About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 5 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 134

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 104

பூ⁴ர்பு⁴வ: ஸ்வஸ்த ருஸ் தாரஸ் 
ஸவிதா ப்ரபிதா மஹ:|
யஜ்ஞோ யஜ்ஞ பதிர் யஜ்வா 
யஜ்ஞாங்கோ³ யஞ்ஞ வாஹந:||

  • 967. பூ⁴ர் பு⁴வஸ் ஸ்வஸ்த ருஸ் - மூவுலக உயிரினங்களும் தங்குவதற்குரிய மரமாக உள்ளவர்.
  • 968. தாரஸ் - உலக வாழ்க்கை என்னும் கடலைத் தாண்டுவதற்குரிய கப்பலாக இருப்பவர்.
  • 969. ஸ்விதா - உண்டாக்குபவர்.
  • 970. ப்ரபிதா மஹஹ - பிரமனைப் படைத்த தந்தையாய் இருப்பவர்.
  • 971. யஜ்ஞோ - தானே வேள்வியாக இருப்பவர்.
  • 972. யஜ்ஞ பதிர் - வேள்விகளுக்குத் தலைவர்.
  • 973. யஜ்வா - பிறர் செய்யும் வேள்விகளைத் தான் செய்வதற்கு அங்கமாக உள்ளவர்.
  • 974. யஜ்ஞாங்கோ³ - பிறர் செய்யும் வேள்விகளைத் தனதாக உள்ளவர்.
  • 975. யஜ்ஞ வாஹநஹ - வேள்வியை நடத்தித் தருபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.71

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.71 

விஹாய காமாந்ய: ஸர்வாந் 
புமாம்ஸ்² சரதி நிஸ் ப்ருஹ:|
நிர்மமோ நிரஹங் கார: 
ஸ ஸா²ந்தி மதி⁴ க³ச்ச²தி||

  • விஹாய - விட்டு விட்டு 
  • காமாந் - புலனுகர்ச்சிக்கான பௌதிக ஆசைகள் 
  • யஸ் - எவன் 
  • ஸர்வாந் - எல்லா 
  • புமாம்ஸ்² - ஒருவன் 
  • சரதி - வாழ்கிறான் 
  • நிஸ் ப்ருஹஹ - ஆசைகளின்றி 
  • நிர்மமோ - உரிமையாளன் என்ற உணர்வின்றி  
  • நிரஹங் காரஹ - அஹங்காரமின்றி  
  • ஸ - அவன் 
  • ஸா²ந்திம் - பக்குவமான அமைதி 
  • அதி⁴ க³ச்ச²தி - அடைகிறான்

எவன் ஒருவன், எல்லா புலனுகர்ச்சிக்கான பௌதிக ஆசைகளை விட்டு விட்டு, அஹங்காரமின்றி, ஆசைகளின்றி, உரிமையாளன் என்ற உணர்வின்றி வாழ்கிறானோ, அவனே, பக்குவமான அமைதியை அடைகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.24

த ஏவ வேதா³ து³ர் மேதை⁴ர்
தா⁴ர் யந்தே புருஷைர் யதா²|
ஏவம் சகார ப⁴க³வாந் 
வ்யாஸ: க்ரு பண வத்ஸல:||

  • தே - முன், நல்ல அறிவுள்ளவர்களால் தரிக்கப்பட்ட 
  • வேதா³ ஏவ -  அந்த வேதங்கள் 
  • யதா² - எவ்வாறு அமைத்தால் 
  • து³ர் மேதை⁴ர் - மந்த புத்தி உடையவர்களான 
  • புருஷைர் - புருஷர்களால் 
  • தா⁴ர் யந்தே - அத்யயனம் செய்ய முடியுமோ அவ்வகையில்   
  • ஏவம் -  இவ்வாறு பல பிரிவு உள்ளதாக 
  • க்ரு பண வத்ஸலஹ - தீன வத்ஸலனும் 
  • ப⁴க³வாந்நு -  ஸர்வக்ஞனுமான  
  • வ்யாஸஹ் -  வ்யாஸர் 
  • சகார -  பிரித்தார் 

முன்பு நிறைமதி உடையவர்களால் கற்கப்பட்ட அந்த வேதங்களைக் குறைமதி உடையவர்களும் கற்றுணரும் பொருட்டு, கருணை உள்ளம் கொண்ட வியாச பகவான் இவ்வாறு பிரித்தருளினார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.69

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.69

அநு மாந்ய ததா³ தாராம் 
ஸுக்³ரீவேண ஸமா க³த:|
நிஜ கா⁴ந ச தத்ரை நம் 
ஸ²ரேணை கேந ராக⁴வ:|| 

  • ததா³ - அப்பொழுது 
  • தாராம் - தாரையை 
  • அநுமாந்ய - சம்மதிகச் செய்து 
  • ஸுக்³ரீ வேண - ஸுக்³ரீவரோடு 
  • ஸமா க³தஹ - கை கலந்தான் 
  • ராக⁴வஹ - ஸ்ரீராகவர் 
  • தத்ர - அவ்விடத்தில் 
  • ஏநம் ஏகேந - இவனை ஒரு 
  • ஸ²ரேணை ச - பாணத்தாலேயே 
  • நிஜ கா⁴ந - கொன்றார்

தன் மனைவியான தாரையை ஏற்கச் செய்து, ஸுக்ரீவனை போரில் சந்தித்த வாலி, ராகவனின் ஒரே கணையால் அங்கே கொல்லப்பட்டான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 111 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 111 - அர்ஜுனனுக்காகத் தேரோட்டியவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்

நாந்தகம் ஏந்திய* நம்பி சரண் என்று*
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி* தரணியில்* 
வேந்தர்கள் உட்க* விசயன் மணித் திண் தேர்*
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான்* 
உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்|

  • நாந்தகம் - நந்தகம் என்னும் வாளை
  • ஏந்திய - கையில் ஏந்தி உள்ள
  • நம்பி - கண்ணனே!
  • சரண் - நீயே எனக்கு ரக்ஷகன்
  • என்று - என்று சொல்லி
  • தாழ்ந்த - தன்னை வணங்கி நின்ற
  • தனஞ்சயற்கு ஆகி - அர்ஜுநனுக்குப் பக்ஷபாதியாக இருந்து
  • தரணியில் - இப் பூமியிலே
  • வேந்தர்கள் - எதிரிகளான ராஜாக்கள்
  • உட்க - அஞ்சிக் கலங்கும்படி
  • விசயன்-அந்த அர்ஜுநனது
  • மணி திண் தேர் - அழகிய வலிய தேரை
  • ஊர்ந்தவன் - ஸாரதியாயிருந்து செலுத்தின இவன்
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • உம்பர் - நித்ய ஸூரிகளுக்கு
  • கோன் - நிர்வாஹகனான இவன்
  • என்னை - என்னுடைய 
  • புறம் புல்குவான் - முதுகை கட்டிக் கொள்வான்

அர்ஜுநன் கண்ணனை நோக்கி, "நந்தகம் என்னும் வாளைக் கையில் ஏந்தியவனே! உன்னை சரண் அடைகிறேன். நீ தான் என்னை ரக்ஷிக்க வேணும்" என்று ப்ரார்த்தித்த நிமித்தம், தனஞ்சயனுக்காக இந்த பூமியில் எதிர்த்து வந்த அரசர்களை நடுங்கும்படி செய்து, அவனுடைய அழகிய தேரை ஒட்டிய கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! விண்ணோர் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்! அர்ஜுநனை குறிக்கும் தனஞ்சயன் என்ற சொல்லுக்கு வெற்றியையே செல்வமாக கொண்டவன் என்று பொருள் கொள்ளலாம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்