About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 24 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 128

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 98

அக்ரூர: பேஸ²லோ த³க்ஷோ
த³க்ஷிண: க்ஷமிணாம் வர:|
வித்³வத் தமோ வீத ப⁴ய:
புண்ய ஸ்²ரவண கீர்த்தந:||

  • 915. அக்ரூரஃ - குரூரம் இல்லாதவர். இரக்கம் உள்ளவர். கோபம் இல்லாதவர்.
  • 916. பேஸ²லோ - அழகன். வசீகரமானவர். அன்பானவர்.
  • 917. த³க்ஷோ - வேகம் உள்ளவர். ஒரு நொடியில் தோன்றுபவர். சக்தி வாய்ந்தவர். தீய கூறுகளை மிக விரைவாக அகற்றுபவர். பிரபஞ்சமாக வளர்கிறவர். படைத்தல், வாழ்வாதாரம் மற்றும் அழித்தல் ஆகியவற்றில் சாமர்த்தியமாக இருப்பவர். எதிரிகளை அழிப்பவர்.
  • 918. தக்ஷிணஹ - இனிய இயல்புடையவர். இரக்கம் உள்ளவர். அபாரமும், வீரமும், செயலில் வேகமும் கொண்டவர். 
  • 919. க்ஷமிணாம் வரஹ் - பொறுமையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர்களில் உயர்ந்தவர். பக்தர்களின் பாதுகாப்புச் சுமையைத் தாங்குவதில் முதன்மையானவர்.
  • 920. வித்வத்ததமோ - செயல் அறிவில் சிறந்தவர்.  என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தவர்களில் சிறந்தவர்.
  • 921. வீதபயஃ - யானையின் பயத்தைப் போக்கியவர். பயம் இல்லாதவர். எல்லாவற்றிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டவர்.
  • 922. புண்ய ச்ரவண கீர்த்தநஹ - கஜேந்திர மோக்ஷத்தின் சரிதத்தைக் கேட்பது மிகவும் புண்ணியம் என்று அருளியவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.65

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.65 

ப்ரஸாதே³ ஸர்வ து³:கா² நாம் 
ஹாநிரஸ் யோப ஜாயதே|
ப்ரஸந்ந சேதஸோ ஹ்யாஸு² 
பு³த்³தி⁴: பர்ய வதிஷ்ட²தே||

  • ப்ரஸாதே³ - இறைவனின் காரணமற்ற கருணையைப் பெற்றால் உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில்
  • ஸர்வ - எல்லா
  • து³ஹ்கா² நாம் - துக்கங்கள் 
  • ஹாநிர் - அழிவு 
  • அஸ்ய - அவனது 
  • உபஜாயதே - உண்டாகிறது 
  • ப்ரஸந்ந சேதஸோ - சந்தோஷ மனம் கொண்ட 
  • ஹி - நிச்சயமாக 
  • ஆஸு² - வெகு விரைவில் 
  • பு³த்³தி⁴ஃ - அறிவு 
  • பரி - போதுமான அளவு 
  • அவதிஷ்ட²தே - நிலைபெறுகிறது

இறைவனின் காரணமற்ற கருணையைப் பெற்றால், துக்கங்கள் எல்லாம் அழிந்து, சந்தோஷ மனம் கொண்ட அவனது அறிவு வெகு விரைவில் போதுமான அளவு ஞான நிலைபெறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.18

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.18

து³ர்ப⁴ கா³ம்ஸ்²ச ஜநாந் வீக்ஷ்ய 
முநிர் தி³வ்யேந சக்ஷுஷா|
ஸர்வ வர்ணா ஸ்²ரமாணாம் யத்³
த³த்⁴யௌ ஹிதம மோக⁴ த்³ருக்||

