஜக³த்³ ரூப மண்ட³ந ஸுரக³ ணத்ராஸ க²ண்ட³ந
ஸதமக²ப்³ ரஹ்ம வந்தி³த ஸதபத² ப்³ரஹ்ம நந்தி³த ।
ப்ரதி² தவித்³ வத் ஸ பக்ஷித ப⁴ஜத³ஹிர்பு³த்⁴ந்ய லக்ஷித
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥
திருசக்கரத்தாழ்வாரே! மங்களகரமான உலகத்தைத் திருமேனியாகக் கொண்ட திருமாளுக்கு ஏற்ற அணியானவனே! தேவர்களின் மனபயத்தை நீக்குபவனே! முன்பு மேன்மைமிக்க நூறு வேள்விகளைச் செய்த இந்திரனாலும், நான்முகனாலும், வணங்க பெறுமாறு அமைந்தவனே! உலகம் போற்றுகின்ற மெய்ஞாணியர் வைகுண்டகதி பெற உனது திருவடிகளை ஏற்றுக் கொண்டனர். நாமும் அவர் திருவடிகளை பற்றி நம் வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெற பிரார்த்திப்போம்.
3. ஸ்பு²டதடிஜ்ஜால பிஞ்ஜர ப்ருʼது²தரஜ்வால பஞ்ஜர
பரிக³த ப்ரத்நவிக்³ரஹ பதுதரப்ரஜ்ஞ து³ர்க்³ரஹ ।
ப்ரஹரண க்³ராம மண்டி³த பரிஜந த்ராண பண்டி³த
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥
பேரொளி வீஸும் மின்னற் கூட்டத்தையொத்துப் பொன்போல் ஒளிவீஸும் திருவடிகளையுடையவனே! வாய்திட்ட வெவ்விய கொழுந்துகளாகிய அழற்கூட்டை இனிதே பெற்றவனே! அன்பொழுக தொழும் அடியார்களை உனது எந்திரத்தைச் ஸுற்றிலும் கொண்டுள்ள திருமேனியை உடையவனே! நிலைபெற்ற அடியவர்களைக் காக்கின்ற குறைவற்ற தனித்தன்மை பெற்றவனே! ஸுதர்ஸன சக்கரமே! இவ்வுலகில் நீ வெற்றி பெற்றது போல் நாங்களும் நாராயணனின் அருளால் வெற்றி பெற எங்களுக்கு துணையாக இருப்பாயாக!!
4. நிஜபத³ப்ரீத ஸத்³க³ண நிருபதி⁴ஸ்பீ²த ஷட்³கு³ண
நிக³ம நிர்வ்யூட⁴ வைப⁴வ நிஜபர வ்யூஹ வைப⁴வ ।
ஹரி ஹய த்³வேஷி தா³ரண ஹர புர ப்லோஷ காரண
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥
மெய்ப்பொருளாகிய உனது திருவடித் தாமரைகளை விரும்பித் தவம் மேற்கொள்ளும் அடியவர்கள் சூழ்ந்திருக்கப் பெற்ற பரம்பொருளே! ஐயப்பாடுகளைக் களைந்து எம்மை ஆட்கொள்ள வேண்டி இயற்கையாகவே ஆறு திருக்குணங்கள் அமைந்து அருள் செய்யும் பெருமானே! பேசப்படுகின்ற பரம், வியூகம் என்ற அழகிய திருமேனியின் பெருமை மிக்கவனே! இந்திரனின் பகைவர்களை ஒழித்தவனே! திருவாழி பரனே! இவ்வுலகில் நீ வெற்றி பெற்றது போல் நாங்களும் கிருஷ்ணனின் அருளால் வெற்றி பெற எங்களுக்கு துணையாக இருப்பாயாக.
5. த³நுஜ விஸ்தார கர்தந ஜநி தமிஸ்ரா விகர்தந
த³நுஜவித்³யா நிகர்தந ப⁴ஜத³வித்³யா நிவர்தந ।
அமர த்³ருʼஷ்ட ஸ்வ விக்ரம ஸமர ஜுஷ்ட ப்⁴ரமிக்ரம
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥
அரக்கர்களை மேன்மேலும் வளர்ச்சி பெறதாவாறு வேரறுப்பவனே! அடியவர்கள் பந்தத்தினால் ஏற்படுகின்ற பிறவி இருளை நீக்கும் செஞ்சூரியனைப் போன்றவனே! அஸுரர்கள் செய்கின்ற மாயைகளை முற்றிலும் நீக்குகின்ற தந்தையே! உன்னை அபயமென அண்டியவர்கள் அஞ்ஞானத்தை நீக்குகின்ற அறிவனே! தேவர்கள் வியந்து நிற்குமாறு ஓங்கிய வீரத்தன்மை கொண்ட ஸுதர்ஸன பெருமானே! போரில் ஸுற்றிவரும் பகைவர்களிடையே ஸுழன்றாடி, அவர்கள் உன் காலில் வீழ்ந்து வணங்குமாறு வெற்றி கொள்ளும் தலைவனே! பண்புடைய நீ நன்முறையில் மென்மேலும் வெற்றி பெற்று எங்களையும் உன் அருளால் வாழ்வில் வெற்றி பெற செய்வாயாக!!
