||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 12
வஸுர் வஸுமநா: ஸத்ய:
ஸமாத்மா ஸம்மித: ஸம:|
அமோக⁴: புண்ட³ரீகாஷோ
வ்ருஷ கர்மா வ்ருஷா க்ருதி:||
- 105. வஸுர் - சிறிது அநுகூல புத்தியுள்ளவரிடத்தும் அன்புடன் வசிப்பவர். பக்தர்கள் தேடும் பொக்கிஷம்.
- 106. வஸுமநாஸ் - தன்னை அடைந்தவரைப் பெருஞ் செல்வமாக நினைப்பவர். தூய மனம் கொண்டவர்.
- 107. ஸத்யஸ் - தன்னை அடைந்தவர்களுக்கு அநுகூலன். அவர் சத்தியம்.
- 108. ஸமாத்மா - அடியார் எவரையும் சமமாகப் பாவிப்பவர்.
- 109. ஸம்மிதஸ் - அடியார்க்கு அடங்கிய பொருளாய் இருப்பவர். தன்னைப் புரிந்து கொள்ளவும். தன் பக்தர்களால் கட்டுப்படுத்தவும் அனுமதித்தவர். ரிஷிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் உபநிடதங்களில் வெளிப்படுத்தப்பட்ட இறுதி உண்மை.
- 110. ஸமஹ - எல்லாரிடத்தும் சமமாய் இருப்பவர். பாரபட்சமற்றவர்.
- 111. அமோக⁴ஃ - அடியாரின் உறவு வீண் போகாமல் காப்பவர். பக்தர்களுக்கு அருள் செய்பவர்.
- 112. புண்ட³ரீகாஷோ - விண்ணோர்க்குக் கண் போனவர். தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவர்.
- 113. வ்ருஷ கர்மா - தர்மத்தின் படியே நற்செயல்களைச் செய்பவர்.
- 114. வ்ருஷா க்ருதிஹி - தருமமே வடிவானவர். தர்மத்தை நிலை நிறுத்த வெளிப்படுபவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment