About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 12 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 121

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 91

பா⁴ர ப்⁴ருத் கதி²தோ யோகீ³ 
யோகீ³ஸ²ஸ் ஸர்வ காமத³:|
ஆஸ்²ரமஸ் ஸ்²ரமண: க்ஷாமஸ் 
ஸுபர்ணோ வாயு வாஹந:||

  • 851. பா⁴ர ப்⁴ருத் - பாரத்தை, சுமையைத் தாங்குபவர். ஆதிசேஷா எனப்படும் பாம்பின் வடிவில் பூமியின் பாரத்தை சுமந்தவர். பகவான் பூமியின் உடல் எடையை வெறுமனே சுமக்காமல், பிரபஞ்சத்தின் செயல்களை திறமையாக, ஒழுங்கான முறையில், பொருத்தமான இயற்கை விதிகளை நிறுவி பராமரிப்பதன் மூலம் முழு சுமையையும் சுமக்கிறார்.
  • 852. கதி²தோ -  வேதங்களில் சொல்லப்பட்டவர். அனைவராலும் விவரிக்கப்படுபவர். வேதம் போன்ற அனைத்து சாஸ்திரங்களாலும் அவர் ஒருவரே இறுதியான பரமாத்மாவாக அறிவிக்கப்படுகிறார். அனைத்து வேதங்களாலும் அவர் விவரிக்கப்பட்டு நீண்ட காலமாகப் பேசப்படுகிறார்.
  • 853. யோகீ³ - சாமர்த்தியம் படைத்தவர். அனைத்து உயிரினங்களுடனும் முழுமையான ஒற்றுமையுடன் இருப்பவர். ஒன்றாகச் செல்லாத விஷயங்களை ஒன்றிணைப்பதில் அவர் ஒரு தனித்துவமான மகத்துவம் பெற்றவர். ஞானம் அல்லது அறிவின் மூலம் மட்டுமே பெறக்கூடியவர். சுயக்கட்டுப்பாட்டை தனக்குள் எப்பொழுதும் பராமரித்து வருகிறார்.
  • 854. யோகீ³ஸ²ஸ் - யோகியர் தலைவர். எல்லா யோகிகளிலும் முதன்மையானவர்.
  • 855. ஸர்வ காமத³ஹ - எல்லா விருப்பங்களையும் தருபவர். அனைத்து செயல்களுக்கும் அனுசரிப்புகளுக்கும் பலனைத் தரக்கூடியவர். தனது பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் எல்லா நேரங்களிலும் நிறைவேற்றுகிறார்.
  • 856. ஆஸ்²ரமஸ் - அடியார்களின் நினைவு பிறவிதோறும் தொடர்ந்து இருந்து வருமாறு செய்பவர். வனத்தின் நடுவில் உள்ள துறவு இல்லம் போல, சம்சார வனத்தில் அலைந்து திரியும் சிரமத்திற்கு ஆளான பயணிகளுக்கு அமைதியும் ஆறுதலும் அளிக்கும் இடமாக அவர் இருக்கிறார். 
  • 857. ஸ்²ரமண - யோகத்தின் நினைவு பிறவிதோறும் தொடர்ந்து இருந்து வருமாறு செய்பவர். பாகுபாடான ஞானத்தைப் பயன்படுத்தாத அனைவரையும் அவர் துன்புறுத்துகிறார். விவேகமற்றவர்களை துன்புறுத்துகிறார்.
  • 858. க்ஷாமஸ் - திறமையுள்ளவனாகச் செய்பவர். அவர் அனைத்து உயிரினங்களின் வீழ்ச்சியையும் கொண்டு வருகிறார். அனைத்து உயிரினங்களையும் அவற்றின் தற்போதைய வடிவத்திற்கு முன்பு இருந்த நிலைக்குக் குறைக்கிறார். 
  • 859. ஸுபர்ணோ - தாண்ட உதவுபவர். அழகான இறக்கைகளை உடையவர். யோகினருக்கு சம்சாரக் கடலைக் கடக்க உதவுபவர். எல்லாவற்றையும் சுற்றிச் செல்லும் திறனைக் கொடுப்பவர். எல்லாவற்றையும் வாழவும் செழிக்கவும் செய்பவர். பச்சை துளசி, இலைகள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டவர்.
  • 860. வாயு வாஹநஹ - மேல் எழச் செய்பவர். வாயுவை இயக்குவிப்பவர். காற்றை ஓட்டவும், அனைத்து உயிரினங்களையும் சுமந்து, அனைத்து உயிர் சக்திகளையும் தாங்குகிறார். வாயுவை உயிர் வாழும் வேலையைச் செய்ய வைக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.58

