About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 25 January 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 98

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 68

அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ⁴ 
விஸு² த்³ தா⁴த்மா விஸோ²த⁴ந:|
அநிருத்³தோ⁴ ப்ரதி ரத²: 
ப்ரத்யும்நோ மித விக்ரம:||

  • 639. அர்ச்சிஷ் மாந் - பேரொளியை உடையவர். மிகுந்த பொலிவு கொண்டவர்.
  • 640. அர்ச்சிதஹ் - வணங்கப்படுபவர். அர்ச்சிக்கப் படுபவர். அர்ச்சாரூபி.
  • 641. கும்போ⁴ - திவ்ய தேசங்களில் விளங்குபவர். ஆசைப் பொருளாக இருப்பவர். இந்த உலகத்தை தன் புகழால் நிரப்புபவர். பூமியை மூடுபவர்.
  • 642. விஸு²த்³தா⁴த்மா - தன்னையே அருள் புரியும் இயல்பினன். தூய இயல்புடையவர்.
  • 643. விஸோ²த⁴நஹ - அமலன். சுத்தியைத் தருபவர். தூய்மையாக்குபவர்.
  • 644. அநிருத்³தோ⁴ - வியூஹ மூர்த்தி. பாற்கடலில் பள்ளி கொள்பவர். தடையற்றவர்.
  • 645. அப்ரதி ரத²ஃ - ஒப்பற்றவர்.
  • 646. ப்ரத்யும்நோ - எல்லாவற்றையும் ஒளிரச் செய்பவர். ஆசைகள் அனைத்தையும் அருளுபவர். பெரும் பலம் கொண்டவர்.
  • 647. அமித விக்ரமஹ - அளவற்ற திருவடிகளை உடையவர். அளவற்ற ஆற்றல், ஒளி உடையவர். அளவிட முடியாத படிகளை உடையவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.35 

ப⁴யாத்³ ரணாது³ பரதம் 
மம்ஸ் யந்தே த்வாம் மஹா ரதா²:|
யேஷாம் ச த்வம் ப³ஹுமதோ 
பூ⁴த்வா யாஸ் யஸி லாக⁴வம்||

  • ப⁴யாத் - பயத்தால் 
  • ரணாத்³ - போர்க்களத்திலிருந்து 
  • உபரதம் - விலகி விட்டதாக 
  • மம்ஸ் யந்தே - எண்ணுவர் 
  • த்வாம் - நீ 
  • மஹாரதா²ஹ - மிகச்சிறந்த போர்த்தலைவர்கள் 
  • யேஷாம் - அவர்களில் 
  • ச - மேலும் 
  • த்வம் - நீ 
  • ப³ஹுமதோ - பெருமதிப்பு 
  • பூ⁴த்வா - ஆவாய் 
  • யாஸ் யஸி - இழப்பாய் 
  • லாக⁴வம் - மதிப்பிழந்த
மிகச் சிறந்த போர் தலைவர்கள், நீ பயத்தால் போர்க் களத்தில் இருந்து விலகி விட்டதாக எண்ணுவர். நீ பெருமதிப்பை இழப்பாய். அவர்களிடம் நீ மதிப்பை இழந்ததாய் ஆவாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.33

யத்ரே மே ஸத³ ஸத்³ ரூபே 
ப்ரதி ஷித்³தே⁴ ஸ்வஸம் விதா³|
அவித்³ய யாத்மநி க்ருதே 
இதி தத்³ ப்³ரஹ்ம த³ர்ஸ²நம்||

  • யத்ர - எப்பொழுது 
  • இமே -  இந்த 
  • ஸத³ ஸத்³ ரூபே -  ஸ்தூல ஸூக்ஷமமான உருவங்கள்
  • அவித்³யயா - அறியாமையால் 
  • ஆத்மநி -  ஆத்மாவில் 
  • க்ருதே -  கற்பிக்கப்பட்டவை 
  • இதி -  என்ற காரணத்தால் 
  • ஸ்வஸம் விதா³ - நன்கு ஏற்பட்ட ஸ்வரூப ஞானத்தால்
  • ப்ரதி ஷித்³தே⁴ -  தடுக்கப்பட்டதுகள் ஆகிறதோ
  • தத்³ - அப்பொழுது ஜீவன் 
  • த³ர்ஸ²நம் - ஞான ஸ்வருபமான 
  • ப்³ரஹ்ம -  பிரம்மாவாக ஆகிறான் 

காரிய ரூபமாகிய ஸ்தூல ஸரீரம், காரண ரூபமாகிய லிங்க ஸரீரம், இவையிரண்டையும் பரமாத்மாவிடம் ஏற்றிக் கூறப்படுவதற்குக் காரணம், அவித்யை என்கிற அறியாமையே. உண்மையில் ஆத்மாவிற்கு இவ்விரண்டின் சம்பந்தமே இல்லை. இந்த உண்மை ஸ்வரூப ஞானத்தை, ஜீவன் உணர்ந்த அக்கணமே, அவன் ஞான ரூபியான பிரும்மமாகவே ஆகிறான். ஸ்வரூப ஞானம் என்பது ஜீவாத்மாவை ஸ்தூல ஸூக்ஷம தேங்களுடன் சம்பந்தப்படுத்தாமல் இருப்பது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.33

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.33

ராஜா த³ஸ²ரத²: ஸ்வர்க³ம் 
ஜகா³ம விலபந் ஸுதம்|
ம்ருதே து தஸ்மிந் ப⁴ரதோ 
வஸிஷ்ட² ப்ரமுகை²ர் த்³விஜை:|| 

  • ராஜா - மகாராஜாவான
  • த³ஸ²ரத²ஸ் -  தஸரதர்
  • ஸுதம் - குமாரனை நினைத்து
  • விலபந் -  புலம்பிக் கொண்டு
  • ஸ்வர்க³ம்  - ஸ்வர்க்கத்தை 
  • ஜகா³ம -  அடைந்தார்
  • தஸ்மிந்  - அவர் 
  • ம்ருதே - மரித்த பொழுது
  • வஸிஷ்ட² - வஸிஷ்டரை
  • ப்ரமுகை²ர் - முக்கியராக உடைய
  • த்³விஜைஹி - பிராஹ்மணர்களால்
  • து -  போதிலும்
  • ப⁴ரதோ  - பரதர்

ராஜா தசரதன் துன்புற்று தன் மகனுக்காக அழுதவாறே சொர்க்கத்தை அடைந்தான். தசரதன் இறந்ததும், வசிஷ்டராலும், பிற முக்கிய  பிராஹ்மணர்களாலும் இரு பிறப்பாளர்களாலும் பரதன்,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 78 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 78 - திருக்குடந்தையில் பள்ளி கொண்டவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - நான்காம் பாசுரம்

தூ நிலா முற்றத்தே* போந்து விளையாட* 
வான் நிலா அம்புலீ* சந்திரா! வாவென்று*
நீ நிலா நிற் புகழா நின்* ஆயர்தம்* 
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி* 
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி|

  • வான் - ஆகாசத்திலே
  • நிலா - விளங்குகின்ற
  • அம்புலி - அம்புலியே!
  • சந்திரா - சந்திரனே!
  • தூ - வெண்மையான
  • நிலா - நிலவொளி திகழும்
  • முற்றத்தே - முற்றத்திலே
  • போந்து - வந்து
  • நீ - நீ
  • விளையாட - நான் விளையாடும்படி
  • வா - வருவாயாக
  • என்று - என்று சந்திரனை அழைத்து
  • நிலா - நின்று கொண்டு
  • நின் - உன்னை
  • புகழாநின்ற - புகழ்கின்ற
  • ஆயர் தம் - இடையர்களுடைய
  • கோ - தலைவராகிய நந்த கோபர்
  • நிலாவ - மனம் மகிழும்படி 
  • சப்பாணி கொட்டாய் - சப்பாணி கொட்டி அருள வேணும்
  • குடந்தை - திருக்குடந்தையில்
  • கிடந்தானே! - பள்ளி கொண்டவனே
  • சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்

வெண்மையான நிலா காயும் முற்றத்தில் இருந்துகொண்டு வானில் உலாவும் சந்திரனை உன்னுடன் விளையாட அழைப்பதை இடையர்களின் தலைவரான நந்தகோபர் பெருமிதத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார் கண்ணா. அவர் மனம் குளிரக் கைககளைக் கொட்ட வேண்டும். திருக்குடந்தையில் பள்ளி கொண்டவனே! கைகளைக் கொட்டவும்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 022 - திருவெள்ளியங்குடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

022. திருவெள்ளியங்குடி (கும்பகோணம்)
இருபத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ கோலவில்லி ராமர் திருக்கோயில்

ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ கோலவில்லி ராமர் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: கோலவில்லி ராமரன், ஸ்ரீராப்தி நாதன்
  • பெருமாள் உற்சவர்: சிருங்கார சுந்தரர் (தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் இப்பெருமானுக்கு  விருப்பம் அதிகம்)
  • தாயார் மூலவர்: மரகதவல்லி
  • தாயார் உற்சவர்: ஸ்ரீதேவி, பூதேவி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி/தீர்த்தம்: சுக்கிர, பிரம்ம, பரசுராம, இந்திர 
  • விமானம்: புஷ்கலா வர்த்தக 
  • ஸ்தல விருக்ஷம்: செவ்வாழை
  • ப்ரத்யக்ஷம்: சுக்ரன், பிரமன், பராசரர், இந்திரன், மயன், மார்கண்டேயன், பூமிதேவி
  • ஆகமம்: வைகாநஸம்
  • ஸம்ப்ரதாயம்: வட கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலத்தின் அருகில் சேங்கானூர் என்ற ஊர் உள்ளது. இது தான் வைணவ மேதை பெரியவாச்சான் பிள்ளையின் அவதார தலமாகும். காஞ்சிப் பெரியவர் இத்தலத்தில் தங்கி கோயில் திருப்பணி செய்துள்ளார். 

இந்த பெருமாளை தரிசித்தால் 108 திருப்பதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தனக்கு கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்து கொண்டிருக்கிறார். எனவே இத்தலம் நவக்கிரகத்தில் சுக்கிரத் தலமாக போற்றப்படுகிறது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இங்கு மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள் பாலிக்கிறார். 

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மை நிலை அறிந்த அசுர குல குரு சுக்ராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக் குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன். ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்து பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளியங்குடி (சுக்கிரன்) என அழைக்கப் படுகிறது. சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப் பட்டு பிரம்மனிடம் வேண்டினார். அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்,'' என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். ஆனால் மயன், "தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், ராமாவதார காட்சி வேண்டும் என்றான். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்ராச்சாரியார். இதன் காரணமாகவும் இது "வெள்ளியங்குடி' ஆயிற்று.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 89

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சால்வனுடன் சண்டை|

சிசுபாலனுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவன் சால்வன் என்ற அரசன். ருக்மிணியைச் சிசுபாலனுக்குக் கொடுப்பது என்று ஏற்பாடாகி ருந்த போது, அவனுடன் விதர்ப்ப நாடு சென்றவர்களில் இவனும் ஒருவன். கிருஷ்ணர் ருக்மிணியை எடுத்துச் சென்றதும், சால்வன் எல்லா அரசர்களின் முன்னால், "நான் தக்க தருணத்தில் யாது வம்சத்தையே பூண்டோடு அழிப்பேன்" என்று சபதம் செய்தான்.


இப்படிச் சப்தம் செய்தவன், நேராக இமயமலைச் சாரலுக்குச் சென்று, ஒரு வருட காலம் கொடிய தவம் புரிந்தான். அவன் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவன்முன் தோன்றி, அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். 

அதற்குச் சால்வன், "தேவர்களாலும் அசுரர்களாலும் கந்தவர்களாலும் மனிதர்களாலும் அழிக்க முடியாத ஒரு விமானம் வேண்டும்" என்றும், "அது எங்கு வேண்டுமானாலும் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்" என்றும், "அது யாதவர்களுக்குப் பயத்தை அளிக்க வேண்டும்" என்றும் கேட்டான். 

சிவனார் "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விட்டு, தேவ லோகச் சிற்பியான மயனை அத்தகைய விமானம் ஒன்றைத் தயாரிக்கும் படி உத்தரவிட்டார். உடனே மயன் எஃகினாலான ஒரு பெரிய விமானம் தயாரித்தான். ஒரு பெரிய அரண்மனையைப் போல அது அத்தனை பெரியதாக இருந்தது. அதற்கு ஸௌபம் என்று பெயர் வைக்கப்பட்டது. 

சால்வன் மிக்க மகிழ்ச்சியுடன், அதிலேயே பறந்து தன் ராஜ்ஜியம் திரும்பினான். கிருஷ்ணர் துவாரகையை விட்டு எப்பொழுது வெளியே செல்வார் என்று காத்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் ராஜசூய யாகத்திற்குச் சென்று விட்டார் என்று தெரிந்ததும், அவன் தன ஆயுதங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு பெரிய சேனையையும் திரட்டிக் கொண்டு துவாரகையை முற்றுகை இட்டான். நகரம் முழுவதும் அழிக்கத் தீர்மானித்தான். 

பிறகு நகரின் வாயில்கள், கோபுரங்கள், அரண்மனைகள் முதலியவற்றை அழித்தான். மிகவும் உயரத்தில் பறந்த தன் விமானத்தில் இருந்து கொண்டு, நகரை அம்புகளாலும் கற்களாலும் பாறைகளினாலும், வேரோடு சாய்ந்த மரங்களாலும் தாக்கினான். 

ஒரு பெரிய சூறாவளி வீசுமாறு செய்ய, அது கிளப்பிய புழுதியினால் நகரமே இருந்த இடம் தெரியவில்லை. யாதவர்கள் நடுங்கினார்கள். கிருஷ்ணனின் மகனான பிரத்தியும்னனிடம் ஓடிச் சென்று, தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 42

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இறைவனின் திருத்தோற்றங்கள் - 1

ஸ்கந்தம் 02

ப்ரும்ம தேவர் பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிக் கூறுகிறார்.

பொதுவாக தசாவதாரம் என்று பத்து முக்கிய அவதாரங்களைக் கூறுகிறோம். இருபத்து நான்கு முக்கிய அவதாரங்களைப் பற்றி ப்ரும்மா எடுத்து உரைக்கிறார்.


ஆனால் உண்மையில் பகவானின் அவதாரங்கள் எண்ணற்றவை. ஒவ்வொரு மஹாத்மாவிற்கும் காட்சி கொடுப்பதற்காக பகவான் இறங்கி வருவது எல்லாமும் அவதாரங்களே.

எத்தனை எத்தனை பக்தர்கள்! ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக அல்லவா வந்திருக்கிறார்!

இடைவிடாமல் குருவின் கருணையால் இறையின் திருப்பெயரைச் சொல்லி, மகிழ்ந்து போய், இறைவன் நமக்கு காட்சி அளிப்பாராயின் அதுவும் ஒரு திருத்தோற்றம் (அவதாரம்) என்றே கருதப்படும்.

ப்ரும்மா குறிப்பிடும் முக்கிய அவதாரங்களாவன:-

1. வராக அவதாரம்
ஆவரண ஜலத்தில் மூழ்கி இருந்த பூமியை வெளிக் கொணர பகவான் எடுத்த முதல் அவதாரம். அப்போது எதிர்த்த ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை வதைத்தார்.

2. சுயக்ஞன்
ருசி என்னும் ப்ரஜாபதிக்கும், ஆஹூதி என்ற அவரது மனைவிக்கும், மகவாய்த் தோன்றினார். தக்ஷிணை என்ற தன் மனைவியிடம் சுயமர்கள் என்ற தேவர்களைத் தோற்றுவித்து மூவுலகங்களின் துயரையும் போக்கினார்.

3. கபிலர் அவதாரம்
கர்தம ப்ரஜாபதிக்கும் தேவ ஹூதி என்ற ஸ்வாயம்புவ மனுவின் பெண்ணுக்கும் ஒண்பது பெண் குழந்தைகளுக்குப் பிறகு, திருமகனாய்த் தோன்றினார். தாய்க்கு ப்ரும்ம வித்யையை உபதேசித்தார். அது ஸாங்க்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது.

4. தத்தாத்ரேயர்
அத்ரி மகரிஷிக்கும் அன்சூயா தேவிக்கும் பிறந்தவர். அத்ரி மஹரிஷி இறைவனையே தன் மகனாகப் பிறக்கும்படி வேண்ட, என்னையே உனக்கு தந்தேன் என்னும்படியாக தத்தன் என்ற பெயருடன் அவதரித்தார்.

5. குமார அவதாரம்
படைப்புத் திறனைப் பெறுவதற்காக ப்ரும்மா பகவத் அர்ப்பணமாக தவம் புரிந்தார். அப்போது பகவான் ஸனகர், ஸனந்தனர், ஸனத் சுஜாதர், ஸனத் குமாரர் என்ற திருப்பெயர்களுடன் நால்வராக அவதாரம் செய்தார். ப்ரளயத்தில் மறைந்து போன ப்ரும்ம தத்வத்தை இந்த கல்பத்தில் ரிஷிகளுக்கு உபதேசம் செய்தனர்.

6. நர நாராயண அவதாரம்
தர்ம தேவதைக்கும் தக்ஷ ப்ரஜாபதியின் பெண்ணான மூர்த்தி என்பவளுக்கும் நரன், நாராயணன் என்ற குழந்தைகளாகப் பிறந்தார். இவர்களுடைய தவ வலிமை ஒப்புயர்வு அற்றது.

7. உத்தான பாதனின் மகனான துருவன் என்ற ஐந்து வயதுக் குழந்தைக்குக் காட்சி கொடுப்பதற்காக வந்த அவதாரம். அவனுக்கு அழிவற்ற துருவ பதத்தை அளித்தார். இன்றும் ஸப்த ரிஷிகளும் துருவனைச் சுற்றி வந்தே இறைவனைத் துதிக்கின்றனர்.

8. ப்ருது சக்ரவர்த்தி
தீய வழியில் சென்ற வேனன் என்ற மன்னனை ரிஷிகள் ஒரு ஹூங்காரம் செய்து அழித்தனர். அவர்களது ப்ரார்த்தனைக்கு இணங்கி பகவான் வேனனின் கைகளில் இருந்தே தோன்றினார். பூமியிலி இருந்து அனைத்து செல்வங்களையும் வெளிக் கொணர்ந்தார். இவர் பெயராலேயே பூமி ப்ருத்வீ என்று அழைக்கப்படுகிறது.

9. ரிஷப தேவர்
ஆக்னீத்ரன் என்பவரின் மகனான நாபி என்பவருக்கும், ஸுதேவி என்றழைக்கப்படும் மேரு தேவிக்கும், மகனாய்ப் பிறந்தார். பரம ஹம்ஸ ஆசிரமத்தில் நிற்கும் ரிஷிகளின் தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டினார்.

10.ஹயக்ரீவ அவதாரம் 
ப்ரும்மா செய்த ஸத்ர யாகத்தில் யக்ஞ புருஷரான பகவான் உருக்கி வார்த்த தங்கம் போன்ற திருமேனியுடன் வெளி வந்தார். வேதமே உருவெடுத்து வந்ததோ என்னும்படி அவர் மூச்சு விடும் போது மனம் கவரும் வேதங்கள் வெளி வந்தன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்