||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 78
ஏகோ நைகஸ் ஸவ: க: கிம்
யத்தத் பத³ம நுத்தமம்:|
லோக ப³ந்து⁴ர் லோக நாதோ²
மாத⁴வோ ப⁴க்த வத்ஸல:||
- 730. ஏகோ - தனிப்பெருமை உடையவர். எல்லா வகையிலும் தனித்துவமானவர். ஒப்பற்றவர்.
- 731. நைகஸ் - பலராக இருப்பவர். எல்லை அற்றவர்.
- 732. ஸ - அறிவைப் பரப்புபவர். எல்லா அறிவுக்கும் இறுதி அதிகாரம் படைத்தவர். தன் பக்தர்களுக்குத் தடைகள் அனைத்தையும் அழிப்பவர். எளிதில் அணுகக் கூடியவர். சோம யாகத்தின் வடிவில் இருப்பவர். அவர் இறுதி அறிவு மற்றும் எங்கும் வாழ்பவர்.
- 733. வஹ் - மனத்தினுள்ளே வசிப்பவர்.
- 734. கஹ் - ஒளிர்பவர். ஜொலிபவர். பிரகாசிப்பவர். பக்தர்களால் வார்த்தைகளால் அழைக்கப்படுபவர். போற்றப்படுபவர். மகிழ்ச்சியின் உருவமாக இருப்பவர். 'அறிவுத்திறன்' மூலம் அணுகும் போது விடை தெரியாத கேள்விக்குறியாக இருப்பவர்.
- 735. கிம் - எது பரம் பொருள் என்று ஆராயத் தக்கவனாய் இருப்பவர்.
- 736. யத் - நம்மைக் காப்பதில் முயற்சியை உடையவர்.
- 737. தத் - தூண்டி விடுபவர். பக்தர்களிடம் அறிவையும் பக்தியையும் அதிகரிப்பவர். பக்தர்களின் கீர்த்தியை (புகழை) அதிகப்படுத்துபவர். பிரபஞ்சத்தை அதன் நுட்பமான வடிவத்திலிருந்து அதன் உடல் வடிவத்திற்கு விரிவுபடுத்துபவர். புலன்களால் அனுபவிக்கப் படாதவர்.
- 738. பத³ம் அநுத்தமம் - மேலான அடையத் தக்க பொருளாக இருப்பவர். அவர் உயர்ந்த இலக்கு.
- 739. லோக ப³ந்து⁴ர் - உலகினர் அனைவர்க்கும் உறவினன். அவர் படைப்பாளர் என்பதால், அனைவரும் அவருடன் தொடர்பு உடையவர்கள். வரையறுக்கப்பட்ட வாழ்க்கை போன்றவற்றின் மூலம் அனைத்தையும் கட்டுப் படுத்துபவர். ஒருவருக்கு எல்லாம் கட்டுப்பட்டவர், ஏனெனில் அவர் அவர்களின் ஆதரவாக இருக்கிறார். வேதம்/சாஸ்திரங்கள் மூலம் எது சரி எது தவறு என்று ஒரு உறவினராக அறிவுரைகளை வழங்குபவர்.
- 740. லோக நாதோ² - உலகத்துக்குத் தலைவர். உலகத்தை ஆளுபவர். உலகத்தின் பாதுகாவலர். தனது மிகுதியின் விளைவாக அனைவருக்கும் செழிப்பை வழங்குகிறார். அனைவராலும் தேடப்படுகிறார். பிரார்த்தனை செய்யப்படுகிறார். உலகில் பிரகாசிக்கிறார். ஆற்றல் மூலம் உலகத்தை ஒழுங்கு படுத்துகிறார். ஒழுக்கமாக இருக்க வேண்டியவர்களுக்குத் தேவையான தொல்லைகளைக் கொடுக்கிறார்.
- 741. மாத⁴வோ - இலட்சுமிக்கு அன்பன். தன்னைப் பற்றிய அறிவை வழங்குபவர். ஊக்குவிப்பவர். மது வித்யாவின் மூலம் அடையப்பட்டவர். மௌனம், தியானம் மற்றும் யோகம் மூலம் அடையப்பட்டவர். யாதவரான மது இனத்தில் பிறந்தவர். பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளுடன் தாய் மற்றும் தந்தையின் நித்ய உறவு.
- 742. ப⁴க்த வத்ஸலஹ - அடியார்களிடம் அன்புடையவர். யக்ஞத்தின் மூலம் தனக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் செல்பவர். பசுவுக்குக் கன்றினைப் போல தனக்குப் பிரியமான பக்தர்களை தம்மிடம் அழைத்துச் செல்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்