About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 29 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 130

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 100

அநந்த ரூபோ நந்த ஸ்ரீர்
ஜித மந்யுர் ப⁴யா பஹ:|
சதுர ஸ்²ரோ க³பீ⁴ராத்மா
விதி³ஸோ² வ்யாதி³ஸோ² தி³ஸ²:||

  • 932. அநந்த ரூபோ - எண்ணிறந்த உருவங்களை உடையவர். எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவர்.
  • 933. அநந்த ஸ்ரீர் - அளவற்ற செல்வமுள்ளவர். எல்லையற்ற செல்வம், மகிமை, சக்தி முதலியவற்றை உடையவர்.
  • 934. ஜித மந்யுர் - கோபத்தை வென்றவர். கட்டுப்பாட்டைப் பெற்றவர். 
  • 935. பயா பஹஹ - அடியவர் பயத்தைப் போக்குபவர். பக்தர்களின் மனதில் உள்ள பயத்தை (சம்சாரம்) அழிப்பவர்.
  • 936. சதுர ஸ்²ரோ - அடியவர் வேண்டுதல்களை உடனே செய்து வைப்பதில் சமர்த்தன். அனைத்து அம்சங்களிலும் திறமையானவர். எல்லோரிடமும் நியாயமாக நடந்து கொள்பவர். நான்கு திசைகளிலும் வியாபித்திருப்பவர். நான்கு திசைகளிலும் உள்ள அனைத்தையும் போஷித்து உண்பவர். அறிவுள்ள மக்களால் வணங்கப்படுபவர்.  
  • 937. க³பீ⁴ராத்மா - ஆழம் காண முடியாதவர். அனைவருக்கும் மேலானவர். ஆழமான இயல்புடையவர். 
  • 938. விதி³ஸோ² - இவருடைய இயல்பும், வடிவங்களும், குணங்களும் எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கின்றன. எல்லா திசைகளிலிருந்தும் அடையக் கூடியவர்.  தன் பக்தர்களுக்கு எல்லா நன்மைகளையும் அளிப்பவர். அனைத்தையும் வியாபித்து எங்கும் இருப்பவன். அனைத்து சாஸ்திரங்களையும் விரிவாக வெளிப்படுத்தியவர்.
  • 939. வ்யாதி³ஸோ² - பதவிகளைத் தருபவர். கட்டளையிடுபவர். 
  • 940. தி³ஸ²ஹ - நியமிப்பவர். நேர்மையான பாதையைக் காட்டுபவர். அறிவுரை வழங்குபவர். அறிவை வழங்குபவர். பக்தர்களால் தேடப்படுபவர். வேதங்களின் மூலம், காரியங்களைச் செய்ய வேண்டிய வழிகளையும், செய்யக் கூடாதவற்றையும் அவர் வகுத்துள்ளார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.67

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.67 

இந்த்³ரியாணாம் ஹி சரதாம் 
யந் மநோ நு விதீ⁴யதே|
த த³ஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் 
வாயுர் நாவமி வாம்ப⁴ஸி||

  • இந்த்³ரியாணாம் - புலன்களின் 
  • ஹி - ஏனெனில் 
  • சரதாம் - அலை பாயும் போது 
  • யத் - எதனுடன் 
  • மநோ - மனம் 
  • அநு விதீ⁴யதே - நிலையாக ஈடுபடுகிறது 
  • தத்³ - அது 
  • அஸ்ய - அவனது 
  • ஹரதி - இழுத்துச் செல்கிறது 
  • ப்ரஜ்ஞாம் - அறிவு 
  • வாயுர் - காற்று 
  • நாவம் - படகு 
  • இவ - போல 
  • அம்ப⁴ஸி - கடலில்

காற்றானது நீரில் உள்ள படகை இழுத்து செல்வது போல, மனம் புலன்களால் அலைபாயும் போது, எதனுடன் நிலையாக ஈடுபடுகிறதோ, அது அவனது அறிவை இழுத்து செல்கிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.20

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.20

ருக்³ யஜு: ஸாமா த²ர் வாக்²யா 
வேதா³ஸ்² சத்வார உத்³ த்⁴ரு தா:|
இதிஹாஸ புராணம் ச 
பஞ்சமோ வேத³ உச்யதே||

  • ருக்³ யஜுஸ் - ரிக், யஜுர்
  • ஸாமா த²ர் - ஸாமம், அதர்வணம் 
  • வாக் ²யா - என்ற பெயருடைய
  • சத்வார வேதா³ஸ்² - நான்கு வேதங்கள்  
  • உத்³ த்⁴ரு தாஹ எடுக்கப்பட்டன 
  • இதிஹாஸ - மஹாபாரதம், இராமாயணம் முதலிய இதிஹாசங்களும், 
  • புராணம் ச - பாகவதம் முதலிய புராணங்களும்
  • பஞ்சமோ வேத³ - ஐந்தாவது வேதமாக
  • உச்யதே - சொல்லப்படுகிறது

வேதமானது, ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் என நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.   ஐந்தாவது வேதமாகச் சொல்லப்படுகின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.65

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.65

உத்ஸ் மயித்வா மஹாபா³ஹு: 
ப்ரேக்ஷ்ய சாஸ்தி² மஹாப³ல:|
பாதா³ங் கு³ஷ்டே²ந சிக்ஷேப 
ஸம்பூர்ணம் த³ஸ² யோஜநம்|| 

  • மஹா பா³ஹுஹு - பெருந் தோள்களை உடையவராக 
  • மஹா ப³லஹ - ப்ரஸித்தி பெற்ற போர் வீரரான ராமர்
  • ச - அதன் மேல் 
  • அஸ்தி² - எலும்புக் கூட்டை 
  • ப்ரேக்ஷ்ய - கவனமாய் பார்த்து 
  • ஸ்மயித்வா - பரிஹாசமாய் நகைத்து 
  • பாதா³ங் கு³ஷ்டே²ந - காலின் கட்டை விரலினால் 
  • ஸம்பூர்ணம் - பூர்ணமான 
  • த³ஸ² - பத்து 
  • யோஜநம் - யோஜனை தூரம் 
  • உத் - லக்ஷ்யமின்றி 
  • சிக்ஷேப - தூக்கி கடத்தினார்

பெருந் தோள்களைக் கொண்ட அந்தப் பெரும் பலவான் ராமன், அந்த எலும்புக் குவியலைக் கண்டு புன்னகைத்து, அதை தன் பாதத்தின் பெரு விரலைக் கொண்டு முழுமையாகப் பத்து யோஜனை தொலைவில் விழச் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 1.9 அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 10 பாசுரங்கள்

புறம் புல்கல்

தன் முதுகைக் கட்டிக் கொள்ளும் படி கண்ணனை அழைத்தல்

வெண்டளையால் வந்த கலித்தாழிசை

குழந்தை ஓடி வந்து தாயின் முதுகைக் கட்டிக் கொண்டு மகிழும்: தாயும் மகிழ்வாள். கண்ணனும் தாய்க்குத் தெரியாமல் பின்புறத்தே மெல்ல நடந்து வந்து தாயின் முதுகைக் கட்டிக் கொள்வான். 


அந்நிலையை விரும்பி யசோதை மகிழ்ந்ததுபோல் ஆழ்வார் தாமும் விரும்புகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 032 - திருமணிமாட கோவில் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

032. திருமணிமாடகோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 12

001. திவ்ய ப்ரபந்தம் - 1218 - மனமே! மணிமாடக் கோயிலை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி -  முதலாம் பாசுரம்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்* 
நர நாரணனே கரு மா முகில் போல் எந்தாய்* 
எமக்கே அருளாய் என நின்று* இமையோர் பரவும் இடம்*
எத் திசையும் கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே*
களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து*
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1219 -  கஜேந்திரனின் துயர் தீர்த்தவன் இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி -  இரண்டாம் பாசுரம்
முதலைத் தனி மா முரண் தீர அன்று* முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய*
விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி* வினை தீர்த்த அம்மான் இடம்* 
விண் அணவும் பதலைக்க போதத்து ஒளி மாட நெற்றிப்*
பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்*
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1220 - திருமகளைத் தழுவியவன் இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய* 
அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து* 
கொங்கு ஆர் இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு*
அணைந்திட்ட அம்மான் இடம்* 
ஆள் அரியால் அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்*
அணி முத்தும் வெண் சாமரையோடு* 
பொன்னி மலைப் பண்டம் அண்ட திரை உந்து நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1221 - கருட வாகனனின் மணிமாடக்  கோயிலை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி* அன்று திசை நான்கும் நான்கும் இரிய* 
செருவில் கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடியக்*
கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான்*
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்*
ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்*
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1222 - கண்ணபிரானுக்கு இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு*
இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து*
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத்*
தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான்*
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே* குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு*
மழை ஆடு சோலை மயில் ஆலு நாங்கூர்* 
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1223 - பூதகியைக் கொன்றவன் இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்* பகு வாய்க் கழுதுக்கு இரங்காது* 
அவள் தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்*
உடனே சுவைத்தான் இடம்* 
ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகிக்*
கழுநீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து*
மண் ஏந்து இள மேதிகள் வைகு நாங்கூர்* 
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1224 - காளியன் மீது நடனமாடியவன் இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்*
தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்*
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன் மேல்* அடி வைத்த அம்மான் இடம்* 
மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்*
செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று* 
முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1225 - கிளிகளும் வேதம் பாடும் திருநாங்கூரை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்*
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்* 
முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்*
விளைவித்த அம்மான் இடம்* 
வேல் நெடுங் கண் முளை வாள் எயிற்று மடவார் பயிற்று*
மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்*
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1226 - தேவர்கள் பணியும் மணிமாடக் கோயிலை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த*
விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்*
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று* இமையோர் பரவும் இடம்* 
பைந் தடத்துப் பெடையோடு செங் கால அன்னம் துகைப்பத்*
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்*
மடை ஓட நின்று மது விம்மு நாங்கூர்* 
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1227 - இத்தமிழ் மாலை பாடுவார் சக்கரவர்த்தி ஆவார்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்*
மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு* 
என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர் கோன்*
கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்*
கண்டார் வணங்கக் களி யானை மீதே* கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்*
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்* 
விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே|

011. திவ்ய ப்ரபந்தம் - 1850 - திருவாலியும் திருநாங்கூரும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வேலை ஆல் இலைப்* பள்ளி விரும்பிய*
பாலை ஆர் அமுதத்தினைப்* பைந் துழாய்*
மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*
ஞாலம் உன்னியைக் காண்டும்* நாங்கூரிலே|

012. திவ்ய ப்ரபந்தம் - 2782 - செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச்
மன்னும் மறை நான்கும் ஆனானை* 
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை*
நாங்கூரில் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை* 
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை* 
தென் நறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 74

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 19

ஸ்கந்தம் 03

கர்தமர் பதினாயிறம் ஆண்டுகள் தவம்‌ செய்தும், இறைவனை அடைய பக்குவம் போதவில்லையே என்று வருந்தினார். அவரது பக்தியை மெச்சி, அவருக்குக் காட்சி தந்தார் இறைவன்.


பக்தி செய்பவருக்கு தன்னையே தருவதற்கு பகவான் தயாராய் இருக்க, தான் இல்லறம் நடத்த மனைவி கேட்கிறோமே என்று கூனிக் குறுகினார் கர்தமர். இருப்பினும், அவரது தவத்தின் நோக்கம் அதுவே என்பதால், இறைவன் நல்ல இல்லறத்தையும் அருளி, தானே அவருக்கு மகவாய்ப் பிறப்பதாய் வாக்களித்து முக்தியும் தருவேன் என்று வாக்களித்துப்போனான்.

கர்தமரின் பக்தியை எண்ணி எண்ணி பகவானும் உண்மையில் உருகிப் போனார். அவரது கண்களிலிருந்து தன் பக்தரான கர்தமரை நினைத்து ஆனந்தக்கண்ணீர் பெருகியது. பகவான் சிந்திய ஆனந்தக் கண்ணீர் ஒரு குளமாகி பிந்துஸரஸ் என்றழைக்கப்படுகிறது.

பகவான் கிளம்பிச் சென்றதும்,‌கர்தமர் பகவான் கூறிய காலத்தை எதிர் பார்த்திருந்தார். அவர் மனமோ, தான் கண்ட இறைக்காட்சியில் மூழ்கிப் போயிருந்தது. அப்போது, தங்கத் தகடுகள் வேய்ந்த தேரில், ஸ்வாயம்புவ மனுவும், சதரூபையும் மகள் தேவஹூதியோடு அங்கு வந்தனர்.

