ஸ்ரீ:
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 49 - வருணன் கொடுத்த கை வளையல்களும் சாதிப் பவளமும்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
ஓதக் கடலின்*
ஒளி முத்தின் ஆரமும்*
சாதிப் பவளமும்*
சந்தச் சரி வளையும்*
மாதக்கவென்று*
வருணன் விடு தந்தான்*
சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ*
சுந்தரத் தோளனே! தாலேலோ|
- ஓதம் - ஓலியுடன்அலை வீசும்
- கடலில் - ஸமுத்ரத்தில் உண்டான
- ஒளி - ஒளி பொருந்திய
- முத்தின் - முத்துக்களால் கோக்கப்பட்ட
- ஆரமும் - ஹாரத்தையும்
- சாதி - நல்ல ஜாதியில் உண்டான
- பவளமும் - பவழ வடத்தையும்
- சந்தம் - அழகு பொருந்திய
- சரி வளையும் - முன் கை வளைகளையும்
- மா தக்க என்று - விலை மதிக்கத் தக்கவை என்று
- வருணன் - வருண தேவன் அனுப்பி இருக்கிறான்
- சோதி சுடர் - மிக்க ஒளி மிகுந்த
- முடியாய் - கிரீடத்தை அணிந்த கண்ணனே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
- சுந்தரம் தோளனே - அழகிய திருத்தோள்களை உடையவனே!
- தாலேலோ! - கண்ணுறங்கு!
அலை மோதும் சமுத்திரத்திலிருந்து எடுக்கப்பட்டதும், ஒளிபடர்ந்த முத்துக்களால் கோக்கப்பட்டதுமான மாலையையும், நல்ல ஜாதிப் பவளத்தாலான அழகான கை, தோள் வளயல்களையையும், விலை மதிப்பில்லாதவை இவை எனக் கருதி வருணன் உனக்கு அனுப்பியிருக்கிறான், மிக்க பிரகாசமுடைய திருமுடியையுடைய கண்ணனே கண்ணுறங்கு, அழகிய தோள்களையுடைய கண்ணனே கண்ணுறங்கு.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment