About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 26 September 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 53

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 23

கு³ருர் கு³ருதமோ தா⁴ம: 
ஸத்ய: ஸத்ய பராக்ரம:|
நிமிஷோ நிமிஷ: ஸ்ரக்³வீ 
வாசஸ்பதிர் உதா³ரதீ⁴:||

  • 211. கு³ருர் கு³ருதமோ - பரமாசாரியன், குருவுக்கெல்லாம் குரு
  • 212. தா⁴மஸ் - உலகங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவன்.
  • 213. ஸத்யஸ் - அடியார்க்கு நல்லவன்.
  • 214. ஸத்ய பராக்ரமஹ - வஞ்சனை அற்ற ஆற்றலுடையவன்.
  • 215. நிமிஷோ - கண்மூடி பாகவத விரோதிகளுக்கு அருள் புரியாதவன்.
  • 216. நிமிஷஸ் - கண்மூடாதவன், கண்ணிமைக்காமல் பக்தர்களைக் காப்பவன்.
  • 217. ஸ்ரக்³வீ - வைஜயந்தீ என்னும் மாலை அணிந்தவன்.
  • 218. வாசஸ்பதிர் - சொல்லுக்கு அதிபதி, சொல் வல்லான்.
  • 219. உதா³ரதீ⁴ஹி - சிறந்த ஞான முடையவன்.

                    ||ஹரி ஓம்||
                    ||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

                    தொடரும்

                    ஸ்ரீமத் பகவத் கீதை - 1.38

                    ||ஸ்ரீ:||
                    ||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
                    ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

                    ||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
                    ||ஹரி ஓம்||

                    ||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
                    ||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
                    ||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
                    ||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

                    ||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
                    ||முதல் அத்யாயம்||
                    ||அர்ஜுந விஷாத யோகம்||
                    ||குழப்பமும் கலக்கமும்||

                    ஸ்லோகம் - 1.38

                    யத்³யப் யேதே ந பஷ்யந்தி 
                    லோபோ⁴ பஹத சேதஸ:।
                    குல க்ஷயக்ருதம் தோ³ஷம் 
                    மித்ரத்³ ரோஹே ச பாதகம்॥

                    • யத்³ - இருந்தால் 
                    • யபி - கூட 
                    • ஏதே - அவர்கள் 
                    • ந - இல்லை 
                    • பஸ்²யந்தி - பார்க்க 
                    • லோப⁴ - பேராசையால் 
                    • உபஹத - வெல்லப்பட்ட 
                    • சேதஸஹ - இதயங்கள் 
                    • குல க்ஷய - குலத்தை அழிப்பதில் 
                    • க்ருதம் - செய்த 
                    • தோ³ஷம் - தீங்கு 
                    • மித்ரத்³ ரோஹே - நண்பர்களுக்கு துரோகம் 
                    • ச - மேலும் 
                    • பாதகம் - பாவ விளைவுகள் 

                    கிருஷ்ணா! பேராசையால் விவேகம் இழந்த மனத்தினராகிய இவர்கள் குல நாசத்தால் உண்டாகும் தீங்கையும், நண்பர்களை வஞ்சிப்பதால் விளைகின்ற பாதகத்தையும் தெரிந்து கொள்ளவில்லை. 

                    ||ஹரி ஓம்||
                    ||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

                    தொடரும்

                    ஸ்ரீமத் பாகவதம் - 1.2.22

                    ||ஸ்ரீ:||
                    ||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
                    ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

                    ||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
                    ||ஹரி ஓம்||

                    ||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
                    ||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
                    ||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
                    ||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
                    || ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
                    ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
                    பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

                    ||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
                    ||முதல் ஸ்கந்தம்||
                    ||இரண்டாம் அத்யாயம்|| 
                    ||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

