About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 27 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 129

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 99

உத்தாரணோ து³ஷ் க்ருதிஹா
புண்யோ து³ஸ் ஸ்வப்ந நாஸந:|
வீரஹா ரக்ஷண: ஸந்தோ
ஜீவநம் பர்ய வஸ்த்தி²த:|| |

  • 923. உத்தாரணோ - கரை ஏற்றுபவர். உயர்த்துபவர். துன்பங்களைக் கடக்க உதவுபவர்.
  • 924. து³ஷ் க்ருதிஹா - தீமை செய்பவரைத் தொலைப்பவர். தீயவர்களைக் கொல்பவர். 
  • 925. புண்யோ - பாபங்களைப் போக்குபவர். புண்ணியவர். தூய்மையாக்குபவர்.
  • 926. து³ஸ் ஸ்வப்ந நாஸநஹ - கெட்ட கனவுகளைப் போக்குபவர்.
  • 927. வீரஹா - பாசங்களை (தளைகளை) விடுவிப்பவர். சம்சாரத்தின் பந்தங்களை அறுப்பவர்.
  • 928. ரக்ஷணஸ் - காப்பாற்றுபவர். இரட்சகர்.
  • 929. ஸந்தோ - வளரச் செய்பவர். நீதியுள்ளவர். தர்மத்தைப் பின்பற்றுபவர்.
  • 930. ஜீவநம் - உயிரைக் கொடுப்பவர்.
  • 931. பர்ய வஸ்த்தி²தஹ - சூழ நின்றவர். அனைத்தையும் வியாபித்திருப்பவர். எல்லாவற்றையும் ஊடுருவி இருக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.66

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.66 

நாஸ்தி பு³த்³தி⁴ர யுக் தஸ்ய 
ந சாயுக் தஸ்ய பா⁴வநா|
ந சாபா⁴ வயத: ஸா²ந்திர
அஸா²ந் தஸ்ய குத: ஸுக²ம்||

  • ந அஸ்தி - இருக்க முடியாது 
  • பு³த்³தி⁴ர் - உன்னத அறிவு 
  • அயுக் தஸ்ய - பரமனின் தொடர்பில் இல்லாதவன் 
  • ந - இல்லை 
  • ச - மேலும் 
  • அயுக் தஸ்ய - பரமன் உணர்வில்லாதவன் 
  • பா⁴வநா - நிலைத்த மனம் (ஆனந்தத்தில்) 
  • ந - இல்லை 
  • ச - மேலும் 
  • அபா⁴ வயதஸ்- நிலைபெறாதவன் 
  • ஸா²ந்தி - அமைதி 
  • அஸா²ந் தஸ்ய - அமைதியில்லாவிடில் 
  • குதஸ் - எங்கே  
  • ஸுக²ம் - ஆனந்தம் 

பரமனின் தொடர்பில் இல்லாதவன், யோகமில்லாதவன் உன்னத அறிவுடன் இருக்க முடியாது. பரமனின் தொடர்பில் இல்லாதவன் நிலைத்த மனமுடன் இருக்க முடியாது. அவ்வாறு நிலை பெறாதவனுக்கு அமைதி இல்லை. மேலும், அமைதி இல்லாவிடில், ஆனந்தம் ஏது?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.19

சாதுர் ஹோத்ரம் கர்ம ஸு²த்³த⁴ம் 
ப்ரஜா நாம் வீக்ஷ்ய வைதி³கம்|
வ்யத³ தா⁴த்³ யஜ்ஞ ஸந் தத்யை 
வேத³ம் ஏகம் சதுர் வித⁴ம்||

