||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
035. திருதேவனார் தொகை (திருநாங்கூர்)
முப்பத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்
1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)
- திவ்ய ப்ரபந்தம் - 1248 - 1257 - நான்காம் பத்து - முதலாம் திருமொழி
--------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி
தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*
அந்தாதி
ஆர்க்கும் வலம் புரியால் அண்டமும் எண் திசையும்*
கார்க்கடலும் வெற்பும் கலங்கினவால் சீர்க்கும்*
திருத் தேவனார் தொகை மால் செவ்வாய் வைத்து ஊதத்*
தருத் தேவனார் தொகையும் சாய்ந்து*
- சீர்க்கும் – சிறப்புப் பெற்ற
- திருத்தேவனார்தொகை மால் – திருத்தேவனார் தொகை என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருக்கின்ற திருமால்
- பாரிஜாத விருக்ஷத்தைத் தேவ லோகத்தில் இருந்து பேர்த்துக் கொணரும் போது
- செம் வாய் வைத்து ஊத – பாஞ்ச ஜந்யத்தைத் தமது சிவந்த வாயிலே வைத்து ஊதுகையில்
- ஆர்க்கும் வலம்புரியால் – பேர் ஆரவாரம் செய்கின்ற அந்த வலம்புரிச் சங்கத்தினால்
- தரு தேவனார் தொகையும் – கற்பக தருவின் நிழலில் வசிக்கின்ற தேவர்களின் கூட்டமும்
- சாய்ந்து – மூர்ச்சித்து விழ
- எண் திசையும் – எட்டுத் திக்குக்களும்
- கார் கடலும் – கரிய சமுத்திரமும்
- வெற்பும் – அஷ்ட குல பருவதங்களும்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்