                    ஸ்லோகம் - 1.2.22

                    அதோ வை கவயோ நித்யம் 
                    ப⁴க்திம் பரமயா முதா³|
                    வாஸுதே³வே பக³வதி 
                    குர்வந்த் யாத்ம ப்ரஸாத³ நீம்||

                    • அதோ வை - ஆகையினாலேயே
                    • கவயோ - புலவர்கள் (கவிகள்)
                    • பரமயா முதா³ - மிகுந்த மகிழ்ச்சியோடு
                    • பக³வதி - இறைவனான
                    • வாஸுதே³வே - ஸ்ரீ கிருஷ்ணனிடத்தில்
                    • ஆத்ம ப்ரஸாத³ நீம் -ஆத்மாவை அமைதியோடு கூடியதாக செய்யும்
                    • ப⁴க்திம் - பக்தியை
                    • நித்யம் - எப்பொழுதும்
                    • குர்வந்தி - செய்கின்றனர்

                    ஆதலால், பெரியோர்கள் பெருமகிழ்ச்சியோடு, பகவானாகிய வாஸுதேவனிடத்தில் மனத்தைத் தூய்மையாக்கும் பக்தியைச் செலுத்துகிறார்கள்.
                    ||ஹரி ஓம்||
                    ||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

                    தொடரும்

                    ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 1

                    ||ஸ்ரீ:||
                    ||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
                    ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

                    த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 1
                     ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

                    கூஜந்தம் ராம ராமேதி 
                    மது⁴ரம் மது⁴ராக்ஷரம்|
                    ஆருஹ்ய கவிதா ஸா²கா²ம் 
                    வந்தே³ வால்மீகி கோகிலம்||

                    • ராம ராமேதி - ராமா ராமா என்று
                    • மது⁴ராக்ஷரம் - மதுரமான நாமத்தை
                    • கவிதா ஸா²கா²ம் - கவிதை என்னும் கிளையில்
                    • ஆருஹ்ய - ஏறி
                    • மது⁴ரம் - இனிமையாக
                    • கூஜந்தம்- கூவுகின்ற
                    • வால்மீகி கோகிலம்- வால்மீகி என்ற குயிலை
                    • வந்தே³ - வணங்குகிறேன்

                    ராமா ராமா என்று மதுரமான நாமத்தை கவிதை என்னும் கிளையில் ஏறி இனிமையாக கூவுகின்ற வால்மீகி என்ற குயிலை வணங்குகிறேன்.

                    ||ஹரி ஓம்||
                    ||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

                    தொடரும்

                    திவ்ய ப்ரபந்தம் - 37 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.15

                    ||ஸ்ரீ:||
                    ||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
                    ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

                    திவ்ய ப்ரபந்தம் - 37 - முகத்தின் அழகு
                    பெரியாழ்வார் திருமொழி 
                    முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதிநைந்தாம் பாசுரம்

                    நோக்கி யசோதை* 
                    நுணுக்கிய மஞ்சளால்* 
                    நாக்கு வழித்து* 
                    நீராட்டும் இந் நம்பிக்கு*
                    வாக்கும் நயனமும்* 
                    வாயும் முறுவலும்* 
                    மூக்கும் இருந்தவா காணீரே* 
                    மொய் குழலீர்! வந்து காணீரே|

                    • நோக்கி - திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி பார்த்து ஆராய்ந்து
                    • அசோதை - யசோதைப் பிராட்டி
                    • நுணுக்கிய - அரைத்த
                    • மஞ்சளால் - பசு மஞ்சள் விழுதால்
                    • நாக்கு வழித்து - நாக்கு வழித்து விட்டு பிறகு
                    • நீராட்டும் - ஸ்நாநம் செய்விக்கப் பெறுகின்ற 
                    • இந்நம்பிக்கு - இக்கண்ணபிரானின்
                    • வாக்கும் - திருவாக்கும் 
                    • நயனமும் - திருக்கண்களும் 
                    • வாயும் - வாயும்
                    • முறுவலும் - புன்சிரிப்பும் 
                    • மூக்கும் - மூக்கும்
                    • இருந்தவா காணீரே - இருக்கும் அழகை வந்து பாருங்கள்!
                    • மொய் குழலீர் – அடர்த்தியான கூந்தலை உடைய பெண்களே! 
                    • வந்து காணீரே வந்து பாருங்கள்! 