  • சாதுர் ஹோத்ரம் - ஹோதா, அத்வர்யு, உத்காதா, பிரும்மா என நான்கு ரித்விக்குகளால் செய்யகே கூடியதும் 
  • வைதி³கம் - வேத ஸம்பந்தமானதுமான 
  • கர்ம - கர்மாவை 
  • ப்ரஜா நாம் ஸு²த்³த⁴ம் - மக்களை தூய்யைப்படுத்தும் தன்மை உள்ளதாக 
  • வீக்ஷ்ய - பார்த்து 
  • யஜ்ஞ ஸந் தத்யை - யாகம் எப்பொழுதும் நடை பெறுவதன் பொருட்டு 
  • ஏகம் வேத³ம்  - ஒரே வேதத்தை 
  • சதுர் வித⁴ம் - நான்கு விதமாக 
  • வ்யத³ தா⁴த்³  - பிரித்தார்         ,    

வேதத்தில் கூறப்பட்டுள்ள யாகம் முதலிய கர்மாக்கள் மக்களைத் தூய்மைப் படுத்துவன, நலம் அருள்வன. அவை ஹோதா, அத்வர்யு, உத்காதா, பிரும்மா என நான்கு ரித் விக்குகளால் செய்ய வேண்டுவன. ஆக, தொடர்ந்து நடந்தேறி வருவதற்காக ஒன்றாயிருந்த வேத ராசியை நான்காகப் பிரித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.64

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.64

ராக⁴வ ப்ரத்ய யார் த²ம் து 
து³ந்துபே⁴: காய முத்தமம்|
த³ர்ஸ²யா மாஸ ஸுக்³ரீவோ 
மஹா பர்வத ஸந்நிப⁴ம்|| 

  • ஸுக்³ரீவோ - ஸுக்³ரீவர்
  • து - இந்த ஸ்திதியில் 
  • ராக⁴வ - ராகவரிடம் 
  • ப்ரத்ய யார் த²ம் - நம்பிக்கை உண்டாகும் பொருட்டு 
  • து³ந்து பே⁴ஹ் - துந்துபி என்ற அஸுரனுடைய 
  • மஹா பர்வத - பெரு மலைக்கு 
  • ஸந்நிப⁴ம் - நிகரான 
  • உத்தமம் -மிகவும் பெரியதான 
  • காயம் - தசை இல்லாத ஸரீரத்தை 
  • த³ர்ஸ²யா மாஸ - சுட்டி காட்டினார்

ராகவனிடம் நம்பிக்கை கொள்வதற்காக அந்தச் ஸுக்ரீவன், பெரும் மலை போலக் கிடந்த துந்துபியின் பேருடலை ராகவனிடம் காண்பித்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 107 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 107 - நாரணனைப் பாடுவர் வைகுண்டம் செல்லலாம்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்

தரவு கொச்சகக் கலிப்பா

நச்சுவார் முன் நிற்கும்* நாராயணன் தன்னை*
அச்சோ வருக என்று* ஆய்ச்சி உரைத்தன* 
மச்சு அணி மாடப்* புதுவைக்கோன் பட்டன் சொல்* 
நிச்சலும் பாடுவார்* நீள் விசும்பு ஆள்வரே! (2)

  • நச்சுவார் - தன்னை விரும்பிப் பக்தி செய்பவர்கள் 
  • முன் நிற்கும் - முன்னே வந்து நிற்குந் தன்மையுள்ள
  • நாராயணன் தன்னை - நாராயணனாகிய ஸ்ரீ க்ருஷ்ணனை
  • ஆய்ச்சி - இடைக் குலத்தவளான யசோதை அணைத்துக் கொள்ளுகையில் உண்டான விருப்பம் தோன்றும்படி
  • அச்சோ வருக - அச்சோ வருவாயாக 
  • என்று உரைத்தன - என்று சொன்னவற்றை
  • மச்சு அணி - பல நிலைகளால் அழகிய
  • மாடம் - மாளிகைகளை உடைய
  • புதுவை - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
  • கோன் - ஸ்வாமியான
  • பட்டன் - பெரியாழ்வார்
  • சொல் - அருளிய இப் பத்துப் பாசுரங்களையும்
  • பாடுவார் - ஓதுபவர்கள்
  • நிச்சலும் - அனுதினமும் 
  • நீள் விசும்பு - பரமாகாசமாகிற பரம பதத்திற்கு
  • ஆள்வர் – நிர்வாஹகராவர்

தன்னை துதிப்பவர் முன் வந்து நிற்கும் தன்மையுள்ள நாராயணனாகிய கண்ணனை இடையர் குல யசோதை அணைத்துக்கொள்ள விரும்பி அழைத்ததை, மாளிகைகளால் சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவனான பெரியாழ்வார் இப்பத்து பாசுரங்களால் விவரித்துரைத்தார். எப்போதும் இப்பாசுரங்களைப் பாடுபவர்கள் வான் புகழ் அடைவர். 

