||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
014. திருநறையூர்
நாச்சியார் கோயில் - கும்பகோணம்
பதிநான்காவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 111 - 1
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1078 - நால்வகைத் திருக்கோலம் கொண்டவன் இடம்
பெரிய திருமொழி - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி*
அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது*
இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை*
தடம் திகழ் கோவல்நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம்*
மா மலை ஆவது நீர்மலையே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1329 - இந்தளூராய்! இரக்கம் காட்டு
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே* மருவினிய மைந்தா*
அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே*
நந்தா விளக்கின் சுடரே* நறையூர் நின்ற நம்பீ*
என் எந்தாய் இந்தளூராய்* அடியேற்கு இறையும் இரங்காயே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1470 - திருநறையூர்த் தேனே! நின்னை அடைந்தேன்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
மான் ஏய் நோக்கு நல்லார்* மதி போல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*
கோனே குறுங்குடியுள் குழகா* திருநறையூர்த் தேனே*
வரு புனல் சூழ்* திருவிண்ணகரானே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1478 - கிழப்பருவம் வருமுன் திருநறையூர் தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம்
கண்ணும் சுழன்று பீளையோடு* ஈளை வந்து ஏங்கினால்*
பண் இன் மொழியார்* பைய நடமின் என்னாத முன்*
விண்ணும் மலையும்* வேதமும் வேள்வியும் ஆயினான்*
நண்ணு நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1479 - மனமே! விரைவில் திருநறையூர் தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
கொங்கு உண் குழலார்* கூடி இருந்து சிரித்து*
நீர் இங்கு என் இருமி* எம்பால் வந்தது? என்று இகழாத முன்*
திங்கள் எரி கால்* செஞ் சுடர் ஆயவன் தேசு உடை*
நங்கள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1480 - முதுமை கண்டு பலர் சிரிப்பர்; விரைவில் தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
கொங்கு ஆர் குழலார்* கூடி இருந்து சிரித்து*
எம்மை எம் கோலம் ஐயா* என் இனிக் காண்பது? என்னாத முன்*
செங்கோல் வலவன்* தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்*
நம் கோன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1481 - நறையூர் நம்பனை இப்பொழுதே தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம்
கொம்பும் அரவமும்* வல்லியும் வென்ற நுண் ஏர் இடை*
வம்பு உண் குழலார்* வாசல் அடைத்து இகழாத முன்*
செம் பொன் கமுகு இனம் தான்* கனியும் செழும் சோலை சூழ்*
நம்பன் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1482 - மனமே! விலை மகளிர் இகழுமுன் நறையூர் தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
விலங்கும் கயலும் வேலும்* ஒண் காவியும் வென்ற கண்*
சலம் கொண்ட சொல்லார்* தாங்கள் சிரித்து இகழாத முன்*
மலங்கும் வராலும்* வாளையும் பாய் வயல் சூழ் தரு*
நலம் கொள் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1483 - மனமே! தாமதியாமல் நறையூர் தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மின் நேர் இடையார்* வேட்கையை மாற்றியிருந்து*
என் நீர் இருமி* எம்பால் வந்தது? என்று இகழாத முன்*
தொல் நீர் இலங்கை மலங்க* விலங்கு எரி ஊட்டினான்*
நல் நீர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1484 - பிறர் பரிகாசம் செய்யும் முன் நறையூர் தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வில் ஏர் நுதலார்* வேட்கையை மாற்றிச் சிரித்து*
இவன் பொல்லான் திரைந்தான் என்னும்* புறன் உரை கேட்பதன் முன்*
சொல் ஆர் மறை நான்கு ஓதி* உலகில் நிலாயவர்*
நல்லார் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|
011. திவ்ய ப்ரபந்தம் - 1485 - நரை திரை மூப்பு வருமுன் நறையூர் தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள்* மதனன் என்றார் தம்மை*
கேள்மின்கள் ஈளையோடு* ஏங்கு கிழவன் என்னாத முன்*
வேள்வும் விழவும்* வீதியில் என்றும் அறாத ஊர்*
நாளும் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|
012. திவ்ய ப்ரபந்தம் - 1486 - நெஞ்சே! உடனே நறையூர் தொழுக
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர்* காதன்மை விட்டிட*
குனி சேர்ந்து உடலம்* கோலில் தளர்ந்து இளையாத முன்*
பனி சேர் விசும்பில்* பால்மதி கோள் விடுத்தான் இடம்*
நனி சேர் நறையூர்* நாம் தொழுதும் எழு நெஞ்சமே|
013. திவ்ய ப்ரபந்தம் - 1487 - இவற்றைப் படிப்போர் தேவர்க்கு அரசாவர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - நான்காம் திருமொழி - பத்தாம் பாசுரம்
பிறை சேர் நுதலார்* பேணுதல் நம்மை இலாதமுன்*
நறை சேர் பொழில் சூழ்* நறையூர் தொழு நெஞ்சமே என்ற*
கறை ஆர் நெடு வேல் மங்கையர் கோன்* கலிகன்றி சொல்*
மறவாது உரைப்பவர்* வானவர்க்கு இன் அரசு ஆவரே|
014. திவ்ய ப்ரபந்தம் - 1488 - கடல் கடைந்தவன் ஊர் திருநறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கலங்க முந்நீர் கடைந்து* அமுதம் கொண்டு*
இமையோர் துலங்கல் தீர* நல்கு சோதிச் சுடர் ஆய*
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்* உடையான் ஊர்*
நலம் கொள் வாய்மை* அந்தணர் வாழும் நறையூரே|
015. திவ்ய ப்ரபந்தம் - 1489 - நரசிங்கமாக அவதரித்தவன் ஊர் இது
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
முனை ஆர் சீயம் ஆகி* அவுணன் முரண் மார்வம்*
புனை வாள் உகிரால்* போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்* குயில் கூவும்*
நனை ஆர் சோலை சூழ்ந்து* அழகு ஆய நறையூரே|
016. திவ்ய ப்ரபந்தம் - 1490 - இலங்கையைச் செற்றவன் இருப்பிடம் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட*
சேனைத் தொகையைச் சாடி* இலங்கை செற்றான் ஊர்*
மீனைத் தழுவி வீழ்ந்து எழும்* மள்ளர்க்கு அலமந்து*
நானப் புதலில்* ஆமை ஒளிக்கும் நறையூரே|
017. திவ்ய ப்ரபந்தம் - 1491 - உரலில் கட்டுண்டவன் உறைவிடம் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
உறி ஆர் வெண்ணெய் உண்டு* உரலோடும் கட்டுண்டு*
வெறி ஆர் கூந்தல்* பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர்*
பொறி ஆர் மஞ்ஞை* பூம் பொழில்தோறும் நடம் ஆட*
நறு நாள் மலர் மேல்* வண்டு இசை பாடும் நறையூரே|
018. திவ்ய ப்ரபந்தம் - 1492 - மருத மரங்களை முறித்தவன் மன்னும் ஊர் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
விடை ஏழ் வென்று* மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்*
நடையால் நின்ற* மருதம் சாய்த்த நாதன் ஊர்*
பெடையோடு அன்னம்* பெய்வளையார் தம் பின் சென்று*
நடையோடு இயலி* நாணி ஒளிக்கும் நறையூரே|
019. திவ்ய ப்ரபந்தம் - 1493 - பேய்ச்சி பாலுண்டவன் தங்கும் ஊர் நறையூர்
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பகு வாய் வன் பேய்* கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு*
புகு வாய் நின்ற* போதகம் வீழப் பொருதான் ஊர்*
நெகு வாய் நெய்தல்* பூ மது மாந்திக் கமலத்தின்*
நகு வாய் மலர் மேல்* அன்னம் உறங்கும் நறையூரே|
020. திவ்ய ப்ரபந்தம் - 1494 - சாந்தீபினிக்கு அருள் செய்தவன் அமரும் ஊர் இது
பெரிய திருமொழி - ஆறாம் பத்து - ஐந்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
முந்து நூலும் முப்புரி நூலும்* முன் ஈந்த*
அந்தணாளன் பிள்ளையை* அஞ்ஞான்று அளித்தான் ஊர்*
பொந்தில் வாழும் பிள்ளைக்கு* ஆகிப் புள் ஓடி*
நந்து வாரும்* பைம் புனல் வாவி நறையூரே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்