6. ப்ரதி²முகா²லீட⁴ ப³ந்து⁴ர ப்ருʼது²மஹாஹேதி த³ந்துர
விகடமாய ப³ஹிஷ்க்ருʼத விவித⁴மாலா பரிஷ்க்ருʼத ।
ஸ்தி²ரமஹாயந்த்ர தந்த்ரித த்³ருʼட⁴ த³யா தந்த்ர யந்த்ரித
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥
சமயோசிதமாக செயல் பட்டு முன்னடி எடுத்து வைப்பவனே!. ஒரு திசையை நோக்கி முன்னடி வைத்து செல்ல ஆரம்பித்து விட்டால் பின் வாங்காமல் முடிப்பவனே! இப்படிப்பட்ட நடை அழகை உடையவர் சக்கரத்தாழ்வார். மாயத்தினால் செய்கின்ற துரோக செயல்களை செயல் இழக்க செய்பவனே! பல விதமான வண்ண மலர்களை சாற்றி கொண்டிருப்பவனே! மிக வலிமை கொண்ட ஸுதர்சன யந்திரத்தை ஸ்திரமாக நல்ல யூகத்தோடு தந்திரமாக, அதே சமயம் இரக்கத்தோடு சேர்த்திருக்குமாறு பிரயோகப் படுத்துபவனே! திருஆழியனே! நீ உலகில் வெற்றி பெற்றது போல் நாங்களும் எங்கள் வாழ்வில் வெற்றி பெற அருள்வாயாக!
7. மஹித ஸம்பத் ஸத³க்ஷர விஹிதஸம்பத் ஷட³க்ஷர
ஷட³ரசக்ர ப்ரதிஷ்டி²த ஸகல தத்த்வ ப்ரதிஷ்டி²த ।
விவித⁴ ஸங்கல்ப கல்பக விபு³த⁴ஸங்கல்ப கல்பக
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥
பெருமைமிக்க ஞானிகட்கு என்றும் பெறற்கரிய வைகுண்டத்தை நல்கும் இனியவனே! செல்வச் சிறப்பைக் கொண்ட ஆறெழுத்து மந்திரத்தையுடையவனே! நிலைபெற்ற அருகோணத்தில் உலகம் வியக்க நிலைத்தவனே! உலகிலுள்ள எல்லா தத்துவங்களிலும் உட்பொருளாக அமைந்திருந்து, விரும்பிய பல்வேறு செயற்பாடுகளை நன்கு செய்து முடிப்பவனே! ஞான விண்ணவர்கட்குக் சிறந்த கற்பகத்தருவாக அமைந்து அவர்கள் வேண்டியவைகளைக் தருபவனே! ஆழியப்பா! எங்களுக்கும் உன் கருணை கடாக்ஷம் கிடைக்க அருள் புரிவாயாக!
8. பு⁴வந நேத்ர த்ரயீமய ஸவந தேஜஸ்த்ரயீமய
நிரவதி⁴ ஸ்வாது³ சிந்மய நிகி²ல ஸக்தே ஜக³ந்மய ।
அமித விஸ்வக்ரியாமய ஸமித விஸ்வக்³ப⁴யாமய
ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ஜய ஜய ஸ்ரீ ஸுத³ர்ஸந ॥ (2)
உலகில் கண்ணாக அமைந்தவனே! வேதங்களையே திருமேனியாகக் கொண்டவனே! புனித வேள்விகளில் முத்தீயாக விளங்குபவனே! ஒப்பற்ற இன்பஞான வடிவானவனே! எதனையும் செய்து முடிக்கும் வலிமை பெற்றவனே! புதுமைசேர் உலகமே வடிவாக அமைந்தவனே! நலத்தைத் குலைக்கும் பிணிகளோடு பயத்தையும் ஒழிப்பவனே! திருஆழியனே! நீ உலகில் வெற்றி பெற்றது போல் நாங்களும் எங்கள் வாழ்வில் வெற்றி பெற அருள்வாயாக!
ப²ல ஸ்ருதி
9. த்³விசதுஷ்கமித³ம் ப்ரபூ⁴தஸாரம்
பட²தாம் வேங்கடநாயக ப்ரணீதம் ।
விஷமேபி மநோரத:² ப்ரதா⁴வந்
ந விஹந்யேத ரதா²ங்க³ து⁴ர்ய கு³ப்த: ॥
ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் அருளிய ஸ்ரீ ஸுதர்ஸன அஷ்டகத்தை குற்றமற்ற மெய்யன்போடு மனத்திடையே ஓதுவார்களாயின், வாசிகையான் திருவருளே நமக்கு எல்லையற்ற பேரின்பத்தை அருள்வதோடு நாளும் நம் விரும்பியனவைகளையும் கிடைக்க ஸ்ரீ ஸுதர்ஸன பெருமானை வேண்டுவோம்..
॥ இதி ஸ்ரீ ஸுத³ர்ஸநாஷ்டகம் சம்பூரணம்॥
கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஸாலிநே ।
ஸ்ரீமதே வேங்கடேஷாய வேதா³ந்தகு³ரவே நம: ॥
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
No comments:
Post a Comment