அடிவரவு: பொன் செங்கமலம் பஞ்சவர் நாறிய சுழல் போர் மிக்க என்னிது கண்ட துன்னிய நச்சுவர் - வட்டு

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 032 - திருமணிமாட கோவில் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

032. திருமணிமாடகோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 12 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 12 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 11 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 1218 - 1227 – மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1850 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்

பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2782 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

சீரே தரும் கதியில் சேருகைக்கு நான் உன்னை*
நேரே வணங்கினேன் நெஞ்சே நீ பாரில்*
அணி மாடக் கோயில் அரங்கனார் நாங்கூர்*
மணி மாடக் கோயில் வணங்கு*

  • நெஞ்சே – மனமே!
  • சீரே தரும் கதியில் சேருகைக்கு – சிறப்பையே தருகின்ற நல்ல கதியில் முத்தி உலகத்தில் சென்று சேர்வதற்காக
  • நான் - உன்னை – எனது நன்மை தீமைகட்குக் காரணமாக இருக்கின்ற உன்னை
  • நேரே வணங்கினேன் – நன்றாகத் தொழுகின்றேன்
  • நீ - யாது செய்ய வேண்டுமெனின்
  • பாரில் – இந்த நில உலகத்தில்
  • அணி மாடம் கோயில் அரங்கனார் – அழகிய மாட மாளிகைகளை உடைய கோயில் என்று சொல்லப் படுகின்ற
  • ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ள ரங்கநாதனது
  • நாங்கூர் மணிமாடக்கோயில் – திருநாங்கூரைச் சார்ந்த திருமணிமாடக் கோயில் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • வணங்கு – தொழுவாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 73

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 18

ஸ்கந்தம் 03

கருடன் மீதேறி அழகே உருவாக எம்பெருமான் வந்த காட்சியை எவ்வளவு சொன்னாலும் முழுதும் சொல்ல இயலாது.

கர்தமர் ஆனந்தக் கடலில் மூழ்கினார். இரு கரங்களும் சிரமேற் குவிந்தன. தழுதழுக்கும் குரலில் பேசத் துவங்கினார்.


ஸர்வேஸ்வரா! ஸத்வ குணமே உருவான தாங்கள் கண்கள் பயனுற தரிசனம் தந்தீர். பற்பல பிறப்புகளைப் பெற்றும் யோகிகள் மானுடப் பிறவியெடுத்து தங்களது இந்த தரிசனத்தைக் காணவே விரும்புகின்றனர்.

இந்த ஸம்ஸார ஸமுத்ரத்தை சுலபமாக கடக்க ‌ஒரே சாதனம் தங்களது திருவடித் தாமரைகளே. அப்படிப்பட்டவற்றைக்‌ கண்ட பின்னும் மனிதன் உலக சுகங்களைக் கேட்கிறான்.

நீங்கள் வேண்டியதனைத்தும் அளிக்கும் கற்பகத்தரு. என் இதயம் காமத்தால்‌ கலங்கியுள்ளது. எனக்கு இல்வாழ்க்கையின் நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகும் ஒழுக்கமான, பக்தியுள்ள பெண்ணை மனைவியாக அருள வேண்டும்.