                    யசோதை அன்னை, நல்ல மஞ்சள் எதுவென்று திருமேனியின் மென்மைக்குத் தக்கப்படி தேடி தேடிப் பார்த்து, அதை, சிறுகுழந்தையான கண்ணனின் சிறுநாவினை வழிப்பதற்கு ஏற்ற அளவுடையதாய் சிறியதாய் நுணுக்கி, இலகுவாய் வழித்து, பதமாய் பையவாட்டிய நீரால் குளிப்பாட்டும் இந்த தலைவனுக்கு, தத்தித் தத்திப் பேசும் மழலை மொழியும், கருணை மழைப் பொழியும் கார்முகில் வண்ணனின் திவ்யமான செங்காந்தள் கண்களும், வசீகரப் புன்சிரிப்புடன் கூடின பவளவாயும், நவமணியும் மின்னுகின்ற எட்பூ நாசியும், இப்படி ஒவ்வொன்றும் மாயக் கண்ணன், கார்முகில் வண்ணன் முகத்தில் அழகாய், அமைப்புடன் இருக்கின்ற முறையை வந்து பாருங்கள். இருளைப் போன்று கரிய, மிகவும் அடர்த்தியான கூந்தலைக் கொண்ட பெண்களே, வந்து சர்வ இலட்சணங்களும் அமைந்திருக்கும், இந்த கருணா மூர்த்தி வசீகரனின் முக அழகை வந்து பாருங்கள் என்று அழைக்கிறாள் யசோதை.

                    ||ஹரி ஓம்||
                    ||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

                    தொடரும்

                    108 திவ்ய தேசங்கள் - 011 - திரு ஆதனூர் 2

                    ||ஸ்ரீ:||
                    ||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
                    ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

                    011. திருஆதனூர் (கும்பகோணம்)
                    பதினொன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

                    மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
                    தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் 
                    இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
                    1 ஆழ்வார் - 1 பாசுரம்

                    1. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்
                    1. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்)

                    • திவ்ய ப்ரபந்தம் – 2781 - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (69)

                    --------------------
                    திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
                    இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி 

                    தனியன்
                    மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
                    எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
                    கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
                    பொற் பாதம் என் தலை மேல் பூ*

                    அந்தாதி
                    இடர் ஆன ஆக்கை இருக்க முயலார்*
                    மடவார் மயக்கின் மயங்கார்* 
                    கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார்* 
                    நான் எனது என்னார் அமலன்*
                    ஆதனூர் எந்தை அடியார்* 

                    • அமலன் – குற்றமற்றவனும்
                    • ஆதனூர் எந்தை – திருஆதனூர் என்னும் ஸ்தலத்தில் எழுந்தருளி உள்ளவனுமாகிய எம்பெருமானது
                    • அடியார் – பக்தர்கள்
                    • இடர் ஆன ஆக்கை இருக்க முயலார் – பலவகைத் துன்பங்கட்கும் இடமாகிய தமது உடம்பு நிலைத்து இருக்குமாறு முயற்சி செய்ய மாட்டார்கள்
                    • மடவார் மயக்கில் மயங்கார் –இள மகளிரது மோக வலையிற் சிக்கித்து இயங்க மாட்டார்கள்
                    • கடவுளர்க்கு நாதன் ஊர் ஆதரியார் – தேவர்கட்குத் தலைவனான இந்திரனது ஊரையும் சுவர்க்க லோக இன்பத்தையும் விரும்ப மாட்டார்கள்
                    • நான் எனது என்னார் – அகங்கார மமகாரச் சொற்களையும் சொல்ல மாட்டார்கள்

