||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
1 அச்யுதம் கேஸவம் ராமநாராயணம்
க்ருஷ்ண தாமோதரம் வாஸுதேவம் ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமச்சந்த்ரம் பஜேll
பக்தர்களை என்றும் காத்தருள்பவனே, அவர்களுடைய மனக்கவலையைப் போக்குகின்றவனே, யோகிகளால் வியந்து போற்றத்தக்கவனே, என்றென்றும் பக்தர்களின் இதயத்தை இருப்பிடமாகக் கொண்டவனே, பக்தர்கள் மனதை ஈர்க்கும் தாமோதரனே, நமஸ்காரம். வாசுதேவருக்கு புத்திரனாக அவதரித்தவனே, எல்லாவகை துக்கங்களையும் இல்லாது செய்பவனே, மஹாலக்ஷ்மியை மார்பில் தரித்திருப்பவனே, மஹாலக்ஷ்மிக்கு நாயகனாகவும், கோபிகைகளுக்கு நாதனாகவும் விளங்குபவனே நமஸ்காரம். ஜானகியின் துணைவனான ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம்.
2 அச்யுதம் கேஸவம் ஸத்யபாமாதவம்
மாதவம் ஸ்ரீதரம் ராதிகாராதிதம்
இந்திராமந்திரம் சேதஸா ஸுந்தரம்
தேவகீநந்தனம் நந்தஜம் ஸந்ததேll
அழிவற்றவனே, மனத் துயரங்களைப் போக்குபவனே, சத்யபாமாவின் நாயகனே, மஹாலக்ஷ்மியை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அவளது பதியே, ராதையினால் பூஜிக்கப்பட்டவனே, மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடம் அளித்தவனே, அழகுக்கே அழகு செய்பவனே, தேவகியின் மைந்தனே, நந் தகோபரின் பிள்ளையே, ஸ்ரீகோபாலா உம்மை மனதால் தியானம் செய்து நமஸ்கரிக்கிறேன்.
3. விஷ்ணவே ஜிஷ்ணவே ஸங்கினே சக்ரிணே
ருக்மிணீராகிணே ஜானகீஜானயே
வல்லவீ வல்லபா யார்ச்சிதா யாத்மனே
கம்ஸவித்வம்ஸினே வம்ஸினே தே நமஹll
எங்கும் வியாபித்திருப்பவனே, வெற்றி வீரனே, சங்கைத் தரித்தவனே, சக்ராயுதம் ஏந்தினவனே, ருக்மிணியின் நாயகனே, கோபிகைகளுக்குப் பிரியமானவனே, பக்தர்களால் அர்ச்சிக்கப்படுபவனே, உலகிற்கே ஆத்மாவானவனே, கம்ஸனை அழித்தவனே, வேணுகானம் இசைப்பவனே கிருஷ்ணா நமஸ்காரம். ஜானகியின் நாயகனே ராமச்சந்திர மூர்த்தியே நமஸ்காரம்.
4. க்ருஷ்ண கோவிந்த ஹே ராம நாராயண
ஸ்ரீபதே வாஸுதேவாஜித ஸ்ரீநிதே
அச்யுதானந்த ஹே மாதவாதோக்ஷஜ
த்வாரகாநாயக த்ரௌபதீரக்ஷகll
ஹரே கிருஷ்ணா, வேதங்களால் அறியத் தகுந்தவனே, ஹரே ராமா, பகவான் நாராயணா, ஸ்ரீபதியே, ஓ வாசுதேவனே, யாராலும் வெற்றிகொள்ள முடியாதவனே, அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியே, அச்யுதா, அனந்தா, ஹே மாதவா, திவ்யஞானப் பிரகாசனே, து வாரகாநாதனே, திரௌபதியைக் காத்தவனே உனக்கு நமஸ்காரம்.
5. ராக்ஷஸக்ஷோபித: ஸீதயா ஸோபிதோ
தண்டகாரண்யபூ புண்யதாகாரண:
லக்ஷ்மணோனான்விதோ வானரை:
ஸேவிதோ: கஸ்த்யஸம்பூஜிதோ ராகவll
பாதுமாம் விஸ்வாமித்திரரின் யாகத்துக்கு இடையூறு விளைவித்த அரக்கர்களைக் கலங்கடித்தவனே, சீதையின் நாயகனாகப் பரிமளிப்பவனே, தன் வருகையால் தண்டகாரண்ய பூமியையே பரிசுத்தமாக்கியவனே, என்றும் லக்ஷ்மணனின் சேவையை அனுபவிப்பவனே, வானரர்களால் கொண் டாடப்பட்டவனே, அகஸ்தியரால் பூஜிக்கப்பட்டவனே, ஸ்ரீராமா, நமஸ்காரம். என்னைக் காத்தருள்வாய் பரம்பொருளே.
