About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 20 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 64

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 34

இஷ்டோ விஸி²ஷ்ட: ஸி²ஷ்டேஷ்ட:
ஸி²க²ண்டீ³ நஹுஷோ வ்ருஷ:|
க்ரோத⁴ஹா க்ரோத⁴ க்ருத் கர்த்தா
விஸ்²வ பா³ஹுர் மஹீத⁴ர:||

  • 309. இஷ்டோ விஸி²ஷ்டஸ்² - வேறுபாடு எதுவுமின்றி விரும்பப்படுபவர்.
  • 310. ஸி²ஷ்டேஷ்டஸ்² - பெரியோரால் விரும்பப்படுபவன்.
  • 311. ஸி²க²ண்டீ³ - சிறந்த தலையணியுடையவன்.
  • 312. நஹுஷோ - கட்டுபவன்.
  • 313. வ்ருஷஹ - எல்லா விருப்பங்களையும் பொழிபவன்.
  • 314. க்ரோத⁴ஹா - கோபத்தை வென்றவன்.
  • 315. க்ரோத⁴ க்ருத் - கோபமுள்ளவன்.
  • 316. கர்த்தா - வெட்டுபவன்.
  • 317. விஸ்²வ பா³ஹுர் - நன்மை செய்யும் புயங்களை உடையவன்.
  • 318. மஹீத⁴ரஹ - பூமியைத் தாங்கி நிற்பவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.1 

ஸஞ்ஜய உவாச।
தம் ததா² க்ரிபயா விஷ்டம் 
அஸ்²ரு பூர்ணா குலேக்ஷணம்| 
விஷீ த³ந் தமித³ம் வாக்யம்
உவாச மது⁴ஸூத³ந:||

  • ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் கூறினான் 
  • தம் - அர்ஜுநனிடம் 
  • ததா² - இவ்வாறாக 
  • க்ரிபயா - இரக்கத்தால் 
  • விஷ்டம் - நிறைந்து 
  • அஸ்²ரு பூர்ண குல - கண்ணீர் நிறைந்தது 
  • ஈக்ஷணம் - கண்கள் 
  • விஷீ த³ந்தம் - கவலை கொண்டு 
  • இத³ம் - இந்த 
  • வாக்யம் - சொற்களை 
  • உவாச - கூறினார் 
  • மது⁴ஸூத³நஹ - மது எனும் அரக்கனை அழித்தவர்

ஸஞ்ஜயன் கூறுகிறார்: இவ்வாறாக இரக்கத்தினால் நிறைந்து, கண்களில் கண்ணீர் நிறைந்து, கவலை கொண்ட அர்ஜுநனிடம், மது எனும் அரக்கனை அழித்த, மதுசூதனரான கிருஷ்ணர், பின்வரும் சொற்களை கூறினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.33

அஸௌ கு³ணமயைர் பா⁴வைர் 
பூ⁴த ஸூக்ஷ்மேந் த்³ரியாத் மபி⁴:|
ஸ்வநிர் மிதேஷு நிர்விஷ்டோ 
பு⁴ங்க்தே பூ⁴தேஷு தத்³ கு³ணாந்||

  • பூ⁴த ஸூக்ஷ்ம - பூத ஸூக்ஷ்மம்
  • இந்த்³ரிய ஆத்ம அபி⁴ஹி - இந்திரியங்கள் மனஸ் இவையாகிற
  • கு³ணமயைர் பா⁴வைர் - ஸத்வம் முதலிய குண விசேஷங்களால்
  • ஸ்வநிர் மிதேஷு - தன்னால் உண்டாக்கப்பட்ட 
  • பூ⁴தேஷு - ஜீவர்கள் இடத்தில்
  • நிர்விஷ்டோ - புகுந்தவராய்
  • அஸௌ - இந்த வாஸுதேவன்
  • தத்³ கு³ணாந்நு - அதற்குத் தகுந்த குண விசேஷங்களை
  • பு⁴ங்க்தே - அனுபவிக்கிறார்

சப்தம் (ஒலி), ஸ்பரிசம் (ஊறு), ரூபம் (உடல்), ரசம் (சுவை), கந்தம் (நாற்றம் - வாசனை) என்கிற ஐந்து பூத சூட்சமங்கள்; மெய், வாய், கண், மூக்கு, செவி முதலிய புலன்கள்; மனம்; முக்குணங்கள் - இவைகளைக் கொண்டு, தன்னால் படைக்கப்பட்ட சகல ஜீவராசிகளிடமும் தானே உள்ளும் புறமும் கரந்து நின்று, பகவான் அந்தந்த குணங்களை அனுபவிக்கின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 12
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய 
தே³வ்யை ச தஸ்யை ஜனகாத் மஜாயை|
நமோஸ்து ருத்³ரேந்த்³ர யமா நிலேப்⁴ய: 
நமோஸ்து சந்த்³ரார்க மருத்³ க³ணேப்⁴ய꞉|| 

  • ஸ லக்ஷ்மணாய - லக்ஷ்மணனுடன் கூடிய
  • ராமாய - ராமனுக்கு
  • நமோ அஸ்து - நமஸ்காரம்
  • தே³வ்யை ஜனகாத் மஜாயை - ஜனகரின் புத்திரியான சீதாதேவிக்கு
  • நமோ அஸ்து- நமஸ்காரம்
  • ருத்³ரேந்த்³ர யமா நிலேப்⁴யோ - ருத்ரன், யமன், வாயு இவர்களுக்கு
  • நமோஸ்து- நமஸ்காரம்
  • சந்த்³ரார்க மருத்³ க³ணேப்⁴யோ - சந்திரன் சூரியன். மருத்கணங்கள் இவர்களுக்கு
  • நமோஸ்து- நமஸ்காரம்

லக்ஷ்மணனுடன் கூடிய ராமனுக்கு நமஸ்காரம். ஜனகரின் புத்திரியான சீதாதேவிக்கு நமஸ்காரம். ருத்ரன், யமன், வாயு இவர்களுக்கு நமஸ்காரம். சந்திரன் சூரியன். மருத்கணங்கள் இவர்களுக்கு நமஸ்காரம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 47 - பெரியாழ்வார் திருமொழி - 1.3.4

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 47 - தேவர்கள் தந்த அரை ஞாண்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்

சங்கின் வலம் புரியும்* 
சேவடிக் கிண்கிணியும்* 
அங்கைச் சரி வளையும்* 
நாணும் அரைத் தொடரும்*
அங்கண் விசும்பில்* 
அமரர்கள் போத்தந்தார்* 
செங்கண் கரு முகிலே! தாலேலோ* 
தேவகி சிங்கமே! தாலேலோ|

  • சங்கின் - சங்குகளில் சிறந்த
  • வலம் புரியும் - வலம்புரிச் சங்கையும்
  • சே அடி - சிவந்த திருவடிகளில் சாத்தத் தகுந்த 
  • கிண்கிணியும் - சதங்கையையும் 
  • அம் கை - அழகிய கைகளுக்கு உரிய 
  • சரி வளையும்- கை வளையல்களையும் 
  • நாணும் - திருமார்வில் பொன்னரை நாணையும் 
  • அரை தொடரும் - அரையில்அரை ஞாணும் 
  • அம் கண் - அழகியதாய் விசாலமான
  • விசும்பில் - ஸ்வர்க்கத்திலுள்ள
  • அமரர்கள் - தேவர்கள்
  • போத்தந்தார் - அனுப்பினார்கள்
  • செம் கண் - சிவந்த கண்களை டைய
  • கருமுகிலே - காள மேகம் போன்ற கருத்த திருமேனி அழகனே! கண்ணனே! 
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 
  • தேவகி - தேவகியின் வயிற்றிற் பிறந்த 
  • சிங்கமே - சிங்கக் குட்டியே!
  •  தாலேலோ! - கண்ணுறங்கு! 

விரிந்து பரந்த அழகான தேவலோகத்தில் உள்ள தேவர்கள், கண்ணனுக்கு சிறந்ததான வலம்புரிச் சங்கையும், உயர்ந்ததான திருவடிகளில் அணிய சதங்கைகளும், அழகான கைகளுக்கும், தோள்களுக்கும் அணிவதற்கு வளையல்களும், இடுப்பில் கட்ட பொன்னாலான நாணான் கயிறும், பதக்கத்தையும் அனுப்பி இருந்தார்கள். சிவந்த கண்களை உடையவனாயும், கருத்த மேகம் போல் காட்சி அளிப்பவனுமான கண்ணனே! கண்ணுறங்கு, தேவகியின் வயிற்றில் தோன்றிய சிங்கக் குட்டியே கண்ணுறங்கு. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 014 - திருநறையூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ திருநறையூர் நம்பி பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ வஞ்ஜுளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ திருநறையூர் நம்பி பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: திருநறையூர் நம்பி
  • பெருமாள் உற்சவர்: இடர் கடுத்த திருவாளன்
  • தாயார் மூலவர்: வஞ்ஜுளவல்லி
  • தாயார் உற்சவர்: நம்பிக்கை நாச்சியார்
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: மணிமுத்தா நதி, சங்கர்ஷணம், பிரத்யும்னம், அனிருத்தம், சாம்ப
  • விமானம்: ஸ்ரீநிவாச, ஹேம
  • ஸ்தல விருக்ஷம்: வகுளம் (மகிழம்)
  • ப்ரத்யக்ஷம்: ப்ரஹ்மா, மேதாவி ரிஷி
  • ஆகமம்: வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 110

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

திருமங்கை ஆழ்வாருக்கு அருளிய பெருமாள். நீலன் எனும் குறுநில மன்னனாக இருந்த திருமங்கை ஆழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தை எல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மனம் கலங்கிய அவர் இத்தலம் வந்த போது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து 'முத்ரா தானம்' (பஞ்ச சமஸ்காரம்) செய்து வைத்தார். (முத்ரா தானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக் கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும், சக்கரமும் முத்ரா தானம் செய்த கோலத்தில் முன் புறம் தள்ளியும், சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது. தன்னை ஏற்றுக் கொண்டதால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி ஸ்வாமியை, "நம்பி' என்று சொல்லி மங்களாஸாஸநம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப் பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ரா தானம் செய்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயில், ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பது போல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. பெருமாளை விட சற்று முன் புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதி உலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே ஸ்வாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக் கொத்து வைத்தபடி அருள் பாலிக்கிறாள். இவள் தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு கருடாழ்வார் தனிச் சன்னதியில் உடலில் 9 நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறு காலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப் படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன் தான் வீதி உலா செல்வார். ஆனால், இங்கு கருட சேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதி உலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும் போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப் பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியில்  இருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும் போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரையில் உச்சி கால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச் சன்னதி அமைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம் பிடித்தவர். 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்ட இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள் தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், கோபுரத்திற்கு அருகில் இருந்து பார்த்தாலும் ஸ்வாமி தெரியும்படி மாடக் கோயில் போல இக்கோயிலைக் கட்டினான் கோச்செங்கட் சோழன். திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை "மணிமாடக்கோயில்' என்று பாடியுள்ளார்.

பஞ்ச கிருஷ்ண கோயில்களில் முதலாவதான இத்தலம் முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விமானம் ராஜ கோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது.

மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு "வஞ்சுளா தேவி' எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள், தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்கும் இடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம், "தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத் தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்,'' என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம், "நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே, நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்'' என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே, இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம் பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் "நாச்சியார் கோயில்' என்ற பெயரும் பெற்றது. 

இங்குள்ள மூலவர் ஸன்னதியின் மேல் உள்ள விமானம் ஹேம விமானம் எனப்படுகிறது. பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் கீழே நவக்கிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டு இருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் இருக்க, அருகில் மேதாவி அவரை வணங்கியபடி உள்ளார். கருட சன்னதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 55

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சாந்தீபனி முனிவரிடம் சிட்சை|

க்ஷத்ரியப் பிள்ளைகளுக்கு செய்யப்பட வேண்டிய முறைப்படி வசுதேவர் கிருஷ்ணனையும் பலராமனையும் முப்புரி நூல் (பூணூல்) போட வைத்தார். யாதவர்களின் குருவான கர்கர் என்ற மகரிஷி அந்த சடங்கை நடத்தி அவர்களுக்கு காயத்ரி மந்திரம் உபதேசித்தார்.பிறகு இருவரும் மிக்க அடக்கத்துடன் சாந்தீபனி முனிவரை அடைந்து, சாஸ்தரங்களை கற்று கொள்வதற்காக, அங்கே குரு குல வாசம் செய்ய விரும்புவதாக சொன்னார்கள். அவர்களுடைய நன்னடத்தையைக் கண்டு மகிழ்ந்து, அவர்களை சாந்தீபனி முனிவர் தம் சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.


எல்லா வேதங்களையும் உபநிஷதங்களையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவர்களுக்கு வில் வித்தை, சில அஸ்திரங்களுக்கு உள்ள மந்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தார். அவர்களுக்கு மனதை ஒரு முகப் படுத்தி விஷயங்களைக் கிரகிக்கும் சக்தி இருந்ததனால் அறுபத்து நான்கு கலைகளையும் வெகு சீக்கிரம் கற்றுக் கொண்டு விட்டார்கள்.

பிறகு அவர்கள் குருவை பார்த்து, தங்களிடமிருந்து எதாவது குருதட்சணை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினார்கள். சாந்தீபனி முனிவருக்கு வேறு என்ன செய்ய வேண்டும்? அவருக்கு ஒரே ஒரு மகன் தான் பிறந்தான். ஒரு நாள் அவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது, தண்ணீரில் இறங்கி, மூழ்கி இறந்து விட்டான். தமது மகனைத் தமக்கு மீட்டுக் கொடுக்க முடியுமா என்று சாந்தீபனி முனிவர் கிருஷ்ணனைக் கேட்டார்.

கிருஷ்ணனும் பலராமனும் ஓர் இரதத்தில் ஏறி கடற்கரைக்குச் சென்றதும், அந்தக் குழந்தையைத் திருப்பித் கொடுக்கும் படி சமுத்திர ராஜனைக் கேட்டார்கள். சமுத்திர ராஜன் அவர்கள் முன்னால் தோன்றினான். கிருஷ்ணன் அவனைப் பார்த்து, “பல வருடங்களுக்கு முன்னர், உன்னுடைய அலைகள் சாந்தீபனி முனிவரின் சிறு மகனை விழுங்கி விட்டன. தயவு செய்து அவனை திருப்பிக் கொடு. குருவுக்கும் குரு பத்தினிக்கும் அவர்களுடைய குழந்தையை மீட்டுக் கொண்டு வருவோம் என்று வாக்களித்து இருக்கிறோம்” என்று சொன்னான். அதற்குச் சமுத்திர  ராஜன், 'கிருஷ்ணா! அந்தச் சிறுவனைக் கொண்டு சென்றது நானல்ல. கடலில் பஞ்சசனன் என்ற ஓர் அசுரன் இருக்கிறான். அவன் பெரிய சங்கு உருவம் கொண்டு, எல்லோரையும் விழுங்கி விடுகிறான்' என்று சொன்னான். உடனே கடலில் குதித்து, ஆழத்திற்குச் சென்று பஞ்சசனைப் பிடித்து அவனை அங்கயே கொன்றான் கிருஷ்ணன். ஆனால் குருவின் மகனை அங்கே காணவில்லை, ஒரு பெரிய சங்கு தான் கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு அவன் தண்ணீருக்கு வெளியே வந்தான். அங்கிருந்து அவர்கள் இருவரும் யம ராஜனின் இருப்பிடமான சம்யமனீ என்னும் இடத்திற்குச் சென்றார்கள். கிருஷ்ணன் பாஞ்சசன்யம் என்று அழைக்கப்பட்ட அந்தச் சங்கை ஊதினான். பஞ்சசனன் என்பவனிடமிருந்து எடுக்கப்பட்டதால் அதற்குப் பாஞ்சசன்யம் என்ற பெயர் வந்தது.

சங்க நாதத்தைக் கேட்டதும் யமராஜன் ஓ டிவந்து, கிருஷ்ணனைத் தக்க மரியாதையுடன் வரவேற்றார். தான் குருவின் மகனின் உயிரை திரும்பி கொடுக்கும்படி கிருஷ்ணன் அவரைக் கேட்டான். யமராஜன் உடனே சம்மதித்து, சிறுவனைக் கிருஷ்ணனிடம் திருப்பிக் கொடுத்தார். கிருஷ்ணனும் பலராமனும் சிறுவனை சாந்தீபனி முனிவரிடம் அழைத்துச் சென்றனர். இன்னும் என்ன செய்ய வேண்டும் குருவே என்று அவரிடம் கேட்டனர். சாந்தீபனி முனிவர், “நீங்கள் மிகவும் நல்ல முறையில் குருதட்சணை செலுத்தி விட்டீர்கள், எனக்கு வேறு என்ன வேண்டும்? நீங்கள் உங்கள் பெற்றோரிடம் திரும்பி செல்லலாம்” என்றார். குரு உத்தரவு கொடுத்தும், இருவரும் தங்கள் இரதத்தில் மதுராநகரம் விரைந்தார்கள்.