  • ஜநாந் ச - மக்களையும் 
  • து³ர்ப⁴ கா³ம்ஸ்² - மந்த பாக்கியம் உள்ளவர்களாகவும்
  • வீக்ஷ்ய - பார்த்து
  • முநிர் - வியாஸ பகவான்
  • தி³வ்யேந சக்ஷுஷா - திவ்ய ஞானக் கண்ணால்
  • அமோக⁴ த்³ருக் - வீண் போகாத ஞானத்தை உடையவராய்
  • யத்³ ஸர்வ - எது எல்லா
  • வர்ணா ஸ்²ரமாணாம்  - வர்ணாஸ்ரமர்களுக்கும்
  • ஹிதம் -நல்லதோ அதை
  • த³த்⁴யௌ - தியானித்தார்

தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்குரிய ஆயுள் பலம் குறைந்து போவதையும், தனது ஞானக்கண்களால் கண்டு, எல்லா வருணத்தாருக்கும் ஆசிரமத்தாருக்கும் எது நன்மை பயக்கத்தக்கது?' என்று சிந்திக்கலானார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.63

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.63

வாலி நஸ்²ச ப³லம் தத்ர 
கத²யா மாஸ வாநர:|
ஸுக்³ரீவ: ஸ²ங்கி தஸ்² சாஸீந்
நித்யம் வீர்யேண ராக⁴வே|| 

  • தத்ர - அந்த சந்தர்ப்பத்தில் 
  • வாநரஹ - வாநரர் 
  • வாலிநஸ்² - வாலியினுடைய 
  • ப³லம் ச - வல்லமையையும் 
  • கத²யா மாஸ - விவரித்து சொன்னார் 
  • ஸுக்³ரீவஸ் - ஸுக்ரீவர் 
  • ராக⁴வே - ஸ்ரீராகவருடைய 
  • வீர்யேண - வீர்ய விஷயத்தில் 
  • நித்யம் ச - ஸாதாரணமாக உண்டாகக் கூடிய 
  • ஸ²ங்கி தஸ்² - ஸந்தேகம் அடைந்தவராக 
  • ஆஸீந் - இருந்தார்

இதனால், அந்த வானரன் ஸுக்ரீவன், வாலியின் பலத்தையும் விளக்கிச் சொன்னான். ஆனாலும் ராகவனின் ஆற்றலில் ஸுக்ரீவன் எப்போதும் ஐயம் நிறைந்தவனாகவே இருந்தான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 106 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 106 - அன்னமாய் அவதரித்து 
வேதங்களை மீட்டவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்

துன்னிய பேரிருள்* சூழ்ந்து உலகை மூட* 
மன்னிய நான்மறை* முற்றும் மறைந்திடப்* 
பின் இவ் உலகினில்* பேரிருள் நீங்க* 
அன்று அன்னமது ஆனானே! அச்சோ அச்சோ* 
அருமறை தந்தானே! அச்சோ அச்சோ!

  • மன்னிய - நித்ய ஸித்தமான, அழிவில்லாத
  • நால் மறை - சதுர் வேதங்களும்
  • முற்றும் - முழுமையாக
  • மறைந்திட - மறைந்து விட அதனால்
  • துன்னிய - நிரந்தரமான
  • பேர் இருள் - பெரிய அஞ்ஞான இருள்
  • சூழ்ந்து - பரவி
  • உலகை - லோகங்களை
  • மூட - மறைத்துக் கொள்ள
  • பின் இவ் - பின்பு இந்த
  • உலகினில் - லோகங்களில்
  • பேர் இருள் - அந்த மிகுந்த அந்தகாரம்
  • நீங்க - நீங்கும்படி
  • அன்று - அக் காலத்தில்
  • அன்னம் அது ஆனானே - அன்னமாய் அவதரித்தவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • அரு மறை தந்தானே - அந்த ரூபத்தோடு அருமையான வேதங்களை மீட்டு உபகரித்தவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

முன்பொரு சமயம் பிரம்மாவிடம் இருந்து வேதங்கள் அனைத்தையும் சோமுகன் என்னும் அசுரன் அபகரித்து பெருங்கடலினுள் மறைய, அதனால் உலகம் முழுதும் அஞ்ஞானமாகிய காரிருள் சூழ, பின்பு எம்பெருமான் ஹம்சமாய் அவதரித்து அஞ்ஞானத்தை நீக்கினானே! என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும், வேதங்களை மீட்டுக் கொடுத்தவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 032 - திருமணிமாடகோவில் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

032. திருமணிமாடகோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ பத்ரி நாராயணர் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ நந்தாவிளக்கு பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: நந்தவிளக்கு, பத்ரி நாராயணர்
  • பெருமாள் உற்சவர்: அளத்தற்கரியான்
  • தாயார் மூலவர்: புண்டரீகவல்லி
  • திருமுகமண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: வீற்றிருந்த 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: இந்திர, ருத்ர
  • விமானம்: ப்ரணவ
  • ஸ்தல விருக்ஷம்: பலா
  • ப்ரத்யக்ஷம்: ருத்ரர்கள், இந்திரன், மதங்கர்
  • ஆகமம்: பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 12

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

பத்ரிநாராயணர் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தாமரை மலர் மீது கால் வைத்தபடி காட்சி தருகிறார். வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளையில் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இது மிகவும் அபூர்வமானதாகும். இதனால் ஸ்வாமி எப்போதும் நந்தா (அணையாத) விளக்கு போல பிரகாசமாக இருந்து மக்களின் அறியாமை எனும் இருளைப் போக்கி ஒளியைக் கொடுக்கிறார். எனவே ஸ்வாமியை, திருமங்கையாழ்வார் "நந்தா விளக்கு' என்று மங்களாஸாஸநம் செய்துள்ளார். காலை நேரத்தில் இவரை வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். இந்தக் கோயிலில் கோபுரத்தில் மூன்று துளைகள் இருக்கின்றன.

சிவனை சாந்தப்படுத்த பத்ரியில் இருக்கும் நாராயணரே நான்கு வேதங்களை குதிரையாக்கி, பிரம்மாவை தேரோட்டியாக கொண்டு இங்கு வந்தார். இதை உணர்த்தும் விதமாக இக்கோயில் தேர் அமைப்பிலேயே இருக்கிறது. கருவறை மேலுள்ள பிரணவ விமானம் "ஓம்' எனும் வடிவத்தில், தேரின் மேல் பகுதி போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் உள்ள கலச கும்பங்கள் ராஜ கோபுரத்தை நோக்கி இருக்கின்றன. ஸ்வாமியின் பீடத்திற்கு கீழே பிரம்மா இருக்கிறார். ஸ்வாமிக்கு அபிஷேகம் கிடையாது, தைலக் காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. அருகில் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்தில் இருக்கும் உற்சவரை "நர நாராயணர்' எனவும், அமர்ந்த கோலத்தில் உள்ள உற்சவர் "அளத்தற்கரியான்' எனவும் அழைக்கின்றனர். ஒரே கருவறையில் மூன்று கோலங்களில் பெருமாள்கள் இருப்பது விசேஷம்.

நாராயணர் இத்தலத்திற்கு தன் வாகனமான கருடன் மீது வராமல் தேரில் ஏறி வந்தார். எனவே, கருடன் ஸ்வாமியை சுமக்க வாய்ப்பு தரும்படி அவரது பாதம் பணிந்து வேண்டினார். இதனை உணர்த்தும் விதமாக ஸ்வாமியின் திருப்பாதத்திற்கு நேராக இருக்க வேண்டிய கருடன் இங்கு கொடி மரத்திற்கு அருகில் அமர்ந்த கோலத்தில் ஸ்வாமியின் பாதத்திற்கும் கீழே இருக்கிறார். இங்கு தை அமாவாசைக்கு மறுநாளில் கருடசேவை சிறப்பாக நடக்கிறது. இவ்விழாவில் 11 திவ்ய தேசங்களில் இருக்கும் அனைத்து ஸ்வாமிகளும் இங்கு 11 கருடன்கள் மீது எழுந்தருளுகின்றனர். கருடனின் வேண்டுதலுக்காக பெருமாள் 11 மூர்த்திகளாக இருந்து கருடசேவை சாதிப்பதாக சொல்கிறார்கள்.

வடக்கே பத்ரிகாசிரமத்தில் "ஓம் நமோ நாராயணாய' எனும் திருமந்திரத்திற்கு விளக்கம் தந்த நாராயணனே இங்கு அருளுகிறார். இக்கோயில் மாடம் போன்ற அமைப்பில் இருப்பதால் "திருமணிமாடக் கோயில்' என்றே அழைக்கப் படுகிறது. தாயார் புண்டரீக வல்லி பிரகாரத்தில் தனிச்சந்நதியில் இருக்கிறார். திருமங்கையாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாஸாஸநம் செய்துள்ளார். நாராயணர் சாந்தப்படுத்திய சிவன், "மதங்கீஸ்வரர் என்ற பெயரில் எதிரே தனிக்கோயிலில் ஸ்வாமியை பார்த்தபடியும் இருக்கிறார்.

பார்வதியின் தந்தையாகிய தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு செல்ல வேண்டாம் என பார்வதியை தடுத்தார் சிவன். ஆனாலும் நியாயம் கேட்பதற்காக யாகத்திற்கு சென்று விட்டாள் பார்வதி. கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். அப்போது சிவனது திருச்சடை முடி தரையில் பட்ட இடங்களில் எல்லாம் சிவ வடிவங்கள் தோன்றின. இவ்வாறு 11 சிவ வடிவங்கள் தோன்றி அனைவரும் தாண்டவம் ஆடினர். இதனால் உலக உயிர்கள் கலக்கம் அடைந்தன. அச்சம் கொண்ட மகரிஷிகள், தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர் பத்ரி நாராயணராக 11 வடிவங்கள் எடுத்து சிவன் முன்பு வந்தார். நாராயணரைக் கண்ட சிவன் தாண்டவத்தை நிறுத்தினார். பின் அவர் 11 சிவ வடிவங்களையும் ஒன்றாக ஐக்கியப்படுத்தினார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்தது என தலவரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு 11 பெருமாள் கோயில்களும், 11 சிவ ஆலயங்களும் இருக்கிறது. 11 பெருமாள்களுக்கும் பத்ரி நாராயணரே பிரதானமானவராக இருக்கிறார். இவர் ஒருவரை தரிசனம் செய்தாலே அனைவரையும் தரிசனம் செய்த பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். தை அமாவாசைக்கு அடுத்த நாள் 11 பெருமாள்களின் திருநாங்கூர் கருட சேவை இத்தலத்தில் தான் நடைபெறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 72

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 17

ஸ்கந்தம் 03

ஹிரண்யாக்ஷனுக்கும் பகவானுக்கும் சமர் மூண்டது.

ப்ரும்மா தேவகணங்களுடன் அங்கு வந்து, ப்ரபோ, இவன் மிகுந்த பலசாலியாய் இருக்கிறான். தன் பலத்தினால் பெருகும் கர்வத்தினால் அனைவரையும் துன்புறுத்துகிறான். இப்போது 'அபிஜித்' என்ற புண்ய காலம் வந்துவிட்டது. நீங்கள் விளையாட்டகச் சமர் செய்தது போதும். இவனைக் கொன்று விடுங்கள் என்று வேண்டினார்.


ஹிரண்யாக்ஷன் கதை, சூலம் முதலியவற்றைக் கொண்டு தாக்கினான். பகவான் அவற்றையெல்லாம் விளையாட்டாகப் பிடித்தார். ஹிரண்யாக்ஷன் ஓடிவந்து பகவானது அகன்ற திருமார்பில் ஒரு குத்து விட்டான். யானையைப் பூமாலையால் அடிப்பது போன்று அவர் அசையாமல் நின்றார். 

மிகவும் விரிவாக இப்போரை வர்ணிக்கிறார் மைத்ரேயர்.

ஹிரண்யாக்ஷன் பற்பல மாயைகளை ஏவினான். பகவான் அனைத்தையும் தகர்த்தெறிய சக்கரத்தை ஏவினார். கடைசியில் விளையாடியது போதும் என்று நினைத்தவராக, அவனை விளையாட்டாக ஒரு அடி வைத்தார். இரண்யாக்ஷன் தலை சுற்றியது. முழி பிதுங்கியது. வேரற்ற மரம் போல் விழுந்தான்.

