About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 9 March 2024

108 திவ்ய தேசங்கள் - 029 - திரு அரிமேய விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

029. திரு அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 1238 - 1247 - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

வாழும் அடியார் மட நெஞ்சே நம் அளவோ*
தாழும் சடையோன் சது முகத்தோன் பாழிக்*
கரிமேய விண்ணகரக் காவலோன் கண்டாய்*
அரிமேய விண்ணகரத் தார்க்கு*

  • மடம்நெஞ்சே – அறியாமையை உடைய மனமே! 
  • அரிமேய விண்ணகரத்தார்க்கு – திரு அரிமேய விண்ணகரம் என்னும் திவ்ய ஸ்தலத்தி எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு
  • வாழும் அடியார் – அடியவராக வாழ்கின்றவர்கள் 
  • நம் அளவோ – நாம் மாத்திரம் தானோ? அன்று
  • தாழும் சடையோன் – தொங்குகின்ற கபர்த்தம் என்னும் சடையை உடைய சிவபிரானும்
  • சதுமுகத்தோன் – நான்கு முகங்களை உடைய பிரம்ம தேவனும்
  • பாழி கரிமேய விண் நகரம் காவலோன் – பலம் பொருந்திய ஐராவதம் என்னும் யானை மேல் ஏறிச் செல்லுகின்ற
  • சுவர்க்க லோகத்துக்கு அரசனாகிய இந்திரனும் அடியவராவர்
  • கண்டாய் – முன்னிலையசை, தேற்றமுமாம்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 64

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 9

ஸ்கந்தம் 03

மைத்ரேயர் கால அளவுகளைக் கூறலானார்.

விதுரரே! பரமாணு என்பது மிக நுண்ணிய வடிவம். அதை மேலும் பிரிக்க முடியாது. இது எப்போதும் உள்ளது. அழிவற்றது. இவைகள் ஒன்று சேர்ந்துதான் ஜீவர்களின் அவயவங்கள் தோன்றுகின்றன. சூக்ஷ்மமான பரமாணுக்களின் ஒன்று சேர்ந்து பூமி  முதலியவை ஆகின்றன. அவற்றின் மொத்த  கூட்டமைப்பு 'பரம மஹாந்', (மிகப் பெரியது) எனப்படும். இவற்றிற்கு ப்ரளயம் முதலிய அவஸ்தை வேறுபாடுகளோ, புதியது, பழையது, என்ற கால அளவோ, குடம், துணி போன்ற அமைப்பு வேறுபாடுகளோ இல்லை. புழுதியிலிருந்து  மலை வரை பரமாணுக்களின் கூட்டமைப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இது போலவே காலத்தின் சிறிய பெரிய அளவுகள் உண்டு.


ப்ரபஞ்சத்தின் பரமாணுவைக் கடக்க ஆகும் நேரம் 'பரமாணு காலம்'. இது மிகவும் நுண்ணிய நேரம்.

படைப்பு முதல் ப்ரளயம் வரை உள்ள நீண்ட காலம் ப்ரும்மாவின் ஆயுள் காலம். அதைப் 'பரம மஹாந்' என்பர்.

இரண்டு பரமாணுக்ஜள் சேர்ந்தது ஒரு அணு
மூன்று அணுக்கள் சேர்ந்தது ஒரு 'த்ரஸ ரேணு'
ஜன்னல் வழியே வீட்டில் படரும் சூரிய ஒளியில் பறப்பது போல் காணப்படும் துகள் 'ரேணு'

இம்மாதிரியான மூன்று த்ரஸரேணுக்களைக் கடக்க சூரியன் எடுத்துக் கொள்ளும் நேரம் 'த்ருடி'
100 த்ருடிகள் =  வேதை
3 வேதை = ஒரு லவம்
3 லவங்கள் = ஒரு கண்ணிமைக்கும் நேரம்
3 கண்ணிமைக்கும் நேரங்கள் = ஒரு நொடி
5 நொடிகள் = ஒரு காஷ்டை
15 காஷ்டைகள் = ஒரு லகு
15 லகு = ஒரு நாழிகை
2 நாழிகைகள் = ஒரு முஹூர்த்தம்

பகல் சில சமயம் அதிகமாகவும், சிலசமயம் குறைவாகவும் இருக்கும்.
பகல் இரவு சக்திகளின் முஹூர்த்தங்கள் நீங்கலாக, 
6 அல்லது 7 நாழிகள் = ஒரு ப்ரஹரம்
இதை யாமம் என்றும் கூறுவர்.

