About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 75

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 45

ருது: ஸுத³ர்ஸ²ந: கால:
பரமேஷ்டீ² பரிக்³ரஹ:|
உக்³ர: ஸம்வத்ஸரோ த³க்ஷோ
விஸ்²ராமோ விஸ்²வ த³க்ஷிண:||

  • 417. ருதுஸ் - அணுகுபவர், தானே வந்து புகுபவர். பருவங்களை ஆளும் காலத்தின் இறைவன்,
  • 418. ஸுத³ர்ஸ²நஹ் - பார்வைக்கு இனியவர். அவரது தரிசனம் மோட்சத்திற்கு வழி வகுக்கிறது.
  • 419. காலஃ - தன்னிடம் சேர்த்துக் கொள்பவர். அவர் எல்லாவற்றிற்கும் வரம்புகளை அமைக்கிறார். எல்லோருடைய கர்மாவையும் அளந்து பலனைச் செய்பவன். 
  • 420. பரமேஷ்டீ² - பரமபதத்தில் உள்ளவர். உச்ச ஸ்தலத்தில் (வைகுந்தம்) வசிப்பவர்.
  • 421. பரிக்³ரஹஹ - யாவற்றையும் தன்னுடன் சேர்த்துக் கொள்பவர்.
  • 422. உக்³ரஸ் - பகைவர்களிடத்துக் கோபமானவர். அவர் வலிமையானவர்.
  • 423. ஸம்வத்ஸரோ - பொருந்தி வாழ்பவர். எல்லா உயிர்களிலும் வசிக்கும் ஒருவர்.
  • 424. த³க்ஷோ - விரைந்து செயல்படுபவர். 
  • 425. விஸ்²ராமோ - ஓய்வெடுக்கும் இடமாயிருப்பவர்.
  • 426. விஸ்²வ த³க்ஷிணஹ - எல்லார்க்கும் நல்லவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.12
 
நத்வே வாஹம் ஜாது நாஸம் 
ந த்வம் நேமே ஜநாதி⁴பா:|
ந சைவ ந ப⁴விஷ் யாம: 
ஸர்வே வய மத: பரம்||

  • ந - என்றுமில்லை 
  • து - ஆனால் 
  • ஏவ - நிச்சயமாக 
  • அஹம் - நான்
  • ஜாது - எக்காலத்திலும் 
  • ந - என்றுமில்லை 
  • ஆஸம் - இருந்து 
  • ந - இல்லை 
  • த்வம் - நீ
  • ந - இல்லை 
  • இமே - இங்குள்ள 
  • ஜநாதி⁴பாஹ - மன்னர்கள் 
  • ந - என்றுமில்லை 
  • ச - மேலும் 
  • ஏவ - நிச்சயமாக 
  • ந - இல்லை 
  • ப⁴விஷ் யாமஹ - இனி இருப்போம் 
  • ஸர்வே வயம் - நாம் அனைவரும் 
  • அதஃ பரம் - இனி மேலும்

நீயோ, நானோ, இம்மன்னர்களோ முன் ஒரு காலத்தில் இல்லாமல் இருந்ததும் இல்லை இனி வரும் காலங்களிலும் இல்லாமல் இருக்க போவதுமில்லை அனைவரும் தனித்துவம் வாய்ந்தவர்களே.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.10

பஞ்சம: கபிலோ நாம 
ஸித்³தே⁴ஸ²: கால விப்லுதம்|
ப்ரோவாசா ஸுரயே ஸாங்க்²யம் 
தத்த்வ க்³ராம விநிர்ணயம்||

  • பஞ்சமஹ் - ஐந்தாவதாக
  • ஸித்³தே⁴ஸ²ஹ் - ஸித்தர்களுக்கெல்லாம் ஈசனான
  • கபிலோ நாம - கபிலர் என்று பிரஸித்தவராய்
  • கால விப்லுதம் - காலக்கிரமத்தில் நஷ்டமடைந்த
  • தத்த்வ க்³ராம விநிர்ணயம் - தத்வங்களின் சமூகத்தை நிர்ணயித்து தருவதான
  • ஸாங்க்²யம் - ஸாங்க்யம் என்ற சாஸ்திரத்தை
  • ஆஸுரயே ப்ரோவாச - ஆஸூரி என்ற பிராமணனுக்கு சொன்னார்

ஐந்தாவதாக, சித்தர்களின் தலைவரான கபில வாசுதேவனாகத் திருவவதாரம் செய்து, வெகுகாலமாகி விட்டதால் நலிவடைந்திருந்த தத்துவங்களை நன்கு விளங்குவதான 'ஸாங்க்யம்' என்ற யோகத்தை 'ஆசுரி' என்ற அந்தணனுக்கு உபதேசம் செய்தருளினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.10

மஹோ ரஸ்கோ மஹேஷ் வாஸோ 
கூ³ட⁴ ஜத்ருர் அரிந்த³ம: ।
ஆஜாநு பா³ஹு: ஸு ஸி²ரா: 
ஸுல லாட: ஸு விக்ரம:॥ 

  • மஹோ ரஸ்கோ - விசாலமான மார்பை உடையவர்
  • மஹேஷ் வாஸோ - பெரிய வில்லாளி
  • கூ³ட⁴ ஜத்ருர் - தசை பற்றால் மறைந்த தோள் எலும்புகளை உடையவர்
  • அரிந்த³ மஹ - சத்துருக்களை அடக்குகிறவர்
  • ஆஜாநு பா³ஹுஸ் - முழங்கால் வரை நீண்ட புஜங்களை உடையவர்
  • ஸுஸி²ராஹ - அழகான சிரஸை உடையவர்
  • ஸுல லாடஸ் - அழகான நெற்றியை உடையவர்
  • ஸு விக்ரமஹ - அழகான நடையை உடையவர்

அவன் அகன்ற மார்பைக் கொண்டவனாகவும், நீண்ட வில்லைத் தாங்குபவனாகவும், காறையெலும்பு {கழுத்து பட்டை} மறைக்கப் பட்டவனாகவும், பகைவரை அடக்குபவனாகவும், நீண்ட கரங்களும், உயர்ந்த தலையும், பரந்த அழகிய நெற்றியும், {யானை போன்ற} கம்பீர நடையும் கொண்டவனாக இருக்கிறான். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 57 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 57 - சக்கரக் கையன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்

சக்கரக் கையன்* 
தடங்கண்ணால் மலர விழித்து*
ஒக்கலை மேலிருந்து* 
உன்னையே சுட்டிக் காட்டும் காண்*
தக்கதறிதியேல்* 
சந்திரா! சலம் செய்யாதே*
மக்கட் பெறாத* 
மலடன் அல்லையேல் வா கண்டாய்!

  • சக்கரம் - சுதர்சன சக்கரத்தை
  • கையன் - திருக்கையில் ஏந்தி கொண்டு இருக்கும் கண்ணபிரான்
  • தட கண்ணால் - விசாலமான கண்களாலே
  • மலர் விழித்து - நன்கு விரிய விரித்து மலரப் பார்த்து
  • ஒக்கலை மேல் - என் இடுப்பின் மேல்
  • இருந்து – இருந்து கொண்டு
  • உன்னையே - உன்னையே
  • சுட்டி காட்டும் காண்- சுட்டிக் காட்டுகின்றான் பார்
  • தக்கது - இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று
  • அறிதியேல் - உனக்கு தெரியவில்லையா
  • சந்திரா - சந்திரனே!
  • சலம் செய்யாதே - பிடிவாதம் செய்யாமல் 
  • மக்கள் பெறாத – பிள்ளை பெறாத
  • மலடன் அல்லையேல் - மலடன் அல்லவே
  • வா கண்டாய் - உடனடியாக நீ இங்கே வந்து நிற்பாய்!  

பொலிவுடைய, வடிவான சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தி கொண்டு இருக்கும் கண்ணன், என் இடுப்பில் அமர்ந்து கொண்டு, தன்னுடைய பெரிய விசாலமான அழகிய கண்களை விரிய விரித்து, உன்னையே சுட்டிக் காட்டுகிறான் பார் சந்திரனே! மக்கட் செல்வம் வாய்க்கப் பெறாத மலடன் அல்லவே நீ. உனக்கு இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா? பிடிவாதம் செய்யாமல், உடனடியாக நீ இங்கே வந்து என் பிள்ளையுடன் விளையாடுவாயாக! என்று யசோதை அன்னை, நிலவினை கண்ணனுடன் விளையாட விளிக்கின்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 015 - திருச்சேறை 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

015. திருச்சேறை 
பஞ்ச ஸார க்ஷேத்ரம் - கும்பகோணம்
பதினைந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 13

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1578 - சாரநாதனைத் தொழுவாரே என் தலைவர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
கண் சோர வெம் குருதி வந்து இழிய* வெம் தழல்போல் கூந்தலாளை*
மண் சேர முலை உண்ட மா மதலாய்* வானவர் தம் கோவே என்று* 
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு* மணி மாடம் மல்கு* 
செல்வத் தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்* 
காண்மின் என் தலை மேலாரே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1579 - சாரநாதனைத் தொழுவாரே என் மனத்தில் உள்ளார்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
அம் புருவ வரி நெடுங் கண்* அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்*
கொம்பு உருவ விளங்கனி மேல்* 
இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்*
வம்பு அலரும் தண் சோலை* வண் சேறை வான் உந்து கோயில் மேய*
எம் பெருமான் தாள் தொழுவார்* எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1580 - சாரநாதன் அடியார்களே தேவர்களாவர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மீது ஓடி வாள் எயிறு மின் இலக* முன் விலகும் உருவினாளை*
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த* கைத்தலத்தா என்று நின்று* 
தாதோடு வண்டு அலம்பும்* தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி*
போதோடு புனல் தூவும் புண்ணியரே* விண்ணவரில் பொலிகின்றாரே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1581 - சாரநாதன் பக்தகளுடன் தான் இருப்பேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் 
தேர் ஆளும் வாள் அரக்கன்* தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ*
போர் ஆளும் சிலை அதனால்* பொரு கணைகள் போக்குவித்தாய் என்று*
நாளும் தார் ஆளும் வரை மார்பன்* தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்*
பேராளன் பேர் ஓதும் பெரியோரை* ஒருகாலும் பிரிகிலேனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1582 - சாரநாதன் அடியார்களே எனக்கு இனியவர்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
வந்திக்கும் மற்றவர்க்கும்* மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்*
முந்திச் சென்று அரி உரு ஆய்* 
இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*
சந்தப் பூ மலர்ச் சோலைத்* தண் சேறை எம் பெருமான் தாளை* 
நாளும் சிந்திப்பார்க்கு என் உள்ளம்* தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1583 - சாரநாதன் திருவடிகளே எனக்குத் துணை
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த* பண்பாளா என்று நின்று*
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்* 
துணை இலேன் சொல்லுகின்றேன்* 
வண்டு ஏந்தும் மலர்ப் புறவில்* வண் சேறை எம் பெருமான் அடியார் தம்மை*
கண்டேனுக்கு இது காணீர்* என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1584 - சாரநாதன் அடியார்கட்கே என் அன்பு உரியது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
பை விரியும் வரி அரவில்* படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்*
மை விரியும் மணி வரை போல்* மாயவனே என்று என்றும் வண்டு ஆர் நீலம்**
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்* திரு வடியைச் சிந்தித்தேற்கு* 
என் ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்* என் அன்பு தானே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1585 - சாரநாதனின் அடியார்க்கு அடியார்க்குத் துன்பமே இல்லை
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
உண்ணாது வெம் கூற்றம்* ஓவாத பாவங்கள் சேரா* 
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்* 
மென் தளிர்போல் அடியினானை*
பண் ஆர வண்டு இயம்பும்* 
பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான் தன்னை*
கண் ஆரக் கண்டு உருகிக்* கை ஆரத் தொழுவாரைக் கருதுங்காலே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1586 - சாரநாதன் பக்தர்கட்கே என் உள்ளம் உருகும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கள்ளத் தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒரு கால் கவலை என்னும்*
வெள்ளத்தேற்கு என் கொலோ?* 
விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் தள்ள*
தேன் மணம் நாறும்* தண் சேறை எம் பெருமான் தாளை* 
நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்* என் உள்ளம் உருகும் ஆறே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1587 - யாவரும் சாரநாதப் பெருமாளையே தொழுமின்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பூ மாண் சேர் கருங் குழலார் போல் நடந்து* வயல் நின்ற பெடையோடு* 
அன்னம் தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்* 
தண் சேறை அம்மான் தன்னை* 
வா மான் தேர்ப் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்*
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டுமின்* 
நும் துணைக் கையால் தொழுது நின்றே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1853 - திருச்சேறையும் திருக்குடந்தையும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வானை ஆர் அமுதம்* தந்த வள்ளலை*
தேனை நீள் வயல்* சேறையில் கண்டு போய்* 
ஆனை வாட்டி அருளும்* அமரர் தம் கோனை* 
யாம் குடந்தைச் சென்று காண்டுமே|

012. திவ்ய ப்ரபந்தம் - 2707 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
கார் ஆர் மணி நிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
கார் ஆர் குடந்தை கடிகை கடல் மல்லை*
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*

013. திவ்ய ப்ரபந்தம் - 2772 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
தாமரை மேல் மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை*
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை*
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை*
மன்னிய தண் சேறை வள்ளலை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 66

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||  

ருக்மிணியின் கடிதம்|

பகல் உணவுக்குப் பிறகு அந்தணர் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். அந்தச் சமயம் கிருஷ்ணர், அந்தணர் பக்கத்தில் உட்கார்ந்து அவரது பாதங்களை வருடிய படி மிகவும் மெதுவான குரலில், "அந்தணரே! தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? கடைக் கடக்கும் கஷ்டத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு எதற்காக வந்தீர்கள்? அது ரகசியமான விஷயமாக இல்லா விட்டால் நான் தெரிந்துக் கொள்ளலாமா? நான் தங்களுக்குச் செய்யக் கூடிய காரியம் எதாவது உண்டா?" என்று வினவினர்.


கிருஷ்ணர் அளித்த உபச்சாரத்தைக் கண்டும், அவருடைய இனிய மொழிகளைக் கேட்டும், அந்தணர் மிக்க மகிழ்ச்சியுற்று இருந்தார். அவர் கிருஷ்ணரைப் பார்த்து, "பீஷ்மகர் ஆளும் விதர்ப்ப நாட்டிலிருந்து நான் வருகிறேன், அவருக்கு ருக்மிணி என்ற பெண் இருக்கிறாள். நாரதரிடமிருந்து தங்களை பற்றியும் தங்கள் வீரத்தைப் பற்றியும் கேள்விப்பட்ட அவள் தங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறாள். பீஷ்மகருக்கும் தம் மகளைத் தங்களுக்குத் தான் கொடுக்க விரும்புகிறார். ஆனால் அவருடைய மூத்த மகன் ருக்மி இதற்குத் தடையாக இருக்கிறான். தன் தங்கையை தமகோஷரின் மகன் சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறான். ருக்மிணி என்றுமே தங்கள் மீது தான் உயிராக இருக்கிறாள், தன் இதயத்தில் தங்களைப் பூஜிக்கிறாள். ஆகவே தங்களைச் சரணடைந்து என் மூலம் தங்களுக்கு செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறாள். அந்த செய்தியை அவளுடைய வார்த்தைகளிலேயே கூறுகிறேன் கேளுங்கள்" என்று சொல்ல ஆரம்பித்தார்.

"புவன சுந்தரா! தங்களுடைய சிறந்த பண்புகளைப் பற்றியும், தங்கள் மீது அன்பு கொண்டவரிடம் தாங்கள் காட்டும் கருணையைப் பற்றியும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். தாங்கள் தான் என் நாதர் என்று முடிவெடுத்து விட்டேன். என்னைத் தங்களிடம் ஒப்படைத்து விட்டேன். என்னைத் தாங்கள் பணிப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் செய்யும் பூஜைகளின் பலனாக எனக்குப் புண்ணியம் சேர்ந்திருந்தால் அது என்னைத் தங்களோடு சேர்த்து வைக்கட்டும். உங்களுக்குச் சந்தேகம் ஏற்படலாம்.

கன்னி மடத்தில் இருக்கும் இவளை இவளுடைய உறவினர்களைக் கொல்லாமல் எப்படி எடுத்துச் செல்ல முடியும் என்று. இதற்கு நான் ஒரு வழி சொல்லுகிறேன். திருமணத்திற்கென்று நிச்சயிக்கப்பட்ட நாளுக்கு முதல் நாள், கிரிஜா தேவியின் கோவிலை நோக்கி என்னை உட்கார வைத்து ஊர்வலம் கிளம்பும். கோவிலை விட்டு நான் வெளியே வந்ததும் தாங்கள் என்னை எடுத்துச் செல்லலாம். என்ன காரணத்தினாலோ, என் விருப்பம் பூர்த்தியாகா விட்டால் என்னை மாய்த்துக் கொள்வேன் என்பதை தாங்கள் நிச்சயமாக நம்பலாம்". "இது தான் ருக்மிணி என் மூலம் விடுத்த செய்தி. இதற்கு பிறகு தாங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள்" என்று அந்தணர் சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி இரண்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

072 உயிராய் பெற்றேனோ ஊமையைப் போலே|

திருவரங்கத்தில் ராமானுஜருடைய மடத்தில் பல சிஷ்யர்கள் தொண்டு புரிந்து ராமானுஜருடன் இருந்தார்கள். தினமும் ராமானுஜர் கூறும் நல் உபதேசங்களைக் கேட்பார்கள். திருவரங்கன் முன் ஆழ்வார் பாசுரங்களைச் செவிக் குளிர பாடுவார்கள். 

ராமானுஜரின் மடத்தில் வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத, கல்வி அறிவு இல்லாத ஒரு வைணவர் இருந்தார். அவரால் ராமானுஜர் கூறும் நல்வார்த்தைகளைக் கேட்க முடியாது. சிஷ்யர்களுடன் சேர்த்து ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடவும் முடியாது. தன்னால் முடிந்த சேவைகளை ராமானுஜருக்கு அவர் ஆற்றி வந்தார்.


வேலை எல்லாம் முடித்து விட்டு, ராமானுஜர் உபதேசம் செய்யும் போது ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ராமானுஜரையே பார்த்து ரசித்துக் கொண்டு இருப்பார் “என்ன அருமையான தேஜஸ்! எவ்வளவு பிரகாசமான திருமுகம், காவியுடையுடன், திரிதண்டம், பவித்திரமான பூணூல், நெற்றியில் சூரியனைப் போலப் ஒளிரும் திருமண், அவருடைய மென்மையான திருப்பாதங்கள்” என்று ராமானுஜரின் திருமேனியை ரசிப்பதே அவருக்கு வேலை.

ஒரு நாள் ராமானுஜர் காலட்சேபத்தின் போது இந்த வைணவர் ஏக்கமாக ராமானுஜரைப் பார்த்துக் கொண்டு இருந்தார். ராமானுஜருக்கு “அடடா! நாம் கூறும் ரகசிய அர்த்தங்களை இவரால் கேட்க முடியாது. இவருக்கு என்ன வேண்டும் என்று வாய் திறந்து கேட்கவும் முடியாது. இவரும் நற்கதி அடைய வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்.

அன்றைய காலட்சேபம் முடிந்தவுடன் ராமானுஜர் கருணையுடன் “என்னுடன் வா” என்று சைகை காண்பித்து அவரைத் தன் அந்தரங்க அறைக்கு அழைத்துச் சென்று கதவைச் சாத்திக்கொண்டார். இந்தக் காட்சியைப் கண்ட சிஷ்யர்களுக்கு ஒரே வியப்பு. உள்ளே என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சிஷ்யர்களுடன் இருந்த கூரத்தாழ்வானுக்கும் வியப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தாழிட்ட கதவுக்கு அருகில் சென்றார். கதவில் காதை வைத்துப் பார்த்தார். காது கேளாதவருடன் என்ன பேசுவார்? ஒன்றும் கேட்கவில்லை. கண்ணை இடுக்கிக் கொண்டு சாவி துவரத்தின் வழியே என்ன நடக்கிறது என்று பார்த்தார்.

“ஐயோ! பல சாஸ்திரங்கள், ஸ்ரீபாஷ்யம் என்று பலவற்றைப் படித்தேன். படித்துப் பண்டிதர் ஆகிக் கெட்டு ஒழிந்தேன்! ஒரு வாய் பேச முடியாதவனாய் பிறந்திருந்தால் பெரும் பாக்கியம் கிடைத்திருக்கும்!” என்று மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் “ஆழ்வான்! என்ன நடந்தது” என்று கேட்க மயக்கம் தெளிந்த ஆழ்வான் உள்ளே தான் கண்ட காட்சியைக் விவரித்தார்.

ராமானுஜர் திரிதண்டத்துடன் ஆசனத்தில் உட்கார்ந்து இருந்தார். அவரை தன் எதிரே கீழே உட்காரச் சொல்லித் தன் தனது இரு பாதுகைகளை அவரது தலையில் வைத்து ஆசிர்வதிக்க, அந்த வைணவர் தன் இரு கரத்தால் உடையவரின் பாதுகைகளைத் தன் தலை மீது அழுத்திக் கொண்டான்.  பின், அந்தப் பாதுகைகளை அந்த வைணவரிடமே கொடுத்து விட்டார். அப்போது அவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். இராமானுஜரின் பாதுகைகளை தனது உயிராய் எண்ணி, இராமானுஜருக்கு சேவை புரிவதே தனது வாழ்நாள் குறிக்கோளாய் கருதி, தன் வாழ்நாளைக் கழித்தார்.

நானும் ஏதும் அறியாதவனாய், வாய் பேச முடியாதவனாய் இருந்திருந்தால், எனக்குப் படிப்பு அறிவு இருந்திருக்காது. ராமானுஜரிடம் கொண்ட பக்தியால் எனக்கும் இந்தப் பேரருள் கிடைத்திருக்கும். இவர் பெற்ற பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே! என்று வருந்தினார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அவரைப் போல், உமது பாதுகைகளைப் பெற்றேனா இல்லை அவற்றை உயிரெனக் கருதி வாழ்ந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

தர்ம சங்கடம்

ஸ்கந்தம் 01

மஹாபாரதத்தை அப்போது தான் முடித்திருந்ததால் அடுத்த கிரந்தத்தை வியாஸர் யுத்த முடிவிலிருந்தே துவங்கினார் போலும்.

தன் குழந்தைகளை உறங்கும் போது வெட்டிய அஸ்வத்தாமனை மன்னித்து விடச் சொல்கிறாள் திரௌபதி. மேலும் "இவன் ப்ராம்மணன். இவனைக் கொன்றால் ப்ருமஹத்தி தோஷம் வரும். ஏற்கனவே நாம் துன்பப்பட்டது போதும். புதிதாய் ஏதும் தோஷங்கள் நமக்கு வர வேண்டாம். அதனால் விட்டு விடுங்கள்" என்றாள். சாஸ்திரத்தின் மீதும் குருவின் மீதும் உள்ள பக்தியால் குரு புத்ரன் கொடியவனாயினும் வதம் செய்யக் கூடாது என்றாள். உடனே, பீமசேனன் கொதித்தெழுந்தான். "உறங்குபவர்களையும், எதிர்க்க சக்தி இல்லாதவர்களையும், சிறுவர்களையும் கொன்றவன் ப்ராம்மணனாயினும், அவனைக் கொல்லத் தான் வேண்டும். மேலும், எஜமானனுக்கு வேண்டியோ, தன்னுடைய லாபத்திற்கோ கூட இல்லாமல் வீணாகக் கொன்றிருக்கிறான். இவனைத் தண்டிப்பது இவனுக்கே நன்மை பயக்கக் கூடியது தான். எனவே அஸ்வத்தாமனைக் கொல்ல வேண்டும்."


கண்ணன், கட்டப்பட்டிருக்கும் அச்வத்தாமனிடம் த்ரௌபதியை அழைத்துப் போக அவளோ, இவன் குரு புத்ரன் என்று வணங்கினாள். தர்ம புத்ரருக்கும் த்ரௌபதி சொல்வது சரியென்று பட்டது. குழப்பமடைந்த அர்ஜுனன் க்ருஷ்ணனைப் பார்த்தான். கண்ணன் சிரித்தான்.

"அர்ஜுனா, குரு புத்ரன். ப்ராம்மணன். அதனால் கொல்லக் கூடாது என்பது சாஸ்திரம். வீணாக மஹாபாவங்களைச் செய்தவனை அரசனானவன் கொல்ல வேண்டும் என்பதும் என்னால் கொடுக்கப்பட்ட சாஸ்திரம் தான். இரண்டுமே தர்மமாகிறது. இம்மாதிரி இரண்டு தர்மங்களுள் எதைச் செய்வது என்ற குழப்பம் ஏற்படுவதே தர்ம சங்கடமாகும். நீயோ இவனைக் கொல்வதாய் சபதமிட்டிருக்கிறாய். எனவே, நீ த்ரௌபதிக்கும், பீமனுக்கும், எனக்கும், உனக்கும் பிரியமானது எதுவென்று யோசித்து அவ்வாறு செய்" என்றான்.

"அனைவர்க்கும் பிரியமானதைச் செய்வதா? இப்படி மாட்டி விடுகிறாயே கண்ணா" என்ற அர்ஜுனன் சற்று யோசித்தான். அச்வத்தாமனின் தலையில் ஒரு ரத்தினம் உண்டு. அது அவன் உடன்பிறந்தது. அதனால் மிகுந்த கர்வம் கொண்டிருந்தான். அர்ஜுனன் அந்த மணியை முடியோடு சேர்த்து அறுத்தான்.

ஒருவரின் தலை முடியை தெய்வத்திற்குக் காணிக்கையாகக் கொடுப்பதே தன் ப்ராணனை காணிக்கை ஆக்குவதற்குச் சமம். அநாவசியமாக முடியை வெட்டுபவர்களின் ப்ராண சக்தி குறைகிறது. தலை முடியையும், அவனது கர்வத்திற்குக் காரணமான ரத்தினமும் வெட்டப்பட்டதால் அவனைக் கொன்றதற்கு சமமாயிற்று.

மிகவும் சாதுர்யமாக யோசித்து அர்ஜுனன் செய்த காரியத்தினால் அனைவர்க்கும் சமாதானம் ஏற்பட்டது.

உயிர் பிழைத்த அச்வத்தாமன் மகிழவில்லை. மாறாக, ஒரு பெண்ணால் உயிர்ப் பிச்சை கிடைத்ததே என்றெண்ணி அவமானத்தினால், அடிபட்ட நாகம் போல் கருவிக் கொண்டு பாண்டவர்களைப் பூண்டோடு அழிக்க உறுதி பூண்டான். இழந்த குழந்தைகளை நினைத்துப் புலம்பிக் கொண்டு அனைவரும் அரண்மனை திரும்பினர். தர்ம புத்திரர் அரசு கட்டில் ஏறினார்.

அர்ஜுனனின் மகனான அபிமன்யு ஏற்கனவே யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டான். அவனுக்குத் திருமணமாகி சில காலம் தான் ஆகியிருந்தது. அவனது இளம் மனைவியான உத்தரை கருவுற்றிருந்தாள்.

துவாரகையை விட்டு வந்து வெகு நாட்களாகி விட்டதால் கண்ணன் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானான். கண்ணனைப் பிரிவது சுலபமா என்ன? இருப்பினும் அவன் தங்களுக்காக தனது ராஜ்ஜியத்தையும் பெற்றோரையும், மனைவி மக்களையும் விட்டு விட்டு வந்திருக்கிறான் என்பதால், பிரியா விடை கொடுத்தனர். அனைவரும் வாசலில் வந்து கண்ணனின் ரதத்தைச் சூழ்ந்து நின்றனர்.

ரதத்தில் ஏறப் போன கண்ணனின் கால்களில் காப்பாற்றுங்கள்  காப்பாற்றுங்கள்! 
பாஹி பாஹி மஹா யோகின் தேவ தேவ ஜகத்பதே! 
நான்யம் த்வதபயம் பஷ்ய யத்ர ம்ருத்யு: பரஸ்பரம் 
என்று அலறிக் கொண்டு திடீரென்று ஓடிவந்து ஒரு பெண் விழுந்தாள். யாரென்று பார்த்தால், அது அபிமன்யுவின் மனைவி உத்தரை. 

கண்ணன் அவளைத் தூக்கி நிறுத்தி,

"என்னாச்சும்மா?" என்று பரிவோடு விசாரிக்க, தூரத்தில் வானில் நெருப்பைக் கக்கிக் கொண்டு ஏதோ ஒன்று அவளைத் துரத்துவதைக் காண்பித்தாள். 

கண்ணன் அதைப் பார்க்க சற்று நேரத்தில் அது மறைந்து விட்டது. என்னவாய் இருக்கும்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 74

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 44

வைகுண்ட்ட²: புருஷ: ப்ராண:
ப்ராணத³: ப்ரணவ: ப்ருது²:|
ஹிரண்ய க³ர்ப்ப⁴: ஸ²த்ருக்⁴நோ
வ்யாப்தோ வாயுரதோ⁴ க்ஷஜ:||

  • 406. வைகுண்ட்ட²ஃ - தடைகளைப் போக்கித் தன்னிடம் சேர்த்துக் கொள்பவர்.
  • 407. புருஷஃ - தூய்மை அளிப்பவர்.
  • 408. ப்ராண: - உய்விப்பவர், உயிராயிருப்பவர்.
  • 409. ப்ராணத³ஃ - உயிரை அளிப்பவர்.
  • 410. ப்ரணவ: - வணங்கத் தக்கவர்.
  • 411. ப்ருது²ஹு - பெரும் புகழுக்கு உரியவர். நன்கு அறியப்பட்டவர்.
  • 412. ஹிரண்ய க³ர்ப்ப⁴ஸ்² - பொன் புதையலைப் போன்றவவர். அனைவரின் இதயத்தையும் மகிழ்விப்பவர்.
  • 413. ஸ²த்ருக்⁴நோ - பகைவர்களை முடிப்பவர்.
  • 414. வ்யாப்தோ - அன்பு, கருணை போன்றவற்றால் நிரம்பியவர்.
  • 415. வாயுர் - செல்பவன், இருக்கும் இடம் தேடி அருள் புரிபவர். தன் பக்தர்களை நோக்கிச் செல்பவர்.
  • 416. அதோ⁴ க்ஷஜஹ - அநுபவிக்க அனுபவிக்கக் குறையாதவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.11
 
ஸ்ரீ ப⁴க³வாநுவாச।
அஸோ²ச்யா நந்வ ஸோ² சஸ் த்வம் 
ப்ரஜ்ஞா வாதா³ம்ஸ்²ச பா⁴ஷஸே|
க³தா ஸூ நக³ தாஸூம்ஸ்²ச 
நாநுஸோ² சந்தி பண்டி³தா:||

  • ஸ்ரீ ப⁴க³வாந் உவாச - புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார் 
  • அஸோ²ச்யாந் - கவலைப்பட வேண்டாதவற்றிற்காக 
  • அந்வ ஸோ²சஸ் - கவலைப்படுகிறாய் 
  • த்வம் - நீ 
  • ப்ரஜ்ஞா வாதாம்ஸ்² - அறிவாளித்தனமான வாதங்கள் 
  • ச - மேலும் 
  • பா⁴ஷஸே - பேசுகையில் 
  • க³த - இழந்த 
  • அஸூந் - வாழ்வு 
  • அக³த - இழக்காத 
  • அஸூந் - வாழ்வு 
  • ச - மேலும் 
  • ந - ஒரு போதும் இல்லை 
  • அநுஸோ² சந்தி - கவலைப்படுதல் 
  • பண்டி³தாஹ - அறிஞர்

ஸ்ரீ பகவான் கூறுகிறார்: ஞானி போல் வாதங்களை பேசுகையில், கவலைப்பட வேண்டாத விஷயத்திற்காக, நீ கவலைப் படுகிறாய். அறிஞர்கள் ஒருபோதும் இழந்தவர்களுக்காகவோ, வாழ்பவர்களுக்காகவோ கவலைப்படுவதில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.9

துர்யே த⁴ர்ம கலா ஸர்கே³ 
நர நாராயணா வ்ருஷீ|
பூ⁴த்வாத் மோ பஸ²மோ பேதம்
அகரோத்³ து³ஸ்²சரம் தப:||

  • த⁴ர்ம கலா ஸர்கே³ - தர்மனின் பத்நியின் ஸ்ருஷ்டி ரூபமான
  • துர்யே - நான்காவதான அவதாரத்தில்
  • நர நாராயணௌ - நர நாராயணன் என்ற
  • ருஷீ பூ⁴த்வா - இரு ரிஷிகளாக தோன்றி
  • ஆத்மோ பஸ²மோ பேதம் - ஆத்ம நிக்ரஹத்தோடு கூடியதும்
  • து³ஸ்²சரம் தபஹ - இதரரால் அநுஷ்டிக்க முடியாததுமான தவத்தை
  • அகரோத்³ - செய்தார்

 நான்காவது திருவவதாரமாக, தர்ம பிரஜாபதியின் மனைவியான மூர்த்தி என்பவளிடம் நரன், நாராயணன் என்ற ரிஷிகளாக அவதாரம் செய்து, பிறரால் கடைப்பிடித்து ஒழுக முடியாத மன ஒடுக்கத்தைக் கைக்கொண்டு சிறந்த தவத்தைச் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.9

பு³த்³தி⁴மாந் நீதிமாந் வாக்³மீ 
ஸ்²ரீமாந் ஸ²த்ரு நிப³ர் ஹண:।
விபுலாம் ஸோ மஹாபா³ஹு: 
கம்பு³ க்³ரீவோ மஹா ஹநு:॥ 

  • பு³த்³தி⁴மாந் - புத்திமான்
  • நீதிமாந் - நீதி உடையவர்
  • வாக்³மீ - வாக்கு சாமர்த்தியம் உள்ளவர்
  • ஸ்²ரீமாந் - ஐஸ்வர்யம் உடையவர்
  • ஸ²த்ரு நிப³ர் ஹணஹ - சத்துருக்களை அழிப்பவர்
  • விபுலாம் ஸோ - உயர்ந்த தோள்களை உடையவர்
  • மஹாபா³ஹுஹு - நீண்ட கைகளை உடையவர்
  • கம்பு³ க்³ரீவோ - சங்கு போன்ற கழுத்தை உடையவர்
  • மஹா ஹநுஹு - தசைப்பற்று உள்ள கன்னங்கள் உள்ளவர்

அவன் புத்திமானாகவும், நீதிமானாகவும், நா நயம் மிக்கவனாகவும் , எதிரிகளை அழிப்பவனாகவும், விரிந்த தோள்களையும், நீண்ட கைகளையும், கழுத்தில் மூன்று சுருக்கங்களையும் (ரேகைகளையும்), உயர்ந்த தாடைகளையும் (பருத்த கன்னங்களையும்) கொண்டவனாக இருக்கிறான்.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 56 - பெரியாழ்வார் திருமொழி - 1.4.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் – 56 - வித்தகன் வேங்கட வாணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

சுற்றும் ஒளி வட்டம்* 
சூழ்ந்து சோதி பரந்தெங்கும்*
எத்தனை செய்யிலும்* 
என் மகன் முகம் நேரொவ்வாய்*
வித்தகன் வேங்கட வாணன்* 
உன்னை விளிக்கின்*
கைத்தலம் நோவாமே* 
அம்புலீ! கடிதோடி வா!

  • சுற்றும் - நாற்புறமும்
  • ஒளி - ஒளி பொருந்திய 
  • வட்டம் - மண்டலமானது எப்போதும்
  • சூழ்ந்து - சுழன்று
  • எங்கும் - எல்லாத் திசைகளிலும்
  • சோதி பரந்து - ஒளி நிரம்பி இருக்குமாறு
  • எத்தனை செய்யிலும் - உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
  • என் மகன் - என் மகனான கண்ணபிரானுடைய 
  • முகம் - திருமுக மண்டலத்துக்கு
  • நேர் ஒவ்வாய் - பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்
  • வித்தகன் - ஆச்சர்யப்படத் தக்கவனாய் 
  • வேங்கடம் - திருவேங்கட மலையிலே 
  • வாணன் - நின்று கொண்டிருக்கும் இக்கண்ணபிரான்
  • உன்னை விளிக்கின்ற - உன்னை அழைக்கின்றான்
  • கை தலம் - அவன் திருக்கைகள்
  • நோவாமே - நோகாதபடி
  • அம்புலி - சந்திரனே!
  • கடிது ஓடி வா - சீக்கிரமா ஓடி வா

சந்திரனே! உன் வட்டமான அழகிய முகத்திலிருந்து சிதறுகின்ற குளிர்ந்த வெண்கதிர்களின் ஒளியானது, இவ்வுலகம் முழுதும் விரவி ஒளி வீசுபவனாய் எத்தனை அழகாக நீ இருக்க முயன்றாலும் அவை எல்லாம் என் மகனின் அழகிய திருமுகத்திற்கு முன் எக்காலத்திலும் ஈடாக முடியாது. வித்தகர்க்கு எல்லாம் வித்தகன், தூய ஞானத்தின் வடிவானவன்; மலைகளிலே புனிதமான ஆச்சர்யமான வேங்கடமலையில் நிற்கின்ற திருக்கோலத்துடன் வாழ்கின்ற வேங்கடவன் உன்னை எத்துனை காலமாய் அழைக்கின்றான். அச்சிறு பாலகனின் பச்சிளங்கைகளில் வலி தோன்றும் முன்னே விரைந்தோடி வந்து அவனுடன் விளையாடுவாயாக', என்று யசோதை அன்னை நிலவிடம் கூறுகிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்