||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
விஸ்வாமித்திரர் தன் ஆஸ்ரமத்தில் யாகத்திற்கு தடையாக இருக்கும் அரக்கர்களை அழிக்க இராம லட்சுமணரை அரண்மனையில் இருந்து அழைத்துச் சென்றார். நீண்ட தூரம் வனத்தில் நடந்து சென்றதால் கங்கைக் கரையில் களைப்பில், தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். விஸ்வாமித்திரர் காலையில் எழுந்து பார்க்கும் போது நேரம் போவதைக் கூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அவர் காலையில் நீராடி, ஜப தபங்களை செய்து முடித்து வந்த பின்னரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் இராம லட்சுமணரை எழுப்ப நீண்ட நேரம் முயற்சித்தார். முடியாததால் “கௌஸல்யா ஸுப்ரஜா இராம பூர்வா ஸந்த்யா” என பாடினார். ஒரு நாள் இராமனை எழுப்பக் கூடிய பாக்கியத்தை பெற்றேன். அதுவே இராமனின் தாய் கெளசல்யா தினம் தினம் இராம பிரானை எழுப்பும் பேறு பெற்றுள்ளாரே என பாடுகிறார்.
1 கௌசல்யா ஸுப்ரஜா இராம
பூர்வா ஸந்த்⁴யா ப்ரவர்த்ததே|
உத்திஷ்ட² நர ஸார்தூ³ல
கர்த்தவ்யம் தெ³ய்வம் ஆஹ்நிகம்|| (2)
கோஸலையின் நற்புதல்வனே! மாந்தர்களில் உயர்ந்தவனே! இராமபிரானே! ஸூரியன் கிழக்குத் திக்கிலே எழுகின்ற காலைப் பொழுது ஆரம்பம் ஆகிறது. தேவர்கள் முதலானவர்களைக் குறித்துச் செய்ய வேண்டிய நித்ய கருமங்கள் அனுஷ்டானங்கள் செய்யப்பட வேண்டும். ஆதலால் நீ உன் தம்பியுடன் துயில் எழுந்து அருள்வாயாக. வேங்கடவா எழுந்தருள்வாய்!
2 உத்திஷ்டோ²த் திஷ்ட² கோ³விந்த³
உத்திஷ்ட² க³ருட³த்வஜ|
உத்திஷ்ட² கமலா காந்தா
த்ரை லோக்யம் மங்க³ளம் கு³ரு|| (2)
கோவிந்தா! விரைவாகத் துயில் எழுவாய்! கருடனைக் கொடியில் கொண்டவனே! பள்ளி எழுந்தருள்வாய்! செந்தாமரையில் பெருமிதம் கொண்டு வீற்றிருக்கும் திருமகளின் நாயகனே! பள்ளி எழுந்தருள்! மூன்று உலகங்களையும் நீ மங்களம் உடையதாக செய்வாயாக! நீ திருக்கண் விழிக்காவிடில் மூன்று உலகங்களும் செம்மை பெறாது ஒழியும். ஆதலால் அவைகளை வாழ வைப்பதற்காகவே நீ திருக்கண் மலர வேண்டும்! துயில் எழுந்து அருள்வாயாக. வேங்கடவா எழுந்தருள்வாய்!
3 மாதஸ் ஸமஸ்த ஜக³தாம் மது⁴கைட பா⁴ரேஹ்
வக்ஷோ விஹாரிணி மநோஹர தி³வ்ய மூர்த்தே|
ஸ்ரீ ஸ்வாமிநி, ஸ்ரீத ஜந ப்ரிய தா³ந ஸீலே
ஸ்ரீ வேங்கடேஸ த³யிதே தவ ஸுப்ரபா⁴தம்|| (2)
எல்லா உலகங்களுக்கும் தாயாக விளங்குபவளே! மது கைடபவர்கள் என்ற இரு அசுரர்களையும் அழித்து அருளிய திருமாலின் வல மார்பினில் விளையாடுபவளே! அனைவரின் உள்ளத்தையும் கவரக் கூடிய திவ்ய வடிவம் உடையவளே! தம்மைச் சரணடைந்தவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பதில் இயல்பான தன்மை உடையவளே! அன்பிற்கு உரியவளே! பிராட்டியே! உனக்கு நற்பொழுது புலருக! கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.
4 தவ ஸுப்ரபா⁴தம் அரவிந்த³ லோசநே
ப⁴வது பிரஸந்ந முக² சந்த்³ர மண்ட³லே|
விதி⁴ ஸங்கரேந்த்³ர வநிதாபி⁴ர் அர்ச்சிதே
விருஷ ஸைலநாத² த³யிதே த³யாநிதே⁴||
தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடையவளே! முழு நிலவு போன்ற தெளிந்த முகம் உடையவளே! நான்முகன், சிவபெருமான், இந்திரன் முதலானவர்களின் துணைவியர்கள் ஆகிய கலைமகள், மலைமகள் (பார்வதி), இந்திராணி (சசி தேவி) ஆகியவர்களால் பூஜிக்கப்படுபவளே! அருளுக்கு உறைவிடம் ஆனவளே! திருவேங்கடமுடையானின் அன்பிற்கு உரியவளான திருத்தேவியே! எழுந்தருள்வாய்.
5 அத்ரி ஆதி³ ஸப்த ருஷயஸ் ஸ முபாஸ்ய ஸந்த்⁴யாம்
ஆகாஸ ஸிந்து⁴ கமலாநி மநோஹ ராணி|
ஆதா³ய பாத³யுக³ம் அர்ச்சயிதும் ப்ரபந்நாஹ்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ!⁴ தவ ஸுப்ரபா⁴தம்||
ஆதிஸேஷ மலை ஸிகரத்தில் எழுந்தருளி இருக்கும் பரிபூரணனே! அத்ரி முதலான ஏழு முனிவர்களும் ஸந்த்யா வந்தனம் செய்த பின்னர், உன் திருவடிகள் இரண்டையும் மலரிட்டு தொழுவதற்காக (அர்ச்சிப்பதற்காக), மனத்தை கவரக் கூடிய ஆகாஸ கங்கையில் முளைத்து எழுந்த தாமரை மலர்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். உனக்கு நற்பொழுது புலருக! வேங்கடவா எழுந்தருள்வாய்!
6 பஞ்சாநந ஆப்³ஜ ப⁴வ ஷண்முக² வாஸ வாத்³யாஹ்
த்ரை விக்ரமாதி³ சரிதம் விபு³தா⁴ஹ் ஸ்துவந்தி|
பா⁴ஷாபதிஹ் பட²தி வாஸர ஸுத்³தி⁴ மாராத்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||
ஸேஷாத்ரி மலையின் நாயகனே! தேவர்களில் சிறந்தவரும், நல்ல அறிவும் உள்ளவருமான சிவபெருமான், நான்முகன், முருகப் பெருமான், இந்திரன் முதலான தேவர்கள் எல்லாம் மூன்று அடிகளால் ஓங்கி நின்று உலகளந்த உன்னுடைய த்ரிவிக்ரம அவதார சரிதங்களை போற்றித் துதிக்கின்றனர். தேவ குருவாகிய ப்ரஹஸ்பதியு ம் வணக்கத்துடன், உடன் இருந்து திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் முதலியவற்றை விளக்கும் பஞ்சாங்கத்தை படிக்கின்றார், நீ துயில் எழுந்து திருச்செவி சாற்ற வேண்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!
7 ஈஷத் ப்ரபு²ல்ல ஸரஸீருஹ நாரிகேல
பூக³த்³ரு மாதி³ ஸுமநோஹர பாலிகா நாம்|
ஆவாதி மந்த³ம் அநிலஸ் ஸஹ தி³வ்ய க³ந்தை⁴ஹ்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||
சிறிது மலர்ந்த தாமரை மலர்களுடையவும், தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் முதலான மரங்களின் மனத்தை கவரத்தக்க பாறைகளை உடையவும், முதலானவற்றின் உயர்ந்த மணங்களுடன், குளிர்ந்த தென்றல் காற்று மெல்லென வீசுகின்றது. திருமலையின் தனித்தலைவனே! உனக்கு இது தூய வைகறை பொழுதாகுக! உனக்கென்று குளிர்ந்த தென்றல் காற்று, தாமரை மலர்கள் முதலானவற்றின் மனங்களை அள்ளிக் கொண்டு மெல்ல வீசுகின்றது. நீ துயில் எழுந்து எல்லாமும் அணிந்தருள வேங்கடவா! எழுந்தருள்வாய்!
8 உந்மீல்ய நேத்ர யுக³ம் உத்தம பஞ்ஜரஸ் தா²ஹ்
பாத்ரா வஸிஷ்ட கத³லீ ப²ல பாயஸாநி
பு⁴க்த்வாஹ் ஸலீல மத² கேளி ஸுகா: பட²ந்தி
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||
உயர்ந்த கூண்டுகளில் இருக்கின்றவைகளும், கேளிக்கையை உண்டு பண்ணி கூடியவையும் ஆகிய கிளிகள் தம் இரு கண்களை திறந்து கலங்களில் பொறுக்க மாட்டாது கலக ஒலியை எதிரொலிக்கச் செய்கின்றன. திருவேங்கட மலையில் வாழும் பரிபூரணனே! உனக்கு நற் பொழுது புலருக. இடைச்சேரிகளில் வாழும் இள மங்கையர்கள் காலை கடன்களை முடித்துக் கொண்டு தயிர் கடைந்து பேரொலி எழுப்புகின்றனர். அவை எட்டு திக்குகளும் எதிரொலிக்கின்றன. இது உன் திருச்செவிகளில் விழவில்லையா? அருளுடன் துயிலெழ வேண்டும். நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்!
9 தந்த்ரீ ப்ரகர்ஷ மது⁴ர ஸ்வநயா விபஂச்யா
கா³யத்ய நந்த சரிதம் தவ நாரதோ³ பி|
பா⁴ஷா ஸமக்³ர ம் அஸக்ருத் கரசார ரம்யம்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||
எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரத முனிவர், தனது வீணையுடன் இனிமையான இசையை இசைக்கிறார், மேலும் சிறந்த மொழியில், உங்கள் முடிவில்லாத செயல்களைப் புகழ்ந்து பாடுகிறார், மயக்கும் இசைக்கு அழகான கை அசைவுகளுடன் நடனமாடுகிறார். சேஷாசலப் பெருமானே! அது உமக்கு இனிய விடியலாக அமையட்டும். அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்!
10 ப்⁴ருங்கா³வல்தீ³ ச மகரந்த³ ரஸாநு வித்³த⁴
ஜு²ங்கார கீ³த நிநதை³ஸ் ஸஹ ஸேவநாய|
நிர்யாத்யு பாந்த ஸரஸீ கமலோ த³ரேப்⁴யஹ்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||
சேஷகிரிப் பெருமானே, அருகில் உள்ள தொட்டியின் தாமரை மலர்களிலிருந்து தேனீக் கூட்டம், தேனைச் சுவைத்து, மகரந்தத்தைச் சுமந்து, உங்களுக்கு சேவை செய்வதற்காக, உமது தரிசனத்திற்காகக் காத்திருக்கிறது. வேங்கடவா எழுந்தருள்வாய்!
11 யோஷா க³ணேந வரத³த்⁴நி விமத்²ய மாநே
கோ⁴ஷால யேஷு த³தி⁴ மந்த²ந தீவ்ர கோ⁴ஷாஹ்|
ரோஷாத் கலிம் வித³த⁴தே ககு ப⁴ஸ்ச கும்பா⁴ஹ்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்||
மாடு மேய்ப்பவர்களின் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தயிர் கக்கும் போது, பானைகளில் இருந்து எழும் உரத்த ஒலிகளும் எதிரொலிகளும் பானைகளும் எட்டுத் திசைகளும் போட்டி இடுவது போல் தெரிகிறது. சேஷாசலப் பெருமானே! அது உமக்கு இனிய விடியலாக, மகிமையாக அமையட்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!
12 பத்³மேஸ மித்ர ஸதபத்ர க³தாலி வர்கா³ஹ்
ஹர்தும் ஸ்ரியம் குவலயஸ்ய நிஜாங்க³லக்ஷ்ம்யாஹ் |
பே⁴ரீ நிநாத³மிவ பி⁴ப்⁴ரதி தீவ்ர நாத³ம்
ஸேஷாத்³ரி ஸேக²ர விபோ⁴ தவ ஸுப்ரபா⁴தம்
சூரியனுக்கு உறவான தாமரை மலர்களை அடைந்துள்ள வண்டினங்கள் தங்கள் அங்கங்களின் கருநிற அழகால் பளபளப்பான நீல தாமரைகளின் அழகையும் பிரகாசத்தையும் மிஞ்சும் நோக்கில் உயர்ந்த ரீங்கார ஒலியாகிற முரசொலியை செய்கின்றன. திருமலையில் உரையும் பரிபூரணமே! அது உமக்கு இனிய விடியலாக அமையட்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!
