About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 23 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 127

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 97

அரௌத்³ர: குண்ட³லீ சக்ரீ 
விக்ரம் யூர்ஜித ஸா²ஸந:|
ஸ²ப்³தா³ திக³ஸ்² ஸ²ப்³த³ ஸஹ: 
ஸி²ஸி²ரஸ்² ஸ²ர்வரீ கர:||

  • 906. அரௌத்³ரஹ் - கடுமையில்லாமல் குளிர்ந்திருப்பவர். எளிதில் கோபத்திற்கு ஆளாகாதவர்.
  • 907. குண்ட³லீ - காதணிகளை அணிந்திருப்பவர். அழகான காது வளையங்களால் அலங்கரிக்கப்பட்டவர்.
  • 908. சக்ரீ - கையில் சக்ராயுதத்தைத் தரித்திருப்பவர். கையில் வட்டு வைத்திருப்பவர். 
  • 909. விக்ரம் - பராக்ரமம் உள்ளவர். மாபெரும் முன்னேற்றம் மற்றும் சிறந்த வீரம் கொண்டவர்.
  • 910. ஊர்ஜித ஸா²ஸநஹ - பிறரால் கடக்க முடியாத கட்டளையைப் பிறப்பிப்பவர். அவரது கட்டளைகள் மீற முடியாதவை. வேதங்களில் வலுவாக வேரூன்றியுள்ளன.
  • 911. ஸ²ப்³தா³ திக³ஸ்² - சொல்லுக்கு எட்டாதவர். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்.
  • 912. ஸ²ப்³த³ ஸஹஸ் - அடியார்களின் கூப்பீட்டைச் சுமப்பவர். துன்பத்தின் அழுகைக்கு உடனடியாக பதிலளிப்பவர்.
  • 913. ஸி²ஸி²ரஸ்² - வேகமாகச் செல்பவர். உதவி செய்ய விரைபவர்.
  • 914. ஸ²ர்வரீ கரஹ - பிளக்கும் ஆயுதங்களைக் கையில் ஏந்தியவர். அழிவுகரமான ஆயுதங்களை கையில் வைத்திருந்தவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.64

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.64 

ராக³ த்³வேஷ வியுக் தைஸ் து 
விஷயா நிந்த்³ரியை ஸ்²சரந்|
ஆத்ம வஸ்²யைர் விதே⁴யாத்மா 
ப்ரஸாத³ மதி⁴ க³ச்ச²தி||

  • ராக³ - விருப்பு 
  • த்³வேஷ - வெறுப்பு  
  • வியுக் தைஸ் - இவற்றிலிருந்து விடுபட்டவன் 
  • து - ஆனால்  
  • விஷயாந் - புலன் நுகர்வுப் பொருட்கள் 
  • இந்த்³ரியைஸ்² - புலன்களால் 
  • சரந்நு - செயல்பட்டு  
  • ஆத்ம வஸ்²யைர் - அடக்கக் கூடியவன் 
  • விதே⁴யாத்மா - விடுதலைக்கான விதிகளைப் பின்பற்றுபவன் 
  • ப்ரஸாத³ம் - இறைவனின் கருணை 
  • அதி⁴ க³ச்ச²தி - அடைகிறான்

விருப்பு வெறுப்பு இவற்றிலிருந்து விடுபட்டவன், ஆனால், புலன் நுகர்வுப் பொருட்கள், புலன்களால் செயல்பட்டு அடக்கக் கூடியவன், விடுதலைக்கான விதிகளைப் பின்பற்றுபவன், புலன்களால் அனுபவித்தாலும் மனம் கலக்கமடைவதில்லை. இறைவனின் கருணையை அடைகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.17

பௌ⁴திகா நாம் ச பா⁴வா நாம் 
ஸ²க்திஹ் ராஸம் ச தத் க்ருதம்|
அஸ்²ரத்³ த³தா⁴ நாந் நி: ஸத்த் வாந் 
து³ர் மேதா⁴ந் ஹ்ரஸி தாயுஷ:||

  • தத் க்ருதம் ச - காலத்தால் செய்யப்பட்ட
  • பௌ⁴திகா நாம் - பஞ்ச பூத காரியமான
  • பா⁴வா நாம் - ஸரீரங்களின்
  • ஸ²க்திஹ் ராஸம் ச -  சக்தி இல்லாத தன்மையையும்
  • அஸ்²ரத்³ த³ தா⁴நாந் -  சிரத்தை அற்றவர்களாகவும்
  • நிஸ் ஸத்த் வாந் -  தைர்யம் அற்றவர்களாகவும்
  • து³ர் மேதா⁴ந் -  புத்தி கெட்டவர்களாகவும்
  • ஹ்ரஸி தாயுஷஹ - அற்ப ஆயுளை உடையவர்களாகவும்

அதனால் ஐம்பெரும் பூதங்களினாலாகிய பிராணிகளின் திறமை இன்மையையும், மக்கள் நம்பிக்கை அற்றவர்களாய் உடல் பலம், மனோ பலம் குறைந்து, பாவம் செய்வதில் ஈடுபாடு கொண்டு,  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.62

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.62

ராமாயா வேதி³தம் ஸர்வம் 
ப்ரணயாத்³ து³:கி² தேந ச|
ப்ரதிஜ் ஞாதம் ச ராமேண 
ததா³ வாலி வத⁴ம் ப்ரதி|| 

  • து³ஹ்கி² தேந - துக்கமடைந்த 
  • ஸர்வம் ச - ஸமஸ்தமும் 
  • ராமாய - ஸ்ரீராமருக்கு 
  • ப்ரணயாத்³ - எதையும் ஒளிக்காமல் 
  • ஆவேதி³தம் - சொல்லப்பட்டது 
  • ததா³ - அப்பொழுது 
  • ராமேண - ஸ்ரீராமரால் 
  • வாலி வத⁴ம் ப்ரதி ச - வாலியைக் கொல்லுவதை பற்றியும் 
  • ப்ரதி ஞாதம் - ப்ரதிக்ஞை செய்யப்பட்டது

அனைத்தையும் துயரத்துடனும், நட்புடனும் ராமனிடம் சொன்னான். அப்போது ராமன், வாலியைக் கொல்வதாக உறுதி மொழி ஏற்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 105 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 105 - மார்பில் மச்சம் உடையவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்

கண்ட கடலும்* மலையும் உலகு ஏழும்* 
முண்டத்துக்கு ஆற்றா* முகில் வண்ணா ஓ! என்று* 
இண்டைச் சடை முடி* ஈசன் இரக் கொள்ள* 
மண்டை நிறைத்தானே! அச்சோ அச்சோ* 
மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ!

  • கண்ட - கண்களுக்குப் புலப்படும்
  • கடலும் - ஸமுத்ரங்களும்
  • மலையும் - மலைகளும்
  • உலகு ஏழும் - கீழ் ஏழ், மேல் ஏழ் என்ற பதினான்கு லோகங்கள் ஆகிய எல்லாவற்றையும் இட்டு நிறைக்கப் பார்த்தாலும்
  • முண்டத்துக்கு - என் கையிலிருக்கிற ப்ரஹ்ம கபாலத்துக்கு
  • ஆற்றா - போதாததாக இருக்கின்றன
  • முகில் வண்ணா - மேக வண்ணனே! 
  • ஓஒ! - ஓஒ! ஹாஹா!
  • என்று - என்று உரக்கக் குரல் கொடுத்துகூப்பிட்டு
  • இண்டை-நெருங்கின
  • சடை முடி - ஜடா முடியை உடைய
  • ஈசன் - ருத்திரன்
  • இரக்கொள்ள - யாசிக்க
  • மண்டை - அவன் கையிலிருந்த ப்ரஹ்ம கபாலத்தை
  • நிறைத்தானே - மார்பிலிருந்து உண்டான ரத்தத்தால் நிறையச் செய்தவனே! 
  • அச்சோ அச்சோ- என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • மார்வில் - திரு மார்பிலே
  • மறுவனே - ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை உடையவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

பதினான்கு உலகங்கள், கண்கண்ட சமுத்திரங்கள் மற்றும் மலைகள் அனைத்தையும் வைத்து நிரப்பியும், சடைமுடியான் சிவனிடமிருந்த கபாலம் நிரம்பாததால், சிவன் மிக்க வருத்தத்துடன் எம்பெருமானை வேண்ட, எம்பெருமானும் தன் திருமார்பிலிருந்து உண்டான ரத்தத்தால் கபாலத்தை நிறைத்தான். இப்படியாக சிவன் துயர் தீர்த்தவனே! என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும். திருமார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் மச்சமுடையவனே, அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 031 - திருச்செம்பொன்செய் கோவில் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

031. திருச்செம்பொன்செய் கோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

001. திவ்ய ப்ரபந்தம் - 1268 - திருமாலைச் செம்பொன்செய் கோயிலில் கண்டேன்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்* பேர் அருளாளன் எம் பிரானை*
வார் அணி முலையாள் மலர் மகளோடு* மண் மகளும் உடன் நிற்ப*
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*
கார் அணி மேகம் நின்றது ஒப்பானைக்* 
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே||

002. திவ்ய ப்ரபந்தம் - 1269 - வானவர்கோன் வாழ்விடம் இக்கோயில்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னைப்* பேதியா இன்ப வெள்ளத்தை*
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை* ஏழ் இசையின் சுவை தன்னை* 
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
மறைப் பெரும் பொருளை வானவர் கோனை* 
கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1270 - கடல் நிற வண்ணனைக் காணலாம் இங்கே
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்*
செழு நிலத்து உயிர்களும் மற்றும்*
படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை*
பங்கயத்து அயன் அவன் அனைய* 
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்*
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1271 - அலைகடல் துயின்றவன் அமரும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி* மண் அளவிட்டவன் தன்னை*
அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க* அலை கடல் துயின்ற அம்மானை*
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
உயர் மணி மகுடம் சூடி நின்றானைக்* கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1272 - தசரதன் மகனை இக்கோயிலில் காணலாம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று* சென்று அடைந்தவர் தமக்கு*
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்* தயரதன் மதலையை சயமே* 
தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்* 
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1273 - கடலில் அணை கட்டியவனைக் கண்டேன்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
மல்லை மா முந்நீர் அதர்பட* 
மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை*
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க* ஓர் வாளி தொட்டானை* 
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்* 
கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1274 - கஞ்சனைக் காய்ந்த காளையைக் காணலாம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்*
வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை*
கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானைக்* கரு முகில் திரு நிறத்தவனை* 
செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக்* கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1275 - வேங்கடவாணனே இக்கோயிலில் உள்ளான்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய* அன்று ஆழி தொட்டானை*
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல்* மேவிய வேத நல் விளக்கை* 
தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை* 
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1276 - அடியவரின் உள்ளத்தில் ஊறும் தேன்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
களங்கனி வண்ணா கண்ணனே என் தன்* கார் முகிலே என நினைந்திட்டு*
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்* உள்ளத்துள் ஊறிய தேனை* 
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்* 
செம்பொன்செய் கோயிலினுள்ளே*
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை* 
வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1277 - உலகை ஆண்டு தேவரும் ஆவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய் கோயிலினுள்ளே*
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்* மங்கையார் வாள் கலிகன்றி*
ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்* ஒழிவு இன்றிக் கற்று வல்லார்கள்*
மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு* வானவர் ஆகுவர் மகிழ்ந்தே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 71

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 16

ஸ்கந்தம் 03

பார்ஷதனா? அசுரனா?

ஸனகாதியரின் சாபம் பெற்ற ஜெய விஜயர்கள் தங்கள் சோபையையும் பெருமையையும்‌ இழந்தனர். அவர்கள் வைகுண்டத்திலிருந்து கீழே விழும் போது அத்தனை தேவர்களும் திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தான் இப்போது கச்யபர் மூலமாக திதியின் வயிற்றில் உள்ளனர். அவர்களுடைய தேஜஸால் உங்கள் அனைவரின் தேஜஸும்‌ மங்கியுள்ளது. இவ்விஷயத்தில் பகவான் தலையிட்டு அனைவர்க்கும் நன்மை புரிவார். கவலை வேண்டாம், என்று ப்ரும்மா சொன்னதும், தேவர்கள் கலைந்து ஸ்வர்கம் சென்றனர்.


மைத்ரேயர் மேலும் கூறத் துவங்கினார். திதி தேவி நூறாண்டுகள் கழித்து இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். அப்போது எல்லா லோகங்களிலும் ஏராளமான தீய சகுனங்கள் தோன்றின. அவற்றைக் கண்டு ஸனகாதியர் தவிர மற்ற அனைத்து லோகங்களில் உள்ளோரும் பயந்து போனார்கள்.

அந்த அசுரர்கள் இருவரும் பிறவியிலேயே மிகுந்த பராக்ரமமும், பாறை போன்ற உடலும், கொண்டு மலை போல் வளர்ந்தனர். இருவரும் இரட்டையர்கள்.

மூத்தவனுக்கு ஹிரண்யகசிபு என்றும் இளையவனுக்கு ஹிரண்யாக்ஷன் என்றும் பெயரிட்டார் கச்யபர்.

ஹிரண்யகசிபு தன் பராக்ரமத்தாலும், தபோ வலிமையாலும் மூவுலகங்களையும் லோக பாலர்களையும் தன் வசப்படுத்திக் கொண்டு, மிகுந்த செருக்குடன் அலைந்தான்.

தம்பியான ஹிரண்யாக்ஷன் அண்ணன் மேல் ‌மிகுந்த பிரியம்‌ கொண்டு அவனுக்குப் பிடித்தவற்றையே செய்தான். போரில் மிகுந்த விருப்பம் கொண்டவனாக கையில் கதையேந்திக் கொண்டு அமர லோகம் சென்றான்.

மலை பெயர்ந்து வருவது போல் வரும் அவனைக்‌ கண்டு தேவர்கள் அஞ்சி ஒளிந்தனர். அவர்கள் ஒளிவதைக் கண்ட ஹிரண்யாக்ஷனுக்கு கர்வம் அதிகரித்தது. பெரிய கர்ஜனை செய்து கொண்டு, ஸ்வர்கத்தை விட்டுக் கிளம்பினான்.

நீர் விளையாட்டு விளையாட எண்ணி ஸமுத்திரத்தில் மதயானை போல் குதித்தான். நீர் வாழ் பிராணிகள் அனைத்தும் பயந்து நடுங்கி வெகு தொலைவில் ஓடின. அவன் நீரையளைவதால் ஆர்ப்பரிக்கும் அலைகளை கதையால் ஓங்கி அடித்தான்.

சண்டை செய்ய யாருமின்றி சுற்றித் திரிந்தவன், வருணனின் தலைநகரமான விபாவரி பட்டணத்தை அடைந்தான். அங்கு சென்று அசுர லோகத்தின் தலைவனான வருண தேவனைப் பரிஹாசம் செய்ய எண்ணி, ஒரு பணியாளன் போல், அரசே! தாங்கள் ராஜசூய வேள்வி செய்து அனைத்து அரசர்களையும் வெற்றி கொண்டீர்கள். லோக பாலராகவும், பெரும் புகழ் பெற்றீர்கள். எனக்குப் போர்ப் பிச்சை அளிக்க வேண்டும்!, என்றான்.

வருண தேவர் பொங்கியெழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, பொறுமையாக, நண்பனே! நான் ஓய்வு பெற்றுக் கொண்டு விட்டேனே. உனக்கு இணையாகப் போர் செய்யத் தகுந்தவர் பகவான் மஹாவிஷ்ணுவே ஆவார். அவரைத் தவிர வேறெவரும் உன்னோடு சமர் செய்யத் தகுந்தவர் அல்லர். நீயோ பெரும் போர் வீரன். எனவே, அவரைத் தேடிச் செல். அவர் உன்னை வெற்றி கொண்டு உன் செருக்கை அழிப்பார்" என்றார்.

உனக்கீடாக சண்டை செய்ய ஒருவர் உள்ளார் என்பதைக் கேட்ட ஹிரண்யாக்ஷன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். வேறெதையும் கவனிக்காமல் நாரதரைப் பிடித்து மிரட்டி, ஸ்ரீ ஹரி பாதள லோகம் வந்திருக்கிறார் என்று அறிந்துகொண்டான்.

பாதாள லோகத்தில் ஸ்ரீ ஹரியைத் தேடியலைந்த ஹிரண்யாக்ஷன் அங்கு தன்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியைத் தன் தெற்றிப் பற்களின் நுனியால் தாங்கிக் கொண்டு ஒரு வராஹம் மேலெழுவதைக் கண்டு மிகுந்த சினம் கொண்டான். பகவானைக் கண்டதும் ஹிரண்யாக்ஷன் பலவாறு கத்த ஆரம்பித்தான்.

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நிந்தனை போல் தோன்றினாலும், அவை உண்மையில் ஸ்துதிகளே. அவற்றில் உதாரணத்திற்கு ஒன்று.

ஆஹைநமேஹ்யக்ஞ மஹீம் விமுஞ்ச நோ
ரஸௌகஸாம் விஶ்வஸ்ருஜேயமர்பிதா|
ந ஸ்வஸ்தி யாஸ்யஸ்நயா மமேக்ஷத:
ஸுராதமாஸாதிதஸூகராக்ருதே||

மேலோட்டமாகப் பார்த்தால், அறிவில்லாதவனே! இங்கு வா! இந்த பூமி பாதாளவாசிகளுக்காக ப்ரும்ம தேவரால் பரிசாகக் கொடுக்கப்பட்டது. காட்டுப் பன்றி உருவில் வந்த தேவர்களில் கடையனே! நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது நீ இந்த பூமியை எடுத்துக் கொண்டு சுகமாகச் செல்ல முடியுமா?

இதன் உண்மைப் பொருளாகப் பெரியோர் சொல்வது, எவரைக் காட்டிலும் மேலான அறிவாளி ஒருவர் இல்லையோ, அத்தகைய மேதாவியே! தேவர்கள் அனைவரும் எவரைக் காட்டிலும் கடையர்களோ, அத்தகைய தலைவரே! தன் விருப்பத்தினால் விளையாட்டாகக் காட்டுப்பன்றி உருவை எடுத்தவரே! நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீங்கள் இந்த பூமியையும், பரந்த அரசையும் அடைவது நிச்சயம். இதில் சந்தேகமே‌ இல்லை. ஆனால், தயை கூர்ந்து பூமியை எங்களுக்காகத் தந்து விடுங்கள்..

அசுரனாயிருந்தாலும் பார்ஷதனாயிருந்தாதால், இகழ்வது போல் பேசி பகவானைப் புகழ்ந்து பேசுகிறான் ஹிரண்யாக்ஷன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்