ஆறு பலம் எடையுள்ள, இரண்டு சேர் நீர் கொள்ளளவுள்ள ஒரு தாமிரப் பாத்திரத்தின் அடியில்,  இருபது குன்றிமணிகள் எடையுள்ள நான்கு அங்குல தங்கக் கம்பியால் துளையிட்டு அதை நீரில் மிதக்க விடவேண்டும். அந்தப்பாத்திரம் நீர் நிரம்பி முழுவதும் மூழ்க ஆகும் நேரம் ஒரு நாழிகையாகும்.

இரவும் பகலும் ஒவ்வொன்றும் நான்கு யாமங்கள் கொண்டவை.

15 நாள்கள் = ஒரு பக்ஷம்
அது சுக்ல பக்ஷம்(வளர்பிறை)
க்ருஷ்ண பக்ஷம் (தேய்பிறை) என்று இருவகைப்படும்.

2 பக்ஷங்களும் சேர்ந்தது ஒரு மாதம். இது பித்ருக்களுக்கு ஒரு நாள்.
2 மாதங்கள் = ஒரு ருது
6 மாதங்கள் = ஒரு அயனம்
அது உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று இருவகைப்படும்.

சூரியன் ஆகாயத்தில் வடக்கு திசையில் இருந்தால் உத்தராயணம் என்றும் தென் திசையில் இருந்தால் தக்ஷிணாயணம் எனவும் கொள்ள வேண்டும்.

2 அயனங்கள் = ஒரு வருடம்
இது தேவர்களுக்கு ஒரு நாள்
இம்மாதிரி நூறு வருடங்கள் = ஒரு மனிதனின் பூரண ஆயுள்

சூரியன், குருபகவான், ஸாவனம், சந்திரன், நக்ஷத்ரங்கள் ஆகியவற்றின் கதிகளை அனுசரித்து வருடங்கள் ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அனுவத்ஸரம், வத்ஸரம் என்று பெயர் பெறுகின்றன.

12 (சூர்ய) சௌர மாதங்கள்= 1 ஸம் வத்ஸரம் 
குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் 16 மாதங்கள் = பரி வத்ஸரம்

30 நாள்கள் = ஒரு ஸாவன மாதம்
12 ஸாவன மாதங்கள் = ஒரு இடாவத்ஸரம் 
அமாவாசையில் முடிவது சாந்திரமான மாதம்
12 சாந்திரமான மாதங்கள் = ஒரு அனுவத்ஸரம்

சந்திரன் 12 ராசிகளையும் சுற்றி வரும் காலம் நக்ஷத்ர மாதம்
12 நக்ஷத்ர மாதங்கள் = ஒரு வத்ஸரம்

சுக்லபக்ஷ ப்ரதமை அன்று சங்கராந்தி வந்தால், அன்றே சந்திர, ஸௌர மாதங்கள் துவங்கும். அதற்கு ஸம்வத்ஸரம் என்று பெயர். அப்போது ஸூர்யமானத்தில் 6 நாள்கள் அதிகம். 

சந்திரமானத்தில் 6 நாள்கள் குறையும். இந்த 12 நாள்கள் இடைவெளியால் வருடம் முன்பின்னாக முடியும். 5 வருடங்களுக்கு ஒரு முறை 60 நாள்கள், அதாவது இரண்டு மாதங்கள் வித்யாசம் வரும். இவை மல மாதங்கள் என்றழைக்கப்படும்.

இந்த ஐந்து விதமான வருடங்களையும் செயல்படுத்துவது சூரியன். 

மனிதர்களின் ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாள் என்று முன்பே பார்த்தோம்.

க்ருதயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் நான்கும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் = 12,000 தேவ வருடங்கள் அல்லது 43,20,000 மனித வருடங்கள்.

நான்கு யுகங்களுக்கும் முறையே 4000, 3000, 2000, 1000 தேவ வருஷங்கள்.
ஒவ்வொரு யுகத்திற்கும் எத்தனை ஆயிரமோ அத்தனை 200 வருடங்கள் யுக சந்திக்காக சேர்த்துக்கொள்ளப்படும். 

க்ருதயுகம்  = 4000+(4*200)= 4800 தேவ வருஷங்கள்
த்ரேதாயுகம் 3600 தேவ வருஷங்கள்.

துவாபரயுகம் 2400 தேவ வருஷங்கள். கலியுகம் 1200 தேவ வருஷங்கள்

360 மனித வருடம் = ஒரு தேவ வருடம்

எனில், கலியுகம் = 4,32,000 மனித வருடங்கள் 

அதன் இரு மடங்கு 8,64,000 மனித வருடங்கள் = துவாபர யுகம்

மும்மடங்கு  12,96,000 ம. வ. = த்ரேதா யுகம்

நான்கு மடங்கு 17,28,000 ம. வ = க்ருத யுகம்

மூவுலகங்களுக்கு வெளியே இருக்கும் மஹர் லோகம் முதல் ஸத்ய லோகம் வரை 
1000 சதுர் யுகங்கள் = ஒரு பகல்
1000 சதுர் யுகங்கள் ஒரு இரவு

அது போல் நூறு வருடங்கள் = ப்ரும்மாவின் ஆயுள். அவரது 50 வருடங்கள் ஒரு பரார்த்தம்

14 மன்வன்தரங்கள் = 1000 சதுர்யுகம்

ஒரு மனு ஆட்சி செய்யும் காலம் = 71.4 சதுர்யுகங்கள் =  மன்வந்தரம்

பரமாணு முதல் இரண்டு பரார்த்தம் வரை நீளும் காலசக்தியும் தேகத்தின் மீது பற்றுள்ளவர்களையே கட்டுப்படுத்துகிறது. பகவானைக் கட்டுப்படுத்த இயலாது

இதன் பின் ப்ரும்மாண்ட கோசத்தை விளக்குகிறார் விதுரர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 119

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 89

ஸஹஸ் ரார்ச்சிஸ் ஸப்த ஜிஹ்வஸ் 
ஸப்தை தா⁴ஸ் ஸப்த வாஹந:|
அமூர்த்தி ரநகோ⁴ சிந்த்யோ 
ப⁴ய கிருத்³ ப⁴ய நாஸ²ந:||

  • 830. ஸஹஸ் ரார்ச்சிஸ் - ஆயிரக் கணக்கான கிரணங்களை உடையவர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஒளிரச் செய்பவர்.
  • 831. ஸப்த ஜிஹ்வஸ் - ஏழு நாக்குகளை உடைய அக்னி வடிவமாக இருப்பவர். சாத்வீக கர்மாவில் ஹிரண்ய, கனகா, ரக்தா, கிருஷ்ணா, சுப்ரபா, அதிர்கதா மற்றும் பஹு ரூப. ராஜசிக் கர்மாவில் பத்ம ராகம், சுவர்ணா, பத்ர லோஹிதா, ஸ்வேதா, தூமினி, மற்றும் காளிகா. தாமச கர்மாவில் காளி, கராலி, மனோ ஜவா, சுலோஹிதா, சுதூம்ர வர்ணா, ஸ்புலிங்கினி மற்றும் விஸ்வருச்சி. தேவதைகளில் தேவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், பிசாசுகள் மற்றும் ராட்சசர்கள்.
  • இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள் மற்றும் வாய் ஆகிய ஏழு புள்ளிகள் வழியாக நம்மில் உள்ள நனவின் ஒளி வீசுகிறது. 
  • 832. ஸப்தை தா⁴ஸ் - ஏழுவகை சமித்துகளால் ஒளிவிடுபவர். நெருப்பு வடிவில், ஏழு விதமான பிரசாதங்களால் மூட்டப்படும் ஏழு தீப்பிழம்புகளை உடையவர். சமைத்த உணவை அடிப்படையாகக் கொண்டது: ஔபாசனம், வைஷ்வ தேவா, ஸ்தாலி பாகா, அஷ்டகா ஷ்ரத்தா, மாதாந்திர சடங்குகள், ஈஷான பலி மற்றும் சர்ப்ப பலி. நெருப்பில் காணிக்கை: அக்னி ஹோத்ரா, தர்ஷ பூர்ண-மாசா, பிண்ட பித்ரு யக்ஞம், பசு பந்தா, அக்ரயானா, சதுர் மாஸ்ய, மற்றும் சௌத்ர மணி. யாகங்கள்: அக்னிஷ்டோமா, அத்யக்னிஷ்டோமா, உக்த்யா, ஷோடஷா, வாஜபேய, அதிராத்ரா மற்றும் அப்டோர் யமா. பூக்கள் இல்லாமல் காய்க்கும் ஏழு காட்டு மரங்களின் குச்சிகள் யாகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவை: பலாசா மரம், ஆலமரம், அத்தி மரம், பலா மரம், சாமி, அஷானி ஹடா மற்றும் புஷ்கர பர்ணா. 
  • 833. ஸப்த வாஹநஹ - ஏழு வாகனங்களை உடையவர். தேரில் இணைக்கப்பட்ட ஏழு குதிரைகளுக்கு காயத்ரி, பிரஹதி, உஸ்னிக், ஜகதி, த்ரிஸ்டப், அனுஸ்துப் மற்றும் பங்க்தி என்று பெயர். இவை ஏழு குதிரைகளைக் குறிக்கும் பல்வேறு வேத பெயர்கள். இந்த நம: பு, புவ, சுவா, மஹா, ஜனா, தபஹ் மற்றும் சத்யம் ஆகிய ஏழு வேத மந்திரங்களின் முதன்மை தெய்வங்களாக இவை கருதப்படுகின்றன. இந்த மந்திரங்களுடன் தொடர்புடைய தேவர்கள்: அக்னி, வாயு, அர்கா (சூரியன்), வாகிஷா (பிரஹஸ்பதி), வருணன், இந்திரன் மற்றும் விஸ்வதேவன். ஏழு வாயு மண்டலங்கள் அல்லது காற்று மண்டலங்களின் வடிவத்தில் பிராண சக்தியின் ஏழு பகுதிகள், முக்கிய காற்றுகள் மூலம் பிரபஞ்சத்தை இறைவன் பாதுகாக்கிறார். இந்த ஏழு காற்று மண்டலங்களை ஆவாஹா, ப்ரவாஹா, சம்வாஹா, உத்வாஹா, விவாஹா, பரிவாஹா, பரவாஹா. ஏழு சூரியன்ளின் பெயர்கள்: அரோகா, ப்ரஜா, படரா, படங்கா, ஸ்வர்ணரா, ஜோதிஷிமான், விபாசா. இவற்றில், நாம் பார்ப்பது அரோகா மட்டுமே. மற்ற ஆறு சூரியன்கள் நமக்குத் தெரிவதில்லை, ஏனெனில் இவற்றில் மூன்று, மேரு மலையின் கீழ் பகுதியை தாங்கி நிற்கின்றன, மற்ற மூன்று மேரு, மலையின் மேல் பகுதியில் பிரகாசிக்கின்றன. எனவே, இந்த ஏழு சூரியன்கள் மூலம் பிரபஞ்சத்தின் அனைத்து பகுதிகளையும் ஆதரிக்கிறார்.
  • 834. அமூர்த்திர் - பருவடிவம் அல்லாதவர். நுட்பமான உருவினர். அவர் உருவமற்றவர். எந்த வரம்புகளும் இல்லாமல் எந்த வடிவத்தையும் எடுக்க முடியும்.
  • 835. அநகோ⁴ - பாபம் அற்றவர்.  தூயவர். அவர் பாவமோ துக்கமோ இல்லாதவர்.  தனது பக்தர்களையும் இந்தத் துன்பங்களிலிருந்து விடுவிக்கிறார். கர்மாவால் பாதிக்கப்படாதவர். 
  • 836. அசிந்த்யோ - சிந்தனைக்கு எட்டாதவர். அறியப்பட்ட எதனுடனும் ஒப்பிட முடியாதவர். அவர் ஒப்பற்றவர். புரிந்து கொள்ள முடியாதவர். அளவிட முடியாதவர்.
  • 837. ப⁴ய கிருத்³ - பயத்தை உண்டு பண்ணுபவர். தர்மத்தை மீறுபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறார்.
  • 838. ப⁴ய நாஸ²நஹ - பயத்தைப் போக்குபவர். தர்மத்தைப் பின்பற்றுபவர்களிடமிருந்து பயத்தை நீக்குகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.56

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.56
 
து³: கே²ஷ் வநுத்³ விக்³ந மநா: 
ஸுகே²ஷு விக³தஸ் ப்ருஹ:|
வீத ராக³ ப⁴ய க்ரோத⁴: 
ஸ்தி²த தீ⁴ர் முநி ருச்யதே||

  • து³ஹ் கே²ஷு - மூவகைத் துன்பங்களில் 
  • அநுத்³ விக்³ந மநாஹ - மனதில் பாதிப்படையாமல் 
  • ஸுகே²ஷு - இன்பங்களில் 
  • விக³தஸ் ப்ருஹஹ - விருப்பமின்றி 
  • வீத - விடுபட்டு 
  • ராக³ - பற்று 
  • ப⁴ய - பயம் 
  • க்ரோத⁴ஹ - கோபம் 
  • ஸ்தி²த தீ⁴ர் - மனம் நிலைபெற்றவன் 
  • முநி - முனிவன் 
  • உச்யதே - அழைக்கப்படுகின்றான்

மூவகைத் துன்பங்களில் மனதால் பாதிப்படையாமல், இன்பத்தில் விருப்பமின்றி, பற்று, பயம், கோபம் விடுபட்டு மனதால் நிலைபெற்ற ஒருவனை, முனிவன், பக்தன், நிலையான புத்தியுடையவன் என்று அழைக்கப்படுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.9

அபி⁴மந்யு ஸுதம் ஸூத 
ப்ராஹுர் பா⁴க³வ தோத்தமம்|
தஸ்ய ஜந்ம மஹாஸ்² சர்யம் 
கர்மாணி ச க்³ருணீஹி ந:||

  • ஸூத - ஹே ஸூத மகரிஷே!
  • அபி⁴மந்யு ஸுதம் - அபிமன்யுவின் புத்திரனான பரிக்ஷித்தை
  • பா⁴க³வ தோத்தமம் - பகவத் பக்தர்களுள் ஸ்ரேஷ்டனாக 
  • ப்ராஹுர் - சொல்கிறார்கள்
  • தஸ்ய - அப்படிப்பட்ட மஹா புருஷனுடைய
  • மஹாஸ்² சர்யம் - பெரிதும் ஆச்சர்யத்தை விளைவிக்கும்
  • ஜந்ம - பிறப்பையும்
  • கர்மாணி ச - அவனது வீரச் செயலையும்
  • நஹ - எங்கள் பொருட்டு
  • க்³ருணீஹி - சொல்வீராக

ஸூத முனிவரே! அபிமன்யுவின் புதல்வனான பரீக்ஷித்தைச் சிறந்த பக்தன் என்று சொல்கிறார்கள். அவனுடைய பிறப்பு மிகவும் வியப்பிற்குரியது; செயல்களும் அப்படியே! அவற்றைப் பற்றி எங்களுக்குக் கூற வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.54

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.54

ராக⁴வ: ஸோ²க ஸந்தப்தோ 
விலலா பாகு லேந்த்³ரிய:|
ததஸ் தேநைவ ஸோ²கேந 
க்³ருத்⁴ரம் த³க்³த்⁴வா ஜடாயுஷம்|| 

  • ராக⁴வ: - ஸ்ரீராகவர்
  • ஸோ²க ஸந்தப்தோ - சோகத்தால் மிகவும் மனோ வேதனை படுபவராய்
  • ஆகு லேந்த்³ரியஹ - கலவரம் அடைந்த இந்திரியங்களை உடையவராய்
  • வில லாப - கதறினார்
  • ததஸ் - அப்பொழுது 
  • தேந - அந்த 
  • ஸோ²கேந ஏவ - சோகத்தாலேயே
  • ஜடாயுஷம் - ஜடாயு என்கிற 
  • க்³ருத்⁴ரம் - கழுகை 
  • த³க்³த்⁴வா - தஹனம் செய்து

சோகத்துடன் குமுறி, புலன்கள் கலங்கி அழுதார். அந்தச் சோக நிலையில் கழுகான ஜடாயுவை எரியூட்டி தகனம் செய்து,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 97 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 97 - மின்னலை தன்னிடத்தே கொண்ட மேகமானவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்

பொன்னியல் கிண்கிணி* சுட்டி புறங் கட்டித்* 
தன் இயல் ஓசை* சலன் சலன் என்றிட*
மின் இயல் மேகம்* விரைந்து எதிர் வந்தாற் போல்* 
என் இடைக்கு ஓட்டரா அச்சோ அச்சோ* 
எம்பெருமான்! வாராய் அச்சோ அச்சோ! (2)

  • பொன் இயல் - பொன்னால் செய்யப்பட்ட
  • கிண்கிணி - அரைச் சதங்கை பாதச் சதங்கைகளையும்
  • புறம் - நெற்றிக்கு அழகூட்டும்
  • சுட்டி - சுட்டியையும்
  • கட்டி - அணிந்து
  • தன் - சதங்கைக்கு
  • இயல் - பொருந்திய
  • இசை - இயற்கையான ஒலியானது
  • சலன் சலன் என்றிட - ‘ஜல்’ ‘ஜல்’ என்ற ஒலியும்
  • மின் இயல் - மின்னலைத் தன்னிடத்தே கொண்ட
  • மேகம் - மேகமானது
  • விரைந்து - வேகமாக ஓடி வந்து
  • எதிர் - எதிரே 
  • வந்தாற் போல் - வந்தது போல்
  • என் இடைக்கு - என் இடையிலிருக்க விரும்பி
  • ஓட்டரா - ஓடி வந்து
  • அச்சோ! அச்சோ! - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • எம்பெருமான் வாரா - எம்பெருமானே! வந்து
  • அச்சோ! அச்சோ! - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

பொன்னால் செய்த சதங்கைகளை கால் மற்றும் இடுப்பில் அணிந்தவாரும் நெற்றிச் சுட்டியுடனும், இவைகள் எழுப்பும் இன்பகரமான ஜல் ஜல் என்கிற ஓசையுடன், மின்னலுடன் கூடிய மேகம் விரைந்து எதிரில் வருவது போல், என்னுடைய இடுப்பில் அமர விரும்பி, ஓடி வந்து என்னை அணைத்துக் கொள்ள வேண்டும், எங்கள் தலைவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 029 - திரு அரிமேய விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

029. திரு அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ குடமாடுகூத்தன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ அம்ருதகடவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ குடமாடுகூத்தன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: குடமாடு கூத்தன்
  • பெருமாள் உற்சவர்: சதுர்புஜ கோபாலன்
  • தாயார் மூலவர்: அம்ருதகடவல்லி
  • திருமுகமண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: வீற்றிருந்த 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: கோடி, அமிர்த
  • விமானம்: உச்ச ச்ருங்க
  • ஸ்தல விருக்ஷம்: பலாச
  • ப்ரத்யக்ஷம்: உதங்க மஹரிஷி
  • ஆகமம்: பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

எம்பெருமான் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும் படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. குடத்துடன் ஆடிக் கொண்டு வந்தவர் என்பதால் இவரை "குடமாடு கூத்தன்' என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றிய கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம். உற்சவர் சதுர் புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார். திருமங்கையாழ்வார் இவரை அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை ஸம்ஹாரம் செய்தது என அவரது புகழ் பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என்று சொல்லி மங்களாஸாஸநம் செய்துள்ளார்.

திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. தை மாதத்தில் நடக்கும் கருடசேவை பிரசித்தி பெற்ற உற்சவமாகும். அரி (விஷ்ணு) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இவ்வூருக்கு "அரியமேய விண்ணகரம்' என்றொரு பெயரும் உள்ளது. இங்கு கொடி மரம் கிடையாது. பீடம் படி மீது ஏறிச்சென்று வணங்கும்படி பெரியதாக இருக்கிறது. பக்தி எனும் படிகளை ஏறிச் சென்றால் இறைவனை அடையலாம் எனும் உட்பொருளை இந்த பீடம் குறிக்கிறதாம். 

உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இள வயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார். குரு பத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார். அதனை எடுத்துக் கொண்டு குரு குலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக் கொண்டே பசுக்களை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத் தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக் கொண்டார். கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்து விட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக் கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச் செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார். அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக் காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார். கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக் காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லி விட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார். நடந்ததை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த வைதர், "உனது குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக' சொன்னார். மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார். தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி எம்பெருமானை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 63

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 8

ஸ்கந்தம் 03

விதுரர் காலஸ்வரூபத்தை விளக்கிக் கூறும்படி மைத்ரேயரை வேண்டினார். விதுரரின் கேள்விகளால் பகவானின் அனந்தமான மகிமைகளைச் சொல்லும் பாக்யம் கிடைத்ததை எண்ணி ஆனந்தப் பட்டுக் கொண்டு மைத்ரேயர் பதிலிறுத்தார்.


காலம் என்பது பகவானைப் போலவே ஆதி அந்தமற்றது. உலகின் பொருள்கள் மாறுபாடு அடைவதைக் கொண்டே காலம் அறியப்படுகிறது. காலத்தைக் கருவியாகக் கொண்டு பகவான் தன்னையே எல்லாமாகப் படைக்கிறார். காலத்திற்கும் பகவானைப் போல் எந்த மாறுதலுமில்லை. ஆனால், காலத்திற்காட்பட்ட ஜீவன்களுக்கு இளமை, முதுமை போன்ற மாறுதல்கள் உண்டு. என்றும் பதினாறாக இருக்கும் மார்க்கண்டேயர், ஸுகாசார்யார் போன்றவர்கள் காலத்துக்கு அப்பாற்பட்டு விளங்குவதைப் பார்க்கிறோம். அவர்கள் வரையில் காலமாறுதலே இல்லை. 

மேற்கொண்டு, படைப்பைப் பற்றி விளக்க ஆரம்பித்தார் மைத்ரேயர். முதலில் அகில உலகமும் மாயையினால் பகவானிடம் ஒடுங்கி இருந்தது. காலத்திற்கு மாறுதல் இல்லை என்று பார்த்தோம். மறைவதற்கான காலத்தையும், தோற்றத்திற்கான காலத்தையும் பகவான் நிர்ணயிக்கிறான். கால சக்தியைக் கொண்டே திரும்பவும் உலகைப் படைக்கிறான். இவ்வுலகம் இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே தான் இதற்கு முன்பும் இருந்தது. இனி வரப் போகும் ப்ரளயம் முடிந்து மறுபடியும் தோன்றும் போதும் இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியே தான் தோன்றும்.

சுலபமாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் உறங்கும் போது, செயல் பொறிகள் (கை கால்கள்) அனைத்தும் ஓய்கின்றன. அறிவுப் புலன்களும் (உணரும் திறன்கள்) ஓய்கின்றன. மனமும் லயமடைகிறது. அப்போது புற உலகம் தெரிவதில்லை. மனத்திலேயே பல்வேறு விதமான விஷயங்களைக் கனவில் காண்கிறோம். அதற்கு கர்மேந்திரியங்களோ ஞானேந்திரியங்களோ தேவைப்படவில்லை. உறக்கத்தில் இருந்து எழும் போது பத்து புலன்களும் உணர்வு பெறுகின்றன. தூங்குவதற்கு முன் ப்ரபஞ்சம் எப்படி இருந்ததோ அப்படியே காண்கிறோம்.

ஒன்பது விதங்களாகப் படைப்பு நிகழ்கிறது. அதைத் தவிர ப்ராக்ருதம், வைக்ருதம் என்பவை பத்தாவதாகும்.

1. மஹத் தத்வம்: இது ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் மாறுபாடு.

2. அஹங்காரம்: இதிலிருந்து பஞ்ச பூதங்கள், கர்மேந்த்ரியங்கள், ஞானேந்திரியங்கள் ஆகியவை தோன்றுகின்றன.

3. பஞ்ச பூதங்களையும் தோற்றுவிக்கும் பூத ஸூக்ஷ்மங்கள், தன்மாத்திரைகள்

4. பத்து பொறிகளின் படைப்பு

5. ஸாத்வீக அஹங்காரத்தினின்று தோன்றும் பொறி மற்றும் புலன்களின் அதிஷ்டான தேவதைகள்.

6. அவித்யை: இது அனைத்தையும் மறக்கச் செய்வது. இது வரை ப்ராக்ருத ஸ்ருஷ்டிகள்.

7. ப்ரும்ம தேவர் ரஜோ குணத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யும் படைப்புகள். இது முதல் வைக்ருத ஸ்ருஷ்டி ஆகும்.

ப்ரும்மதேவரின் மூவகைப் படைப்புகளில் முதலாவது தாவரங்கள்.
தாவரங்கள் ஆறு வகைப்படும்.

1. வனஸ்பதிகள்: பூக்காமல் காய்க்கின்ற அத்தி, ஆல் போன்ற மரங்கள்

2. ஔஷதிகள்:  பூத்துப் பயன் தரும் நெல் முதலியவை 

3. கொடிகள்: மரத்தைப் பற்றிக் கொண்டு வளர்பவை 

4. த்வக்ஸாரம்: மேல் பட்டைகளில் பலமுடைய மூங்கில் முதலானவை

5. வீருதங்கள்: தரையில் படரும் கொடிகள் பூசணி முதலியவை

6. த்ருமங்கள்: பூத்துக் காய்க்கும் மரங்கள் 

8. விலங்குகள்: நிமிர்ந்திராது குறுக்காக வளர்பவை. இவை 28 வகைப்படும். உணவு, தூக்கம், பயம், இனப்பெருக்கம் ஆகிய அறிவுகள் மட்டும் கொண்டவை. முகர்ந்து பார்த்தே வேண்டியதைத் தேடிக் கொள்ளும். நட்போ பகையோ வெகு காலம் நினைவிராது. ஒரு குளம்பு உள்ளவை, இரண்டு குளம்புகள் உள்ளவை, ஐந்து நகங்கள் உள்ள விலங்குகளும், பறவைகளும்

9. மனிதன்: ஒரே விதமான ஸ்ருஷ்டி, மேலிருந்து கீழ்நோக்கி ஆகாரம் செல்லுமாறு படைக்கப்பட்டவர்கள், ரஜோ குணத்தில் பற்றுதல் அதிகம் உள்ளவர்கள், பல்வேறு செயல்களில் ஈடுபடுபவர்கள். இன்ப துன்ப சிந்தனை உள்ளவர்கள். தேவர்களின் படைப்பு முன்பே கூறப்பட்டது.  பூத ஸூக்ஷ்மங்கள். அவை எட்டு விதம். தேவர்கள், பித்ருக்கள், அசுரர்கள், கந்தர்வ அப்ஸரஸ்கள், யக்ஷ, அரக்கர்கள், சித்த, சாரண, வித்யாதரர்கள், பூத, ப்ரேத, பிசாசர்கள், கின்னர, கிம்புருஷர்கள் ஆகியவை.

விதுரரே, பகவானின் பத்து விதமான படைப்புகள் பற்றிக் கூறிய மைத்ரேயர், மேற்கொண்டு மன்வந்தரங்களையும், வம்சங்களையும் பற்றிக் கூறத் துவங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்