About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 22 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 87

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 57

மஹா்ஷி: கபிலாசார்ய:
க்ருதஜ்ஞோ மேதி³நீ பதி:|
த்ரி பத³ஸ் த்ரி த³ஸா²த்⁴ யக்ஷோ
மஹா ஸ்²ருங்க³: க்ருதாந்த க்ருத்||

  • 534. மஹர்ஷிஹ் - பெரிய ஞானி. பகவான் மகரிஷி. ஏனென்றால், கபில முனிவராக அவதாரத்தில், அவர் மூன்று வேதங்களையும் உள்ளுணர்வு உணர்வால் உணர்ந்தார். 
  • 535. கபிலாசார்யஹ் - கபிலம் என்பது மரத்தின் உட்புற பழுப்பு நிறத்தைக் குறிக்கிறது; கபில முனிவர், எரியும் மற்றும் புகையற்ற தீக்குழம்பு போன்ற அவரது பளபளப்புடன், ஞானத்தின் (அறிவின்) உருவகமாக இருந்தார், இது அவரது குறைபாடற்ற பண்புகளை குறிக்கிறது.
  • 536. க்ருதஜ்ஞோ - நன்மையை அறிபவர். படைப்பவர் மற்றும் படைக்கப்பட்டவர். கிருதம் என்பது அவர் உருவாக்கிய உலகம். ஜ்ஞா என்றால் உலகத்தை அறிந்தவர். அவர் உலகத்தை அறிந்தவர். 
  • 537. மேதி³நீ பதிஹி - பூமிக்குத் தலைவர். அவர் உலகின் இறைவன்.
  • 538. த்ரி பத³ஸ் - ப்ரக்ருதி (பிரதானம்), புருஷன், ஈஸ்வரன் (பரமாத்மா) ஆகிய மூன்று தத்துவங்களை வெளிப் படுத்துபவர். மூன்று எழுத்துக்களைக் கொண்ட பிரணவ மந்திரத்தின் வடிவத்தில் இருக்கிறார். மூன்று கொம்புகளுடன் ஒரு பன்றியின் வடிவத்தை எடுத்தவர். மூன்று மாபெரும் படிகளுடன் மூன்று உலகங்களையும் மூடினார். 
  • 539. த்ரி த³ஸ² அத்⁴யக்ஷோ - தேவர்களைக் காப்பாற்றியவர். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் இறைவன். தனது மூன்று மாபெரும் முன்னேற்றங்களால் மூன்று உலகங்களையும் வென்றார். விழிப்பு, உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அதிபதியாக பகவான் இருக்கிறார்.
  • 540. மஹா ஸ்²ருங்க³ஹ் - பெரிய கொம்பை உடையவர். தனது மத்ஸ்ய மற்றும் வராஹ அவதாரங்களில் தனது பெரிய கொம்பினால் பூமியைப் பாதுகாத்தார். 
  • 541. க்ருதாந்த க்ருத்ஹு - யமன் போல் தோன்றிய இரணியனை முடித்தவர். தனது படைப்பின் செயலை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சம்கர்ஷனாவாக தனது படைப்புகளுக்கு முடிவைக் கொண்டு வருகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.24
 
அச்சே²த்³யோ யமதா³ஹ் யோயம்
அக்லேத்³யோ அஸோ²ஷ்ய ஏவ ச|
நித்ய: ஸர்வக³த: ஸ்தா²ணுர்  
அசலோயம் ஸநாதந:||

  • அச்சே²த்³யோ - வெட்ட முடியாதவன் 
  • அயம் - இந்த ஆத்மா 
  • அதா³ஹ்ய - எரிக்க முடியாதவன் 
  • அயம் - இந்த ஆத்மா 
  • அக்லேத்³யோ - கரைக்க முடியாதவன் 
  • அஸோ²ஷ்ய - உலர்த்த முடியாதவன் 
  • ஏவ - நிச்சயமாக 
  • ச - மேலும் 
  • நித்யஸ் - நித்யமானவன் 
  • ஸர்வக³தஸ் - எங்கும் நிறைந்தவன் 
  • ஸ்தா²ணுர் - மாற்ற இயலாதவன் 
  • அசலோ - அசைக்க முடியாதவன் 
  • அயம் - இந்த ஆத்மா 
  • ஸநாதநஹ - நித்யமாக மாற்றமின்றி இருப்பவன் 

ஜீவாத்மாவை வெட்ட முடியாது, கரைக்க முடியாது, எரிக்கவோ, உலர்த்தவோ முடியாது. அவன் நித்யமானவன், எங்கும் நிறைந்தவன், மாற்ற இயலாதவன், அசைக்க முடியாதவன், நித்யமாக மாற்றமின்றி இருப்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.22

நர தே³வத் வமா பந்ந: 
ஸுர கார்ய சிகீர் ஷயா|
ஸமுத்³ர நிக்³ரஹா தீ³நி 
சக்ரே வீர்யாண் யத: பரம்||

  • அதஃ பரம் - அதன் பிறகு பதினெட்டாவது அவதாரத்தில் 
  • ஸுர கார்ய சிகீர் ஷயா - தேவர்களின் கார்யமான ராவணாதி வதத்தை செய்ய விருப்பத்தால் 
  • நர தே³வத்வம் - அரச குமாரரான ராம அவதாரத்தை 
  • ஆபந்நஹ - அடைந்தவராய் 
  • ஸமுத்³ர நிக்³ரஹா தீ³நி - கடலை கட்டுதல் முதலிய 
  • வீர்யாணி - வீரியம் நிறைந்த செயல்களை 
  • சக்ரே - செய்தார்

அதன் பிறகு பதினெட்டாவது அவதாரமாக, அமரர்களை வாழ்விக்க, இராவணன் முதலிய அரக்கர்களை வதம் செய்ய வேண்டி, அரசகுமாரானாக 'இராமாவதாரம்' செய்து, சமுத்திரத்தில் பாலம் கட்டுதல் (சேது பந்தனம்) முதலிய பராக்கிரம லீலைகளைச் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.22

பூர்வம் த³த்தவரா தே³வீ 
வரமே நம் அயாசத|
விவாஸநம் ச ராமஸ்ய 
ப⁴ரதஸ்யா பி⁴ஷேச நம்|| 

  • பூர்வம் - முன்னமே
  • த³த்தவரா - கொடுக்கப்பட்ட வரமுடையவளான
  • தே³வீ - தேவி
  • ஏநம் - இவரை
  • ராமஸ்ய - ஸ்ரீராமருக்கு
  • விவாஸநம் - ஸ்வதேசத்தை விட்டு வெளிப்படுத்தலையும் 
  • ப⁴ரதஸ்ய - பரதனுக்கு 
  • அபி⁴ஷேச நம் ச - பட்டாபிஷேகத்தையும் 
  • வரம் - வரமாக 
  • அயாசத - யாசித்தாள்

முன்னர் சம்பராசுரனுடனான போரில் உறுதியளிக்கப்பட்ட வரங்களை அப்போது வேண்டும் வகையில், ராமனை நாடு கடத்தவும், பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்யவும் தசரதனிடம் வரங்களைக் கேட்டாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 68 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 68 - மருத மரம் முறித்தவனே!
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

மத்தளவும் தயிரும் வார்குழல் நன் மடவார்* 
வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி* 
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய வந்தவரை* 
ஊரு கரத்தினொடும் உந்திய வெம் திறலோய்!* 
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன்* 
முன்ன முகத்தணியார் மொய் குழல்கள் அலைய* 
அத்த! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • மத்து - மத்தாலே
  • அளவும் - கடையப்பட்ட
  • தயிரும் - தயிரையும்
  • வார் குழல் - நீண்ட தலை முடியை உடைய 
  • நல் - அச்சம் நாணம் மடம் போன்ற குணங்கள் உடைய
  • மடவார் - நற்குணப் பெண்கள்
  • வைத்தன - சேமித்து வைத்தவைகளான
  • நெய் - நெய்யையும்
  • களவால் - கள்ளத்தனமாக திருட்டு வழியாலே
  • வாரி - கைகளால் அள்ளி
  • விழுங்கி - வயிறார உண்டு
  • ஒருங்கு - ஒரே மாதிரியான
  • ஒத்த - மனம் ஒத்தவர்களாய்
  • இணை மருதம் - இரட்டை மருத மரமாய்க் கொண்டு
  • உன்னிய - உன்னைத் தாக்க வேண்டும் என்னும் நினைவையுடையராய்
  • வந்தவரை - வந்து நின்ற அஸுரர்களை
  • ஊரு கரத்தினொடு - துடைகளாலும் கைகளாலும் 
  • உந்திய - இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின
  • வெம்திறவோய் - அசாத்திய வலிமை உடையவனே!
  • முத்து - திருமுத்துக்கள் தோன்றும்படி
  • இன் - இனிதான
  • இள முறுவல் - புன்முறுவல் 
  • முற்ற - முழுமையாக 
  • வருவதன் முன் - வெளிவருவதற்கு முன்னே 
  • முன்னம் முகத்து - முன் முகத்திலே
  • அணிஆர் - அழகு மிகப்பெற்று
  • மொய் - அடர்த்தியான 
  • குழல்கள் - திருக்குழல்களானவை
  • அலைய - தாழ்ந்து அசையும்படி
  • அத்த - அப்பனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

அடர்த்தியான, நீண்ட கருமையான கூந்தலை உடைய, சிறந்த குணங்களைக் கொண்ட ஆயர் குல பெண்கள் சிரத்தையுடன் தயாரித்து, சேமித்து வைத்து இ ருந்த தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை எல்லாம் தன் கைகளால் அள்ளி, அவற்றை எவரும் கண்டறிவதன் முன்னம் திருட்டுத் தனமாய் சுவைத்து, ஒரே விழுங்கில் அவசர அவசரமாக உட்கொண்டாய். உன் கள்ளத் தனத்தைக் கண்டறிந்ததும், கோபம் கொண்ட யசோதை அன்னை, உன்னை நீண்ட பழந்தாம்புக் கயிற்றால் உரலில் கட்டிப் போட்டாள். பெரிய கனமான உரலில் உன்னைப் பிணைத்திருந்தும், வலிமை மிகுந்த உன் கால்களினால் அந்த உரலையும் சேர்த்து இழுத்து உருட்டிக் கொண்டே, மாளிகையை விட்டு, வெளியே வந்து, ஆங்கே மாளிகையின் பின்புறத்தில், ஒன்றாக அருகருகே நின்றிருந்த இரண்டு மருத மரங்களுக்கு இடையே உரலுடன் ஊர்ந்து செல்ல முயலுகையில், அவற்றை உன் வலிமையான தோள்களினால் இடித்துக் கீழே தள்ளி விட்டு அவற்றிற்கு இடையில் புகுந்து சென்ற, மிகுந்த வலிமை உடையவனே! என்னைப் பெற்ற என் அப்பனே! முத்தினும் சிறந்த உன் வெண்பற்கள் வெளியில் தெரியும் வண்ணம் நீ சிரிக்கும் முன்னமேயே, உன் கருங்கூந்தல் ஊர்ந்து உன் முகத்தின் முன் வந்தாடும் வண்ணம் எனக்காக ஒரு தடவை செங்கீரை ஆடுவாயாக. போர் செய்ய வல்ல காளையைப் போன்றவனே, எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடி விடு என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 018 - திருக்கண்ணங்குடி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

018. திருக்கண்ணங்குடி
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - நாகப்பட்டினம்
பதினெட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1748 - 1757 - ஒண்பதாம் பத்து - முதலாம் திருமொழி 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

கூறு புகழ்த் தன் அடிக்கே கூட்டுவனோ இன்னம் எனை*
வேறுபடு பல் பிறப்பில் வீழ்த்துவனோ தேறுகிலேன்*
எண்ணம் குடியாய் இருந்தான் நின்றான் கிடந்தான்*
கண்ணங்குடியான் கருத்து*

  • எண்ணம் – எனது மனத்தை
  • குடி ஆய் – தான் வாழும் இடமாகக் கொண்டு
  • இருந்தான் நின்றான் கிடந்தான் – அந்நெஞ்சினில் வீற்றிருத்தலையும் நிற்றலையும் சயனித்தலையும் செய்பவனும்
  • கண்ணங்குடியான் – திருக்கண்ணங்குடி என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமான் 
  • என்னை – அடியேனை
  • கூறு புகழ் தன் அடிக்கே கூட்டுவனோ – வேதங்களில் சிறப்பித்துக் கூறப்படுகின்ற கீர்த்தியை உடைய
  • தனது திருவடிகளிலே சேர்த்துக் கொள்வனோ? அன்றி
  • இன்னம் – இனி மேலும்
  • வேறுபட – அவ்வாறு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுவதற்கு மாறாக
  • பல் பிறப்பில் – பலவகைப் பிறப்புக்களிலும்
  • வீழ்த்துவனோ – தள்ளி வருத்துவனோ?
  • கருத்து – அவனது திரு உள்ளக் கருத்தை
  • தேறுகிலேன் – இன்னதென்று அறியேன் யான்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 78

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சத்ராஜித் கொல்லப்படுதல்|

தம் அத்தை குந்தியைப் பற்றியும், அவளுடைய பிள்ளைகளைப் பற்றியும் கிருஷ்ணர் எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருந்தார். அவர்கள் தங்கியிருந்த வாரணாவத அரண்மனையில் பஞ்ச பாண்டவர்களும், அவர்களுடைய தாயாரும் தீயில் அகப்பட்டு இறந்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது. அவர்களுடைய கருகிய உடல்களும் கிடைத்ததாகத் தகவல் கிடைத்தது. எல்லாம் துரியோதனனின் செயல் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். பீஷ்மர், திருதராஷ்டிரர், விதுரர் இன்னும் மற்றவர்களுக்குத் தங்கள் துக்கத்தைத் தெரிவிப்பதற்காகக் கிருஷ்ணரும் பலராமரும் அஸ்தினாபுரம் சென்றார்கள். ஆனால் பாண்டவர்கள் சாகவில்லை என்பது கிருஷ்ணருக்குத் தெரியும்.


அவர்கள் ஊரை விட்டுச் சென்ற சமயத்தில் துவாரகையில் ஒரு விபரிதச் சம்பவம் நடந்தது. சத்யபாமாவின் திருமணத்திற்கு முன்பு எத்தனையோ இளைஞர்கள் அவள் மீது கண்ணாக இருந்தார்கள். அவளை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். கிருதவர்மன் அவர்களில் ஒருவன்.

அவன் ஒரு தடவை சத்ராஜித்தயே, அவர் பெண்ணைத் தனக்குக் கொடுக்கும் படி கேட்க, அவர் ஒரு பதிலும் சொல்லவில்லை. ஆகையால் சத்யபாமா தனக்குக் கிடைப்பாள் என்ற ஆசையில் அவன் இருந்தான். ஆனால் சத்யபாமா கிருஷ்ணருக்குக் கொடுக்கப்பட்டு விட்டாள் என்று தெரிந்ததும் அவன் மிகவும் கோபம் கொண்டான்.

சத்யபாமா மீது கண்ணாக இருந்த இன்னொருவன் சததன்வா. ஒரு சமயம் கிருஷ்ண பக்தராக இருந்த அக்ரூரர் ஸ்யமந்தக மணி காரணமாகச் சத்ராஜித்தின் மீது பொறமை கொண்டிருந்தார். பொருளாசை காரணமாக நல்ல மனிதனும் கெட்டவனாகினார். அந்த மணி தம்மிடம் இருக்க வேண்டும் என்ற ஆசை இந்த நல்ல மனிதரின் மூளையையும் குழப்பியது. அத்துடன் அவரும் ஒரு சமயம் சத்ய பாமாவைத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார்.

கிருஷ்ணரும் பலராமரும் ஊரில் இல்லை என்றது தெரிந்ததும், கிருதவர்மனும் அக்ரூரரும் சததன்வாவிடம் சென்று, "இதோ பார், சத்ராஜித் நம் எல்லோரையும் ஏமாற்றி விட்டார், அவரை நாம் பழிக்கு பழி வாங்கினால் என்ன?" என்று சொன்னார்கள். அந்த மணியைத் தான் அடைய வேண்டும் என்ற ஆசையை ஏற்கனவே கொண்டிருந்த சததன்வா, அவர்களால் தூண்டப்பட்டதும், சத்ராஜித் மத்திய உணவு முடித்து விட்டு, படுத்து இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது, கொஞ்சம் மயக்க மருந்தினை கொடுத்து, அவரை காட்டிற்குள் கொண்டு சென்றார்கள். அவருடைய கைகளில் ஸ்யமந்தக மணியும் இருந்தது. அங்கயே வைத்து அவரைக் கொன்றார்கள், மணியை எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

தேடி வந்த ஸத்குரு

ஸ்கந்தம் 01

பகவன் நாமம் சொல்பவர்களைக் கலி ஒன்றும் செய்வதில்லை. மிகமிகச் சுலபமான நாம ஸாதனத்தை ஆதரிப்பதாலேயே கலி ஸாது என்று மஹாத்மாக்கள் கூறுகிறார்கள்.

அன்பினால் அடக்கப்பட்டவர்கள் அன்பை மீறமாட்டார். 

பராக்ரமத்தால் அடக்கப்பட்டவரோ மறுபடி வீழ்த்த சமயம் நோக்குவார்.


சிறுவன் ச்ருங்கி அரசனுக்கு சாபமிட்டதை ஞான த்ருஷ்டியில் உணர்ந்த ஸமீக மஹரிஷி மிகவும் வருந்தினார். அவனைக் கடிந்து கொண்டார்.

“மகனே! அரசன் என்ற பெயரில் ஸ்ரீ மன் நாராயணனே இவ்வுலகைக் காக்கிறான். அரசன் இல்லாத நாட்டில் திருடர்கள் மலிந்து மக்கள் ஆட்டு மந்தை போல் அழிக்கப்படுவார்கள். அரசன் இல்லாவிடில் நாட்டில் குழப்பம் ஏற்படும். அனைவரும் தத்தளிப்பார்கள். கலவரங்கள் மலியும். அத்தனை பாவமும் நம்மை வந்து சேரும். மக்களிடம் ஒழுக்கக் கட்டுப்பாடு குறையும்.

பரீக்ஷித் தர்மவான். மக்களைக் காப்பவன். பக்தன். அரசர்களுள் ரிஷி போன்றவன். பசியாலும் தாகத்தாலும் வாடியிருந்த அவனை நாம் அன்போடு கவனித்திருக்க வேண்டும். அவனைச் சபித்தல் தவறு.

இறைவா! முதிர்ச்சியற்ற இந்த பாலகன் குற்றமற்ற அரசனுக்குச் செய்த தீங்கை கன்னி த் து விடுங்கள். உண்மையான பக்தர்கள், தங்களைத் துன்புறுத்துபவருக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள்.”

இவ்வாறு வருந்திய முனிவர் அரசனின் தவறை ஒரு பொருட்டாகக் கருதவே இல்லை. 

பிறகு தன் வேறு இரண்டு சீடர்களை அழைத்து, “இந்த சாபத்தை அரசனுக்குத் தெரியப்படுத்தி விட்டு வாருங்கள். அவன் ஏதாவது பரிகாரம் செய்து கொள்ளட்டும்.” என்று சொல்லி அனுப்பினார்.

ஏதோ ஒரு வேகத்தில் பசியாலும் தாகத்தாலும் ஆட்பட்டுத் தவறு செய்து விட்ட பரீக்ஷித், அரண்மனைக்குச் சென்றதும் மனம் வருந்தத் துவங்கினான்.

“எப்பேர்ப்பட்ட தவறிழைத்தேன். முனிவரை அவமதித்தேனே. இதற்கு எனக்கு சரியான தண்டனை கிடைத்தால் ஒழிய என் மனம் அமைதியடையாது. உயர்ந்த பரம்பரையில் வந்துவிட்டு இப்படி ஒரு தவறு செய்தேன். முனிவர்கள், தெய்வம், முன்னோர்கள் அனைவரும் பழிக்கும் இழிசெயல் செய்த எனக்கு ஏதாவது பெரிய தண்டனை அவசியம் வேண்டும். அதுதான் ப்ராயசித்தம்” என்று புலம்பினான்.

முனிவரின் சீடர்கள் வந்து ச்ருங்கியின் சாபத்தைச் சொன்னார்கள்.

சபையோர் அனைவரும் துடித்துப் போனார்கள்.

ஒருவர் ம்ருத்யுஞ்ஜய யாகம் செய்யலாம் என்றார்.

ஒருவர் பாம்புகள் வராதபடி கருடனுக்கு ப்ரீதி செய்யலாம் என்றார்கள். சபையில் ஒவ்வொருவரும் ஆளுக்கொன்று சொன்னார்கள்.

பரீக்ஷித், “போதும்” என்ற ஒற்றைச் சொல்லால் அனைவரையும் அடக்கினான்.

“இந்த சாபத்திற்கு நான் தகுதியானவன்தான். தண்டனையை ஏற்கிறேன். எனக்கு ஏழுநாள்களில் மரணம். மரணம் வருவதற்குள் நான் என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்.” என்று சொல்லி, தன் மகன் ஜனமேயஜயனுக்கு அக்கணமே அரசனாக பட்டாபிஷேகம் செய்வித்தான்.

பின்னர் அனைத்தையும் துறந்து மரவுரி உடுத்து, பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் சேவையே சிறந்தது என்று கருதி, பகவானிடமே மனத்தை இருத்தி கங்கைக் கரையை அடைந்தான். 

அங்கு அமர்ந்து ப்ராயோபவேசம் அதாவது வடக்கிருத்தலை மேற்கொண்டான்.

வடக்கிருத்தல் என்பது வடக்கு நோக்கி அமர்ந்து உயிர் பிரியும் வரை உண்ணா நோன்பிருத்தல். பரிக்ஷித் ஸ்ரீ க்ருஷ்ணனையே த்யானம் செய்யத் துவங்கினான்.

அவனது உயர்ந்த செயலைக் கண்ட மேலோர் அனைவரும் அங்கு கூடினர்.

ஸாதுக்களே இவ்வுலகைத் தூய்மை செய்கின்றனர். தீர்த்த யாத்திரை என்ற பெயரில் உண்மையில் அவர்கள் நதிகளையும் தீர்த்தங்களை யும் புனிதமாக்குகின்றனர்.

அதனாலேயே எவ்வளவு பேர் வந்து ஸ்நானம் செய்து தங்கள் பாவங்களைப் போக்கி கொண்டாலும் புண்ய நதிகள் ஸாந்நித்யத்தை இழக்காமல் ஓடிக் கொண்டிருக்கின்றன.

கங்கைக் கரையில் பரீக்ஷித்தைக் காண, அத்ரி, வசிஷ்டர், ச்யவனர், சரத்வான், அரிஷ்டநேமி, ப்ருகு, ஆங்கிரஸ், பராசரர், விஸ்வாமித்ரர், பரசுராமர், உதத்யர், இந்த்ரப்ரதமர், இத்மவாஹர், மேதாதிதி, தேவலர், ஆர்ஷ்டிஷேணர், பரத்வாஜர், கௌதமர், பிப்பலாதர், மைத்ரேயர், ஔர்வர், கவஷர், அகஸ்தியர், வியாஸர், நாரதர், தேவரிஷிகள், ப்ரும்மரிஷிகள், அருணன் முதலிய இன்னும் பல ரிஷிகளும் வந்து சேர்ந்தனர்.

பரீக்ஷித் அனைவரையும் வணங்கினான். “சான்றோர்களான தங்களைக் காண்பதே பெரும் பாக்யம். என்னைப் போன்று நிந்திக்கத்தக்க செயலைச் செய்த அரசர்கள், தங்கள் பாத தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ளவும் அருகதை அற்றவர்கள். கொடிய செயல் செய்த என்னை தக்ஷகன் வந்து நன்றாகக் கடிக்கட்டும். நாங்கள் உங்களிடம் வணக்கம் உடையவன் என்று நீங்கள் தெரிந்து கொண்டாலே போதும். நான் மன்னிப்பு வேண்டவில்லை. தண்டனைக்கே தகுதியானவன். தக்ஷகன் வரும் வரையில் நீங்கள் எனக்கு பகவானின் கதைகளைக் கூறுங்கள். உங்கள் அனைவருக்கும் என் நமஸ்காரங்கள்.”

அவனது உயர்ந்த குணத்தைக் கண்ட மஹரிஷிகள் மகிழ்ந்து அவனை ஆசீர்வதித்தனர்.

“அரசாட்சியையே துறந்து நீ இப்படி வந்தது ஒன்றும் வியப்பல்ல. உன் முன்னோரின் குலப்பெயரைக் காப்பாற்றிவிட்டாய். ஸாதுக்களையே தெய்வமாய் வணங்கும் பரம்பரையில் வந்த நீ வீடுபேறடையும் வரை நாங்கள் அனைவரும் உன்னுடனேயே இருப்போம்.”

மீண்டும் மகிழ்ந்து நமஸ்காரம் செய்த பரீக்ஷித், கேட்டான்

“ஒருவன் மரணத் தறுவாயில் செய்யவேண்டியது என்ன?“

ஒவ்வொரு முனிவரும் ஒரு வழியை விவாதம் செய்யத் துவங்கினர்.

அப்போது, மனம் போனபடி உலாவுபவரும், திகம்பரரும், ப்ரும்மானந்தத்திலேயே எப்போதும் திளைப்பவருமான ஸ்ரீ சுக மஹரிஷி அங்கு வந்தார்.

ஒருவன் உண்மையாக பக்தி செய்து இறைவனை அடைய விரும்புவானாயின் அவனைத் தேடி ஒரு உத்தம குரு தானே வந்து சேர்வார் என்பது ஸத்யமாயிற்று.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்