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.58
 
யதா³ ஸம் ஹரதே சாயம் 
கூர்மோங்கா³ நீவ ஸர்வஸ²:|
இந்த்³ரியாணீந் த்³ரியார் தே²ப்⁴யஸ்
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா||

  • யதா³ - எப்போது 
  • ஸம் ஹரதே - இழுத்துக் கொள்கிறது 
  • ச - மேலும்  
  • அயம் - அது 
  • கூர்ம - ஆமை  
  • அங்கானி - அங்கங்கள் 
  • இவ - போல  
  • ஸர்வஸ²ஹ - சேர்த்து 
  • இந்த்ரியாணி - புலன்கள் 
  • இந்த்³ரிய அர்தே²ப்⁴யஸ் - புலனுகர்ச்சிப் பொருட்களிலிருந்து  
  • தஸ்ய - அவனது 
  • ப்ரஜ்ஞா - உணர்வு 
  • ப்ரதிஷ்டி²தா - நிலைபெற்றது

ஆமையானது, அங்கங்களை சேர்த்து இழுத்துக் கொள்கிறதை போல, எவனொருவன், புலனுகர்ச்சிப் பொருட்களிலிருந்து, புலன்களை அடக்கிக் கொள்கிறானோ, அவன் பக்குவ உணர்வில், நிலை பெற்றவனாவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.11

நமந்தி யத் பாத³ நிகேத மாத்மந:
ஸி²வாய ஹாநீய த⁴நாநி ஸ²த்ரவ:|
கத²ம் ஸ வீர: ஸ்²ரிய மங்க³ து³ஸ்த் யஜாம்
யுவை ஷதோத் ஸ்ரஷ்டு மஹோ ஸஹா ஸுபி⁴:||

  • ஸ²த்ரவ - விரோதிகள்
  • ஆத்மநஹ -  தங்களுடைய
  • ஸி²வாய - நன்மையின் பொருட்டு
  • த⁴நாநி - பெரும் ஸம்பத்தை
  • ஹாநீய - கொணர்ந்து
  • யத் பாத³ நிகேதம் - எந்த பரீக்ஷித்தின் பாதங்களில் அர்ப்பணம் செய்து
  • நமந்தி - வணங்குகிறார்களோ
  • ஹ - ஆச்சரியம்
  • வீரஸ் யுவை - வீரனும், யௌவனத்தை உடையவனுமான
  • ஸ - பரீக்ஷித் என்ற அரசன்
  • அங்க³ - ஹே சூத மஹரிஷே!
  • கத²ம் - ஏன்
  • து³ஸ்த் யஜாம் ஸ்²ரியம் - எளிதில் விடுவதற்கு முடியாததான ஐஸ்வர்யத்தை
  • அஸுபி⁴ஹி ஸஹ - தனது பிராணன்களோடு கூட
  • உஸ்ரஷ்டும் ஏவத - விடுவதற்கு இச்சித்தானே
  • அஹோ - அது ஆச்சரியம் அன்றோ!

ஸூத புராணிகரே! பகைவர்களும் தங்கள் தங்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உயர்ந்த பொருட்களைக் காணிக்கையாகக் கொணர்ந்து, பரீக்ஷித்தின் திருவடிகளில் வைத்து வணங்குகிறார்கள். அவன் வீரம் நிறைந்தவன், இளைஞனும்கூட! அவ்வாறிருக்க, துறத்தற்கரிதான பொன்னாசையையும், தனது உயிரையும் கூட விட்டொழிக்க எண்ணினானே. இதுவன்றோ வியப்பு?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.56

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.56

தம் நிஹத்ய மஹா பா³ஹுர் 
த³தா³ஹ ஸ்வர்க³ தஸ்²ச ஸ:|
ஸ சாஸ்ய கத²யா மாஸ 
ஸ²ப³ரீம் த⁴ர்ம சாரிணீம்||

  • மஹா பா³ஹுர் - பெருந் தோள்களைக் கொண்டவன் ராமன்
  • தம் நிஹத்ய - அவனைப் கொன்று
  • த³தா³ஹ - தஹனம் செய்தார்
  • ஸ: ச - அவன் உடனே
  • ஸ்வர்க³ - ஸ்வர்கத்தை
  • தஸ்² - அடைந்தான்
  • ச ஸஹ - மேலும் அவன்
  • ஆஸ்ய - ஆகாசத்தில் சற்று நின்று
  • த⁴ர்ம சாரிணீம் - தர்ம அனுஷ்டானம் உள்ள
  • ஸ²ப³ரீம் - சபரியை பற்றி
  • கத²யா மாஸ - தெரியப்படுத்தினான்

பெருந் தோள்களைக் கொண்டவன் ராமன். கபந்தனைக் கொன்று எரியூட்டியதும், அந்த கபந்தன் சொர்க்கத்தை அடைந்தான். கபந்தன், சொர்க்கத்தை அடைவதற்கு முன், அறத்தை நன்கு அறிந்தவளான சபரியை பற்றி தெரியப்படுத்தினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 99 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 99 - பஞ்ச பாண்டவர் தூதன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

பஞ்சவர் தூதனாய்ப்* பாரதம் கை செய்து* 
நஞ்சு உமிழ் நாகம்* கிடந்த நற் பொய்கை புக்கு* 
அஞ்சப் பணத்தின் மேல்* பாய்ந்திட்டு அருள் செய்த* 
அஞ்சன வண்ணனே! அச்சோ அச்சோ* 
ஆயர் பெருமானே! அச்சோ அச்சோ!

  • பஞ்சவர் - பாண்டவர்களுக்காக
  • தூதன் ஆய் - துர்யோதநாதிகளிடம் தூதனாய்ப் போய், அந்த துர்யோதநாதிகள் தன் சொற்படி இசைந்து வராமையால்
  • பாரதம் - பாரத யுத்தத்தை
  • கை செய்து - அணி வகுத்துச் செய்து கை கொடுத்தவனும்
  • நஞ்சு - விஷத்தை
  • உமிழ் - கக்குகின்ற
  • நாகம் - காளீய ஸர்ப்பம்
  • கிடந்த - இருந்த
  • நல் பொய்கை - கொடிய தடாகத்திற்குள்
  • புக்கு - புகுந்து
  • அஞ்சு - ஆய்ச்சிகளும் ஆயரும் பயப்படும்படி
  • பணத்தின் மேல் - அப் பாம்பின் மேல்
  • பாய்ந்திட்டு - குதித்து நடமாடி அக் காளியனை இணைப்பித்துப் பின்பு அவன் ப்ரார்த்திக்க
  • அருள் செய்த - அப் பாம்பின் ப்ராணனைக் கருணையால் அருள் செய்த
  • அஞ்சன வண்ணனே! — மைபோன்ற அழகனே!
  • அச்சோ! அச்சோ! — என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்
  • ஆயர் - இடையர்களுக்கு
  • பெருமானே - தலைவனானவனே! 
  • அச்சோ! அச்சோ! — என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

பஞ்ச பாண்டவர்களுக்காக துர்யோதனாதிகளிடம் தூதனாய்ப் போனவனும், பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்படாததால் பாரத யுத்தத்தை அணிவகுத்து செய்தவனும், விஷத்தைக் கக்கும் காளியன் என்கிற ஸர்ப்பத்தை, ஆயர்கள் பயப்படும்படி, மடுவிலே புகுந்து அதன் தலை மேலே நடனமாடி அடக்கி, பின்பு தனது கருணையால் அதற்கும் அருள் புரிந்த, மை போன்ற நிறம் உடையவனுமான கண்ணனே! என்னை அணைத்துக் கொள்ள வர வேண்டும், ஆயர்களின் தலைவனே, அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 029 - திரு அரிமேய விண்ணகரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

