About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 2 October 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 55

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 25

ஆவர்த்தநோ நிவ்ருத் ஆத்மா 
ஸம்வ்ருத: ஸம்ப்ர மர்த⁴ந:|
அஹ: ஸம்வர்த்தகோ வஹ்நிர் 
அநிலோ த⁴ரணீ த⁴ர:||

  • 230. ஆவர்த்தநோ - உலகச் சக்கரத்தைச் சுழலச் செய்பவன்.
  • 231. நிவ்ருத் ஆத்மா - எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவன்.
  • 232. ஸம்வ்ருதஸ் - நன்கு மறைக்கப்பட்டவன, மறைந்துள்ளவன்.
  • 233. ஸம்ப்ர மர்த⁴நஹ - அஞ்ஞானமான இருளை அழித்து உள்ளதை உள்ளபடி உணரச் செய்பவன்.
  • 234. அஹஸ் ஸம்வர்த்தகோ - காலத்தை நடத்துபவன்.
  • 235. வஹ்நிர் - உலகங்களைத் தாங்கிப் பரமாகாசமாக இருப்பவன்.
  • 236. அநிலோ - வாழச் செய்பவன்.
  • 237. த⁴ரணீ த⁴ரஹ - தாங்குபவற்றையும் தாங்குபவன்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.40

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் – 1.40 

குல க்ஷயே ப்ரணஸ்² யந்தி 
குல த⁴ர்மா: ஸநாதநா:|
த⁴ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நம் 
அத⁴ர்மோபி⁴ ப⁴வத் யுத||

  • குல க்ஷயே - குலநாசத்தினால் 
  • ப்ரணஸ்² யந்தி - அழிகின்றன 
  • குல த⁴ர்மா - குல தர்மங்கள் 
  • ஸநாதநாஹ - தொன்று தொட்டு வருகின்ற
  • த⁴ர்மே - தர்மத்தில்
  • நஷ்டே- நஷ்டத்தில்
  • குலம் - குலம் 
  • க்ருத்ஸ்நம் - முழுவதிலும்
  • அத⁴ர்ம - அதர்மம் 
  • அபி ப⁴வதி - பரவுகிறது
  • உத – கூறப்படுகின்றது

குலம் நாசமடையும் போது, காலங்காலமாக இருந்து வருகின்ற குல தர்மங்கள் அழிகின்றன. தர்மம் குன்றுவதால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.24

பார்தி² வாத்³ தா³ருணோ தூ⁴மஸ்  
தஸ்மாத்³ அக்³நி ஸ்த்ரயீ மய:|
தம ஸஸ்து ரஜஸ் தஸ்மாத் 
ஸத்த்வம் யத்³ ப்³ரஹ்ம த³ர்ஸ²நம்||

  • பார்தி² வாத்³ - ப்ரீத்வி சம்பந்தமான
  • தா³ருணோ - விறகில் இருந்து
  • தூ⁴மஸ் - புகையும்
  • தஸ்மாத்³ - அப்புகையிலிருந்து
  • ஸ்த்ரயீ மய - கார்ஹபத்யம், ஆஹாவநீயம், தக்ஷிணாக்நி 
  • அக்³நி - என்ற வேத யாக அக்நி உண்டாகிறது
  • தம ஸஸ் து - தமோ குணத்தில் இருந்து
  • ரஜஸ் - ரஜஸ் என்ற குணமும்
  • தஸ்மாத் - அந்த ரஜோ குணத்திலிருந்து
  • ப்³ரஹ்ம த³ர்ஸ²நம் - பரப்பிரம்ம ஞான உணர்வான
  • ஸத்த்வம் யத்³ - யாதொரு ஸத்வ குணம் உண்டோ அது உண்டாகிறது

மண்ணின் வேறு வடிவம் தாங்கிய விறகுக் கட்டையை விட, அதிலிருந்து உண்டாகும் புகை மேலானது. அப்புகையைக் காட்டிலும், வேதங்களில் கூறப்பட்ட யாகம் முதலிய கர்மங்களைச் செய்து, நற்பேறு பெறப் பயன்படும் அக்னி (கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி என்றழைக்கப்படும் முக்தி) மேலானது. (கட்டை - தாமஸ குணத்தினை உடையது - போட்ட இடத்தில் கிடக்கும், அசையாது; புகை - ரஜோ குணம் - சுழன்று சுழன்று வரும்; அக்னி - சத்துவ குணம் - அனைத்தையும் எரித்து சாம்பலாக்கித் தூய்மைப்படுத்தும்.) அது போன்று தமோ குணத்தைவிட ரஜோ குணமும், ரஜோ குணத்தினைவிட பரம்பொருளான பிரும்ம ஸ்வரூத்தை விளங்க செய்யும் சத்துவ குணமும் மேலானது.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - த்யான ஸ்லோகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான மங்க³ல ஸ²லோகா꞉ 3
ஶ்ரீ வால்மீகி நமஸ்க்ரியா:

வேத³ வேத்³யே பரே பும்ஸி 
ஜாதே த³ஸ²ரதா²த் மஜே|
வேத³꞉ ப்ராசேத ஸாதா³ஸீத் 
ஸாக்ஷாத்³ ராமாயணாத்மனா|

  • வேத வேத்யே- வேதங்களினால் அறியப்படுபவனான
  • பரே பும்ஸி- பரம புருஷன்
  • த³ஸ²ரதா²த் மஜே - தசரதர் மகனாக
  • ஜாதே - ஜனித்த போது
  • வேதஃ - வேதங்கள்
  • ப்ராசேத ஸாத் - வால்மீகியிடம் இருந்து
  • ஸாக்ஷாத்³ ராமாயண கதா - ராமாயணத்தின் வடிவமாக
  • ஆஸீத் - ஆயின

வேதங்களினால் அறியப்படுபவனான பரம புருஷன் தசரதர் மகனாக ஜனித்த போது, அந்த வேதங்கள் வால்மீகியிடம் இருந்து ராமாயணத்தின் வடிவமாக ஆயின.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 39 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 39 - தேவகி மகனின் திருப்புருவங்கள் 
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதினேழாம் பாசுரம்

பருவம் நிரம்பாமே* 
பாரெல்லாம் உய்யத்*
திருவின் வடிவொக்கும்* 
தேவகி பெற்ற*
உருவு கரிய* 
ஒளி மணி வண்ணன்*
புருவம் இருந்தவா காணீரே* 
பூண் முலையீர்! வந்து காணீரே|

  • பருவம் - வயது
  • நிரம்பாமே - முதிருவதற்கு முன்னமே
  • பார் எல்லாம் - பூமியிலுள்ளவர் அனைவரும்
  • உய்ய - துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காக
  • திருவின் வடிவு ஒக்கும் - பிராட்டியின் வடிவழகை ஒத்த
  • தேவகி - தேவகிப் பிராட்டியாலே
  • பெற்ற - பெறப் பட்டவனான 
  • உருவு கரிய - உருவால் கறுத்தவனான 
  • ஒளி - பிரகாசமான
  • மணி - மணி போன்ற
  • வண்ணன் - நிறத்தை உடையனான கண்ணபிரானுடைய
  • புருவம் இருந்தவா காணீரே - புருவம் இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள்! 
  • பூண் முலையீர் - மார்புக்கு ஆபரணம் அணிந்த பெண்களே! 
  • வந்து காணீரே - வந்து பாருங்கள்! 

பருவம் நிரம்பாத இளம் வயதிலேயே கொடியவர்களை அழித்து உலக உயிர்கள் அனைத்தும், உலகத்திலுள்ள துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காக, திருமகளைப் போன்ற அழகான தேவகி அன்னையின் திருவயிற்றில் மகனாகப் பிறந்த, கரிய உருவத்தில் நீலமணி ஒத்த வண்ணம் உடைய இந்த மழலைச் செல்வத்தின் கூர்மையான கண் புருவம் இருக்கின்ற அழகினை வந்து பாருங்கள். இந்த நீலமணி வண்ணனின், கரிய புருவம் எத்தனை அழகாய் அமைந்திருக்கிறது என்று வந்து பாருங்கள் என்று மார்பில் அழகிய அணிகலன் அணிந்துள்ள பெண்களை , அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 012 - திருக்குடந்தை 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

012. திருக்குடந்தை 
 பாஸ்கர க்ஷேத்ரம் - கும்பகோணம் 
பன்னிரெண்டாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த 
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
7 ஆழ்வார்கள் – 51 பாசுரங்கள்

1. பூதத்தாழ்வார் - 2 பாசுரங்கள்
1. இரண்டாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 2251 - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
  • திவ்ய ப்ரபந்தம் - 2278 - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (97) 

--------------
2. பேயாழ்வார் - 2 பாசுரங்கள்
1. மூன்றாம் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்)  

  • திவ்ய ப்ரபந்தம் - 2311 - மூன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (30)
  • திவ்ய ப்ரபந்தம் - 2343 - ஏழாம் திருமொழி - இரண்டாம்   பாசுரம் (62)

--------------
3. திருமழிசை ஆழ்வார் - 7 பாசுரங்கள் 
                    1. திருச்சந்த விருத்தம் (முதலாம் ஆயிரம்)          

  • திவ்ய ப்ரபந்தம் – 807 - 811 - ஆறாம் திருமொழி - 6 - 10 (56 to 60) - 5 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் – 812 - ஏழாம் திருமொழி - முதலாம் பாசுரம் (61) 1 பாசுரம்
2. நான்முகன் திருவந்தாதி (மூன்றாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 2417 - நான்காம் திருமொழி - ஆறாம் பாசுரம் (36) 1 பாசுரம்

--------------
4. நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்
1. திருவாய்மொழி (நான்காம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 3310 - 3320 - ஐந்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி  

--------------
5. பெரியாழ்வார் - 3 பாசுரங்கள் 
1. பெரியாழ்வார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 173,177 - இரண்டாம் பத்து - ஆறாம் திருமொழி – (2 & 8) 2 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 188 - இரண்டாம் பத்து - ஏழாம் திருமொழி -  ஏழாம் பாசுரம் - 1 பாசுரம்

--------------
6. ஸ்ரீ ஆண்டாள் - 1 பாசுரம் 
1. நாச்சியார் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 628 - பதிமூன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
                                                                  --------------
7. திருமங்கையாழ்வார் - 25 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்) – 17 பாசுரங்கள் 

  • திவ்ய ப்ரபந்தம் - 949, 954 - முதலாம் பத்து - முதலாம் திருமொழி (2, 7) – 2 பாசுரங்கள்
  • திவ்ய ப்ரபந்தம் - 991 - முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்- 1 பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1078 - இரண்டாம் பத்து - நான்காம் திருமொழி - முதலாம் பாசுரம் - 1 பாசுரம்     
  • திவ்ய ப்ரபந்தம் - 1202, 1205 - மூன்றாம் பத்து - ஆறாம் திருமொழி (5, 8) - 2 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1394 - ஐந்தாம் பத்து - ஐந்தாம் திருமொழி - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1526 - ஆறாம் பத்து - எட்டாம் திருமொழி - 1 பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1538 - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - 1 பாசுரம் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1570 - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1606 - ஏழாம் பத்து - ஆறாம் திருமொழி - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1732 - எட்டாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1759 - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1853 - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1949 - பத்தாம் பத்து - பத்தாம் திருமொழி - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 1975 - பதினொன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - 1 பாசுரம்
  • திவ்ய ப்ரபந்தம் - 2010 - பதினொன்றாம் பத்து - ஆறாம் திருமொழி - 1 பாசுரம் 
2. திருக்குறுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) - 2 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2037 - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம் (6) 
  • திவ்ய ப்ரபந்தம் - 2045 - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம் (14)
3. திருநெடுந்தாண்டகம் (இரண்டாம் ஆயிரம்) – 3 பாசுரங்கள்

  • திவ்ய ப்ரபந்தம் - 2068, 2070 - இரண்டாம் திருமொழி - 7 & 9 (17, 19) - 2 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 2080 - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம் (29)  - 1 பாசுரம்
4. திருஎழுகூற்றிருக்கை (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம் 

  • திவ்ய ப்ரபந்தம் - 2672 -1 பாசுரம்
5. சிறிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2707 - நான்காம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (35)

6. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2772 - ஆறாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (60)
----------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
தானே படைத்து உலகத் தானே அளித்து நீ*
தானே அழிக்கும் தளர்ச்சியோ வானில்*
திரு மகுடம் தைக்கச் சிறு குறளாய் நீண்ட*
பெரும குடந்தைக் கிடந்தாய் பேசு*

  • சிறு குறள் ஆய - முதலில் சிறிய வாமன அவதாரமாகி
  • பின்பு வானில் - ஆகாய முகட்டில்
  • திரு மகுடம் தைக்க - அழகிய கிரீடம் முட்டும் படி
  • நீண்ட - திரிவிக்கிரமனாகி நீண்டு வளர்ந்தருளிய
  • பெரும - பெருமானே!
  • உலகை - உலகங்களை
  • நீ தானே - நீயே
  • படைத்து - பிரம்மனாகிச் சிருஷ்டித்து
  • நீ தானே - அளித்து தானான நிலையில் நின்று பாதுகாத்து
  • நீ தானே - அழிக்கும் - சிவனாகி அழிப்பதனால் ஆகிய
  • தளர்ச்சியோ - இளைப்பினாலோ
  • குடந்தை கிடந்தாய் - திருக்குடந்தை என்னும் ஸ்தலத்தில் பள்ளி கொண்டிருக்கின்றாய்?
  • பேசு - இதன் காரணத்தைக் கூறி அருள்வாயாக

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 46

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அக்ருரன் கிருஷ்ணன் சந்திப்பு| 

அக்ருரன் மிகவும் சந்தோஷத்துடன் கிருஷ்ணனை சந்தித்து ஆசி பெற விரும்பினான், எனத்தான் கம்சன் அனுப்பினாலும், அக்ருரருக்கு ஆசி பெறுவதே முக்கியமாக தோன்றியது, இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் தவித்தார், அவருக்கு கிருஷ்ணன் கடவுள் என்று முன்பே தெரியும். அதிகாலையில் ரதத்தில் ஏறி பிருந்தாவனத்திற்கு புறப்பட்டார், அங்கு சென்றடைய மாலை ஆகிவிட்டது, நந்தரின் வீட்டு வாசலுக்கு வந்ததும் கிருஷ்ணனை காண ஆவலாக நின்று கொண்டிருந்தார். கிருஷ்ணரின் கால் பாதத்தை தரையில் கண்டதும் பெரு மகிழ்ச்சி அடைந்து மண்ணை தொட்டு வணங்கினர். பால் கறக்கும் முற்றத்தில் கிருஷ்ணனும் பலராமனும் நின்று கொண்டிருந்தனர்.


கிருஷ்ணன் நீல நிற ஆடையும், பலராமன் மஞ்சள் நிற ஆடையும் அணிந்து இருந்தனர், ஒருவரின் முகம் நிலவை போல அழகாய் இருந்தது, மற்றொருவர் முகம் மழை மேகம் போல இருந்தது, இருவர் முகமும், கண்களும் இரக்கத்துடன் அழகாக தோன்றியது. அக்ருரரால் அவரது சந்தோஷத்தை வெளிபடுத்த முடியவில்லை. அவரது சந்தோஷத்தால் அவர் நெஞ்சம் வெடிப்பது போல தோன்றியது. அக்ருரன் இருவரின் பக்கம் ஓடி சென்று அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினர். அவர் கண்களில் இருந்து நீர் ததும்பியது. கிருஷ்ணன் மரியாதையுடன் அவரை தூக்கி கட்டி அணைத்துக் கொண்டார். அவருடைய கைகளை இருவரும் பிடித்து கொண்டு, அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அக்ருரருக்கு கிருஷ்ணனின் வீட்டில் ஏக போக மரியாதை தான், பலமான விருந்து ஏற்பாடு செய்யபட்டது.


இருவரும் அவரை மெத்தையில் அமர சொன்னார்கள், அக்ருரன் அவரது வாழ்க்கை ஆசீர்வாதம் பெற்றதாக நம்பினார், கிருஷ்ணன் அவரது மெல்லிய குரலில் "இனிய நண்பனே, உங்களது பயணம் இனிமையாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன், மதுராவில் உள்ள எனது சொந்தங்கள் அனைவரும் நலமா? எங்கள் இருவரால் எங்கள் பெற்றோர் மிகவும் துன்பத்தை அனுபவித்தனர், சிறையில் இருந்து துன்புற்றனர். நீங்கள் எதாவது முக்கியமான காரணமாக வந்திர்களா?" என்றார்.


கம்சன் யாதவர்கள் மேல் வைத்துள்ள பகையை பற்றி அக்ருரன் எடுத்து உரைத்தான், வசுதேவரை கொள்ள முயற்சித்ததையும் கூறினார். "கம்சன் உங்கள் இருவரையும் கொள்ள திட்டம் தீட்டுகிறான், அவன் தனுர்யாகம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறான். வில் வழிபாடு விழாவை, காரணமாக வைத்து உங்கள் இருவரையும் மதுராவுக்கு அழைத்து வர சொல்லி இருக்கிறான், சில மல்யுத்த வீரர்களை ஏற்பாடு செய்துள்ளான், அவன் உங்களை கொள்ள விருப்ப
ப் படுகிறான், நந்தரையும் உங்களுடனயே அழைத்து வர சொல்லி இருக்கிறான்" என்றார் அக்ருரன்.

இதை கிருஷ்ணன் புன்சிரிப்புடன் கேட்டு கொண்டு அவருடன் வர சம்மதித்தார். நந்தர் பசும்பாலினை எடுத்து வந்து கம்சனுக்கு தர விருப்பப் பட்டார். "நாம் நாளை காலை மதுராவுக்கு புறப்படலாம். அப்போது தான் நம்மால் வில் விழாவில் கலந்து கொள்ள முடியும்" என்று அக்ருரன் கிருஷ்ணனிடம் கூறினார். அவருடைய ஊர் முழுவதும் தண்டோரா போட்டு இவர்கள் மதுரா செல்லும் விஷயத்தை தெரிவிக்குமாறு நந்தர் கட்டளையிட்டார்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - ஐம்பத்தி இரண்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

052 இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே|

கண்ணன் மீது அன்பு மிக்கவன் ததிபாண்டன். ஆயர்பாடியில் தயிர் விற்பவன். கண்ணன் அவ்வப்போது இவனிடம் குறும்புகள் செய்வது வழக்கம்.


கன்றுகள், தாய்ப்பசுவிடமிருந்து அதிகம் பாலைக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என அதன் வாயைக் கட்டி வைத்திருப்பார்கள். அதற்கு ததிபாண்டன் காவல். கண்ணன் அவ்வப்போது அவனுக்குத் தின்பண்டங்களைக் கொடுத்து அவனை வெளியே அனுப்பிவிட்டு பாலைக் குடித்து விடுவான்.

ஒருமுறை, என்றும் போல், வெண்ணை திருடி கண்ணன் மாட்டிக்கொள்ள, கோபியர்கள் துரத்தி வருகிறார்கள். கண்ணனும் அவன் நண்பர்களும் போக்கு காட்டி தெருக்களில் முத்துக்களாய் சிதறி ஓட, கண்ணன் ததிபாண்டனின் இல்லத்திற்குள் நுழைகிறான். ததிபாண்டன் ஆயர்பாடியில் தயிர்விற்கும் ஒரு இடையர்குலத்தைச் சேர்ந்தவன். ததிபாண்டனின் வீட்டில் பெரிய பெரிய தாழிகளில் தயிர் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். காலையில் அனைத்தையும் விற்றுவிட்டு மாலையில் காலி பானைகளை அலம்பி வைத்திருப்பார். அப்படி ஒரு பெரிய காலியான தயிர் தாழிக்குள் கண்ணன் மறைந்து கொள்கிறான்.


இதனை ததிபாண்டன் பார்த்து விடுகிறார். கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா? ததிபாண்டன் ஓடி சென்று அந்த தாழியை மூடி, அதன் மேல் அமர்ந்து கொள்கிறார். கண்ணனை எல்லா இடத்திலும் தேடி கலைத்த கோபியர்கள், ததிபாண்டனை நோக்கி “கண்ணன் இங்கே வந்தானா?” என்கின்றனர். 

“இல்லையே!”- என்கிறார் ததிபாண்டன், சற்றும் யோசிக்காமல்.

கோபியர்கள் போன பின்பும் ததிபாண்டன் தாழியின் மேலிருந்து இறங்கவில்லை. உள்ளே கிருஷ்ணனுக்கு மூச்சு முட்டுகிறது. தனது புல்லாங்குழலால் தட் தட் என்ற பானை மூடியில் தட்டி மூடியை திறக்க சொல்லுகிறான்.

“உன்னை வெளியில் கொண்டுவர வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை. நீ எனக்கு மோட்சம் கொடுக்க வேண்டும்”- என்கிறார் ததிபாண்டன்.

“மோட்சம் கேட்கும் முறையா இது?? நான் ஏதோ ஆடு மாடு மேய்ப்பேன். குழலூதுவேன்.  வெண்ணை திருடி உண்பேன். வேறு எனக்கு என்ன தெரியும்?”- என்று ஸ்ரீகிருஷ்ணர் சிரிக்கிறார்.

“பூதனையை, சடகாசுரனை, கேசியை கொன்றவன் நீ. காளிங்க நர்த்தனம் ஆடியவன். கோவர்தனத்தைக் குடையாக பிடித்தவன். உன்னை நான் அறிவேன் கண்ணா! மோட்சம் கொடுப்பேன் என்று உறுதியளித்தால் மட்டுமே வெளியில் விடுவேன்.”- என்கிறார் ததிபாண்டன் உறுதியாக.

கண்ணனை அறிதல் என்பது மிக முக்கியமல்லவா?

சிரித்த கண்ணன் உடனே நிஷ்டையில் ஆழ்ந்தான். வைகுந்தத்திலிருந்து தேரும் தேவரும் வந்தனர். ததிபாண்டனை மட்டுமல்ல கண்ணன் ஒளிந்த தாழியையும் சேர்த்து வைகுந்தம் கொண்டு போனார்கள். வைகுண்டம் போனால் இப்போதும் அந்தப் பானையையும் பார்க்கலாம் என்பது ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இப்படியாக ததிபாண்டன் போல், கண்ணனை தாழிக்குள் மறைத்து, அவனைக் காக்க எம்பெருமானின் நன்மைக்காக நான் போய் கூறினேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்