                    ------------------
                    இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரம் - 1

                    திருமங்கையாழ்வார் 

                    001. திவ்ய ப்ரபந்தம் – 2781 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
                    பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (69)
                    மூழிக்களத்து விளக்கினை*
                    அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை*
                    நென்னலை இன்றினை நாளையை* 
                    நீர் மலை மேல் முன்னவனை|

                    ||ஹரி ஓம்||
                    ||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

                    தொடரும்

                    லீலை கண்ணன் கதைகள் - 44

                    ||ஸ்ரீ:||
                    ||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
                    ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

                    மீண்டும் நாரதர் கம்சன் சந்திப்பு|

                    நாரத முனி, கிருஷ்ணன் ஒவ்வொரு அரக்கனையும் கொள்வதை பார்த்துக் கொண்டிருந்தார், கம்சனின் வதம் நடக்க வேண்டிய நேரமும் வந்தது. நாரதர் அதனை பற்றி கூற கம்சனிடம் சென்றார், அசுரன் ஆனாலும் கம்சன், நாரதரை பணிவுடனே வரவேற்றான். இருவரும் பல விஷயங்களை பற்றி அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இறுதியாக விஷயத்துக்கு வந்தார் நாரதர், "கம்சா நீ இங்கு நடக்கும் மர்மத்தை பற்றி தெரிந்து வைத்திருக்கவில்லை, பெண்ணாக பிறந்த எட்டாவது குழந்தை தான் யசோதையின் மகள், மற்றும் கிருஷ்ணன் தான் தேவகியின் உண்மையான எட்டாவது மகன். பலராமன் ரோஹிணிக்கும் வசுதேவருக்கும் பிறந்தவன். உன்னிடம் உள்ள பயத்தால் தான் நந்தரிடம் கிருஷ்ணன் ஒப்படைக்கப்பட்டான். இப்பொழுது கிருஷ்ணன் வளர்ந்து விட்டான், இனி உன்னை பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள்." இதை கேட்ட கம்சன் மிகவும் கோபமுற்றான். வசுதேவர் அவனை ஏமாற்றியதற்காக கொல்லப்பட வேண்டும் என்று முடிவு செய்தான். இதனை கேட்ட நாரதர், "நீ என்ன செய்தாலும் உனக்கு உதவாது, நீ இனி கிருஷ்ணனை எப்படி கொல்லலாம் என்று மட்டுமே முடிவு செய்ய வேண்டும்" என்றார் நாரதர். நாரதர் ஆயிற்றே, அவர் வேலை முடிந்ததும், “நாராயண நாராயண” என்று கூறி கொண்டே புறப்பட்டார். மறுபடியும் கம்சன் வசுதேவரையும் தேவகியையும் சிறையில் போட்டு அடைத்தான்.


                    கேசி என்ற அசுரனை அழைத்து "பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனையும் பலராமனையும் கொன்று விட்டு வா" என்றான். அவனை அனுப்பி விட்டு அனைத்து மந்திரிகளையும் அழைத்தான். அதில் முக்கியமானவர்கள் முஷ்டிகா, சனுறா, ஷாலா, டோஷாலா. அவர்களை நோக்கி "என் இனிய நண்பர்களே, வீரர்களே, உங்களுடைய துணை எனக்கு தேவை. வாசுதேவனின் எட்டாவது மகன் பிருந்தாவனத்தில் வசிப்பதாக கேள்விப் பட்டேன், அவனையும் அவன் அண்ணன் பலராமனையும் அழிக்க கேசியை அனுப்பி உள்ளேன், இதில் கேசி வெற்றி பெறுவான் என்று நம்புகிறேன். அவனால் முடியவில்லை என்றால், கிருஷ்ணன் பலராமனை நமது ஊரில் நடக்கும் குத்து சண்டைக்கு அழைத்து உங்கள் மூலம் அவர்களை வீழ்த்தலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் நால்வர் தான் நமது ஊரில் நல்ல குத்து சண்டை வீரர்கள், உடனே சென்று சரியான இடத்தில் குத்து சண்டை மைதானத்தை அமைத்திடுங்கள், எல்லோரும் பார்க்கும் இடத்தில் அமைப்பது முக்கியம், அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்ததை போல இருக்குமாறு செய்யுங்கள். யானை படை தளபதியே, இந்த அரங்கம் வாசலில் நமது குவலயபிதா என்ற யானையை நிறுத்துங்கள், அவர்கள் உள்ளே நுழையும் போது அவர்களை யானையின் கால்களால் நசுக்க சொல்லுங்கள். நான் ஈசனுக்காக யாகம் நடத்தி நீண்ட ஆயுளை கேட்க போகிறேன்."


                    கம்சன் என்னத் தான் தைரியமாக பேசினாலும், மனதிற்குள் சிறிய பயம் இருந்து கொண்டே இருந்தது. தனது நண்பனான அக்ருரா என்ற யாதவனை அழைத்து, "எனது அருமை நண்பா, எனக்கு ஒரு சின்ன உதவியை நீ செய்ய வேண்டும், நீங்கள் சென்று கிருஷ்ணனையும் பலராமனையும் எந்த வித தடங்கலும் இன்றி நமது தேரில் அழைத்து வரவேண்டும். தேவர்கள், மஹா விஷ்ணுவின் துணையுடன் என்னை கொள்ள முயற்சிப்பதாக கேள்விப் பட்டேன், அதுவும் கிருஷ்ணன் பலராமன் உருவில். நீ சென்று அந்த இருவர் மற்றும் அவரது தந்தை நந்தர், மற்ற கோபியர்களை அழைத்து வா, அவர்கள் இங்கு வந்தால் நமது யானை அவர்களை கொன்று விடும். யானையிடம் இருந்து தப்பித்தால் நமது குத்து சண்டை வீரர்கள் அவர்களை கொன்று விடுவார்கள்”. 

                    அக்ருரன் எல்லாவற்றையும் கேட்டு விட்டு, கம்சனுக்கு சில அறிவுரைகளை கூறினான். "என் அருமை தோழா, நீ என் மேல் வைத்திருக்கும் அன்பினை நினைதால் பெருமையாக உள்ளது, நீ உன்னை ஆபத்தில் இருந்து காப்பற்றி கொள்ள நினைப்பது சரி தான், ஆனால் ஒரு மனிதனின் வாழ்கையில் உள்ள வெற்றி தோல்வி அனைத்தும் ஆண்டவன் கையில் மட்டுமே உள்ளது, அதனால் அனைத்தையும் ஒன்று போலவே எடுத்து கொள்ள வேண்டும், நீ சொன்னதை நான் கண்டிப்பாக செய்கிறேன் உனது கட்டளையின்படி." இதை கூறிவிட்டு அக்ருரன் பிருந்தாவனத்திற்கு புறப்பட்டார்.

                    ||ஹரி ஓம்||
                    ||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

                    தொடரும்

                    திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பதாவது வார்த்தை

                    ||ஸ்ரீ:||
                    ||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
                    ||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

                    050 இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே|

                    சபரி ஒரு வேடுவ குலப் பெண். (வேடர்களில் தேன், அரக்கு போன்ற பொருட்களைச் சேகரித்து விற்கும் பிரிவினரைச் சபரர் என்பர்). அவள் காட்டில் மிருகங்களை அடித்துச் சாப்பிடுபவள். ஒரு நாள் அவளுக்கு நல்ல பசி, யாராவது வர மாட்டார்களா அடித்துச் சாப்பிடலாம் என்று காத்துக் கொண்டு இருக்கும் போது மதங்க முனிவரின் சிஷ்யர்கள் குளித்து விட்டு வேதம் ஓதிக் கொண்டு சபரி இருக்கும் இடத்தை நோக்கி வந்தார்கள். அவர்கள் ஓதிய வேத ஒலியில் மயங்கி உருகினாள் சபரி. அவளுக்குள் ஒரு பரவசம் ஏற்பட்டது.


                    தினமும் அந்த இடத்தில் உட்கார்ந்து சிஷ்ய குழந்தைகள் வரும் காட்சியை மறைவாகக் கண்டு களிப்பது அவளுக்கு ஆனந்தம். இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

                    குழந்தைகள் போகும் பாதையில் உள்ள முள், கற்களை எல்லாம் சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து அழகிய பூக்களால் கோலம் போட்டு வைத்தாள். இதைத் தினமும் கவனித்த குழந்தைகள் தங்களின் குரு மதங்க முனிவரிடம் ஓடிச் சென்று “குருவே! தினமும் யாரோ நாங்கள் நடக்கும் வழியைச் சுத்தம் செய்து வைக்கிறார்கள்” என்றார்கள். மதங்க முனிவர் “யார் என்று கண்டு பிடித்து அழைத்துக் கொண்டு வாருங்கள்” என்கிறார்.


                    குழந்தைகள் அன்று சீக்கிரமே சென்று ஒரு மரத்துக்குப் பின் ஒளிந்து கொண்டு பார்த்தார்கள். அங்கே சபரி சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்தாள். குழந்தைகள் ”எங்கள் குரு உங்களைக் கூப்பிடுகிறார்” என்று சபரியை அழைத்துக் கொண்டு போனார்கள். சபரி மதங்க முனிவரைப் பார்த்தவுடன் அவரின் காலில் விழுந்து வணங்குகிறாள்.

                    முனிவர் அவளுக்கு ஆசி வழங்கி “இந்த ஆசிரமத்திலேயே தங்கி இங்கே ஏதாவது வேலை செய்து கொண்டு இரு” என்கிறார். அவளும் ஆசிரமத்தைச் சுத்தம் செய்வது. தோட்டம் அமைத்துப் பூச்செடி வளர்ப்பது. முனிவர்களுக்கும், அவருடைய சீடர்களுக்கும் பழங்களைப் பறித்துக் கொடுப்பது என்ற சிறு சிறு வேலைகளைச் செய்து அங்கேயே தங்கினாள். முனிவர்களும், சீடர்களும் சாப்பிட்ட பிறகு மீதம் இருப்பதைத் தான் சாப்பிடுவாள். நாட்கள் செல்ல செல்ல, சபரியைத் தமது முதன்மை சிஷ்யையாக அங்கீகரித்தார் மதங்கர். இப்படியே பல காலம் கழிந்தது.

                    மதங்க முனிவருக்கு வயதாகி கடைசிக் காலம் நெருங்கச் சிஷ்யர்களிடம் “நான் மோட்ச கதியை அடையப் போகிறேன். உங்களுக்கு என்ன தேவையோ கேளுங்கள்” என்றார். சிஷ்ய குழந்தைகள் அவர்களுக்கு என்ன என்ன மந்திரங்கள் தேவையோ அதை உபதேசமாகப் பெற்றுக் கொண்டார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சபரியிடம் “இங்கே வா” என்று அன்புடன் அழைத்தார் முனிவர்.


                    சபரி பணிவுடன் முனிவர் அருகில் சென்றாள். மதங்கர் இல்லா உலகம் தனக்கும் வேண்டாம். எனவே தன்னையும் அழைத்து செல்லுமாறு சபரி வேண்டினார். முனிவர் சபரியிடம்” ‘ராம’ என்று சொல்லு” என்றார். சபரியும் ‘ராம’ என்று சொல்லி விட்டு ’ராம’ என்பதற்கு என்ன பொருள்?” என்று கேட்டாள். முனிவர் ‘ராம’ என்ற சொல்லையே தினமும் தியானம் செய்து கொண்டு இரு, இதன் அர்த்தமே உன்னைத் தேடி வரும். அப்படி உன்னைத் தேடி வரும் போது நீ அவருக்கு எல்லா பணிவிடைகளையும் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டு முனிவர் மோட்சம் அடைந்தார்.

