About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 1 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 132

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 102

ஆதா⁴ர நிலயோ தா⁴தா 
புஷ்ப ஹாஸ: ப்ரஜாக³ர:|
ஊர்த்⁴ வக³ஸ் ஸத்ப தா²சார: 
ப்ராணத³: ப்ரணவ: பண:||

  • 950. ஆதா⁴ர நிலயோ - சாதுக்களுக்கு இருப்பிடமானவர். தங்கள் நீதியான செயல்களால் உலகை ஆதரிப்பவர்களின் இருப்பிடம்.
  • 951. தா⁴தா - தர்மத்தை உபதேசிப்பவர். படைப்பவர்.
  • 952. புஷ்ப ஹாஸஃ - மலர்கின்ற மலரைப் போலும் இனியவர். ஒரு பூவைப் போல பூக்கிறார்.
  • 953. ப்ரஜாக³ரஹ - பக்தர்களின் பாதுகாப்பிற்காக இரவும் பகலும் விழித்திருப்பவர்.
  • 954. ஊர்த்⁴ வக³ஸ் - மிகவும் உயர்ந்தவர். எல்லாவற்றிற்கும் மேலானவர்.
  • 955. ஸத்ப தா²சாரஃ - பிறரை நல்வழிப்படுத்துபவர். 
  • 956. ப்ராணத³ஃ - உயிரளிப்பவர். 
  • 957. ப்ரணவஃ - தனது திருவடிகளைத் தொழுது எழச் செய்பவர். அவர் பிரணவ மந்திரத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார்.
  • 958. பணஹ - நிலை மாற்றம் செய்பவர். தலைவனாக உள்ள தான் அடியவனாக இருந்து மகிழ்பவர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.69

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.69 

யா நிஸா² ஸர்வ பூ⁴தாநாம் 
தஸ்யாம் ஜாக³ர்தி ஸம்யமீ |
யஸ்யாம் ஜாக்³ரதி பூ⁴தாநி 
ஸா நிஸா² பஸ்²யதோ முநே:||

  • யா - எது 
  • நிஸா² - இரவோ 
  • ஸர்வ - எல்லாம் 
  • பூ⁴தாநாம் - உயிர்வாழிகளுக்கு 
  • தஸ்யாம் - அதில்  
  • ஜாக³ர்தி - விழித்திருக்கிறான்  
  • ஸம்யமி - சுயக் கட்டுபாடு உள்ளவன்  
  • யஸ்யாம் - எதில் 
  • ஜாக்³ரதி - விழித்திருக்கின்றன 
  • பூ⁴தாநி - எல்லா உயிர்களும் 
  • ஸா - அதுவே 
  • நிஸா² - இரவு 
  • பஸ்²யதோ - ஆய்ந்து உண்மையை உணர்ந்த  
  • முநேஹே - முனிவன்

புலன்களை வென்ற யோகிக்கு உலகக் காட்சிகள், உலக விஷயங்கள் எல்லாம் இருள் போன்று மறைந்து கிடக்கின்றன். பரமாத்ம தத்துவ சம்பந்தமான யாவும் பகல் போன்று அவனுக்கு விளங்குகின்றன. புலன் இன்பங்களில் நாட்டம் உடையவர்களுக்கு உலக காட்சி பகல். புலன்களை அடக்கிய யோகிக்கு இறைக்காட்சி பகல். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.22

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.22

அத²ர் வாங்கி³ ரஸாம் ஆஸீத்
ஸுமந்துர் தா³ருணோ முநி:|
இதிஹாஸ புராணா நாம் 
பிதா மே ரோம ஹர்ஷண:||

  • தா³ருணோ - மிகவும் பயங்கரமான 
  • ஸுமந்துர் முநிஹி - ஸுமந்து என்ற மஹரிஷி (அபிசார ப்ரயோகத்தால் தாருண என்று கூறப்பட்டது)
  • அத²ர் வாங்கி³ ரஸாம் -  அதர்வண வேத பாரங்கதராகவும் 
  • மே பிதா -   எனது தந்தையான 
  • ரோம ஹர்ஷணஹ - ரோம ஹர்ஷணர் 
  • இதிஹாஸ புராணா நாம் -  இதிஹாஸ புராணங்களில் கரை கண்டவராகவும் 
  • ஆஸீத்து - ஆனார் 

அதர்வண வேதத்தினை தருணனுடைய மைந்தரான 'ஸுமந்து' என்ற முனிவரும் அத்யயனம் செய்தார்கள். இதிஹாஸ புராணங்களைத் தெரிந்து கொண்டவர் எனது தந்தையான 'ரோம ஹர்ஷணர்'. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.67

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.67

தத: ப்ரீதம நாஸ்தேந 
விஸ்²வஸ்த: ஸ மஹா கபி:|
கிஷ்கிந்தா⁴ம் ராம ஸஹிதோ 
ஜகா³ம ச கு³ஹாம் ததா³|| 

  • ததஃ - பிறகு 
  • தேந - அதனால் 
  • விஸ்²வஸ் தஸ் - நம்பிக்கை அடைந்த 
  • ப்ரீதமநாஸ் - ஸந்துஷ்ட மனம் உடையவரான 
  • மஹா கபிஹி - பெரிய வாநரரான 
  • ஸ - அவர் 
  • ராம ஸஹிதோ - இராமரோடு கூடியவராக 
  • ததா³ - அப்பொழுது 
  • கிஷ்கிந்தா⁴ம் - கிஷ்கிந்தை என்கிற 
  • கு³ஹாம் - குஹைக்கு 
  • ச ஜகா³ம - மறுபடி சென்றார்

அந்தப் பெரும் வாநரரான ஸுக்ரீவன், ராமரின் செயலால் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், ராமரின் பலத்தில் நம்பிக்கையுடனும், குகை போன்றிருக்கும் கிஷ்கிந்தைக்கு அந்த ராமருடன் சேர்ந்து சென்றான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 109 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 109 - எம்பிரான் கண்ணன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

கிண்கிணி கட்டிக்* கிறி கட்டிக் கையினில்*
கங்கணம் இட்டுக்* கழுத்தில் தொடர் கட்டித்* 
தன் கணத்தாலே* சதிரா நடந்து வந்து*
என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான்* 
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்|

  • என் கண்ணன் - என் கண்ணபிரான்
  • கிண்கிணி - இடுப்பில் அரைச் சதங்கையை
  • கட்டி - கட்டிக் கொண்டும்
  • கிறி - சிறுப் பவள வடத்தை
  • கையினிலே - முன் கையிலே
  • கட்டி - கட்டிக் கொண்டும்
  • கங்கணம் - தோள் வளையை
  • இட்டு - தோள்களில் சாத்திக் கொண்டும்
  • கழுத்தில் - திருக் கழுத்திலே
  • தொடர் - சங்கிலியை
  • கட்டி - அணிந்து கொண்டும்
  • தம் கணத்தாலே - இன்னும் அணிந்து கொண்டுள்ள மற்ற திருவாபரணங்களின் திரளோடு கூட 
  • சதிர் ஆ நடந்து வந்து - அழகாக, நளினமாக நடந்து வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • எம்பிரான் - என் பெருமான்
  • என்னைப்  - என்னுடைய 
  • புறம் புல்குவான்!  - முதுகை கட்டிக் கொள்வான்

கால்களில் கட்டிய கிண்கிணி என ஓசையெழுப்பும் சதங்கைகளோடும், கைகளில் கட்டிய சிறு பவள வடத்தோடும், திருத்தோள்களில் அணிந்த தோள்வளைகளோடும், கழுத்தில் சாத்திய சங்கிலியோடும் மற்றும் பலவித திருவாபரணங்களைச் சூட்டியவாறே கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! என் தலைவன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 033 - திருவைகுந்த விண்ணகரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

033. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
முப்பத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள் 
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1228 - 1237 - மூன்றாம் பத்து - ஒண்பதாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

வணங்கேன் பிற தெய்வம் மால் அடியார் அல்லாக்*
குணங்கேடர் தங்களுடன் கூடேன் இணங்கி நின்று*
வைகுந்த விண்ணகரம் வாழ்த்துவேன் ஈது அன்றோ*
வைகுந்த விண்ணகர வாழ்வு*

  • பிற தெய்வம் – திருமால் அல்லாத வேறு தெய்வங்களை
  • வணங்கேன் – நான் வணங்க மாட்டேன்
  • மால் அடியார் அல்லா – திருமாலினது அடியவர் அல்லாத
  • குணம் கேடர்தங்களுடன் – நற்குணம் இல்லாதவரோடு
  • கூடேன் – சேர மாட்டேன்
  • இணங்கிநின்று – திருமால் அடியாருடன் கூடி நின்று
  • வைகுந்த விண்ணகரம் – திருவைகுந்த விண்ணகரம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • வாழ்த்துவேன் – துதிப்பேன்
  • ஈது அன்றோ – இவ்வாறு அடியவருடன் கூடித் துதித்தல் அல்லவோ
  • வைகுந்த விண் நகரம் வாழ்வு – ஸ்ரீ வைகுண்டம் என்னும் திவ்ய நகரத்தில் உண்டாகின்ற நல்வாழ்க்கையாவது

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 76

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 21

ஸ்கந்தம் 03

மைத்ரேயர் தேவஹூதியின் சரித்திரத்தைச் சொல்லத் துவங்கினார்.

தனது பெற்றோர் புறப்பட்டுச் சென்றதும், கற்புக்கரசியான தேவஹூதி, தன் கணவரின் உள்ளத்தைப் புரிந்து கொண்டு, பார்வதி தேவி பரமேஸ்வரனுக்கு சேவை செய்வது போல் பணிவிடை செய்து வந்தாள்.


மிகுந்த நம்பிக்கை, மனத்தூய்மை, அன்பு கலந்த மரியாதை, தன்னடக்கம், பணிவிடை செய்வதில் ஆவல், நட்புணர்வு, இன்சொற்கள், ஆகியவையுடன் மனதார பணிவிடைகள் செய்தாள். உலகியல் சுகம், கபடு, பகைமை, பேராசை, கீழான ஒழுக்கம், செருக்கு, சோம்பல், ஆகியவற்றைத் துறந்தாள். ஒளியே திருமேனி கொண்டாற்போல் விளங்கும் கணவரைப் பணி விடைகளால் ஆராதித்தாள். தெய்வத்திற்கும் மேலாகக் கணவரை நினைத்தாள்.

திருமணம் நடைபெற்றதும், கர்தமர் இயல்பாக எழும் பகவத் சிந்தனையினால் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். ஸமாதி நிலையில் எவ்வளவு காலம் இருந்தாரோ தெரியாது. தியானத்தில் இருக்கும் கணவருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தேவஹூதி பணிவிடைகள் செய்தாள்.

அனவரதமும், அவரைச் சுற்றி சுத்தம்‌ செய்வதும், விசிறுவதும், அவரது மேனியை பூச்சிகள் தொந்தரவு செய்யாமலும், பார்த்துக் கொண்டாள். உலகப் ப்ரக்ஞையே இல்லாமல் சிலை போல் அமர்ந்து வெகுநாள்கள் ஸமாதியிலேயே இருந்தார் கர்தம ரிஷி.

பிறகு ஒருநாள் தியானம் கலைந்தபோது, தன் மனைவியான தேவஹுதியைக் கண்டார். தனக்குச் செய்யும் பணி விடைகளாலேயே தவம் கைகூடப்பெற்று, மிகுந்த தேஜஸ்வினியாக இருந்த தேவஹூதி, நிறைய விரதங்கள் இருந்து உடல் மெலிந்திருந்தாள்.

திருமண காலத்தில் அவளின் அழகையும், இப்போது தனக்குப் பணிவிடை செய்ததனால் மிகவும் மெலிந்திருந்த தேவ ஹூதியையும் ஒப்பு நோக்கி அவள் விஷயத்தில் மிகவும் மகிழ்ந்து மனம் கசிந்தார்.

மனைவியைப் பார்த்துச் சொன்னார். மனு மஹாராஜனின் மகளான நீ, என்னிடம் காட்டும்‌ மரியாதை மிக உயர்ந்தது. உயிர் கொண்ட அனைத்து ஜீவன்களுக்கும் தத்தம் உடலே முக்கியமாய் இருக்க, நீயோ எனக்குப் பணிவிடை செய்யும் ஆர்வத்தினால் உன் உடலை அலட்சியம் செய்துவிட்டாய்.

எனது தவம், தியானம், உபாசனை, பக்தி இவற்றால் எனக்குக் கிடைத்த இறைவனின் அருள் ப்ரசாதங்களான செல்வங்களை உனக்குக் காட்டுகிறேன். இவற்றை நான் கேட்கவில்லை. இறைவனே விரும்பி எனக்களித்தவை இவை. இவற்றில் உனக்கும் பங்கு உண்டு.

இந்த திவ்ய காட்சிகளைவிட உலகில் வேறெதுவும் பெருமை வாய்ந்து இல்லை. பகவானின் புருவ நெறிப்பினால் அழியக் கூடியவை உலகியல் செல்வங்கள். நீ உன் பிறவிப் பயனை அடைந்தாய். உன் கற்பின் பெருமையால் இறை ப்ராசாதம் உனக்கு கிட்டியது, என்றார்.

கணவரின் அன்பான பேச்சைக்கேட்டு வெட்கத்தால் சிவந்த தேவஹூதி, அவர் யோகசித்திகளிலும் , ஸகல கலைகளிலும் வல்லவர் என்று உணர்ந்து கொண்டாள். அன்பால் தழுதழுத்த குரலில் பேசலானாள்.

தங்களது யோக சித்திகளாலும், தவத்தாலும் பெறப்பட்ட இச்செல்வங்கள் ஒன்றும் எனக்கு வியப்பளிக்கவில்லை. கற்புக்கரசியான மனைவிக்கு கணவன் மூலம் பெறப்படும் குழந்தையே பெறும்பேறு.

நமது இல்லறம் செழிக்க நான் பின்பற்றவேண்டியவற்றைக் கூறுங்கள். நான் இப்போது பலமற்றவளாக இருக்கிறேன். தங்களுடன் இன்பம் துய்க்க ஏற்றவளாக நான் மாறுகிறேன். என்னைக் காமதேவன் வாட்டுகிறான். நாம் இன்பமாக வாழ ஒரு மாளிகையையும் தயார் செய்து கொடுக்க வேண்டும், என்றாள்.

தன் அன்பு மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய கர்தமர், விருப்பம்போல் செல்லக்கூடிய ஒரு விமானத்தைத் தன் யோக சக்தியால் உண்டு பண்ணினார்.

அந்த விமானமே அரண்மனைபோல் இருந்தது. தங்கமயமானது. அழகானது. ரத்தினங்கள் இழைத்த தூண்கள் கொண்டது. ஏராளமான செல்வங்களை உடையது. பலவிதமான வண்ணங்களாலும், கொடிகளாலும், திரைச் சீலைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதில் பல அடுக்குகள் கொண்ட அறைகள் இருந்தன. எல்லாவற்றிலும் தனித்தனியே கட்டில்கள், விசிறிகள், இருக்கைகள் அனைத்தும் அழகுற விளங்கின.

சுவர்கள் நெடுக அழகிய ஓவியங்கள் அலங்கரித்தன. பவளப் படிகள், கதவுகள் வைரத்தால் ஆனவை. மேற்கூரை இந்திரநீலக் கற்களால் ஆனது. அழகான தங்க கோபுர கலசங்கள். விமானங்களில் ஆங்காங்கே மாடப்புறாக்கள், அன்னப் பறவைகள் செதுக்கப்பட்டிருந்தன. அவற்றை உண்மையென நினைத்து பல பறவைகள் வந்து உறவாடின. அங்கு வசதிக்கேற்றவாறு, விளையாட்டு மைதானங்கள், ஓய்வறைகள், உள் முற்றங்கள், வெளி முற்றங்கள் எல்லாம் இருந்தன. இப்படியாக கர்தமர் நிர்மாணித்த விமானம் அவருக்கே வியப்பூட்டியது. ஆனால், இவற்றையெல்லாம் பார்த்து தேவஹூதி மகிழ்ச்சி அடையவில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 131

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 101

அநாதி³ர் பூ⁴ர்பு⁴வோ லக்ஷ்மீஸ் 
ஸுவீரோ ருசி ராங்க³த³:|
ஜநநோ ஜந ஜந்மாதி³ர் 
பீ⁴மோ பீ⁴ம பராக்ரம:||

  • 941. அநாதி³ர் -  பிரமன், ருத்ரன் முதலானோரால் பகவான் அறியப்படாதவர். ஆரம்பம் இல்லாதவர்.
  • 942. பூ⁴ர்பு⁴வோ - உண்மையாக வாழ்பவர் உள்ளத்து இருப்பிடமாக உள்ளவர். அனைவரையும் ஆதரிப்பவர்.
  • 943. லக்ஷ்மீஸ் - தானே எல்லாவிதச் செல்வமாக உள்ளவர்.
  • 944. ஸுவீரோ - சிறந்த வீரம் உள்ளவர். பெரும் வீரம் கொண்டவர்.
  • 945. ருசி ராங்க³த³ஹ - தனது அழகான திருமேனியை அநுபவிக்குமாறு அடியார்களுக்குத் தருபவர்.
  • 946. ஜநநோ - பிறப்பிப்பவர். படைப்பாளர்.
  • 947. ஜந ஜந்மாதி³ர் - பிறவிப் பயனாக உள்ளவர். எல்லா உயிர்களுக்கும் மூல காரணமானவர்.
  • 948. பீ⁴மோ - பயங்கரன். தர்மத்தை பின்பற்றாதவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவர்.
  • 949. பீ⁴ம பராக்ரமஹ - பயங்கரமான பராக்ரமம் உடையவர். பயங்கர சக்திகளைக் கொண்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.68

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.68 

தஸ்மாத்³ யஸ்ய மஹா பா³ஹோ 
நிக்³ரு ஹீதாநி ஸர்வஸ²:|
இந்த்³ரியாணீந் த்³ரியார் தே²ப்⁴யஸ் 
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா||

  • தஸ்மாத்³ - எனவே  
  • யஸ்ய - ஒருவனது  
  • மஹா பா³ஹோ - பலம் பொருந்திய புயங்களை உடையவனே  
  • நிக்³ரு ஹீதாநி - கட்டுப்படுத்தப்பட்ட  
  • ஸர்வஸ²ஹ - முழுவதுமாக  
  • இந்த்³ரியாணி - புலன்கள்  
  • இந்த்³ரிய - புலனுகர்ச்சி
  • அர்தே²ப்⁴யஸ் - போக விஷயங்களில் இருந்து   
  • தஸ்ய - அவனது  
  • ப்ரஜ்ஞா - அறிவு   
  • ப்ரதிஷ்டி²தா - நிலைபெற்றது

எனவே, பலம் பொருந்திய புயங்களை உடையவனே, ஒருவனது புலன்கள் முழுவதுமாக புலனுகர்ச்சிப் பொருட்களிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறதோ, அவனது அறிவு நிலை பெற்றது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.21

தத்ர ருக்³ வேத³ த⁴ர: பைல: 
ஸாம கோ³ஜை மிநி: கவி:|
வைஸ²ம் பாயந ஏவைகோ 
நிஷ்ணாதோ யஜுஷாம் உத||

  • தத்ர - அவைகளில் 
  • ருக்³ வேத³ த⁴ரஃ -  ரிக் வேதத்தில் நிபுணராக 
  • பைலஹ -  பைலர் என்ற மஹரிஷியும் 
  • கவிஹி ஜைமிநிஹ் -  புலவரான ஜைமிநி முனிவர் 
  • ஸாம கோ³ -  ஸாம வேதத்தில் நிபுணராக 
  • உத - மேலும் 
  • யஜுஷாம் - யஜுர் வேதத்தில்
  • நிஷ்ணாதோ -   கரை கண்டவராக 
  • வைஸ²ம் பாயந -  வைஸம் பாயநர் 
  • ஏக ஏவ -  ஒருவரும் 

இவைகளில் ரிக் வேதத்தை 'பைலர்' என்பவரும், ஸாம வேதத்தைக் கவியாகிய 'ஜைமிநி' முனிவரும், யஜுர் வேதத்தை 'வைசம்பாயனர்' என்ற முனிவரும், 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.66

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.66

பி³பே⁴த³ ச புநஸ் தாலாந் 
ஸப்தை கேந மஹே ஷுணா|
கி³ரிம் ரஸா தலம் சைவ 
ஜநயந் ப்ரத் யயம் ததா³|| 

  • புநஸ் - மேலும் 
  • ஸப்தை - ஏழு 
  • தாலாந் ச - ஸால மரங்களையும் 
  • கி³ரிம் ச - பர்வதத்தையும் 
  • ரஸா தலம் ஏவ - கீழுலகத்தையும் 
  • ப்ரத் யயம் - நம்பிக்கையை 
  • ஜநயந் - உண்டு பண்ணுகிறவராய் 
  • ஏகேந - ஒரு 
  • மஹே ஷுணா - பெரிய பாணத்தால் 
  • ததா³ - அப்பொழுது 
  • பி³பே⁴த³ - பிளந்தார்

பிறகும் ராமர், ஒரே பெருங்கணையை ஏவி ஸுக்ரீவனின் மனத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, ஏழு சால மரா மரங்களையும், ஒரு மலையையும், அதன் தொடர்ச்சியாக பூமியின் அடியில் இருக்கும் ரஸா தலத்தையும் அந்த ஒரே கணையால் துளைத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 108 - பெரியாழ்வார் திருமொழி - 1.9.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 108 - கோவிந்தன் என்னை கட்டிக் கொள்வான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்

வட்டு நடுவே* வளர்கின்ற* 
மாணிக்க மொட்டு நுனையில்* முளைக்கின்ற முத்தே போல்* 
சொட்டுச் சொட்டு என்னத்* துளிக்கத் துளிக்க* 
என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான்* 
கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்| (2)

  • என் குட்டன் - என் பிள்ளை
  • வட்டு நிடுவே - இரண்டு நீல ரத்ந வட்டுகளின் நிடுவே
  • வளர்கின்ற - வளர்த்துக் கொண்டிருப்பதான
  • மாணிக்கம் - இந்திர நீலமயமான 
  • மொட்டு - அரும்பினுடைய
  • நுனையில் - நுனியில்
  • முளைக்கின்ற - உண்டாகின்ற
  • முத்தே போல் - முத்துக்கள் போன்று
  • சொட்டு சொட்டு என்ன - அம்மாணிக்க மொட்டு சொட்டுச் சொட்டென்ற ஓசை உண்டாகும்படி
  • துளிர்க்க துளிர்க்க - பல தரம் துளியா நிற்க
  • வந்து - ஓடி வந்து
  • என்னை - என்னுடைய
  • புறம் - முதுகை
  • புல்குவான் - கட்டிக் கொள்வான்
  • கோவிந்தன் - கண்ணன்
  • என்னைப் என்னுடைய
  • புறம் புல்குவான்! - முதுகை கட்டிக் கொள்வான்

ஒரு மாணிக்க மொட்டின் நுனியில் முத்துக்கள் முளைப்பது போல் குழந்தையான கண்ணனின் குறியிலிருந்து சொட்டு சொட்டாக சிறுநீர் துளிர்க்கிறதாம்! இந்த நிலையிலேயே கண்ணன் என் பின்னால் வந்து என்னைக் கட்டிக் கொள்வான்! கோவிந்தன் கண்ணன் என்னைப் பின்புறம் வந்து கட்டிக் கொள்வான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 033 - திருவைகுந்த விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

033. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
முப்பத்தி மூன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ வைகுந்தநாதன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ வைகுந்தவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ வைகுந்தநாதன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: வைகுந்தநாதன்
  • பெருமாள் உற்சவர்: தாமரைக் கண்ணன்
  • தாயார் மூலவர்: வைகுந்தவல்லி
  • திருமுகமண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: வீற்றிருந்த 
  • புஷ்கரிணி: லட்சுமி, உத்தரங்க
  • தீர்த்தம்: விரஜா 
  • விமானம்: அநந்த ஸத்ய வர்த்தக
  • ப்ரத்யக்ஷம்:  உதங்க மஹரிஷி, உபரிஸரவஸு
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

காலம் முடிந்த பிறகு தான் பெருமாளை வைகுண்டத்தில் தரிசிக்க முடியும். ஆனால், பூலோகத்தில் நாம் வாழும் காலத்திலேயே தரிசிக்க இத்தலத்திற்கு செல்லலாம். வைகுண்டத்தில் பெருமாள் தேவர்களுக்கு காட்சி தருவது போல், இங்கும் காட்சி தருவதால் பரமபதத்திற்கு சமமான தலம்.