பல நாட்களாக இவர்களைப் பிரிந்திருந்த மதுராவாசிகள் இவர்களைக் கண்டதும் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - அறுபத்தி ஒன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

061 அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே|

ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்த கூரத்தாழ்வார், திருவரங்கத்தில் இருந்த இராமானுஜருக்கு சிஷ்யராகும் எண்ணம் கொண்டு, தன்னுடைய செல்வம் அனைத்தையும் அறச்செயல்களுக்கு தானமாக வழங்கி விட்டு, கூரத்திலிருந்து தன் மனைவியை அழைத்துக் கொண்டு திருவரங்கம் வந்தவர். எம்பெருமானாருடைய ப்ரதான சிஷ்யர்களுள் ஒருவர் கூரத்தாழ்வான்.


நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் மதியிழந்த உறையூர் சோழ மன்னன், இராமானுசரை கைது செய்ய ஆணையிட்டான். கூரத்தாழ்வார் தம் குருவைப் போல் வேடம் தரித்துக் கொண்டு அரசனிடம் செல்ல, ராமானுஜர் கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரத்திற்கு சென்று விடுகிறார். மன்னனுடன் ஏற்ப்பட்ட விவாதத்தின் விளைவால், கூரத்தாழ்வாரின் கண்களை பிடுங்கி விட மன்னன் ஆணையிட, கூரத்தாழ்வாரோ, “உன்னைப்போன்ற பாவம் செய்தவனைக் கண்ட கண்கள் எனக்கு தேவையில்லை.”, என்று கூறி, தனது கண்களை தானே பிடுங்கி எரிந்து விட்டு ஸ்ரீ ரங்கம் திரும்பினார்.

இதற்கிடையில், பெரிய நம்பிகள் பரமபதம் அடைந்து விட, பெரிய நம்பிகளின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார் கூரத்தாழ்வார். ராமானுஜரும் அங்கு இல்லாததால் அவர் மனம் மிகவும் வேதனைப்பட்டது. ஆறுதல் வேண்டி ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கச் சென்றார். ராமானுஜருக்கு நெருக்கமானவர்கள் யார் வந்தாலும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சோழ மன்னன் கட்டளையிட்டு இருந்தான். ஆகவே கோயில் வாயில் காப்பான் ஒருவன் அவரை உள்ளே விட மறுத்து விட, மற்றொரு காப்பாளனோ, "ராமானுஜருக்கு இவர் மிகவும் வேண்டியவராய் இருந்தாலும், இவர் நல்லவர். இவரை உள்ளே அனுமதிக்கலாம்' என்ற படியே அவரை கோயிலுக்குள் செல்ல அனுமதித்தான்.

கூரத்தாழ்வார், "ராமானுஜருக்கு நெருங்கியவர் என்பதால் கோயிலுக்குள் அனுமதிக்கிறேன் என்றால் உள்ளே செல்கிறேன். என் ஆச்சாரியாருடனான சம்பந்தத்தை விட்டுவிட்டு தான் ரங்கனை தரிசிக்க வேண்டுமென்றால், அந்த அரங்கனே எனக்கு வேண்டாம்.” என்று கூறி விட்டு ஸ்ரீ ரங்கம் கோவிலை விட்டு வெளியேறினார். பின்னர், திருவரங்கத்தை விட்டு திருமாலிருஞ் சோலைக்குச் சென்று, 12 வருடங்கள் அங்குள்ள கள்ளழகருக்கு சேவை புரிந்தார். சோழ மன்னனின் இறப்புக்குப் பின், ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ரங்கம் திரும்பிய பின்னரே கூரத்தாழ்வானும் ஸ்ரீ ரங்கம் திரும்பினார். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " கூரத்தாழ்வான் போல், ஆச்சார்ய சம்பந்தத்திற்கு மதிப்புக் கொடுத்து, அரங்கனயே வேண்டாம் என்று கூறினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ச்ரவண யோகம்

ஸ்கந்தம் 01

ஸ்ரீ மத் பாகவத பாராயணத்தின் பெருமையை உணர்த்தும் மற்றொரு கதை.