                    வருடங்கள் பல சென்றன. எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் பூரண நம்பிக்கை வைத்து காலம் செல்வதைப் பற்றி துளியும் சிந்திக்காமல், தினமும் காலை எழுந்து குளித்து விட்டு, தன் குருவைத் தியானித்து விட்டு, குருவின் சீடர்களுக்குப் பணிவிடை செய்து விட்டு, குரு உபதேசித்த ‘ராம’ மந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஓதிக் கொண்டிருந்தார். சபரி தனது குருநாதரின் கட்டளைப்படி தவவாழ்க்கை மேற்கொண்டு ஸ்ரீ இராமனின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தார். 

                    ஒவ்வொரு நாளும் ராமனின் வருகையை எதிர்பார்த்திருந்த முதியவரான சபரி, அனுதினமும் காலை, தனது கைத்தடியுடன் ஆஷ்ரமம் நீங்கி, காட்டினுள்ளே சென்று, ராமர் வந்தால் அவரை உபசரிக்க எந்த மரத்தின் பழம் இனிக்கிறது சோதித்து பார்த்து என்று அதை எல்லாம் பறித்து வருவார். அவற்றைக் கடித்துச் சுவைத்துப் பார்ப்பார். இனிய சுவையுடைய கனிகளை மட்டும் ராமனுக்கு என்று தனியே எடுத்து வெய்யில் காய வைத்து வைப்பார். தனது கூடை நிரம்பியவுடன், ஆஷ்ரமம் சேர்ந்து, ஸ்ரீ இராமனின் வருகைக்காக வாசலில் அமர்ந்து விடுவார்.  

                    ஒரு நாள் ஆசிரமத்துக் குழந்தைகள் ‘பாட்டி பாட்டி யாரோ இரண்டு பேர் வில்லும் கையுமாக வருகிறார்கள்” என்று சொல்லச் சபரி விரைந்து சென்று பார்த்த போது அங்கே ராமரும், லக்ஷ்மணரும் வில்லுடன் காட்சி கொடுத்தார்கள்.

                    குரு சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவர்களை வரவேற்று, கைகளைக் கூப்பி வணங்கி, கீழே விழுந்து ராமரின் திருவடிகளை இருக்கையாலும் இறுகப் பற்றிக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது.

                    ”ராமா! நான் தவம் செய்த வார்த்தையை இப்போது நேராகப் பார்க்கிறேன். பல்லாண்டுகளாக மேற்கொண்டிருந்த தவத்தின் பயன் என்னை வந்தடைந்தது. ராமரின் திருவடிகளில் தண்ணீரால் அலம்பி விட்டாள். அலம்பி ஓடும் திருவடி பட்ட தண்ணீரை தன் தலையிலும் உடலிலும் எடுத்துப் பூசுக் கொண்டாள். அதைப் பருகினாள். நறுமணமுள்ள மலர்களால் அர்ச்சித்தாள்.

                    “ராமா என் குருவிற்குக் கூடக் கிடைக்காத உன் தரிசனம் எனக்குக் கிடைத்தது. நானோ ஒரு பெண், நல்லறிவு இல்லாதவள், தாழ்ந்த ஜாதியில் பிறந்தவள், நீயோ முனிவர்களாலும் அறிய முடியாதவள். உன் அடியார் அடியார் என்றபடி நூறாவது தொண்டனுக்குக் கூடக் கைங்கரியம் செய்யும் உரிமை எனக்கு இல்லை!” என்று ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

                    ராமர் சபரியை அன்புடன் பார்த்து “சபரி என்னை ஒருவன் அடைவதற்கு ஆண்மையோ பெண்மையோ, உயர் ஜாதிப் பிறப்போ, பெயரோ, பிரம்மச்சரியம், இல்லறம், வானப்ஸ்தம், சன்னியாசி என்று எதுவும் கிடையாது. என்னிடம் உண்மையான பற்றும் பக்தியும் தேவை. அந்தப் பக்தி ஏற்படுவதற்குக் காரணம் நல்ல குருவின் சம்பந்தம் முக்கிய காரணம் என்று சொல்லிவிட்டு “சபரி! குருவிற்குச் செய்ய வேண்டிய கைங்கரியத்தை ஒழுங்காகச் செய்கிறாயா?“ என்று ராமர் விசாரித்தார்.

                    உடனே சபரி “ராமா! என் குரு நீ வந்தால் உபசரிக்கச் சொன்னார். இதோ நான் உனக்காக அன்புடன் சேமித்து வைத்த பழங்களை நீ ஏற்க வேண்டும்” என்று கை நிறையப் பழங்களை எடுத்து ராமருக்கு நீட்டினாள்.

                    சபரியால் கடித்துச் சுவைத்துப் பார்த்து, தனக்கென்று வைத்திருந்த இனிய கனிகளை ராமர் உண்டு மகிழ்ந்தார். லக்ஷ்மணனுக்கும் கொடுத்தார். இதைத் தவிர சபரிக்கு வேறு என்ன வேண்டும். அவளுக்கு அதுவே இனியதானது. சபரி உன் கையால் கொடுத்த பழங்கள் இனிய சுவையாக இருக்கிறது என்றார். அதற்குச் சபரி ”இதற்குக் காரணம் நான் இல்லை. என் குரு தான்! அவர் அருளால் உன் திருவடி அருளைப் பெற்றேன். அவர் அருளால் நான் செய்த தவம் சித்தியடைந்தது. அவர் அருளால் பிறவிப் பயன் பெற்றேன். அவர் அருளால் மோட்சமும் எனக்குக் கிடைக்கப் போகிறது. நான் கைங்கரியம் செய்த குரு நீ இங்கே வரும் சமயம் உங்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பி விட்டு என்னையும் மோட்சம் பெறுவாயாக என்று கட்டளையிட்டார். அதனால் நீ வருவதற்குக் காத்துக் கொண்டு இருந்தேன்” என்று சொல்லிவிட்டு.

                    சபரி ஆர்வமாக ”ராமா என்னுடன் வா உனக்கு என் குரு மதங்க முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றிக் காட்டுகிறேன்” என்றாள். ராமர் சபரியின் பின் சென்றார். சபரி “இங்கே தான் குரு தினமும் பகவத் தியானம் செய்வார், இதோ இந்த இடத்தில் தான் காயத்திரி மந்திரத்தை ஜபிப்பார், இங்கே யாக ஹோமங்களைச் செய்வார். அங்கே மரத்துக்குப் பக்கம் தான் அவர் நீராடிய இடம், இது அவரின் மரவுரிகள்” என்று எதையும் விட்டு வைக்காமல் ராமரிடம் காண்பித்து தன் குருவின் மேன்மையைக் கூறினாள் சபரி. இதை எல்லாம் கேட்ட ராமர் உள்ளன்போடு ”நீ விருப்பபட்டதை பெறுவாயாக” என்று சொன்னார். சபரி ராமரை வணங்கினாள். தீ வளர்த்து அதில் இறங்கி தன் குருவின் திருவடியை அடைந்தாள்.

                    திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "சபரியைப் போல் இனிய பழங்களை மட்டுமே பெருமாளுக்கு ஈந்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

                    ||ஹரி ஓம்||
                    ||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
                    ||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

                    தொடரும்