அப்போது பகவான் தன் திருவடியால் அசுரனை உதைக்க, யோகிகளும் ஆசைப்படும் நிலையை அடைந்தான் ஹிரண்யாக்ஷன் அடைந்தான். பகவானது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டே உயிரை விட்டான். சூழ்ந்து நின்றிருந்த தேவர்கள் அனைவரும் துதி செய்ய பகவான் வைகுண்டத்தை அடைந்தார்.

இந்த வராஹ மூர்த்தியின் திருவிளையாடலைக் கேட்பவர்கள் ப்ரும்மஹத்தி முதலிய எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். இச்சரித்ரம் மிகவும் பவித்ரமானது. செல்வத்தையும், புகழையும் அளிப்பது. ஆயுளை வளர்ப்பது. இதைக் கேட்பவர்களுக்கு பிறவியின் முடிவில் வைகுண்டம்‌ கிட்டும் என்று பலவிதமான பலச்ருதிகளைக் கூறினார் மைத்ரேயர்.

இதன் பின் ப்ரும்மாவின் படைப்புகளைப் பற்றி விதுரர் மீண்டும் வினா எழுப்ப, மிக விரிவாக ப்ரும்மாவின் ஒவ்வொரு படைப்பு தோன்றும் விதத்தையும் விளக்கினார் மைத்ரேயர்.

அதன் பின் மனுவின் வம்சம் பற்றிக் கேட்டார் விதுரர்.

ஸ்வாயம்புவ மனுவிற்கு மூன்று பெண்களும், இரண்டு ஆண் மகவுகளும் பிறந்தன என்று முன்னமே கூறினீர்கள். அவர்களைப் பற்றிக் கூறுங்கள். மஹாயோகியான கர்தமருக்கு ஸ்வாயம்புவ மனு தேவஹூதி என்ற தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார் என்றும் சொன்னீர்கள். மற்ற பெண்களான, ஆகூதி, ப்ரஸூதி ஆகியவர்களின் சந்ததிகள், ப்ரியவிரதன், உத்தானபாதன் ஆகியோரின் ப்ரபாவங்கள் ஆகியவற்றைக் கூறுங்கள். மைத்ரேயர், சிரித்துக் கொண்டே கூறலானார்.

கர்தம ப்ரஜாபதி ப்ரும்மாவின் நிழலிலிருந்து தோன்றினார் என்று முன்னமே பார்த்தோம். அவரிடம் ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்யும்படி ப்ரும்மா கூறினார். கர்தமர் ஸரஸ்வதி நதி தீரத்தில் வந்து பதினாயிரம் ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டார்.

பகவான் ஸ்ரீ ஹரியை ஒருமுகப்பட்ட மனத்துடன் ஆராதனை செய்தார். பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்த பின்னர், இறைவனின் தரிசனம் கிட்டவில்லையென்று ஏங்கித் தவித்தார். பக்தியால் அவரது நெஞ்சம் உருகி, கண்ணில் வழியும் நேரம், அவரது ஹ்ருதய கமலத்தில் வீற்றிருந்த பகவான் அவன் கண்முன் தோன்றினார்.

தாமரைக் கண்கள், வெண்தாமரை, நீலத் தாமரைகளால் ஆன மாலை, பொன்னிற ஆடை, அலைபாயும் கறுத்த குழல், ஒளிவீசும் தங்கக் கிரீடம், மகர குண்டலங்கள், சங்கு, சக்ரம் கதை முதலிய ஆயுதங்களோடு, ஹ்ருதயம் கலக்கும் ஆயுதமான தாமரையும் ஏந்தி, புன்னகயோடு கருடன் மேல் எழுந்தருளினார்.

கருடன் கழுத்தைச் சுற்றியிருந்த திருவடித் தாமரைகளின் அழகில் மனத்தைப் பறி கொடுத்தார் கர்தமர்.  

நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இறைவனை வணங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்