About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 2 October 2023

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.24

பார்தி² வாத்³ தா³ருணோ தூ⁴மஸ்  
தஸ்மாத்³ அக்³நி ஸ்த்ரயீ மய:|
தம ஸஸ்து ரஜஸ் தஸ்மாத் 
ஸத்த்வம் யத்³ ப்³ரஹ்ம த³ர்ஸ²நம்||

  • பார்தி² வாத்³ - ப்ரீத்வி சம்பந்தமான
  • தா³ருணோ - விறகில் இருந்து
  • தூ⁴மஸ் - புகையும்
  • தஸ்மாத்³ - அப்புகையிலிருந்து
  • ஸ்த்ரயீ மய - கார்ஹபத்யம், ஆஹாவநீயம், தக்ஷிணாக்நி 
  • அக்³நி - என்ற வேத யாக அக்நி உண்டாகிறது
  • தம ஸஸ் து - தமோ குணத்தில் இருந்து
  • ரஜஸ் - ரஜஸ் என்ற குணமும்
  • தஸ்மாத் - அந்த ரஜோ குணத்திலிருந்து
  • ப்³ரஹ்ம த³ர்ஸ²நம் - பரப்பிரம்ம ஞான உணர்வான
  • ஸத்த்வம் யத்³ - யாதொரு ஸத்வ குணம் உண்டோ அது உண்டாகிறது

மண்ணின் வேறு வடிவம் தாங்கிய விறகுக் கட்டையை விட, அதிலிருந்து உண்டாகும் புகை மேலானது. அப்புகையைக் காட்டிலும், வேதங்களில் கூறப்பட்ட யாகம் முதலிய கர்மங்களைச் செய்து, நற்பேறு பெறப் பயன்படும் அக்னி (கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி என்றழைக்கப்படும் முக்தி) மேலானது. (கட்டை - தாமஸ குணத்தினை உடையது - போட்ட இடத்தில் கிடக்கும், அசையாது; புகை - ரஜோ குணம் - சுழன்று சுழன்று வரும்; அக்னி - சத்துவ குணம் - அனைத்தையும் எரித்து சாம்பலாக்கித் தூய்மைப்படுத்தும்.) அது போன்று தமோ குணத்தைவிட ரஜோ குணமும், ரஜோ குணத்தினைவிட பரம்பொருளான பிரும்ம ஸ்வரூத்தை விளங்க செய்யும் சத்துவ குணமும் மேலானது.

ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment