About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 6 September 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.11

வத³ந்தி தத் தத்த்வ வித³ஸ் 
தத்த்வம் யஜ்ஜ்ஞா நமத்³வயம்।
ப்³ரஹ் மேதி பரமாத் மேதி 
ப⁴க³வாந் இதி ஸ²ப்³த்³யதே॥

  • யத்³ - யாதொரு
  • அத்³வயம் - இரண்டற்ற (அத்வைதமான)
  • க்ஞாநம் - ஞானமானது
  • ப்³ரஹ்ம இதி - உபநிஷத்துக்களால் பிரம்மம் என்றும்
  • பரமாத்மா இதி - பரமாத்மா என்றும்
  • ப⁴க³வாந் இதி - பகவான் என்றும்
  • ஸ²ப்³ த்³யதே - கோஷிக்கப்படுகின்றதோ
  • தத் - அந்த ஞானத்தையே
  • தத்வம் - உண்மை என்று 
  • தத்வ வித³ஸ் - உண்மையை உணர்ந்தோர்
  • வத³ந்தி – உரைக்கின்றனர்

உண்மை அறிந்த சான்றோர்கள் அறியப்படும் பொருள், அறிபவன் என்ற இரண்ரற்றதான ஞானத்தை சத்தியம் (தத்துவம்) என்று கூறுகிறார்கள். (உபநிஷத்தை உணர்ந்தவர்கள்) பிரும்மம் என்றும், (ஹிரண்யகர்ப்பனை உபாசிப்பவர்கள்) பரமாத்மா என்றும், (பக்தர்கள்) பகவான் என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 42

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 12

வஸுர் வஸுமநா: ஸத்ய: 
ஸமாத்மா ஸம்மித: ஸம:|
அமோக⁴: புண்ட³ரீகாஷோ 
வ்ருஷ கர்மா வ்ருஷா க்ருதி:||

  • 105. வஸுர் - சிறிது அநுகூல புத்தியுள்ளவரிடத்தும் அன்புடன் வசிப்பவர். பக்தர்கள் தேடும் பொக்கிஷம்.
  • 106. வஸுமநாஸ் - தன்னை அடைந்தவரைப் பெருஞ் செல்வமாக நினைப்பவர். தூய மனம் கொண்டவர்.
  • 107. ஸத்யஸ் - தன்னை அடைந்தவர்களுக்கு அநுகூலன். அவர் சத்தியம்.
  • 108. ஸமாத்மா - அடியார் எவரையும் சமமாகப் பாவிப்பவர். 
  • 109. ஸம்மிதஸ் - அடியார்க்கு அடங்கிய பொருளாய் இருப்பவர். தன்னைப் புரிந்து கொள்ளவும். தன் பக்தர்களால் கட்டுப்படுத்தவும் அனுமதித்தவர். ரிஷிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் உபநிடதங்களில் வெளிப்படுத்தப்பட்ட இறுதி உண்மை.
  • 110. ஸமஹ - எல்லாரிடத்தும் சமமாய் இருப்பவர். பாரபட்சமற்றவர்.
  • 111. அமோக⁴ஃ - அடியாரின் உறவு வீண் போகாமல் காப்பவர். பக்தர்களுக்கு அருள் செய்பவர்.
  • 112. புண்ட³ரீகாஷோ - விண்ணோர்க்குக் கண் போனவர். தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவர்.
  • 113. வ்ருஷ கர்மா - தர்மத்தின் படியே நற்செயல்களைச் செய்பவர்.  
  • 114. வ்ருஷா க்ருதிஹி - தருமமே வடிவானவர். தர்மத்தை நிலை நிறுத்த வெளிப்படுபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி ஒண்பதாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

039 அனுப்பி வைய்யும் என்றேனோ வசிஷ்டரைப் போலே|

வசிஷ்டர், பிரம்ம ரிஷி என புகழ்பெற்ற சப்தரிஷிகளுள் ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவரது துணைவியாரின் பெயர் அருந்ததி. இராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், மன்னன் தசரதனின் அரசவை ராஜகுருவாக இருந்தார். ஸ்ரீ இராமனும் அவரது தம்பிமார்களும் வசிஷ்ட மகரிஷியிடமே கல்வி கற்றனர்.


ஒரு நாள், விஸ்வாமித்ரர் தசரத சக்ரவர்த்தியிடம், தன் யாகத்தை காக்கும் பொருட்டு ராமனை தன்னோடு அனுப்பும்படி கேட்க, தசரதர் மனம் கலங்குகிறார்.

தசரதருக்கு புத்திரப் பாசம் அதிகம். “இராமனை பிரிந்து எப்படி என்னால் இருக்க முடியும். தவமிருந்து பெற்ற பிள்ளை! மேலும், அவனோ இன்னும் சிறுபிள்ளை. எனது படையுடன் நானே வருகிறேன்!” என்று கூறிய தசரதனிடம், விஸ்வாமித்ரர், “என்ன வேண்டுமோ கேளுங்கள் செய்கிறேன் என்று கூறிவிட்டு, இப்படி பேச்சை மாற்றி பேசுகிறீர்களே, ரகு குலத்தில் பிறந்த உங்களுக்கு இது அழகா!?” என்று கோபம் கொண்டார்.

இந்நேரத்தில் அரசவையில் இருந்த வசிஷ்டருக்கு நடக்கப் போகும் சம்பவங்கள் ஞான திருஷ்டியால் தெரிந்தது. ஸ்ரீராமருக்கும், சீதா பிராட்டியாருக்கும் திருமணம் நடக்க வேண்டியது கட்டாயமல்லவா?

வசிஷ்டர், மன்னனிடம், “மன்னா! குடுத்த வார்த்தையை மறுத்தல் கூடாது. விஷ்வாமித்ரரின் அரவணைப்பில் இருக்கும் போது, குழந்தைகளுக்கு ஒரு ஆபத்தும் இல்லை, தாங்கள் கவலை கொள்ள வேண்டாம், குழந்தையை அனுப்பி வையுங்கள்! அவருடன் செல்வதால், நம் ராமனுக்கு தான் நல்லது. விஸ்வாமித்ர மகரிஷி, உலகில் உள்ள எல்லா அஸ்திரங்களையும் உபயோகிக்கும் ஆற்றலும் வல்லமையும் பெற்றவர். ஈசனிடம் இருந்து தாமே அவ்வாற்றலை தவமிருந்து பெற்றுள்ளார். அவை அனைத்தையும் ராமனுக்கு உபதேசிப்பார்! உமது புதல்வனுக்கு நல்லது ஒன்று நடந்தால் அதை நீ தடுப்பாயா? அத்துடன் இல்லாது, "வெள்ளம் பெருகு, நாடு நலம் பெறுவது போல, உன் புதல்வர்களால் நிறைய நல்ல செயல்கள் நடக்கப் போகின்றன. அதனை தடுத்து விடாதீர். எனவே பயம் கொள்ளாமல், இராமனை அனுப்புங்கள்!” என்று எடுத்து சொல்கிறார்.

விஸ்வாமித்ரரின் மகிமையை வசிஷ்டர் எடுத்துக் கூறிய பின், தசரதரும் மனம் மாறி, தன் புதல்வர்கள் ராம லக்ஷ்மணர்களை முனிவரோடு அனுப்பி வைத்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " “வசிஷ்ட மகரிஷி போல், பரம்பொருளுக்கு எது நன்மை தரும் என்று அறிந்து, பரம்பொருளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவருக்காக உரையாடினேனா? வசிஷ்டர் சொன்னது போல "அனுப்பி வையும்" என்று சொல்லவில்லையே நான்!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்