தாங்களே இவ்வுலகைப் படைத்து, காத்து, முடிவில் உம்மிடமே அடக்கிக் கொள்கிறீர்கள். சிலந்திப்பூச்சி தன்னிடமிருந்து வரும் திரவத்தால் வலையைப் பின்னி விருப்பம் போல் விளையாடி விட்டு தன்னுள்ளேயே இழுத்துக் கொள்கிறது. திரவத்தை வெளியெ விடுவதாலோ, உள்ளிழுத்துக் கொள்வதாலோ அதற்கு எந்த மாறுபாடும் ஏற்படுவதில்லை. அதுபோல் ப்ரபஞ்சம் உங்களிடமிருந்து தோன்றும் போதும், அதை நீர் உள்ளடக்கிக் கொள்ளும் போதும், எந்த மாறுபாடும் இன்றி பூரணராக விளங்குகிறீர்.

மாயை எனும் சக்தியை ஏவி உலகை ஆட்டிப் படைக்கிறீர்கள். உலகியல் இன்பம் விரும்புபவர்களாயினும் சரி, முக்தியை விரும்புபவர்களாயினும் சரி, நீங்கள் வேண்டுபவர்க்கு வேண்டியவற்றை அருளுகிறீர்கள் என்று சொல்லி நமஸ்கரித்தார்.

மனத்தைக் கவரும் புன்னகையோடு பகவான் பேச ஆரம்பித்தார். கர்தமரே! தாங்கள் மனம், பொறிகள் ஆகியவற்றை அடக்கி என்னை வழிபட்டீர்.‌ தங்கள் எண்ணம் அறிந்து, அதற்கான ஏற்பாட்டை நான் முன்னமே செய்து விட்டேன். என்னை வழிபடுவது ஒரு போதும் வீணாகாது. ப்ரும்ம தேவரின் புதல்வரான ஸ்வாயம்புவ மனு ஏழு தீவுகள்‌அடங்கிய இவ்வுலகைக்‌ காத்து வருகிறார்.

தர்மங்கள் அனைத்தும் அறிந்த ராஜரிஷியாகிய ஸ்வாயம்புவ‌ மனு நாளை காலை இங்கு வருவார். அவருக்கு அழகும், இளமையும், நற்குணங்களும், ஒழுக்கமும் நிறைந்த பெண் இருக்கிறாள். அவளைத் தங்களுக்கு மணம் செய்துவைப்பார். அந்த அரசகுமாரி, தங்களுக்கேற்றவள். தங்கள் மனம் போல் நடந்துகொள்பவள். அவளைத் திருமணம் செய்து கொண்டு, உலகம்‌ போற்றும்படி இல்லறம் நடத்துவீர். தங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறப்பார்கள். அவர்கள் மரீசி முதலிய மஹரிஷிகளை மணந்து உலகம்‌ போற்றும்‌ சந்ததிகளைத் தோற்றுவிப்பார்கள். கடைசியில் நானும் தங்கள் மகனாக அவதரித்து சாங்க்ய சாஸ்திரத்தை எழுதப்போகிறேன். இனிய இல்லறம் அமையப்பெற்று, ஜீவராசிகளிடம் அன்பு காட்டி வாழ்ந்து, பின் மனத்தையடக்கி உள்ளும் புறமும் என்னையே காண்பீர். என்று கூறினார்.

பகவானை ஆராதிக்கும் ஒவ்வொரு பக்தர்க்கும் இத்தகைய வாழ்வை அவர் அனுக்ரஹம் செய்கிறார். மனத்தை உட்செலுத்தினால் பகவான் வெளித்தோன்றுகிறார்.

இறைவன் கர்தம மஹரிஷிக்கு அருள் செய்துவிட்டு, அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பிந்துஸரஸ் என்ற அவ்விடத்திலிருந்து கிளம்பி வைகுண்டம் சென்றார்.

அவர் செல்லும் வழியெங்கும் சித்தர் துதி செய்தனர். கருடனின் இறக்கைகள் இரண்டும், ப்ருஹத், ரதந்திரம் எனும் ஸாம வேதங்களாகும். அவற்றிலிருந்து வரும் கானத்தைக் கேட்டுக் கொண்டே பகவான் வைகுண்டம் சென்றார்.

இறைவன் போகும் முன் கர்தமரைப் பார்த்து அன்பொழுக கண்களும் இதழ்களும் பேச, முறுவலித்துவிட்டுச் சென்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்