6. தேனுகாரிஷ்டகோ நிஷ்டக்ருத் த்வேஷிணாம்கேஸிகா கம்ஸஹ்ருத்வம்ஸிகா வாதகபூதனாகோபக ஸூரஜாகேலனோபாலகோபாலக: பாதுமாம் ஸர்வதா ll
தேனுகாசுரனை அழித்தவனே, எதிரிகளை கலங்கச் செய்து சிதறடித்தவனே, கேசி என்ற அரக்கனை அடிபணிய வைத்தவனே, கம்ஸனை வதம் செய்தவனே, வேணுகானம் செய்து எல்லோர் மனதையும் மயக்கி ஈர்க்கின்றவனே, பூதனையைக் கோபமுறச் செய்து லீலை புரிந்தவனே, யமுனையில் விளையாடி மகிழ்கின்றவனே, பாலகோபாலனே, நமஸ்காரம். எப்பொழுதும் என்னைக் காத்தருள்வாய் பரம்பொருளே.
7. வித்யுதுத்யோதவத் ப்ரஸ்புரத்வாஸஸம்
ப்ராவ்ருடம் போதவத் ப்ரோல்லஸத்விக்ரஹம்
வன்யயா மாலயா ஸோபிதோரஸ்தலம்
லோஹிதாங்க்ரித்வயம் வாரிஜாக்ஷம் பஜேll
மின்னலின் ஒளிபோல் பிரகாசிக்கும் பீதாம் பரத்தை அணிந்தவனே, மழைகாலத்து மேகம் போல் கம்பீரமான சரீரம் கொண்டவனே, வன மாலையால் ஒளிசிந்தும் திருமார்புடையவனே, சிவந்த பாதங்களையுடையவனே, செந்தாமரைக் கண்ணா, நமஸ்காரம்.
8. குஞ்சிதை: குந்தலைர் பாஜமானானனம்
ரத்ன மௌளிம் லஸத்குண்டலம் கண்டயோ:
ஹாரகேயூரகம் கங்கணப் ப்ரோஜ்வலம்
கிங்கிணீமஞ்சுளம் ஸ்யாமளம் தம் பஜேll
சுருண்ட கேசம் அணிசெய்யும் மந்தஹாச முகமுடையவனே, ஒளிவீசும் ரத்னமயமான கிரீடம் தரித்தவனே, கன்னங்களில் இழையோடி பிரகாசிக்கின்ற குண்டலங்கள் தரித்தவனே, ஹாரம், தோள்வளை ஆகிய அணிகலன்களைச் சூடியவனே, கங்கணங்கள் ஜொலிக்கத் திகழ்பவனே, இடுப்பில் சிறுசிறு மணிகள் தரித்து அழகு பொலிந்தவனே, ச்யாமளா, கோபாலா, நமஸ்காரம்.
பலச்ருதி
9. அச்யுதஸ்யாஷ்டகம் ய: படேதிஷ்டதம்
ப்ரேமத: ப்ரத்யஹம் பூருஷ: ஸஸ்ப்ருஹம்
வ்ருத்தத: ஸுந்தரம் கர்த்ரு விஸ்வம்பரம்
தஸ்யவஸ்யோ ஹரிர்ஜாயதே ஸத்வரம்ll
இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரம் வேண்டிய வற்றை வேண்டியபடியே கொடுக்கும் மகிமை வாய்ந்தது. அழகிய விருத்தம் கொண்டது. உலக த்தையே காக்கும் வல்லமை படைத்தது. இந்த அச்யுதாஷ்டக ஸ்தோத்திரத்தை பக்தி சிரத்தையுடன் யார் தினமும் படிக்கிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீமன்நாராயணன் விரைவில் திருவருள் புரிந்து சகல மங்களங்களையும் அருள்வார்.
||இதி ஸ்ரீ அச்யுதாஷ்டகம் ஸம்பூரணம்||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||