About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 14 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 60

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 30

ஓஜஸ் தேஜோத்³ யுதித⁴ர: 
ப்ரகாஸா²த்மா ப்ரதாபந:|
ருத்³த⁴: ஸ்பஷ்ட அக்ஷரோ மந்த்ர: 
சந்த்³ராம்ஸு²ர் பா⁴ஸ்கரத்³ யுதி:||

  • 276. ஓஜஸ் தேஜோத்³ யுதித⁴ரஃ - வலிமை, பராக்கிரமம், ஒளி ஆகிய எல்லாம் உடையவன்.
  • 277. ப்ரகாஸா²த்மா - ஒளிவடிவானவன்.
  • 278. ப்ரதாபநஹ - பகைவரைத் தனது கோபத்தால் எரித்துவிடுபவன்.
  • 279. ருத்³த⁴ஸ் - சம்பத்தால் எப்போதும் நிரம்பியிருப்பவன்.
  • 280. ஸ்பஷ்ட அக்ஷரோ - தெளிவாக எழுத்துகளை உச்சரிப்பவன். 
  • 281. மந்த்ரஸ்² - மந்திரமாயிருப்பவன்.
  • 282. சந்த்³ராம்ஸு²ர் - வெண்மதி போன்று குளிர்ந்த ஒளியை உடையவன்.
  • 283. பா⁴ஸ்கரத்³ யுதிஹி - சூரியனைப்போன்ற ஒளியை உடையவன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.45

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.45 

அஹோ ப³த மஹத் பாபம் 
கர்தும் வ்யவஸிதா வயம்|
யத்³ ராஜ்ய ஸுக² லோபே⁴ந 
ஹந்தும் ஸ்வஜந முத்³யதா:|| 

  • அஹோ - ஐயகோ 
  • ப³த - என்ன வினோதம் 
  • மஹத் - பெரும் 
  • பாபம் - பாவங்கள் 
  • கர்தும் - செய்வதற்கு 
  • வ்யவஸிதா - முடிவு செய்தோம் 
  • வயம் - நாம் 
  • யத்³ - அதனால்
  • ராஜ்ய - ராஜ்ஜிய
  • ஸுக² - சுகத்திற்கான
  • லோபே⁴ந - பேராசையால் உந்தப்பட்டு 
  • ஹந்தும் - கொலை செய்ய 
  • ஸ்வஜநம் - உறவினர் 
  • உத்³யதாஹ - முனைந்து விட்டோம்

ஐயகோ! என்ன வினோதம்! அரசு போகத்தை அனுபவிப்பதற்கான ஆசையால் உறவினரை கொல்லவும் முன் வந்தோம். நாம் இந்த மகாபாவத்தை செய்வதற்கு துணிந்தோமே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.29

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.29

வாஸுதே³வ பரம் ஜ்ஞாநம் 
வாஸுதே³வ பரம் தப:|
வாஸுதே³வ பரோ த⁴ர்மோ 
வாஸுதே³வ பரா க³தி:||

  • ஜ்ஞாநம் - ஞான சாஸ்திரங்கள்
  • வாஸுதே³வ பரம் - வாஸுதேவனையே விஷயமாகக் கொண்டவை 
  • தபஹ - தவமும்
  • வாஸுதே³வ பரம் - வாஸுதேவனையே பலமாக உடையது
  • த⁴ர்மோ - தர்ம சாஸ்திரங்களும்
  • வாஸுதே³வ பரோ - வாஸுதேவனையே விஷயமாகக் கொண்டவை
  • க³தி ஹி - ஸ்வர்க்காதிகமும் 
  • வாஸுதே³வ பரா - வாஸுதேவ பரமானதே

அறிவு நல்கும் அறநெறி நூல்கள் அனைத்தும் வாஸுதேவனையே கூறுகின்றன. தவத்தின் பயனும் வாஸுதேவனே. தர்மும் வாஸுதேவனையே சார்ந்தது. அடையப்பட வேண்டியவனும் வாஸுதேவனே. எல்லாம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவையே முடிவாகக் கொண்டவை

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 8
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

தது³பக³த ஸமாஸ ஸந்தி⁴ யோக³ம் 
ஸம மது⁴ரோ பநதார்த² வாக்ய ப³த்³க⁴ம்|
ரகு⁴வர ஸரிதம் முநிப்ரணீதம் 
த³ஸ² ஸி²ரஸஸ்²ச வத⁴ம் நிஸா² மயத்⁴வம்||

  • தத்³ உபக³த ஸமாஸ ஸந்தி⁴ யோக³ம் - சரியான பதப்பிரிவு, பதச்சேர்க்கை இவைகளுடன் கூடியதும்
  • ஸம மது⁴ரோ பநதார்த² வாக்ய ப³த்³க⁴ம் - மதுரமான பொருட்செறிவுடன் கூடிய வாககியங்களை உடையதும்
  • முநிப்ரணீதம் - வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட
  • ரகு⁴வர ஸரிதம் - ராமாயணத்தை
  • நிஸா² மயத்⁴வம் - அனுபவியுங்கள்

சரியான பதப்பிரிவு, பதச்சேர்க்கை இவைகளுடன் கூடியதும், மதுரமான பொருட்செறிவுடன் கூடிய வாககியங்களை உடையதும், வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமாயணத்தை அனுபவியுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1 - 3 அறிமுகம்

ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் - 44 - 53

தாலப் பருவம்

கண்ணனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல்

மக்கட் பேறு பெற்று மகிழும் இக்காலப் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி! தாலாட்டுப் பாடலிலும் பகவத் விஷயம் கலந்திருக்க வேண்டாமா!


இப்பாடல்களையே தாலாட்டுப் பாடல்களாகப் பாடலாமே! இப்பாடல்களைக் கேட்டுப் பழகும் குழந்தைகள் பகவானின் திருவருளைப் பெறுவது திண்ணம். அவர்களுக்கு வாழ்வில் துன்பமே ஏற்படாது என்கிறாள் தெய்வ நங்கை யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 013 - திருவிண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

013. திருவிண்ணகரம் 
மார்க்கண்டேய க்ஷேத்ரம் – கும்பகோணம்
பதிமூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
3 ஆழ்வார்கள் - 47 பாசுரங்கள்

1. பேயாழ்வார் - 2 பாசுரங்கள் 
1. மூன்றாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 2342, 2343 – ஏழாம் திருமொழி - 1 & 2 பாசுரங்கள் (61, 62)

----------
2. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள் 
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 3249 - 3259 - ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி

----------
3. திருமங்கையாழ்வார் - 34 பாசுரங்கள் 
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) – 31 பாசுரங்கள் 

  • திவ்ய ப்ரபந்தம் - 1448 - 1457 - ஆறாம் பத்து - முதலாம் திருமொழி – 10 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 1458 - 1467 - ஆறாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1468 - 1477 - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள்            
  • திவ்ய ப்ரபந்தம் - 1855 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்
2. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) – 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2080 - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)
3. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) – 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)
4. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2772 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60) 
---------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
கையும் உரையும் கருத்தும் உனக்கே அடிமை*
செய்யும் படி நீ திருத்தினாய் ஐயா*
திரு விண்ணகராளா சிந்தையிலும் எண்ணேன்*
பெரு விண்ணகர் ஆளும் பேறு*

  • ஐயா - தலைவனே!
  • திருவிண்ணகர் ஆளா - திருவிண்ணகரம் என்னும் திருப்பதிக்குத் தலைவனே!
  • கையும் - எனது கைகளும்
  • உரையும் - வாக்கும்
  • கருத்தும் - எண்ணமும் ஆகிய திரிகரணங்களையும் 
  • உனக்கே அடிமை செய்யும் படி - உன்னையே நினைத்து சரண் அடையும் படி
  • நீ திருத்தினாய் - நீ திருத்தமான வழியில் போகச் செய்தாய். ஆதலால் இனிமேல் 
  • பெரு விண் நகர் ஆளும் பேறு - பெருமை பெற்ற தேவலோகத்தை அரசாளும் செல்வத்தையும் தேவேந்திர பதவியையும்
  • சிந்தையிலும் எண்ணேன் - ஒரு பொருட்டாக மனத்திலும் நினைக்க மாட்டேன் யான்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 51

