||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம்
ஸம்க்ஷேபதோ வர்ணம்||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||
ஸ்லோகம் - 1.3.1
ஸூத உவாச|
ஜக்³ருஹே பௌருஷம் ரூபம்
ப⁴க³வாந் மஹதா³ தி³பி⁴:|
ஸம்பூ⁴தம் ஷோட³ஸ² கலம்
ஆதௌ³ லோக ஸிஸ்ரு க்ஷயா||
- ப⁴க³வாந் - இறைவனான வாஸுதேவன்
- லோக ஸிஸ்ரு க்ஷயா - உலகத்தை படைக்க வேண்டும் என்ற விருப்பத்தால்
- ஆதௌ³ - முதலில்
- மஹதா³ தி³பி⁴ஹி ஸம்பூ⁴தம் - மஹத், அஹங்காரம் என்ற பஞ்சதன் மாத்ரைகளோடு கூடியதும்
- ஷோட³ஸ² கலம் - பதினாறு கலைகளோடு கூடியதுமான
- பௌருஷம் ரூபம் - விராட் ஸ்வரூபத்தை
- ஜக்³ருஹே - எடுத்துக் கொண்டார்
ஸூதர் கூறுகிறார் - பகவான் வாஸுதேவன் முதன் முதலில் இவ்வுலகத்தைப் படைக்கக் கருதி, மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், பதினாறு கலைகள் அடங்கிய விராட் புருஷ திருவுருவை மேற்கொண்டார்.
பதினாறு கலைகளாவன: அறிப்புலன்கள் ஐந்து, செயற்புலன்கள் ஐந்து, ஐம்பூதங்கள் மற்றும் மனது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment