About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 9 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 109

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 79

ஸுவர்ண வர்ணோ ஹேமாங்கோ³ 
வராங்க³ஸ்² சந்த³ நாங் க³தீ³:|
வீரஹா விஷமஸ் ஸூ²ந்யோ 
க்⁴ருதா ஸீ²ரஸ் சலஸ்² சல:||

  • 743. ஸுவர்ண வர்ணோ - பொன் வண்ணன். தங்க நிறத்தை உடையவர். 
  • 744. ஹேமாங்கோ³ - பொன் மேனியன். தங்க நிறமுள்ள கைகால்களை உடையவர். அவரது உடல் தங்கம் போல் பளபளக்கிறது.
  • 745. வராங்க³ஸ்² - சிறந்த அழகான, கவர்ச்சியான திருமேனியை உடையவர்.
  • 746. சந்த³ நாங் க³தீ³ஹி - அழகிய சிறந்த திவ்ய ஆபரணங்களை அணிந்தவர். மகிழ்ச்சிகரமான ரத்தினங்கள் பதிக்கப்பட்ட கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவர். உடலில் தெய்வீக சந்தன வாசனை வீசுகிறது.
  • 747. வீரஹா - வீரர்களை மாய்த்த பெரு வீரன். பேய்களைக் கொல்பவர். தன்னை தியானிப்பதில் இருந்து மற்றவர்களை திசை திருப்புபவர்களை அழிப்பவர். யமனின் பந்தங்களை அழிப்பவர். ஜீவர்களை அவர்களின் பாதையில் உள்ள தடைகளை நீக்கி மோட்சத்திற்கு வழி நடத்துபவர். தனது படைப்புகளுக்கு வெவ்வேறு வழிகளை வழங்குகிறார். அசுரர்களை அழிக்கும் போது கருடன் மற்றும் வாயுவுடன் இருப்பவர். தர்மத்தைக் கடைப்பிடிக்காதவர்களையும் கொல்பவர்.
  • 748. விஷமஸ் - வேறுபட்ட செயல்களைச் செய்பவர். ஒப்பற்றவர்.
  • 749. ஸூ²ந்யோ - தோஷமில்லாதவர். குறைபாடுகள், கறைகள் இல்லாதவர். பிரளய நேரத்தில் எதையும் விட்டுவிடாமல் அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறார்.
  • 750. க்⁴ருதா ஸீ²ரஸ் - தனது கருணை குணங்களால் உலகத்தை செழிக்கச் செய்பவர்.
  • 751. அசலஸ்² - அவர் தனது உண்மையான இயல்பு, பராக்கிரமம் மற்றும் அறிவின் படுக்கைப் பாறையில் உறுதியாக நிற்பதால் அவர் தனது உறுதியில் அசைக்க முடியாதவர்.
  • 752. சலஹ - மாறுபவர். வளைந்திருப்பவர். தனது பக்தர்களைப் பாதுகாப்பதற்கும் மீட்பதற்கும் சிந்தனையின் வேகத்தை விட வேகமாகச் செல்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.46

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.46
 
யாவா நர்த² உத³ பாநே 
ஸர்வத: ஸம்ப்லு தோத³கே|
தாவாந் ஸர்வேஷு வேதே³ஷு 
ப்³ராஹ் மணஸ்ய விஜா நத:||

  • யாவாந் - அவை எல்லாம் 
  • அர்த² - பலன்கள் 
  • உத³பாநே - நீர்க் கிணற்றில் 
  • ஸர்வதஸ் - எல்லா வகையிலும் 
  • ஸம்ப்லுத உத³கே - ஒரு பெரும் நீர்த் தேக்கத்தில் 
  • தாவாந் - அதுபோல 
  • ஸர்வேஷு - எல்லாவற்றிலும் 
  • வேதே³ஷு - வேத இலக்கியங்கள் 
  • ப்³ராஹ் மணஸ்ய - பரபிரம்மனை அறிந்தவர்களில் 
  • விஜாநதஹ - முழு அறிவு பெற்றவன்

சிறு நீர்க் கிணற்றின் பலன்கள், அவை எல்லாம், எல்லா வகையிலும் ஒரு பெரும் நீர் தேக்கத்தால் செய்யப்படும். அதுபோல, வேத இலக்கியங்கள் எல்லாவற்றிலும், பிரம்மனை அறிந்தவர்களில், முழு அறிவு பெற்றவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.44

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.44

கலௌ நஷ்ட த்³ருஸா²ம் ஏஷ 
புரா ணார் கோ து⁴நோ தி³த:|
தத்ர கீர்த யதோ விப்ரா 
விப்ரர் ஷேர் பூ⁴ரி தேஜஸ:||

  • கலௌ - இந்த கலியுகத்தில்
  • நஷ்ட த்³ருஸா²ம் - இழந்த பார்வையை உடைய மக்களுக்கு
  • அது⁴நோ - இப்பொழுது பார்வையை கொடுப்பதற்கு
  • ஏஷ - இந்த
  • புராணார்க   - பாகவதம் என்கிற ஸூர்யன்
  • உதி³தஹ - உதித்தது
  • விப்ரா - ஹே! பிராமணோத்தமர்களே!
  • தத்ர கீர்த யதோ  - அந்த சபையில் ஸ்ரீமத் பாகவதத்தை சொல்கின்றவரும்
  • பூ⁴ரி தேஜஸஹ - அதிக தேஜஸை  உடையவரும்
  • விப்ரர் ஷேர் - அந்த ப்ரும்ம ரிஷியிடமிருந்து

அந்தணச் சான்றோர்களே! இக்கலியுகத்தில் ஞானமாகிற பார்வை இழந்தவர்களுக்கு ஒளி அருளும் ஞானபானுவாக இந்தப் புராணம் உதயமாயிற்று. பெருத்த தேஜசுடன் விளங்கும் ஸ்ரீசுகர்  அவ்வாறு உபதேசம் செய்யும் போது, 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.44

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.44

ஸ தேஷாம் ப்ரதி ஸு²ஸ்²ராவ| 
ராக்ஷ ஸாநாம் ததா² வநே|| 

  • ஸ - அவர்
  • வநே - வனத்தில்
  • தேஷாம் - அவர்களுக்கு
  • ராக்ஷ ஸாநாம் - இராக்ஷஸர்களைப் பற்றி
  • ததா² - அந்த ப்ரகாரமே
  • ப்ரதி ஸு²ஸ்²ராவ - செய்வதாக வாக்களித்தார்

இராமர் அதைக் கேட்டு, இராக்ஷஸர்களைக் கொல்வதாக உறுதிமொழி அளித்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 88 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 88 - இருடீகேசன்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்* 
சூழ் பரி வேடமுமாய்ப்* 
பின்னல் துலங்கும் அரசிலையும்* 
பீதகச் சிற்றாடையொடும்* 
மின்னில் பொலிந்தோர் கார்முகில் போலக்* 
கழுத்தினிற் காறையொடும்* 
தன்னில் பொலிந்த இருடிகேசன்* 
தளர் நடை நடவானோ!

  • மின் கொடியும் - கொடி மின்னலும்
  • ஓர் வெண் திங்களும் - அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான முழுவதும் வெண்மையாயுள்ள ஒரு சந்திரனும்
  • சூழ் - அவ்விரண்டையும் சுற்றிக் கொண்டிருக்கும்
  • பரிவேடமும் ஆய் - பரி வேஷத்தையும் ஒளியும்  போல (சந்திரனைச் சுற்றிச் சில காலங்கள் காணப்படும் ரேகை.
  • இது ஊர்கோள் எனவும் படும்)
  • பின்னல் - திரு வரையில் சாத்தின பொற் பின்னலும்
  • துலங்கும் - பளிச்சிடும்
  • அரசிலையும் - அரசிலை போல வேலை செய்த ஒரு திரு ஆபரணமும்
  • பீதகம் - இவ்விரண்டையும் சூழ்ந்த பொன்னாலாகிய பீதாம்பரம் என்னும்
  • சிறு ஆடையோடும் - சிறிய வஸ்த்ரமும் ஆகிய இவற்றோடும்
  • மின்னில் - மின்னலின்
  • பொலிந்தது - பொலிவுக்கு
  • ஓர் - ஒப்பற்ற
  • கார் முகில் போல - காள மேகம் போல
  • கழுத்தினில் - கழுத்தில் அணிந்த
  • காறையோடும் -  காறையென்னும் ஆபரணத்தோடும் கூடிய
  • தன்னில் - தன் இயற்கை அழகாலேயே
  • பொலிந்த - விளங்குகின்ற 
  • இருடீகேசன் - ‘ஹ்ருஷீகேசன்‘ என்ற திருநாமமுடைய இவன் 
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

கண்ணன் இடுப்பில் அணிந்திருக்கும் வெள்ளி மற்றும் பொன்னாலான ஆபரணங்களுடன் கூடிய வஸ்த்ரம், கொடி போல் தோன்றும் மின்னலுடன் சேர்ந்த வெண்மையான சந்திரனை வட்டம் சூழ்ந்தார்ப் போல் இருந்ததாம். கரு நிற திருமேனியின் கழுத்தில் சாத்திய பொன் அட்டிகையோ மழை மேகத்தின் நடுவே மின்னல் தோன்றுவது போலிருந்ததாம். தனக்கே உரிய தெய்வீக அழகினால் விளங்கும் ஹ்ருஷீகேசன் - கண்ணன் தளர் நடையாக நடந்து வருவானா என ஏங்குகிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 025 - திருத்தலைச்சங்க நாண்மதியம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

025. திருத்தலைச்சங்க நாண்மதியம் 
தலைச்சங்காடு - திருவாரூர் 
இருபத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் – 2 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார்  - 2 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 1736 - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்              

பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் – 2782 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)  

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

செப்புங்கால் ஆதவனும் திங்களும் வானும் தரையும்*
அப்பும் காலும் கனலும் ஆய் நின்றான் கைப்பால்*
அலைச் சங்கம் ஏந்தும் அணி அரங்கத்து அம்மான்*
தலைச் சங்க நாண் மதியத்தான்*

  • கைப்பால் - கையினிடத்தில்
  • அலை சங்கம் - அலைகளை உடைய கடலினிடத்துத் தோன்றிய பாஞ்சஜந்யம் என்னும் சங்கத்தை
  • ஏந்தும் - தரித்துள்ள
  • அணி அரங்கத்து அம்மான் - திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ள ஸ்வாமியும்
  • தலைச்சங்கநாண்மதியத்தான் - திருத்தலைச்சங்க நாண்மதியம் என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ளவனுமான எம்பெருமான்
  • செப்பம் கால் - சொல்லுமிடத்தில் 
  • ஆதவனும் - சூரியனும்
  • திங்களும் - சந்திரனும்
  • வானும் - ஆகாயமும்
  • தரையும் - பூமியும்
  • அப்பும் - ஜலமும்
  • காலும் - காற்றும்
  • கனலும் - அக்னியும்
  • ஆய் - ஆகி 
  • நின்றான் - எங்கும் பரவி நிற்பவனாவன்

--------------------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 2

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1736 - கண்ணபுரத்தானை எப்பொழுது நேரில் காண்பேன்?
பெரிய திருமொழி - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கண் ஆர் கண்ணபுரம்* கடிகை கடி கமழும்*
தண் ஆர் தாமரை சூழ்* தலைச்சங்கம் மேல் திசையுள்*
விண்ணோர் நாண்மதியை* விரிகின்ற வெம் சுடரை*
கண் ஆரக் கண்டு கொண்டு* களிக்கின்றது இங்கு என்று கொலோ?

002. திவ்ய ப்ரபந்தம் - 2782 -  செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70) 
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச் 
மன்னும் மறை நான்கும் ஆனானை* 
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை*
நாங்கூரில் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை* 
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை* 
தென் நறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 100

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அர்ஜுனனின் மனக்குழப்பம்|

அதற்கு அந்த அந்தணர், "இது துவாரகை. இங்கே கிருஷ்ணர், பலராமர், பிரத்தியும்னன் போன்ற வீரர்கள் உள்ளனர். அவர்களே எனக்கு உதவ முடியாதபோது, நீ இளைஞன், உன்னால் எப்படி முடியும்?" என்று கேட்டார். 


இதை கேட்ட அர்ஜுனன், "அந்தணரே! நீர் சொல்வது உண்மைதான். பாலராமருக்கும் கிருஷ்ணருக்கும் நான் இணையானவன் அல்ல. ஆனால் நான் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன். புகழ் பெற்ற காண்டீவம் என்னும் வில் என்னுடையது. நான் என்னுடைய பராக்கிரமத்தினால் பரமசிவனையே மகிழ்வித்திருக்கிறேன். ஆகவே உம்முடைய அடுத்த குழந்தையை என்னால் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறேன்" என்று சொன்னான்.

அர்ஜுனன் வார்த்தைகளைக் கேட்டு, அந்தணர் சற்றுத் தேறினார், வீடு திரும்பினார். பிறகு அடுத்த பிரசவ சமயம் வந்ததும், அர்ஜுனனிடம் ஓடி வந்து குழந்தையைக் காப்பாற்றும்படி வேண்டினார். 

அர்ஜுனன் சிவனைப் பூஜை செய்து விட்டு, காண்டீபத்தை கையில் எடுத்துக் கொண்டு, அந்தணர் வீடு சென்றான். பிரசவ அறையைச் சுற்றிலும் பாணங்களால் ஒரு கூடு கட்டினான். 

சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு குழந்தை பிறந்தது. அது சிறிது அழுதது. பிறகு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது பளிச்சென்று ஆகாயத்துக்குப் பறந்து சென்று மறைந்துவிட்டது. இதனால் அந்தணருக்கு ஏற்பட்ட கோபம் கொஞ்சநஞ்சம் அல்ல. அவர் அர்ஜுனனை கண்டபடி வைதார். "கோழையாகிய உன் வார்த்தைகளை நான் நம்பினது தவறு. பாலராமராலும், கிருஷ்ணராலும் செய்ய முடியாத காரியத்தை இந்த அர்ஜுனனால் எப்படிச் செய்ய முடியும்? நீயும் உன் காண்டீவமும்!" என்றார். 

ஆனால் அர்ஜுனன் தளர்ந்து விடவில்லை. தன யோகபலத்தைக் கொண்டு யமனின் இருப்பிடமான சம்யமநீ நகரத்திற்குச் சென்றான். ஆனால், குழந்தை அங்கே இல்லை. பிறகு துவாரகை சென்று எல்லா இடங்களிலும் தேடினான். குழந்தை கிடைக்கவேயில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 53

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பிரிவுத் துயர்

ஸ்கந்தம் 03

விதுரர் உணர்ச்சிப் பெருக்கினால் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, பேச்சற்ற நிலையில் கண்ணீர் வழிந்தோட கண்ணனின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார் உத்தவர். ஒரு முஹூர்த்த நேரம் கழித்து சற்று உணர்வு திரும்பியவராய்த் தழுதழுக்கும் குரலில் பேசத் துவங்கினார்.


“க்ருஷ்ணனாகிய சூரியன் அந்தமித்து விட்டது விதுரரே. அவரின் அத்தனை உறவினர்களும் காலம் என்னும் பாம்பினால் விழுங்கப் பட்டனர். நலமா என்று கேட்டால் நான் என்ன சொல்வது? கண்ணனோடு நெருங்கிப் பழகியும், அவரை பகவான் என்று யாதவர்கள் அறிந்து கொள்ளவில்லையே. கண்ணனைத் தங்களுக்குள் சிறந்தவன் என்றே எண்ணினர். தவமே புரியாத யாதவர்களோடு சில காலம் பழகி விட்டு, தன் உடலை மறைத்துக் கொண்டார் கண்ணன். அனைத்து உலகங்களையும் மயக்கும் அழகுத் திருமேனி கொண்டவர். ஏன்? அவரே அதைக் கண்டு வியந்தார்.

தர்ம புத்திரர் நடத்திய ராஜஸூய வேள்வியைக் காண வந்த அனைவரும் ப்ரும்ம தேவனின் படைப்புத்திறன் இவரோடு முடிந்ததோ? இதற்கு மேலான அழகை இனி அவர் படைக்க இயலாதோ என்று நினைத்தனர். அவரது உளம் கனிந்த பார்வையாலும், விநோதமான சிரிப்பாலும் இடைப் பெண்கள் அனைவர் மனத்தையும் கவர்ந்தார். அவர் பிறப்பற்றவர். ஆயினும் வசுதேவரின் திருமகனாய்ப் பிறந்தார். அவர் பயமற்றவர். எனினும் கம்சனிடம் பயந்தவர்போல் கோகுலத்தில் ஒளிக்கப்பட்டு வளர்ந்தார். அவரது பராக்ரமம் எல்லையற்றது. இருப்பினும் காலயவனனுக்கு பயந்தவர் போல் வட மதுரையை விடுத்து துவாரகைக்கு ஓடினார். இவையெல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. 

கம்சனைக் கொன்றதும், சிறைக்கு ஓடிச்சென்று தாய் தந்தையரை விடுவித்தார். அவர்கள் கால்களில் விழுந்து என்ன சொன்னார் தெரியுமா? கம்சனுக்கு பயந்து கோகுலத்தில் ஒளிந்து வசித்த என்னால் தங்களுக்கு எந்தப் பணிவிடையும் செய்ய முடியவில்லை. தாங்கள் அதை மனத்தில் கொள்ளாது என்னை மன்னிக்க வேண்டும் என்றார். அதை நினைத்தாலே என் மனம் விம்முகிறது. அவரது இரு புருவங்களிலும் கால தேவன் வசிக்கிறான். அவற்றை நெரித்தே இவ்வுலகின் பாரத்தைக் குறைத்தார். தன்னை நிந்தித்த சிசுபாலனுக்கு அவர் ஸாயுஜ்ய பதவி கொடுத்ததை நீங்களும் அறிவீர்கள் தானே!  இப்படிப்பட்டவரின் பிரிவை எவரால் சகிக்க இயலும்?