க்ருத யுகத்திலும், த்ரேதா யுகத்திலும், த்வாபர யுகத்திலும் அடிக்கடி பூமிக்கு வந்து ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாரதர், கலியுகம் துவங்கியதும் பூமிக்கு வரவே பயந்தார். கலியின் கோர முகத்தைக் காண நாரதருக்கே அச்சமாயிருந்தது என்றால், கலியுகம் எப்படி இருக்கிறது என்பது தெளிவு. இருப்பினும், பகவத் ஸங்கல்பத்தினால் பூமியைச் சற்று பார்த்து வருவோம் என்று இறங்கினார்.


எங்கு போனாலும், மக்கள் கூட்டம், ஒரே இரைச்சல், சண்டை சச்சரவுகள், அடிதடி. எல்லோரும் எதையோ தேடி அலைந்து கொண்டிருந்தனர். கோவில்களுக்குப் போனால், கேட்கவே வேண்டாம். அங்கு நிலைமை இன்னும் மோசம். எங்கே சென்றாலும் காசு கேட்டார்கள். ப்ரகாரங்களிலேயே கடைகள், எச்சில், குப்பைகள். பூமி முழுவதும் பொதுவாக இயங்கிய ஒரே மொழி பணம் மட்டுமே. பயந்து போனார் நாரதர். அவரால் எதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை.

கண்ணன் லீலைகள் ப்ருந்தாவனம் சென்று பார்க்கலாம் என்று ஸ்ரீ வனம் போனார். அங்கு காடுகள் குறைந்திருந்த போதிலும், பகவந் நாமம் எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்டு சற்று நிம்மதி அடைந்தார்.

வைகுந்தம் சென்று பகவானிடம் பூமியின் நிலைமையை எடுத்துச் சொல்லலாம் என்று நினைத்துக் கிளம்பினார். அப்போது, நாரதரே என்று ஒரு குரல் கேட்டது.

தன்னை அடையாளம் கண்டு கூப்பிடுவது யார் என்று ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்த்தார். அங்கு ஒரு மரத்தடியில் ஒரு இளம் பெண் அமர்ந்திருந்தாள். அவளருகில் மிகவும் வயதான இரண்டு பேர் படுத்திருந்தார்கள். அவர்களிருவரும் குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக் கொண்டிருந்தனர்.

நாரதர் அந்தப் பெண்ணைப் பார்த்து,

"யாரம்மா நீ? என்னை எப்படி அடையாளம் தெரிந்தது? இவர்கள் இருவரும் யார்?" என்று கேட்டார்.

"பக்திக்கு ஸூத்ரம் எழுதியதே தாங்கள் தான். பக்த ஸாம்ராஜ்ய சக்ரவர்த்தியான ப்ரஹ்லாதன், துருவ நக்ஷத்ரமாய் விளங்கும் துருவன் இவர்களெல்லாம் உமது சிஷ்யர்கள். ஆனால், உமக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. யாரென்று கேட்கிறீர். இது எனது துர்பாக்யமாகும். நான் தான் பக்தி தேவி." என்றாள்.

அதிர்ந்து போன நாரதர், "பக்திதேவியா, ஏனம்மா இப்படி இருக்கிறாய்? இவர்கள் யார்?"

"இவர்கள் என் புதல்வர்கள் ஞானமும், வைராக்யமும். என் நிலையும் இவர்களைப் போல் தான் இருந்தது. நான் எப்படியோ ஊர்ந்து ஊர்ந்து கண்ணன் லீலை செய்த இடமான இந்த ஸ்ரீ வனத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். இங்கு வந்ததும் என் நிலைமை சற்று சீரானது. ஆனால் என்ன செய்தாலும் என் புதல்வர்களை எழுப்ப முடியவில்லை. பக்திக்கு சூத்திரதாரியான நீங்கள் தான் உபாயம் சொல்ல வேண்டும்" என்றாள்.

நாரதர், அவர்கள் இருவரையும் வைத்துக் கொண்டு, அருகில் அமர்ந்து உபநிஷத், பகவத் கீதை முதலியவற்றைப் பாராயணம் செய்தார். ஆனால், அவர்கள் இருவரின் நிலைமையிலும் முன்னேற்றமே இல்லை. செய்வதறியாது திகைத்த நாரதர், யமுனைக் கரையில் யோசித்துக் கொண்டே நடந்தார். அப்போது ஸனகாதி மஹரிஷிகளுள் ஒருவரான ஸனத் குமாரர் எதிர்ப்பட்டார். ஸனத் குமாரரின் அம்சமாக முருகப் பெருமான் அவதரித்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. நாரதர் கவலையோடு வருவதைப் பார்த்ததும் கேட்டார்,

"நாரதரே, எப்போதும் ப்ரஸன்னமாக பகவன் நாம கோஷம் செய்வீரே. இப்போது என்ன கவலை?"

பக்தி தேவியின் நிலையை எடுத்துச் சொன்ன நாரதர், ஞானத்தையும் வைராக்யத்தையும் எழுப்ப வழி தெரியவில்லை என்றார்.

"என்ன நாரதரே, கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவார் உண்டோ? எல்லாம் அறிந்த தாங்களே இப்படி சொன்னால் என்ன செய்வது?"

திருதிருவென்று விழித்தார் நாரதர்.

"தாங்கள் வியாசருக்கு உபதேசம் செய்து எழுதத் தூண்டிய புரணமான ஸ்ரீமத் பாகவதம் இருக்க என்ன கவலை? ஸப்தாஹ விதிப்படி பாராயணம் செய்தால் ஞான வைராக்யங்கள் துள்ளியெழுந்து விடுமே" என்றதும், 

நாரதர், "சரியான சமயத்தில் பகவத் ஸ்வரூபமாகவே வந்து நினைவு படுத்தினீர்கள். தாங்களே ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ மஹா யக்ஞத்தை நடத்திக் கொடுக்க வேண்டும்"

"கரும்பு தின்னக் கூலியா? நன்றாகச் செய்து விடலாம். இப்போதே துவங்குவோம்" என்றார். 

ஸ்ரீவனத்தில் யமுனைக் கரையிலேயே ஸப்தாஹம் துவங்கியது. இனிப்பு இருக்கிறது என்று எறும்புக்கு அழைப்பு விடுக்கப்படுகிறதா என்ன? ஸ்ரீமத் பாகவதம் ஸ்வயமே அத்தனை பக்தர்களையும் ஆகர்ஷிக்கக் கூடியது. ஏராளமான பக்தர்கள் யமுனைக் கரையில் கூட, ஸனத் குமாரர் வெகு விமரிசையாக ஸப்தாஹம் செய்தார்.

தினமும் பாராயணம் முடிந்து இரவு திவ்ய நாம ஸங்கீர்த்தனம் நடைபெறும். அதில் ஸனத் குமாரர், அர்ஜுனன் முதலியோர் பாட, நாரதர் வீணையை மீட்ட, இந்திரன் மிருதங்கம் வாசிக்க, உத்தவர் ஜால்ரா போட்டுக் கொண்டு பாட, ப்ரஹலாதன் கையைத் தட்டிக் கொண்டு ஆட, யமுனா ப்ரவாஹத்தோடு நாம ப்ரவாஹமும் சேர்ந்தது.

ஏழு நாள் முடிவில், ஞானமும் வைராக்யமும் ஆரோக்யம் திரும்பி சக்தி பெற்றனர். பக்தி தேவி இன்னும் ப்ரகாசமாக மிளிர்ந்தாள். அவள் ஞான வைராக்யமான தன் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஸப்தாஹ பந்தலின் நடுவே வந்து நின்று அமர்வதற்கு இடம் தேடினாள். எங்கும் எள் போட்டால் விழாது என்னுமளவிற்கு கூட்டமாக அமர்ந்திருந்தனர். நாரதரைப் பார்த்துக் கேட்டாள்.

"ஸ்வாமி, என்னையும் என் குழந்தைகளையும் பொலிவடையச் செய்தீர்கள். இந்த ஸப்தாஹத்தில் எனக்கும் ஒரு இடமளியுங்கள்" என்றாள்.

நாரதர் அவளைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து, "இங்கு வந்திருப்பவர் அனைவரின் இதயத்திலும் சென்று உன் குழந்தைகளோடு அமர்வாயாக என்றார்."

அப்படி அனைவர் மனத்திலும் பக்தி ஞான வையாக்யத்தோடு நிறைந்ததும், ஸாக்ஷாத் பகவானான ஸ்ரீ கிருஷ்ணன் அங்கு ஆவிர்பவித்தான்.

ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹத்தை ச்ரவணம் செய்யும் அனைவரின் ஹ்ருதயத்திலும் பக்தியும் அதைத் தொடர்ந்து வைராக்யமும் ஞானமும் நிலைபெறும் என்பதாக ஸ்ரீமத் பாகவத மாஹாத்மியம் கூறுகிறது. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்