ராமபிரான் அவதரித்த இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் ஸ்வேதகேது. நீதி நெறி தவறாதவன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவன். தெய்வ பக்தி கொண்டவன். இவனது மனைவிக்கும் இவனுக்கும் மகா விஷ்ணுவை அவர் வசிக்கும் இடமான வைகுண்டத்திற்கு சென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. ஸ்வேதகேது அரசனானதால் தனது ஆட்சி கடமைகளை முடித்து விட்டு மனைவி தமயந்தியுடன் தவம் செய்ய புறப்பட்டான். சுற்றிலும் தீ வளர்த்து, சூரியனைப் பார்த்தபடி தீயின் நடுவில் நின்று இருவரும் மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார்கள். 

நீண்ட நாள் இப்படி தவம் இருந்து தங்களது பூதவுடலை துறந்து வைகுண்டம் சென்றார்கள். ஆனால் அங்கு யாரை தரிசிக்க தவம் இருந்தார்களோ அந்த வைகுண்ட வாசனை காணவில்லை. இவர்கள் வருத்தத்துடன் இருந்த போது அங்கு வந்த நாரதரின் பாதங்களில் விழுந்து இருவரும் வணங்கினார்கள். வைகுண்டத்தில் விஷ்ணுவை தரிசிக்க இயலாமல் போனதற்கான காரணத்தை கேட்டனர். அதற்கு நாரதர், "நீங்கள் இருவரும் கடுமையாக தவம் இருந்தாலும், பூமியில் தான தர்மங்கள் செய்யவில்லை. அத்துடன் இறைவனுக்காக சாதாரண ஹோமம் கூட செய்யவில்லை. எனவே தான் வைகுண்டத்தில் விஷ்ணுவின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு பிராயச்சித்தமாக பூமியில் காவிரி யாற்றின் கரையில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரரை வணங்கி, முறையிட்டால் அவர் அனுக்கிரகத்துடன் வைகுண்ட பெருமாளின் தரிசனம் கிடைக்கும்," என்றார். 

ஸ்வேதகேதுவும் தமயந்தியும் ஐராவதேஸ்வரரை வழிபட்டு பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டினர். இவர்களது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் "நானும் பெருமாளின் தரிசனத்திற்கு காத்திருக்கிறேன். மூவரும் மகாவிஷ்ணுவின் தரிசனத்திற்கு தவம் இருப்போம்," என்றார். இவர்களுடன் உதங்க முனிவரும் சேர்ந்து தவம் இருந்தார். நீண்ட காலத்திற்கு பின் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராக நால்வருக்கும் காட்சி தந்தார். அப்போது ஐராவதேஸ்வரர், பெருமாளிடம், "பெருமாளே! நீங்கள் காட்சி கொடுத்த இந்த இடம் இன்று முதல் வைகுண்ட விண்ணகரம் எனவும், உங்கள் திருநாமம் வைகுண்டநாதர் எனவும் அழைக்கப்பட வேண்டும்," என வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே வைகுண்டவாசனாக பூலோகத்தில் இருக்கிறார். பெருமாள் வைகுண்ட நாதன் எனவும், தாயார் வைகுந்தவல்லி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 75

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 20

ஸ்கந்தம் 03

ஸ்வாயம்புவ மனு தன் மகள், மனைவி இருவரின் விருப்பத்தையும் அறிந்துகொண்டு, நற்குணக் கொள்கலனான கர்தம மஹரிஷிக்கு தன் மகளான தேவஹூதியை மகிழ்ச்சியோடு கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.

அவளுக்கு விவாஹ காலத்தில் கொடுக்க வேண்டிய அத்தனை சீர் வரிசைகளையும், ஆபரணங்களையும், குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து உபகரணங்களையும் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.


பெண்ணைத் தகுந்த வரனுக்குத் திருமணம் செய்து கொடுத்து கவலை நீங்கப் பெறினும், அவளைப் பிரிவதனால் மிகுந்த மன வருத்தம் கொண்டார். பாசத்துடன் நா தழுதழுக்க 'அம்மா, மகளே', என்று கேவிக் கலங்கி அழுதார்.

பின்னர் பலவாறு மணமக்களை ஆசீர்வதித்து விட்டு மனைவியுடனும், பரிவாரங்களுடனும் கிளம்பினார்.

கர்தமரிடம் விடைபெற்றுக் கொண்டு ஸரஸ்வதி நதியின் இரு‌ மருங்கிலும் அமைந்துள்ள முனிவர்களின் ஆசிரமங்களின் அழகை ரசித்துக் கொண்டே தன் தலைநகரான பர்ஹிஷ்மதி நகருக்குள்‌ நுழைந்தார். ப்ரும்மாவர்த்தத்தில் இருந்து தமது அரசன் திரும்பி வருவது கண்டு குடிமக்கள் மகிழ்ந்து மேள தாளங்களுடன் வரவேற்றனர்.

அனைத்துச் செல்வங்களும் நிரம்பியது மனு மன்னனின் தலைநகரமான பர்ஹிஷ்மதி நகரம். ரஸாதலத்தில் இருந்து பூமியைத் தூக்கி வந்த யக்ஞ வராஹ மூர்த்தி தன் உடலைச் சிலிர்த்துக் கொண்ட போது அவரது ரோமங்கள் இங்கு விழுந்தன. அவை பச்சை நிறம் கொண்ட தர்பைகளாகவும் நாணல்களாகவும் ஆகின. அவற்றைக் கொண்டு முனிவர்கள்‌ வேள்விகளுக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை விரட்டியடித்தனர்.

மனு இந்த தர்பைகளைப் பரப்பி யக்ஞ புருஷரான நாராயணனை பூஜித்தார். அந்த தர்பைகளுக்கு பர்ஹிஸ் என்று பெயர். அந்த நாணல்கள் நிரம்பிய நகரம் பர்ஹிஷ்மதி.


தன் அரண்மனைக்குள் சென்று தர்மத்துடன் கூடிய வாழ்க்கையை நடத்தினார். கந்தர்வர்கள்‌ அதிகாலையில்‌ அவர் புகழைப் பாடிய போதும், அதில் மனத்தைச் செலுத்தாமல், ஸ்ரீ ஹரியின் புகழையே மனதார நினைத்தார்.

பகவான் விஷ்ணுவின் புகழையே நினைப்பது, அவரது திருவிளையாடல் புராணங்களையே கேட்பது, அதையே நினைத்து நினைத்து உருகுவது, அதைப் பற்றியே எழுதுவது, அதை உலகெங்கும் பரப்புவது என்று இருந்ததனால், அந்த மன்வந்தரம் முழுவதும் அவரது நேரம் வீணாகவே இல்லை.

இவ்வாறு மனு தனது ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி (தூக்கம்) மூன்று நிலைகளிலும், ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின்‌ நிலைகளிலும் பகவானிடமே பக்தி செய்தார்.

இவ்வாறே ஸ்வாயம்புவ மனு தன் 71 சதுர் யுகங்களையும்‌ கழித்தார். விதுரா, பகவான் ஸ்ரீ ஹரியைச் சரணடைவோரை உடல் பற்றிய, விதிப் பயனால் விளையக் கூடிய, மற்றும் ஜீவ ராசிகளாலும்‌  மனிதர்களாலும், உண்டாகக் கூடிய துன்பங்கள் என்ன செய்து விடும்? 

அனைத்து ஜீவராசிகளுக்கும்‌ நன்மையைச் சிந்திக்கும் ஸ்வாயம்புவ‌ மனு முனிவர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்க அனைத்து வர்ணசிரமங்களின்‌ நியதியை வகுத்தார். அதுவே இன்றும் மனுநீதி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

மிகவும்‌ அற்புதமான மனுவின் சரித்ரம் புண்ணியகரமானது. தொடர்ந்து அவரது மகளான தேவஹூதியின் கதையைப் பார்ப்போம், என்றார் மைத்ரேயர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்