பாரதப் போரில் பல்லாயிரக் கணக்கான வீரர்கள் அவரது திருமுக மண்டலத்தின் அழகைப் பருகியவாறே அவரது உலகை அடைந்தனரே. அவரே மூவுலகிற்கும் தலைவர். தன் இயல்பான செல்வத்தினால் குறைவற்றவர். அவருக்கு ஈடானவரே இல்லையெனும் போது உயர்ந்தவர் எவரேனும் உண்டா? இந்திராதி தேவர்களும் லோக பாலர்களும் காணிக்கைகளைக் கையிலேந்திக் கொண்டு அவரைக் காண வரிசையில் நிற்கிறார்கள். காணிக்கை செலுத்தும் போது தங்கள் கிரீடங்கள் அவர் திருவடியில் படுமாறு சிரம் தாழ்த்தி வணங்குகிறார்கள். அப்படிப்பட்டவர், உக்ரசேனரை உயர்ந்த சிங்காசனத்தில் அமர்த்தி விட்டு அவரருகில் கைகட்டி நின்று அரசே! நான் சொல்வதைக் கேட்டருளுங்கள் என்று கூறி சேவை செய்கிறார். மார்பில் விஷம் வைத்துக் கொண்டு பாலூட்ட வந்த பூதனைக்கு யசோதைக்கு அளிக்கும் அதே நற்கதியை அளித்தார். அப்படிப்பட்டவரை விட்டு விட்டு வேறு யாரைச் சரணடைவது? 

அசுரர்கள்கூட பகைமையினால் எப்போதும் தியானித்துக் கொண்டு அவரையே அடைந்தனரே. பூமிக்கு நலம் செய்ய சிறையிலன்றோ அவதரித்தார். யமுனை நதிக் கரையில் பற்பல பறவைக் கூட்டங்கள் நிரம்பிய அடர்ந்த காடுகளில் இடைச்சிறார்களுடன் கன்று மேய்த்து கொண்டு விளையாடினார். ஏராளமான குழந்தை விளையாட்டுக்களை இடைச்சிகளுக்குக் காட்டினார். சில சமயம் அழுவார். சிலசமயம் சிரிப்பார். ஒன்று ம் அறியாதவர் போல் மிடுக்காக ஒரு பார்வை பார்ப்பார். அத்தனையும் அழகு சொட்டுமே. கண்ணனின் மாமனான கம்சன் அவரைக் கொல்வதற்காக விருப்பம் போல் வடிவெடுக்கும் மாயாவிகளான பல அரக்கர்களை அனுப்பி வைத்தான். குழந்தைகள் தம் விருப்பம் போல் விளையாட்டு பொம்மைகளைப் போட்டு உடைப்பது போல் அத்தனை அரக்கர்களையும் உடல் சிதறச் செய்தார். காளியனின் விஷம் கலந்த நீரைக் குடித்து மயங்கிய கோபச் சிறுவர்களை தன் அமுதப் பார்வையால் உயிர்ப்பித்தார். காளியனையும் அடக்கி, கடலுக்குத் துரத்தி, நீரை மக்களுக்குப் பயன்படச் செய்தார்.

கண்ணன் வந்து குடியிருந்ததால் நந்தகோபரின் திருமாளிகையில் ஏராளமான செல்வம் குவிந்து செல்வச் சுமை ஏற்பட்டது. அதை எப்படி நல்வழியில் செலவழிக்க வேண்டும் என்று வழிகாட்டி நந்தனை உத்தம அந்தணர்களைக் கொண்டு கோஸவம் (பசுக்களைப் பூஜிப்பது) என்ற வேள்வியைச் செய்தார். இந்திரனின் கர்வத்தை அடக்க, குழந்தைகள் நாய்க் குடையைப் பிடுங்குவது போல் கோவர்தன மலையைப் பிடுங்கிக் குடையாய்ப் பிடித்து தன்னையே நம்பியிருக்கும் கோகுல வாசிகளைக் காத்தார்.

இவ்வாறு கண்ணனின் ஒவ்வொரு லீலையையும் சொல்லிச் சொல்லி அழுதார் உத்தவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்