About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 13 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 122

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 92

த⁴நுர்த் த⁴ரோ த⁴நுர் வேதோ³ 
த³ண்டோ³ த³மயிதா த³ம:|
அபராஜிதஸ் ஸர்வ ஸஹோ 
நியந்தா நியமோ யம:||

  • 861. த⁴நுர்த் த⁴ரோ - சாரங்கம் என்னும் வில்லைத் தரித்திருப்பவர்.
  • 862. த⁴நுர் வேதோ³ - வில் வித்தையைக் கற்பிப்பவர். தனுர் வேதத்தின் முன்னோடி ஆவார். அறிவியலை முழுமையாக அறிந்தவர்.
  • 863. த³ண்டோ³ - துஷ்டர்களைத் தண்டிப்பவர். தர்மத்தின் விதிகளை அமைக்கிறார். தர்மத்தை நிர்வகிப்பவர்களுக்கு தண்டனையின் ஆதாரமாக இருக்கிறார்.
  • 864. த³மயிதா - நேராக அவதரித்துத் தீயவர்களை அடக்குபவர். தன் பக்தர்களின் எதிரிகளை அடக்கி ஆள்பவர். யமனாக, மரணத்தின் கடவுள். ராஜ்யங்களின் ஆட்சியாளர்களின் வடிவில் ஒழுங்குபடுத்துகிறார்.
  • 865. அத³மஹ - யாராலும் அடக்க முடியாதவர். 
  • 866. அபராஜிதஸ் - எவராலும், எதனாலும், எப்பொழுதும், எங்கும், எந்தச் சூழ்நிலையிலும் வெல்ல முடியாதவர், எல்லாம் வல்லவர். அவரது ஆதரவைப் பெற்ற எவரும் சமமாக வெல்ல முடியாதவர். 
  • 867. ஸர்வ ஸஹோ - அனைவரையும் தாங்குபவர். எல்லா வடிவங்களையும் ஆதரிப்பவர். எல்லாச் செயல்களிலும் கை தேர்ந்தவர்.  தனது எதிரிகள் அனைவரையும் வெல்கிறார். பூமி போன்ற அனைத்தையும் ஆதரிப்பவர்.
  • 868. நியந்தா - நியமித்து நடத்துபவர். மற்ற கடவுள்களை வணங்கும் பக்தர்களின் நம்பிக்கையை நிலை நிறுத்துகிறார், மற்ற எல்லா கடவுள்களையும் அருள் செய்ய ஆதரிக்கிறார்.
  • 869. நியமோ - நியமிப்பவர். நிச்சயிப்பவர். 
  • 870. யமஹ - தேவதை பலரை நியமித்து நடத்துபவர். அனைத்து தேவர்களையும் கட்டுப்படுத்துபவர். அந்தர்யாமி என அனைத்தையும் திருத்துபவர். நித்யமானவர். மரணமில்லாதவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.59

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.59
 
விஷயா விநிவர் தந்தே 
நிராஹாரஸ்ய தே³ஹிந:|
ரஸ வர்ஜம் ரஸோ ப்யஸ்ய 
பரம் த்³ருஷ்ட்வா நிவர்ததே||

  • விஷயா - புலனுகர்ச்சிப் பொருள்கள்  
  • விநிவர் தந்தே - விலகியிருக்க பயிற்சி கொண்டு 
  • நிராஹாரஸ்ய - மறுப்புக் கட்டுபாடுகளால் 
  • தே³ஹிநஹ - உடலை உடையவன் 
  • ரஸ வர்ஜம் - சுவையை விட்டொழித்து 
  • ரஸ - இன்பத்தைப் பற்றிய எண்ணம் 
  • அபி - இருப்பினும்  
  • அஸ்ய-அவனது 
  • பரம் - உயர்ந்தவற்றை 
  • த்³ருஷ்ட்வா - அனுபவிப்பதால் 
  • நிவர்த்ததே - முற்றுப் பெறுகின்றது

உடலை உடையவன் மறுப்பு கட்டுப்பாடுகளால், புலனுகர்ச்சிப் பொருட்களிலிருந்து விலகி இருக்க பயிற்சி கொண்டு சுவையை விட்டொழித்தாலும் அவனது இன்பத்தைப் பற்றிய எண்ணம் இருக்கும். இருப்பினும் பரம்பொருளைக் கண்டதும், உயர்ந்தவற்றை அனுபவிப்பதால் முற்றுப் பெறுகின்றது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.12

ஸி²வாய லோகஸ்ய ப⁴வாய பூ⁴தயே
ய உத்தம ஸ்²லோக பராயணா ஜநா:|
ஜீவந்தி நாத் மார்த² ம ஸௌ பராஸ்² ரயம்
முமோச நிர்வித்³ய குத: களேவரம்||

  • யே உத்தம ஸ்²லோக பராயணா - எவர்கள் பகவத் பக்தர்களோ
  • ஜநாஹ - அந்த ஜனங்கள்
  • லோகஸ்ய ஸி²வாய - உலகச் க்ஷேமத்தின் பொருட்டும்
  • ப⁴வாய பூ⁴தயே - நன்மையின் பொருட்டும், ஸ்மிருத்தியின் பொருட்டும்
  • ஜீவந்தி - வாழ்கின்றனர்
  • ஆத்மார்த²ம் ந - சுயநலத்துக்காக அல்ல
  • அஸௌ - அவ்வாறு இருக்க இந்த பரீக்ஷித்
  • நிர்வித்³ய - வெறுப்பை அடைந்து
  • பராஸ்² ரயம் - பிறருக்கு நன்மை செய்யத் தக்க
  • களேவரம் - தனது ஸரீரத்தை
  • குதஹ் முமோச -  ஏன் விட்டான்?

பகவானிடமே மனத்தைச் செலுத்திய பக்தர்கள், இவ்வுலகச் செல்வங்கள் அனைத்தையும் பெற்று நலமுடன் வாழக் கருதியே தான் வாழ்கிறார்கள்.  அதாவது, பிறருக்காகவே வாழ்கிறார்கள். தன்னலம் கருதி வாழ்வதில்லை. அவ்வாறிருக்க, இவ்வரசன் பிறர் நலங்கருதிக் காக்கப்பட வேண்டிய தனது உடலை ஏன் வெறுப்புற்று நீக்கக் கருதினான்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.57

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.57

ஸ்²ரமணாம் த⁴ர்ம நிபுணா 
மபி⁴ க³ச்சே²தி ராக⁴வம்|
ஸோப்⁴ய க³ச்ச²ந் மஹா தேஜா: 
ஸ²ப³ரீம் ஸ²த்ரு ஸூத³ந:|| 

  • த⁴ர்ம நிபுணாம் - தர்மங்களை பூரணமாய் அறிந்தவளான
  • ஸ்²ரமணாம் - சன்னியாசியான
  • அபி⁴ க³ச்ச² - போய் காண்பீராக
  • இதி ராக⁴வம் - என்று ராகவருக்கு சொன்னான்
  • மஹா தேஜாஹ - மஹா போர் வீரரான
  • ஸ²த்ரு ஸூத³நஹ - சத்ருக்களை அழைப்பவரான
  • ஸ - அவர்
  • ஸ²ப³ரீம் - சபரியை 
  • அப்⁴ய க³ச்ச²ந் - போய் கண்டார்

ஓ! ராகவா, அறமொழுகுபவளும், பக்தையுமான சபரியிடம் நீ செல்வாயாக" என்றான். பேரொளி படைத்தவனும், பகைவரை அழிப்பரான அந்த ராமன், சபரியை போய் கண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 100 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 100 - கூனியின் கூனை நிமிர்த்தியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்

நாறிய சாந்தம்* நமக்கு இறை நல்கு என்னத்*
தேறி அவளும்* திருவுடம்பில் பூச*
ஊறிய கூனினை* உள்ளே ஒடுங்க* 
அன்று ஏற உருவினாய்! அச்சோ அச்சோ* 
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ!

  • நாறிய - நல்ல வாசனை வீசுகின்ற
  • சாந்தம் - சந்தனத்தை
  • நமக்கு - எங்களுக்கு
  • இறை - கொஞ்சம்
  • நல்கு என்ன - கொடு என்று நீ கூனியைக் கேட்க
  • அவளும் - அந்தக் கூனியும் இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்
  • தேறி - மனம் தெளிந்து
  • திரு உடம்பில் - உனது திருமேனியிலே
  • பூச - சாத்த
  • ஊறிய - பல ஆண்டுகளாய் இருந்த
  • கூனினை - அவளுடைய கூனை
  • உள்ளே - அவள் சரீரத்திற்குள்ளே
  • ஒடுங்க - அடங்கும்படி
  • அன்று - அக் காலத்திலே
  • ஏற - நிமிர்த்து
  • உருவினாய் - கைகளால் உருவினவனே! 
  • அச்சோ! அச்சோ! — என்னை அணைத்துக் கொள்ள வேண்டும் 
  • எம்பெருமான்! வந்து - எங்கள் குலத்துக்கு ஸ்வாமியான எம்பெருமானே! வந்து  
  • அச்சோ! அச்சோ! — என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

ஒரு சமயம் பலராமனுடன் நீ சென்று கொண்டிருக்க, கூனியை சந்திக்க நேரிடுகையில், நறு மணம் வீசும் சந்தனத்தை அவள் கம்சனுக்காக எடுத்துச் செல்வதைப் பார்த்து, எங்களுக்கு கொஞ்சம் கொடு என்று அவளை நீ கேட்க, அவளும் கம்சனக்கு அஞ்சாமல், அந்த நல்ல சந்தனத்தை எடுத்து உன் திருமேனியில் பூச, உடனே அவளிடம் கருணையுள்ளம் கொண்டவனாய் அவளது கூனை, அவளுள்ளே அடங்குமாறு செய்து, நிமிர்த்திட்டாய். எம்பெருமானே! என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும். அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 030 - திரு வண்புருஷோத்தமம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

030. திரு வண்புருஷோத்தமம் (திருநாங்கூர்)
முப்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ புருஷோத்தம நாயகி தாயார் ஸமேத ஸ்ரீ புருஷோத்தமன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: புருஷோத்தமன்
  • தாயார் மூலவர்: புருஷோத்தம நாயகி
  • திருமுகமண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: திருப்பாற்கடல்
  • விமானம்: சஞ்சீவி விக்ரஹ
  • ஸ்தல விருக்ஷம்: பலா, வாழை
  • ப்ரத்யக்ஷம்: உபமன்யு
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வண்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சந்நதிகள் உள்ளன. அதில் ராமர் சந்நதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய் பொத்திய நிலையில் உள்ளார். பாசி படியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப் பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம். இங்கு பெருமாளை அயோத்தி ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வண்புருஷோத்தமர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக் கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள். தாயார் புருஷோத்தம நாயகி தென் மேற்கு மூலையில் தனி சந்நதியில் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். உள் பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சந்நதிகள் உள்ளன. பங்குனி மாதம் 10ம் நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப் படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது. தை அமாவாசைக்கு மறுநாள் கருட சேவை. ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் மங்களாஸாஸநம் செய்த ஸ்தலம். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம். திருச்சி அருகே திருக்கரமனூர். அதே போல் இந்த திருநாங்கூர் வண்புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சந்நதி இல்லை. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 66

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 11

ஸ்கந்தம் 03

வராக அவதாரம் - 1

எவ்வளவு விஷயங்களைப் படைத்திருந்தபோதும், ஜீவன்களின் படைப்பு, பெருகவே இல்லை. மிகுந்த ஆயாசத்துடன் ப்ரும்மா தன் உடலை விட்டார். அவரது சரீரம் நான்கு திக்குகளாலும் ஆகர்ஷிக்கப்பட்டு புகை மூட்டமாயிற்று. புதிய சரீரம் கொண்ட அவர், தன் செய்கையில் பிழைகள் உள்ளதா என்று ஆராய்ந்தார். ஒன்றும் புரியாமல் பகவானை சிந்தனை செய்யத் துவங்கினார். அப்போது அவரிடமிருந்து ஆண், பெண் என்று இரண்டு உடல்கள் ஏற்பட்டன. 'க' எனில் ப்ரும்ம தேவர். அதிலிருந்து உண்டானது காயம். அவ்வாறு பிரிந்ததில் ஆண் உருவம் ஸ்வயம்புவ மனு என்று பெயர் பெற்று முதல் மனுவாயிற்று. பெண் பகுதி சதரூபா என்ற பெயரில் ஸ்வாயம்புவ மனுவின் ராணியானார்.


அது முதல் ஆண், பெண் உடலுறவால் ப்ரஜைகள் தோன்றலாயினர். சக்ரவர்த்தியான ஸ்வாயம்புவமனுவிற்கும், சதரூபைக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் ப்ரியவ்ரதன், உத்தானபாதன் என்ற இரு ஆண் குழந்தைகளும், ஆகூதி, தேவஹூதி, ப்ரஸூதி ஆகிய மூன்று பெண் குழந்தைகளும் ஆவார்கள்.

ஸ்வாயம்புவ மனு ஆகூதியை ருசி என்பவருக்கும், தேவஹூதியை கர்தமருக்கும், ப்ரஸூதியை தக்ஷனுக்கும் திருமணம் செய்துகொடுத்தார். அவர்களது சந்ததியால் இவ்வுலகம் நிறைந்தது.

விதுரர் கேட்டார். "ரிஷியே, பகவானின் சரண கமலங்களைத் தனது இதயத் தாமரையில் வைத்து வழிபடும் அடியார்களின் குணங்களைக் கேட்பதே கற்ற கல்வியின் பயன் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். எனவே, அந்த ஸ்வாயம்புவ மனுவின் சரித்திரத்தைக் கூறுங்கள்" என்றார்.

இவ்வார்த்தைகளால் மைத்ரேயர் மகிழ்ச்சியால் மேனிசிலிர்த்தார். பின்னர் கூறத் துவங்கினார்.

ஸ்வாயம்புவ மனு சதரூபையுடன் வந்து ப்ரும்மாவிடம் கூறினார். பகவானே, நீங்களே படைப்பு அத்தனைக்கும் காரணம். நாங்கள் தங்களுக்குச் செய்ய வேண்டிய சேவை என்ன என்று கூறியருளுங்கள் என்றார்.

ப்ரும்மா, பெற்றோரின் கட்டளையை விநயத்துடனும் ஈடுபாட்டுடனும் தன் திறமைக்கேற்பச் செய்வதே தனயனின் முதற் கடைமை. நீ சத ரூபையுடன் இல்லறம் நடத்தி குழந்தைகளைத் தோற்றுவித்து, அறநெறி வழுவாமல் இவ்வுலகைக் காத்து வா. பரம புருஷனை வேள்விகளால் ஆராதனம் செய். என்றார்.

மனு மீண்டும் கேட்டார். "தாங்கள் கூறியபடி செய்து பகவானை மகிழ்விக்கிறேன். ஆனால், நானும் என் மக்களும் வசிக்க ஒரு இடம் காட்டுங்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் இருப்பிடமான பூமி ப்ரளய நீரில் மூழ்கி விட்டது. அதை மேலே கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும்" என்றார்.  ப்ரும்மா பூமியை எவ்வாறு மேலே கொண்டு வருவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.

வழி எதுவும் புலப்படாததால் எந்த பகவானின் ஹ்ருதயத்தில் இருந்து நான் படைக்கப்பட்டேனோ, எவர் இவ்வுலகைப் படைக்கச் சொல்லி என்னை நியமித்திருக்கிறாரோ அந்த பகவானே இதற்கும் வழி காட்டட்டும் என்று நினைத்து, , பகவானை மனத்தால் துதித்தார்.

அப்போது, மிகவும் ஆச்சரியமாக, ப்ரும்மாவின் மூக்குத் துவாரத்திலிருந்து கட்டை விரல் அளவுள்ள ஒரு வெண்மை நிற வராகம் வெளி வந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆகாயத்தில் ஒரு யோஜனை தூரத்திற்கு வளர்ந்தது.

மரீசி முதலிய அந்தணர்கள், ஸனகாதி முனிவர்கள், மனு, ப்ரும்மா அனைவரும்‌ பெருகிய வராக உருவத்தைக் கண்டு யாராயிருக்கும் என்று தீவிரமாகச் சிந்தித்தனர். இந்த ப்ராணி யார்? எதற்காக வந்தது? என்றெல்லாம் யோசித்தனர்.

ப்ரும்மாவின் முகத்திலிருந்தே வேதங்கள் தோன்றின. அவ்ரது முகத்திலிருந்து தோன்றிய வராகமும் வேத ஸ்வரூபமான இறைவனே.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்