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வில் உடைக்கும் போட்டி|

த்ரிவக்ராவின் சந்தன களிம்பிற்காக நன்றிகளை கூறிவிட்டு, பலராமனும் கிருஷ்ணனும் நடக்க ஆரம்பித்தனர். பல பக்தர்கள் அவர்களை தரிசிக்க தெரு ஓரங்களில் கூடினர். கிருஷ்ணர் யாகம் நடக்கும் இடத்திற்கு செல்ல விரும்பினர். வழியில் பார்ப்பவர்களிடம் வழி கேட்டு சென்றார். கம்சன் தனுர்யாகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தான். இதற்காக பலிப்பீடத்தின் முன்பு ஒரு பெரிய வில்லினை வைத்திருந்தான். கிருஷ்ணன் யாகம் நடக்கும் இடத்தினை அடைந்தான், அங்கு வில் இருப்பதை கண்டான், அது இந்திரரின் வில்லாக இருக்கும் என்று எண்ணினான். 


கிருஷ்ணன் வில்லிடம் செல்லுகையில், கம்சனின் சேவகர்கள் பாதுகாப்பில் வில் இருந்தது. கிருஷ்ணன் வில்லை தொட முடியாதவாறு பார்த்துக் கொண்டனர். அவர்கள் கொடுக்கும் எச்சரிக்கையை மீறி வில்லிடம் சென்று இடக்கையால் வில்லை எடுத்தான் கிருஷ்ணன். கண் இமைக்கும் நேரத்திற்குள் வில்லினை உடைத்தான்.

யானை கால்களில் மிதி படும் கரும்பு போல, கிருஷ்ணன் கையில் இருந்த வில்லானது இரு துண்டுகளானது. கூடியிருந்த அனைத்து மக்களும் கைதட்ட ஆரம்பித்தனர். வில்லினை உடைக்கும் சத்தம் வானெங்கும் உலகெங்கும் ஒலித்தது. கம்சன் அவனது மாளிகையில் இந்த ஒளியை கேட்டதும் திடுகிட்டான். அங்கிருந்த சேவகர்கள் கிருஷ்ணனை கைது செய்ய நினைத்தனர். அதனால் கிருஷ்ணனும் பலராமனும் கோபமுற்றனர். இரு துண்டான வில்லை இருவரும் எடுத்து காவலாளிகளுடன் சண்டையிட ஆரம்பித்தனர். இந்த குழப்பத்தின் இடையில், கம்சன் இன்னும் சில வீரர்களை அனுப்பினான். ஆனால் கிருஷ்ணனும் பலராமனும் அனைவரையும் வீழ்த்தி கொன்றனர். அனைவரையும் வீழ்த்திவிட்டு இருவரும் ஊரை சுற்றிபார்க்க தொடங்கினர். மதுராவின் மக்கள் அனைவரும் இவர்களை தெய்வமாகவே பார்க்க ஆரம்பித்தனர். கம்சனை பற்றிய பயம்கூட இல்லாமல், தைரியமாக தெருவில் வளம் வந்தனர். மாலை பொழுது ஆனதும் நந்தரும் உடன் வந்த கோபியரும் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்றடைந்தனர், கை கால்களை கழுவிவிட்டு உறங்க சென்றனர்.

கம்சன் அனைத்தையும் கண்டு நடுங்கினான், இவ்வளவு வலிமையான இந்திர வில் எப்படி உடைந்தது, சேவகர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்று யோசித்து கொண்டு இருந்தான். கம்சன் மனதில் தேவகியின் எட்டாவது மகன் வந்துவிட்டான் என்றும், அவன் மரணம் உறுதி என்றும் தோன்றியது. அவனது கனவில் பல அமங்கலமான சகுனங்களை கண்டான், அவனுக்கு யாரோ விஷம் கொடுத்தது போல தோன்றியது, அவன் நிர்வாணமாக கழுத்தில் மாலை மட்டும் அணிந்து கொண்டு நடந்து செல்வது போலவும் கனவில் தோன்றியது. அவன் இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்தான்.

