About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 11 April 2024

திவ்ய ப்ரபந்தம் - 114 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 114 - பாலும் வெண்ணெயும் வயிறார விழுங்கியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்

பொத்த உரலைக் கவிழ்த்து* அதன் மேல் ஏறி* 
தித்தித்த பாலும்* தடாவினில் வெண்ணெயும்*
மெத்தத் திருவயிறு* ஆர விழுங்கிய*
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்* 
ஆழியான் என்னைப் புறம் புல்குவான்|

  • பொத்த - அடியில் ஓட்டையாய் போன
  • உரலை - உரலை கொண்டு வந்து
  • கவிழ்த்து - தலை கவிழ்த்துப் போட்டு
  • அதன் மேல் - அதன் மேல்
  • ஏறி - ஏறி நின்று கொண்டு
  • தடாவினில் - உறியில் இருக்கும்
  • தித்தித்த பாலும் - இனிப்பான பாலையும், திரட்டுப் பாலையும்
  • வெண்ணெயும் - வெண்ணெயையும்
  • திரு வயிறு ஆர் - வயிறு நிரம்ப
  • மெத்த விழுங்கிய - மிகுதியாக விழுங்கின
  • அத்தன் - தலைவன்
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • ஆழியான் - கைகளில் திருச்சக்கரம் ஏந்தியவன்
  • என் புறம் - என்னுடைய 
  • புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

ஓட்டையான உரலை தலை கீழாகப் போட்டு அதன் மீதேறி, உயரே வைத்து இருந்த மிடாக்களிலிருந்து சுவையான பாலையும், வெண்ணையையும் எடுத்து வயிறு நிரம்ப நன்றாக உண்ட என் தலைவன் கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! கைகளில் திருச்சக்கரம் ஏந்தியவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment