||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 107
ஸ²ங்க² ப்⁴ருந் நந்த³கீ சக்ரீ
ஸா²ர்ங்க³ த⁴ந்வா க³தா³ த⁴ர:|
ரதா²ங்க³ பாணி ரக்ஷப்⁴யஸ்
ஸர்வ ப்ரஹரணா யுத⁴:||
ஸர்வ ப்ரஹரணா யுத⁴ ஓம் நம இதி||
- 993. ஸ²ங்க² ப்⁴ருந் - வனமாலையைத் தரிப்பவர். பாஞ்சஜன்யம் என்ற சங்கைத் தன் கையில் சுமப்பவர்.
- 994. நந்த³கீ - நந்தகம் என்னும் வாளைத் திவ்ய ஆயுதமாக உடையவர். ஞானம் மற்றும் மாயையாலான வாளைச் சுமப்பவர்.
- 995. சக்ரீ - திருவாழியை (சக்ராயுதத்தை) உடையவர். இடையறாமல் யுகச் சக்கரத்தைச் சுழலச் செய்பவர்.
- 996. ஸா²ர்ங்க³ த⁴ந்வா - ஸ்ரீசார்ங்கம் என்னும் வில்லை ஏந்தியவர்.
- 997. க³தா³ த⁴ரஹ - கௌமேதகீ என்றழைக்கப்படும் கதாயுதத்தை உடையவர். மிகத்திடமான புத்தியுடன் கூடிய கதாயுதத்தைக் கொண்டவர்.
- 998. ரதா²ங்க³ பாணிர் - தேர்ச் சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவர்.
- 999. அக்ஷப்⁴யஸ் - அசைக்க முடியாதவர்.
- 1000. ஸர்வ ப்ரஹரணா யுத⁴ஹ - எல்லாத் திவ்ய ஆயுதங்களையும் உடையவர். அனைத்து வகை ஆயுதங்களையும் தரித்தவர்.
ஓம் நம இதி ஸர்வ ப்ரஹரணா யுத என்பதுடன்
1000 திருநாமங்கள் நிறைவுறும்.
ஸர்வ ப்ரஹரணா யுத என்னும் திருநாமத்தை
இருமுறை ஓதி ஓம் நம என்று முடிப்பது முறை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்