மறுநாள் காலை, கம்சன் மல்யுத்த போட்டியை தொடங்க கட்டளையிட்டான். மதுராவின் மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஒன்று கூடினர். அவன் மனதில் நடுக்கம் இருந்தாலும், எதையும் வெளியில் காட்டாமல், கம்பீரமாக அரியாசனத்தில் அமர்ந்தான், அந்த இடத்தில் அவனை சுற்றி மந்திரிகளும், சேவகர்களும் நின்றுகொண்டு இருந்தனர். கம்சனால் வரவேற்க பட்ட நந்தனும் கோபியரும், கம்சனுக்கு சில பரிசுகளை வழங்கினர். இவ்வாறு நிகழ்ச்சி ஆரம்பமானது.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி ஏழாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

057 இரு மிடறு பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப் போலே|

மண்ணுக்குள் புதைந்திருந்த திருநாராயணபுரம் கோவிலை, அவ்வூரின் மக்கள் மற்றும் மன்னனின் உதவியுடன் மீட்டெடுத்து, அங்கு புதியதாய் ஒரு கோவிலைக் கட்டி, மூலவருக்கு மூன்று நாள் திருவாராதனம் செய்த ஸ்ரீ ராமானுஜரின் கனவில் தோன்றிய ஸ்ரீமன் நாராயணன், “உற்சவரான ராமப்ரியன் டெல்லி பாதுஷாவின் அரண்மனையில் உள்ளார். அவரை அழைத்து வருவாயாக!” என்றார்.


ராமானுஜர், உற்சவரை மீட்க இரண்டு மாதங்கள் பயணம் செய்து, பாதுஷாவின் அரண்மனையை அடைந்தார். பாதுஷாவிடம் நடந்தவற்றைக் கூறி, தான் வந்ததற்கான காரணத்தையும் கூறினார். பாதுஷா, “அவ்விக்ரகம் என் மகளிடம் உள்ளது. அவளுக்கு மிகவும் பிரியமான விக்ரகம். கொடுக்க விரும்ப மாட்டாள். நீங்கள் அவரை கூப்பிடுங்கள். அவர் உங்களுடன் வந்தால் கூட்டிக் கொண்டு செல்லுங்கள்.” என்றார். இளவரசியின் அறைக்கு சென்ற ஸ்ரீ ராமானுஜரும் பாதுஷாவும் அங்கு, இளவரசியின் படுக்கையில் செல்வ நாராயணனின் விக்கிரகத்தைக் கண்டனர். ராமானுஜரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இதோ! என் செல்வப் பிள்ளை என உரக்கக் கத்தினார்.

“சாரங்கபாணி தளர் நடை நடவானோ.” என்று பெரியாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்தது போல், ஸ்ரீ ராமானுஜர், தன் இரு கைகளை விரித்து, “என் செல்வப் பிள்ளையே வாராய்!”- என கண்களில் நீர் பெருக அழைத்தார். ஸ்ரீ ராமானுஜரின் குரலைக் கேட்டதும், அந்தச் சிலை உடனே சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது. ராமப்ரியன் உடனே தான் அணிந்திருந்த ஆபரணங்கள் ஜொலிக்க, சின்னஞ்சிறு பாதங்களில் சலங்கை சிணுங்க, ஓடி வந்து ராமானுஜரின் மடியில் ஏறி அமர்ந்து தன் இரு பிஞ்சுக் கரங்களால் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டார்.

பாதுஷாவின் அனுமதியுடன் பின், ஸ்ரீ ராமானுஜர் ராம ப்ரியனை திருநாராயணபுரம் அழைத்து வந்தார். கோவிலில் அவரை நிறுவி, உர்ச்சவ மூர்த்திக்குரிய உத்சவங்களை முன்னின்று நடத்தினார்.

(ராமானுஜரின் மடியில் இருந்த குழந்தை பின் விக்கிரகமானது. அதை அவர் திருநாராயணர் கோவிலுக்கு எடுத்து வந்தார். பாதுஷாவின் மகள் பின்னர் பெருமாளைத் தேடி வந்து நாராயணபுரத்தில்செல்வ நாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள். மூலவரின் பாதத்தில் வரநந்தினி என்ற பெயரில் இருப்பதாக ஐதீகம். வரநந்தினியை பீபீ நாச்ச்சியார் என்பர் உள்ளூர் மக்கள், இக்கோயிலில் ராமானுஜரும் உபதேச முத்திரையுடன் காட்சியளிக்கிறார்)

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "செல்வப்பிள்ளை போல் இரு கைகளால் ஸ்ரீ ராமானுஜரின் கழுத்தை அன்புடன் அனைத்து பிடித்தேனோ? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பாகவத சப்தம்

ஸ்கந்தம் 01

ஸ்ரீ மத் பாகவதம் மோக்ஷத்தை மட்டுமல்ல கேட்ட மாத்திரத்தில் நான்கு புருஷார்த்தங்களையுமே அளிக்க வல்லது. அதற்கு ப்ரமாணமாக, அதன் ஒரே ஒரு ஸ்லோகத்தைக் கேட்டதுமே காணாமல் போன ஸ்ரீ சுகர் வியாஸரிடம் திரும்பி வந்தார்.

"அதென்ன ஸ்லோகம் சொல்கிறீர்கள்?"
"துஷ்ட விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்ள எங்கள் குரு உபதேசம் செய்தார்"
"உங்கள் குரு யார்?"
"ஸ்ரீ வியாசார்யார்"
"அவரிடம் அழைத்து ப் போவீர்களா?


யாகத்திலிருந்து வந்த குரு புத்ரன் இவர் தான் என்று தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக் கொண்டு சுகரை ஆஸிரமத்திற்கு அழைத்து வந்தனர். திரும்பி வந்த மகனைக் கண்டதும் வியாசர் மிகவும் மகிழ்ந்தார். சுகர் ஸ்லோகத்தைப் பற்றி விசாரித்தார்.

"நீங்கள் இவர்களுக்கு உபதேசம் செய்த ஸ்லோகம் மிக அருமையாக உள்ளது. என்னை மயக்குகிறது. யாரைப் பற்றியது? எனக்கும் உபதேசம் செய்வீர்களா?"

யாருக்கு பாகவதத்தைக் கொடுக்க வைத்திருந்தாரோ அவரே தேடி வந்து கேட்டால் வியாசருக்கு எப்படி இருக்கும்?

"ஒரு ஸ்லோகம் என்ன? பதினெண்ணாயிரம் இருக்கிறது. உனக்காகத்தான் வைத்திருக்கிறேன்" என்று சொல்லி ஸ்ரீ மத் பாகவதத்தை சொல்லிக் கொடுத்தார்.

வேத அத்யயனம் செய்வது போல் சந்தை திருவையாக அதாவது ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ஒரு முறை சொல்லி மூன்று முறை வாங்கிச் சொல்லி அர்த்தத்தோடு உள் வாங்கிக் கொண்டார்.

இன்றைக்கெல்லாம் ஸ்ரீ மத் பாகவத பாராயணம் நடக்கும் இடத்திற்குச் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பாருங்கள். ஸம்ஸ்க்ருதம் ஒரு வார்த்தை புரியா விட்டாலும், அர்த்தம் தெரியா விட்டாலும் பாராயண ஒலி கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கும்.

இவ்வளவு கர்ம வாசனைகளோடு ஸம்சாரத்தில் உழன்று கொண்டிருக்கும் நமக்கே பாகவத சப்தம் ஆனந்தம் தருகிறது என்றால், ஸ்வயம் ப்ரும்ம ஸ்வரூபாய் விளங்கும் ஸ்ரீ ஸுகருக்கு எப்படி இருந்திருக்கும்? ஆத்ம ஆனந்தத்தில் லயித்திருந்த அவர் இப்போது பாகவத ஆனந்தத்தில் திளைக்க ஆரம்பித்தார்.

தினமும் பசு மாட்டை ஒரு நேரத்தில் பால் கறப்பார்கள். ஒரு நாள் கோனாருக்கு, ஏதோ வேலையால் கறக்கவில்லை. நேரமாக ஆக, பசு மாடு பாலை வெளியே தள்ளி விட வேண்டும் என்று தவிக்கும். கோனார் வரவில்லை எனில், தானே கால்களை மடி போது போட்டு பீய்ச்சி விடும். அது போல் மஹாத்மாக்களிடம் கருணை என்பது ஸ்வபாவமாக பெருகிக் கொண்டே இருக்கும். அதை யார் மீதாவது பொழிந்து விட வேண்டும் என்பது மஹாத்மாக்களுக்கு ஒரு அவஸ்தை.

பாகவதம் தந்த பேரானந்ததில் திளைத்துக் கொண்டிருந்த சுகர் அதை யாருக்காவது சொல்ல வேண்டுமே என்று தவித்து க் கொண்டிருந்தார். ஏழுநாட்களில் மரணம் என்ற சாபத்தோடு தனக்கு யாராவது உய்யும் வழி காட்ட மாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருந்த பரீக்ஷித்தும் சுகரும் கங்கைக் கரையில் ஒன்று சேர்ந்தனர்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்