நிறைய முனிவர்கள் வசிக்கும் ஸரஸ்வதி நதிக்கரையில் இருந்தது பிந்துஸரஸ். அதன் நீர் பரிசுத்தமானது. அமுதம் போன்ற சுவையுடையது. மரம் செடி கொடிகளால் சூழப்பட்டது. பூக்களும், பழங்களும்‌ நிறைந்தது. வண்டுகளின் ரீங்காரம்‌ எப்போதும்‌ கேட்டுக்கொண்டே இருக்கும். அங்கு நிறைய விலங்குகள் இருந்தன.

மனு செல்லும் சமயத்தில், கர்தமர் தமது அனுஷ்டானங்களை‌ முடித்து அமர்ந்திருந்தார்.

வெகுநாள்கள் தவம்‌ செய்திருந்தபடியால்‌ அவரது மேனி ஒளிப்பிழம்பாகக் காணப்பட்டது.

பகவானைக் கண்டதால், அவர் முகம் மலர்ந்திருந்தது. இதழ்களில்‌ குறுஞ்சிரிப்பு தவழ்ந்தது. நல்ல உயரமானவர். அகன்ற திருக்கண்கள். ஜடாமுடி, மரவுரி அணிந்திருந்தார். அவரைக் கண்டதுமே மனத்தைப் பறிகொடுத்தாள் தேவஹூதி.

தம் இருப்பிடம் நோக்கி வந்த மனுவை வரவேற்று இன்மொழிகளால் பலவாறு பாராட்டி, உபசரித்தார்.

கர்தமர் தன்னைப் புகழ்வது கண்டு சற்றே வெட்கத்துடன் பேசினார் மனு. தங்களது உயர்ந்த ஸ்வபாவமும், ஞானமும் தங்கள் பேச்சில் தெரிகிறது. தாங்கள் அனைத்து தர்மங்களையும் அறிந்திருக்கிறீர். என்னைப் பற்றிச் சொல்லும் சமயம் ஒரு அரசனது அறநெறிகளை எனக்கு உபதேசம் செய்தீர். இது எனது பாக்யம். தங்களின் அனுக்ரஹம் கிடைக்கப்பெற்றேன்.

இவள் என் மகள். தங்களுடைய குணங்கள், ஒழுக்கம், தவம் ஆகியவற்றைப் பற்றி நாரத மஹரிஷி மூலம்‌ அறிந்தாள். அதுமுதல் தங்களையே மணாளனாக நிச்சயித்திருக்கிறாள். ஆகவே, அந்தணோத்தமரான தங்களுக்கு என்‌ மகளைக்‌ கன்னிகாதானம் செய்துகொடுக்கிறேன். இவள் தங்கள் வாழ்க்கை‌ முறை செவ்வனே நடைபெறுவதக்கு உறுதுணையாக இருப்பாள். இதுவரை ப்ரும்மசர்யத்தில் இருந்தீர்கள். இனி அப்படி இன்றி இவளை ஏற்று இனிய இல்லறம் நடத்துங்கள், என்று வேண்டினார்.

கர்தமர் மகிழ்ச்சியோடு தேவஹூதியைப் பற்றித் தான் கேள்வியுற்றவற்றைக் கூறி, ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இவ்வுத்தமியை திருமணம் செய்து, இவள் வயிற்றில் ஒரு மகன் பிறக்கும் வரை இல்லறம்‌மேற்கொள்வேன். அதன்பின் பகவான் எனக்கு உபதேசித்தபடி ஜீவஹிம்சையற்ற துறவறம்‌ மேற்கொண்டு நாராயணனை ஆராதிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு கூறிய கர்தமர், கண்களை ‌மூடி ஒரு கணம் மனத்தில் நாராயணனை நினைத்து தியானம் செய்து மௌனமானார். நாராயணன் செல்லும் முன் தன்னைப் பார்த்து கொவ்வைப்பழ இதழ் விரித்துச் செய்த புன்முறுவல் நினைவுக்கு வந்தது.

கர்தமரின் முகம்‌ மலர்ந்தது. அவரும் புன்னகை புரிந்தார். அப்புன்னகையின் அழகில் மனத்தைக் கொடுத்த தேவஹூதி, நிபந்தனைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், அவரை மணக்க தந்தையிடம் உடனே சம்மதம்‌ தெரிவித்தாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்