||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 84
ஸு²பாங்கோ³ லோக ஸாரங்க³:
ஸுதந்துஸ் தந்து வாத்த⁴ந:|
இந்த்³ர கர்மா மஹா கர்மா
க்ருத கர்மா க்ருதா க³ம:||
- 788. ஸு²பாங்கோ³ - மங்களகரமான அழகிய உடலை உடையவர். அசுரர்களையும் மயக்கும் வடிவத்தை உடையவர்.
- 789. லோக ஸாரங்க³ஸ் - உலகுக்கு வேண்டிய சாரமான பொருளைப் பேசுபவர். உலகுக்கு உபதேசித்தவர். தேனீயைப் போல உலகின் சாரத்தை புரிந்து கொள்கிறார். பிரணவ மந்திரம் என்ற வேதங்களின் சாரம் மூலம் அவரை அடைய முடியும். அவர் பக்தியின் பொருள். பக்தியால் கவரப்பட்டவர். மோக்ஷத்தை அளிக்கிறார். ஞானிகள் அவரிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அவருடைய அருட் குணங்களைப் பாடும் பக்தர்களைக் கொண்டிருக்கிறார்.
- 790. ஸுதந்துஸ் - கெட்டியான நூல் வலையை உடையவர். தப்பிக்க முடியாத அசுரர்களைக் கைப்பற்றும் சக்தி வாய்ந்த வலையை உடையவர்.
- 791. தந்து வாத்த⁴நஹ - நூல்களான கயிற்றைப் பலப்படுத்தியவர். பிரபஞ்சத்தை விருத்தி செய்பவர்.
- 792. இந்த்³ர கர்மா - இந்திரனுக்காகச் செயல்பட்டவர்.
- 793. மஹா கர்மா - பெருமைக்குரிய சிறப்பான செயல்களைச் செய்பவர். மகத்தான செயல்களைச் செய்பவர்.
- 794. க்ருத கர்மா - செயல்பட்டவர். அவர் உபதேசித்த செயல்களைச் செய்தவர்.
- 795. க்ருதா க³மஹ - ஆகம நூல்களை வெளியிட்டவர். அவர் ஆகமங்களை முன் வைப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்