||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
1. ஸுக்³ரீவ மித்ரம் பரமம் பவித்ரம்
ஸீதா களத்ரம் நவமேக⁴ கா³த்ரம்
காருண்ய பாத்ரம் ஸதபத்ர நேத்ரம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥
சுக்ரீவனின் நண்பரும் மிகத் தூய்மையானவரும் சீதையின் நாயகரும் புது மேக நிறத்தினரும் இரக்கம் நிரம்பியவரும் தாமரை போன்ற கண்களை உடையவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.
2. ஸம்ஸார ஸாரம் நிக³ம ப்ரசாரம்
த⁴ர்மாவதாரம் ஹ்ருத பூ⁴மி பா⁴ரம்।
ஸதா³ விஹாரம் ஸுக²ஸிந்து⁴ ஸாரம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥
உலக வாழ்க்கையைக் கடக்க உதவுபரும் வேதங்களைப் பரப்புபவரும் தர்மத்தின் அவதாரமும் பூமி பாரத்தைத் தீர்ப்பவரும் எப்போதும் களங்கமற்றவரும், மகிழ்ச்சிக் கடல் போன்றவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.
3. லக்ஷ்மீ விலாஸம் ஜக³தாம் நிவாஸம்
லங்கா விநாஸம் பு⁴வந ப்ரகாஸம்।
பூ⁴தே³வ வாஸம் ஸரதி³ந்து³ ஹாஸம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥
லக்ஷ்மியை விலாஸமாகக் கொண்டவரும் உலகங்களுக்கு இருப்பிடமானவரும் இலங்கையை அழித்தவரும் உலகத்துக்கு ஒளியானவரும்வேதியர்களின் துன்பத்தைப் போக்குபவருமாகிய ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.
4. மந்தா³ர மாலம் வசநே ரஸாலம்
கு³ணைர் விஸாலம் ஹத ஸப்த தாலம்।
க்ரவ்யாத³ காலம் ஸுர லோக பாலம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥
மந்தார மலர்மாலை அணிந்தவரும் இனிமையாகப் பேசுபவரும் நற்குணம் நிறைந்தவரும் ஏழு பனைமரங்களை அழித்தவரும் அசுரர்களுக்கு மரணமாக இருப்பவரும் சொர்க்கத்தின் பாதுகாவலராகவும் ஆகிய ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.
5. வேதா³ந்த கா³நம் ஸகலைஸ் ஸமாநம்
ஹ்ருதாரி மாநம் த்ரித³ ஸப்ரதா⁴நம்।
க³ஜேந்த்³ர யாநம் விக³தா வஸாநம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥
வேதாந்தத்தின் இசையானவரும் அனைவரையும் சமமாக பாவிப்பவரும் கர்வத்தை அடக்குபவரும் தேவர்களுக்கு முதன்மையானவரும் யானை வாகனம் உடையவரும் அனைவர் மனத்திலும் இருப்பவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.
6. ஸ்யாமாபி⁴ ராமம் நய நாபி⁴ ராமம்
கு³ணபி⁴ ராமம் வச நாபி⁴ ராமம்।
விஸ்வ ப்ரணாமம் க்ருத ப⁴க்த காமம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥
கருநிறங்கொண்டு கவர்பவரும் அழகிய விழிகளால் கவர்பவரும் நற்குணத்தால் கவர்பவரும் நற்சொற்களால் கவர்பவரும் உலகத்தினரால் வணங்கப்படுபவரும் பக்தர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்பவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.
7. லீலா ஸரீரம் ரணரங்க³ தீ⁴ரம்
விஸ்வைக ஸாரம் ரகு⁴வம்ஸ ஹாரம்।
க³ம்பீ⁴ர நாத³ம் ஜித ஸர்வ வாத³ம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥
விளையாட்டாக அவதரிப்பவரும் போர்க்களத்தில் தீரமுடையவரும் உலகத்தின் சாரமானவரும் இரகுவம்சத்தின் ஆரம் போன்றவரும் கம்பீரமான குரலுடையவரும் வாதங்களில் வெல்பவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.
8. க²லே க்ருதாந்தம் ஸ்வஜநே விநீதம்
ஸாமோ பகீ³தம் மநஸா ப்ரதீ³தம்।
ராகே³ண கீ³தம் வசநாத³தீதம்
ஸ்ரீ ராமசந்த்³ரம் ஸததம் நமாமி॥
கொடியவர்களுக்குக் கடுமையானவரும், தம்மைச் சார்ந்தவர்களுக்கு மிகவும் இனிமையானவரும், ஸாம வேதத்தால் இசைக்கப் படுபவரும், மனத்தால் தொழப் படுபவரும், பல பாடல்களால் வணங்கப் படுபவரும், தம் நாமத்தைச் சொல்பவர்களுக்கு அனைத்தையும் தருபவருமான ஸ்ரீராமசந்திரா! உங்களை வணங்குகிறேன்.
9. ஸ்ரீ ராமசந்த்³ரஸ்ய வராஷ்டகம் த்வாம்
மயேரிதம் தே³வி மநோஹரம் யே।
பட²ந்தி ஸ்ருண்வந்தி க்³ருணந்தி ப⁴க்த்யா
தே ஸ்வீயகாமாந் ப்ரளப⁴ந்தி நித்யம்॥
ப்³ரஹ்மாதி³ வேத³ ஸேவ்யாய
ப்³ரஹ்மண்யாய மஹாத்மநே।
ஜாநகீ ப்ராண நாதா²ய
ரகு⁴நாதா²ய மங்³களம்॥
இதி ஸத கோடி ராம சரிதாந்தர்க³தே ஸ்ரீமதா³ நந்த³
ராமாயணே வால்மீகீயே ஸாரகண்டே³
யுத்³த⁴சரிதே த்³வாத³ஸ ஸர்கா³ந்தர் க³தம் ஸ்ரீராமாஷ்டகம் ஸமாப்தம்
தேவி! ஸ்ரீராமசந்திரன் புகழ்பாடும் அஷ்டகத்தை உன் முன்பு நான் உரைத்தேன்.
॥இதி ஸ்ரீ ராமச்சந்த்³ர அஷ்டகம் ஸம்பூர்ணம்॥
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||