13 ஸ்ரீ மந் அபீ⁴ஷ்ட வரதா³கி²ல லோக ப³ந்தோ⁴
ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஜக³தே³க த³யைக ஸிந்தோ⁴ |
ஸ்ரீ தே³வதா க்³ருஹ பு⁴ஜாந்தர தி³வ்யமூர்தே
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருமகள் நாதனே! பக்தர்கள் விரும்பிய வரங்களை எல்லாம் கொடுக்கும் வள்ளல் பெருமானே! எல்லா உலகங்களுக்கும் எல்லா வகை உறவுமாக விளங்குபவனே! மேன்மை பொருந்திய ஸ்ரீனிவாச பெருமானே! எல்லா உலகங்களிலும் தன்னிகரற்று விளங்கும் அருட்கடலே! திருமகளின் வாசஸ்தலமான அழகிய திருமார்போடு கூடிய சிறந்த திரு உருவமுடையவனே! திருவேங்கட மலை நாதனே! இந்த காலை உங்களுக்கு மகிமையைத் தரட்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!
14 ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரிணி காப்லவ நிர்மலாங்கா³ஹ்
ஸ்ரேயார் தி²நோ ஹர விரிஂஞ்சி ஸநந்த³ந ஆத்³யாஹ்|
த்³வாரே வஸந்தி வரவேத்ர ஹ தோத்த மாங்கா³ஹ்
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கட மலை நாதனே! சிவபெருமான், நான்முகன், ஸநந்தனர் முதலானோர் மேன்மைகளை விரும்பியவராய் சிறந்த ஸ்ரீ ஸ்வாமி புஷ்கரணியில் தீர்த்தம் ஆடியதால் உள்ளும் புறமும் மாசற்றவர்கள் ஆகி உன் திருக்கோயில் வாசலில் உயர்ந்த பிரம்புக் கரும்பை கைகளை உயர்த்தியபடி உங்கள் தரிசனத்திற்காக வாசலில் காத்து நிற்கின்றனர். அது உமக்கு இனிய விடியலாக அமையட்டும். அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்!
15 ஸ்ரீ ஸேஷஸைல க³ருடா³சல வேங்கடாத்³ரி
நாராயணாத்³ரி வ்ருஷபா⁴த்³ரி வ்ருஷாத்³ரி முக்²யாம் |
ஆக்²யாம் த்வதீ³ய வஸதே ரநிஸம் வத³ந்தி
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கட மலையில் உரையும் பெருமானே! சிவபெருமான், நான்முகன், ஸநந்தனர் முதலான தேவர்கள், பெருமை வாய்ந்த ஆதிசேஷங்களை, கருட மலை, வேங்கட மலை, நாராயண மலை, விருஷப மலை, விருஷ மலை முதலாய் விளங்கும் உன் உறைவிடத்தின் திருப்பெயர்களை அநுதினமும் சொல்லி புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர். திரண்டவர்களை புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்!
16 ஸேவா பராஹ் ஸிவ ஸுரேஸ க்ருஸா நுத⁴ர்ம
ரக்ஷோம் பு³நாத² பவமாந த⁴நாதி⁴ நாதா²ஹ்|
ப³த்³தா⁴ஞ்ஜலி ப்ரவில ஸந்நிஜ ஸீர்ஷ தே³ஸாஹ்
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கடத்தில் உறையும் பெருமானே! உங்களுக்கு சேவை செய்ய விரும்பி, சிவனும் இந்திரனும் தலை குனிந்தும், செல்வத்தின் அதிபதியான குபேரனும், எட்டுத் திசைகளின் பாதுகாவலர்களும் (திக்பாலகர்கள் - கிழக்கு - இந்திரன், தென் கிழக்கு - அக்னி, இமயன் - தெற்கு, தென் மேற்கு - நிருதி, மேற்கு - வருணன், வட மேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வட கிழக்கு - ஈசானன்) பயபக்தியுடன் முன் கைகளைக் கட்டிக் கொண்டு உனக்காகக் காத்து நிற்கின்றனர். துயிலெழுந்து அவரவர்களுக்கு உரிய பணிகளை கட்டளையிட்டு சொல்வீராக! வேங்கடவா எழுந்தருள்வாய்!
17 தா⁴டீஷு தே விஹக³ ராஜ ம்ருகா³தி⁴ ராஜ
நாகா³தி⁴ ராஜ கஜ³ராஜ ஹயாதி⁴ ராஜாஹ்|
ஸ்வஸ்வ அதி⁴கார மஹி மாதி⁴கம் அர்த²யந்தே
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கட நாதனே! உங்களின் கருணைத் தோற்றத்தில் ஒப்புதலைத் தேடும் கருடன், சிங்கம், ஆதிசேஷன், ஐராவதம், உச்சை சிரவஸ் என்ற இவர்கள் உன்னுடைய நடைகளில் தம் தம் தகுதிக்கு ஏற்றபடி பெருமைமிக்க தங்கள் மேற்பார்வை அதிகாரத்தை மேம்படுத்த உங்களின் முதல் தோற்றத்தைப் பார்க்கத் துடிக்கிறார்கள். வேங்கடவா எழுந்தருள்வாய்!
18 ஸூர்யேந்து³ பௌ⁴ம பு³த⁴ வாக்பதி காவ்ய ஸௌரி
ஸ்வர்பா⁴நு கேது தி³விஷத் பரிஷத் ப்ரதா⁴நாஹ்|
த்வத்³ தா³ஸ தா³ஸ ஸரமாவதி⁴ தா³ஸ தா³ஸாஹ்
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
சூரியன், சந்திரன், அங்காரகன் (செவ்வாய்), புதன், குரு (வியாழன்), காவ்ய (சுக்கிரன்), ஸௌரி (சனி), ராகு (ஸ்வர்பாநு), கேது முதலான தேவ சபையில் உள்ள நவக்கிரகங்களின் அதிபதிகள், உன்னுடைய அடியார்களின் அடியார்களுக்கும், அடிமையின் கடை எல்லையை அடைந்துள்ள அடியார்களுக்கும் அடியார்களாய், திருக்கோயில் வாயிலில் காத்து நிற்கின்றனர். திருவேங்கட நாதனே! உனக்கு நற் பொழுது புலருவதாக! வேங்கடவா எழுந்தருள்வாய்!
19 த்வத் பாத³ தூ⁴ளி, ப⁴ரித ஸ்புரி²த உத்தமாங்கா³ஹ்
ஸ்வர்கா³ அபவர்க³ நிரபேக்ஷ நிஜாந்த ரங்கா³ஹ்|
கல்ப ஆக³ம ஆகலநயா ஆகுலதாம் லப⁴ந்தே
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கட நாதனே! உனது திருவடியின் அடியில் உள்ள கோடானுகோடி துகள்கலால் சுத்திகரிக்கப்பட்ட உனது பக்தர்கள், மோட்சத்தின் மீதுள்ள உண்மையான ஆர்வத்தை மறந்து, அடுத்த பிறவியில் இந்த வாய்ப்பு கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் தீவிர பக்தியுடன் உமக்குச் சேவை செய்கின்றனர். வேங்கடவா எழுந்தருள்வாய்!
20 த்வத்³ கோ³புர ஆக்³ர ஸிக²ராணி நிரீக்ஷ மாணாஹ்
ஸ்வர்கா³ அபவர்க³ பத³வீம் பரமாம் ஸ்ரயந்தஹ்|
மர்த்யா மநுஷ்ய பு⁴வநே மதி மாஸ்ரயந்தே
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கட நாதனே! மோட்ச சாம்ராஜ்யத்தில் ஆர்வமாக வந்தவர்கள் உமது கோவிலின் விமானத்தை (கிரீடம்) பார்த்து விட்டு, தாங்கள் எதற்காக வந்தோம் என்பதை மறந்து இந்த மண்ணுலகில் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். வேங்கடவா எழுந்தருள்வாய்!
21 ஸ்ரீ பூ⁴மி நாயக த³யாதி³ கு³ண அம்ருத ஆப்³தே³
தே³வாதி³ தே³வ ஜக³த்³ ஏக ஸரண்ய மூர்தே|
ஸ்ரீமந் அநந்த க³ருடா³தி³பி⁴ ர் அர்ச்சி தாங்க்⁴ரே
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கட நாதனே! நீங்கள் பூமித் தாயின் (பூமி) அதிபதி, கருணை போன்ற எண்ணற்ற மங்களகரமான குணங்களைக் கொண்டவர், அனைத்து கடவுள்களுக்கும் இறைவன், பிரபஞ்சத்தின் ஒரே அடைக்கலம் மற்றும் அநந்தன் மற்றும் கருடன் போன்ற நித்ய சூரிகள் (நித்தியத் தோழர்கள்) உங்கள் திருவடியின் கீழ் காத்திருக்க பெற்றவர். வேங்கடவா எழுந்தருள்வாய்!
22 ஸ்ரீ பத்³மநாப⁴ புருஷோத்தம வாஸுதே³வ
வைகுண்ட² மாத⁴வ ஜநார்த⁴ந சக்ரபாணே|
ஸ்ரீ வத்ஸ சிஹ்ந ஸரணாக³த பாரிஜாத
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
ஸ்ரீ பத்மநாபனே! புருஷோத்தமனே! வாசுதேவனே! வைகுண்ட வாசனே! மாதவனே! ஜநார்த்தனனே! சக்கரபாணியே! ஸ்ரீ வத்ஸம் என்னும் மறுவை உடையவனே! உனது திருவடியில் ஸரணம் அடைந்தவர்க்கு பாரிஜாத மரம் போல பல்வகைச் செல்வங்களைப் பாங்காய்த் தருபவனே! திருவேங்கடமுடை நாயகனே! உனக்கு நற்பொழுது புலருக! வேங்கடவா எழுந்தருள்வாய்!
23 கந்த³ர்ப த³ர்ப ஹர ஸுந்த³ர தி³வ்ய மூர்தே
காந்தா குசாம் பு³ருஹ குட்மல லோல த்³ருஷ்டே|
கல்யாண நிர்மல கு³ணாகர தி³வ்ய கீர்தே
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கடமுடைய எம்பெருமானே! மன்மதனுடைய கர்வத்தை அழிக்கக்கூடிய திருமேனியை உடையவனே! திருமகளின் தாமரை மொட்டு போன்ற கொங்கைகளில் ஆசை கொண்ட பார்வையை உடையவனே! மங்களகரமானவைகளும் குற்றங்கள் அற்றவையுமான நற்குணங்களுக்கு இருப்பிடமானவனே! நிகரில்லா புகழ் பெற்றவனே! உனக்கு நற்பொழுது புலருக! வேங்கடவா எழுந்தருள்வாய்!
24 மீநாக்ருதே கமட² கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரஸ்வத² தபோத⁴ந இராமசந்த்³ர|
ஸேஷாம் ஸ இராம யது³நந்த³ந கல்கி ரூப
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கட முடையானே! மச்ச அவதாரம் எடுத்தவனே!, ஆமையானவனே! (கூர்ம), வராக அவதாரம் எடுத்தவனே!, நரசிங்கனே!, பிரம்மச்சாரியே! (வாமன அவதாரம்), கோடரி முனியே! (பரசுராமனே), ஸ்ரீ இராமபிரானே!, ஆதிசேஷன் அம்சமாகிய பலராமனே!, யது குலத்தவரை களிக்கச் செய்த கண்ணபிரானே! (கிருஷ்ணாவதாரம்), கல்கியாய் அவதரிக்க போகின்றவனே! உனக்கு நற்பொழுது புலருக! வேங்கடவா எழுந்தருள்வாய்!
25 ஏலா லவங்க³ க⁴நஸார ஸுக³ந்தி⁴ தீர்த்த²ம்
தி³வ்யம் வியத்ஸரிது ஹேம க⁴டேஷு பூர்ணம்|
த்⁴ருத் வாத்³ய வைதி³க ஸிகா²மணயஹ் ப்ரஹ்ருஷ்டாஹ்
திஷ்ட²ந்தி வேங்கட பதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கட மலை உடையானே! ஆகாச கங்கையில் இருந்து தங்க குடங்களில் நிரப்ப பெற்றதும், ஏலக்காய், இலவங்கம், பச்சை கற்பூரம் இவைகளின் நறுமணம் கமழ்வதும், உயர்ந்ததுமான தீர்த்தத்தை, குடத்தில் சுமந்து கொண்டு, வேத மந்திரங்களுடன் இப்பொழுது வைதீக அந்தணப் பெருமக்கள் பேரானந்தம் உடையவர்களாய் உன் திருக்கோயில் வாயிலில் வந்து காத்து நிற்கின்றனர். உனக்கு நற்பொழுது புலருக! வேங்கடவா எழுந்தருள்வாய்!
26 பா⁴ஸ்வாந் உதே³தி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூர யந்தி நிநதை³ஹ் ககுபோ⁴ விஹங்கா³ஹ்|
ஸ்ரீ வைஷ்ணவாஹ் ஸததம் அர்த்தி²த மங்க³ளாஸ்தே
தா⁴மா ஸ்ரயந்தி தவ வேங்கட ஸுப்ரபா⁴தம்||
திருவேங்கடம் உடையானே! கதிரவன் கிழக்கு திசையில் உதிக்கின்றான். கமல மலர்கள் மலர்கின்றன. பறவைகள் தங்கள் நாத ஒலிகளால் எட்டு திக்குகளையும் நிரப்புகின்றன. ஸ்ரீ வைஷ்ணவர்கள் எப்பொழுதும் உனக்கு மங்களங்களை வேண்டிக் கொண்டு உன்னுடைய திருக்கோயிலை வந்தடைகின்றனர். இந்த காலை உங்களுக்கு மகிமையாக இருக்கட்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!
27 ப்³ரஹ்மா ஆத³யஸ் ஸுரவராஸ் ஸமஹர்ஷ யஸ்தே
ஸந்தஸ் ஸநந்த³ந முகா²ஸ் த்வத² யோகி³வர்யாஹ்|
தா⁴மாந்திகே தவ ஹி மங்க³ள வஸ்து ஹஸ்தாஹ்
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருமலை நாதனே! மிக உயர்ந்தவர்களாகிய மகா ரிஷிகளுடன் கூடிய நான்முகன் முதலிய தேவ ஸ்ரேஷ்டர்களும், சாதுக்களாகிய ஸநந்தநர் முதலிய யோகி ஸ்ரேஷ்டர்களும், நீ துயில் எழுந்ததும் உன் திருக்கண் மலர் திறந்து முதலில் பார்க்கத்தக்க கண்ணாடி முதலான மங்கல பொருள்களை கையில் ஏந்தி கொண்டவர்களாய் உன்னுடைய கோவிலின் அருகில் காத்து நிற்கின்றனர். இந்த காலை உங்களுக்கு மகிமையாக இருக்கட்டும். வேங்கடவா எழுந்தருள்வாய்!
28 லஷ்மீ நிவாஸ நிரவத்³ய கு³ணைக ஸிந்தோ⁴
ஸம்ஸார ஸாக³ர ஸமுத்தர் அநைக ஸேதோ|
வேதா³ந்த வேத்³ய நிஜ வைப⁴வ ப⁴க்த போ⁴க்³ய
ஸ்ரீ வேங்கடா சலபதே தவ ஸுப்ரபா⁴தம்||
திருமகளின் உறைவிடமே! குற்றமற்றவனே! நற்குணங்களுக்கு உறைவிடமான ஒப்பற்ற கடலே! ஸம்ஸாரம் என்னும் கடலை கடத்தற்குரிய ஒப்பற்ற அணையே! உபநிஷத்துக்களால் அறியப்படும் பெருமை உடையவனே! ஸ்ரீ வெங்கடேசலபதே! பக்தர்களுக்கு இனியவனே! உனக்கு நற்பொழுது புலருக! வேங்கடவா எழுந்தருள்வாய்!
29 இத்த²ம் வ்ருஷாசல பதேர் இஹ ஸுப்ரபா⁴தம்
யே மாநவாஹ் ப்ரதி தி³நம் படி²தும் ப்ர வ்ருத்தாஹ்|
தேஷாம் ப்ரபா⁴த ஸமயே ஸ்ம்ருதி ரங்க³பா⁴ஜாம்
ப்ரஜ்ஞாம் பர ஆர்த்த² ஸுலபா⁴ம் பரமாம் ப்ரஸூதே||
ஸ்ரீ கோவிந்தருக்கு நமஸ்காரம். இங்கு விருஷாசல மலையின் இறைவனின் சுப்ரபாதம் முடிவடைகிறது, பக்தியுடன் தினமும் இதைப் பாராயணம் செய்வதில் ஈடுபடுபவர்கள், விடியற்காலையில் ஸ்ரீ கோவிந்தரை மனதாலும் உடலாலும் வணங்குவார்கள். மற்றும் தீவிர பக்தியுடன், அவர்களின் இதயங்களில் எழுந்தருளியிருக்கும் உன்னதத்தின் அருளால் அவர்களுக்கு ஆன்மீக ஞானத்தின் மிக உயர்ந்த சாதனை எளிதாகிவிடும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||