029. திரு அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10

001. திவ்ய ப்ரபந்தம் - 1238 - மனமே! அரி மேய விண்ணகரம் வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - முதலாம் பாசுரம்
திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத்*
தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து* 
இவ் ஏழ் உலகத்தவர் பணிய* வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம்* 
பெரும் புகழ் வேதியர் வாழ் தரும் இடங்கள் 
மலர்கள் மிகு கைதைகள் செங்கழு நீர்*
தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ*
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1239 - தேவர்களுக்கு அமுதளித்தவன் இடம் அரிமேய விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும்*
விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று*
குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும்*
குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்*
என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர்*
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்*
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1240 - கம்சனைக் கொன்றவன் கோயில் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம்*
உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த*
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து* 
கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்* 
மருங்கு எங்கும் பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட*
பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்*
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1241 - இரணியனைப் பிளந்தவன் வாழும் இடம் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு* 
அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி*
வாடாத வள் உகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு*
அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்*
சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை*
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே*
ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1242 - உலகளந்தவன் கோயில் அரிமேய விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக்*
களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு*
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*
அளந்த பிரான் அமரும் இடம் வளங் கொள் பொழில் அயலே*
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும்*
அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும்*
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1243 - தயரதன் மகன் தங்கும் இடம் அரிமேய விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா* 
இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர*
தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய்*
என் தன் தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர்*
சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை*
செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம்*
வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1244 - காமனைப் பயந்த காளையின் கோயில் இது தான்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்*
தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான்*
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான்*
கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி*
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம்* 
ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று* 
அங்கு ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1245 - குடமாடு கூத்தனின் இடம் அரிமேய விண்ணகரம்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கன்று அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை*
காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான்*
குன்று அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன்*
குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்*
துன்று மணி மண்டபங்கள் சாலைகள்* தூ மறையோர்
தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை*
அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1246 - அரி சரணம் என்று வணங்கும் இடம் இது
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு* 
வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு* 
வலி மிக்க கஞ்சன் உயிர் அது உண்டு இவ் உலகு உண்ட காளை*
கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி*
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து*
வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி*
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர்*
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1247 - இவை படிப்போர் தேவராவர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - பத்தாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து* 
பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில்*
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர்*
அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை*
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான்*
கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும்*
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார்* 
உலகத்து உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 65

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 10

ஸ்கந்தம் 03

மைத்ரேயர் தொடர்ந்தார். ப்ரும்மா ஸப்த ப்ரும்மமாக, வேதமாகத் தோன்றிய காலம் ப்ரும்ம கல்பம். அதன் முடிவில் தாமரை மலரில் தோன்றினார். அதனால் அது பாத்ம கல்பம் என்று அழைக்கப் படுகிறது.


அவரது இரண்டாவது பரார்த்தத்தின் துவக்கத்தில் ஆரம்பித்து இப்போது வரை வராக கல்பம். இதில் பகவான் வராக மூர்த்தியாக அவதாரம் செய்தார்.

பரமாணு காலம் துவங்கி இந்த இரண்டு பரார்த்தங்கள் வரையிலான ப்ரும்மாவின் ஆயுள் காலம் பகவானுக்கு ஒரு நொடியாகும்.

இந்த ப்ரும்மாண்ட கோசம் எட்டு அடிப்படைத் தத்துவங்கள் கொண்டது. 

ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், சப்தம், ஸ்பர்சம் முதலிய ஐந்து தன்மாத்திரைகள். இவை மேலும் ஐந்து பூதங்கள், பத்து பொறிகள், மற்றும் மனம் என்று பதினாறு மாறுதல்களை உடையது.

இது உள்ளும் புறமும் 50 கோடி யோஜனை தூரம் உள்ளது. பூமி, நீர், அக்னி, வாயு, ஆகாயம், அஹங்காரம், மஹத் என்ற 7 ஆவரணங்கள் உடையது. இந்த ஆவரணங்கள் (திரை) ஒன்றுக்கொன்று பத்து மடங்கு பெரியவை.

இப்படிபட்ட ப்ரும்மாண்ட கோசம் பகவானிடம் ஒரு அணு போல் காணப்படுகிறது. இதைப் போல் கோடிக் கணக்கான ப்ரும்மாண்டங்களை உடையவர் அவர். புராண புருஷரான (பழைய வஸ்து) இவரை மஹாவிஷ்ணு எனவும் அழைக்கின்றனர். விதுரரே, இனி ப்ரும்மதேவரின் ஸ்ருஷ்டிகள் பற்றிக் கூறுகிறேன். கேளுங்கள்..

ப்ரும்மா முதலில் அஞ்ஞானத்தின் ஐந்து தொழில்களைப் படைத்தார்.

1.தாமிஸ்ரம்(துவேஷம்)
2. அந்ததாமிஸ்ரம் (மரணமே ஜீவனின் முடிவு என்ற எண்ணம்)
3. மோகம் (உடல் பற்று)
4. மகாமோகம் (பொறிகளின் சுகத்தில் பற்று)
5. தமஸ் (ஆன்ம தத்வத்தை மறைக்கும் அறியாமை எனும் மாயை)

முதலில் தத்வங்களைப் படைத்த பின் ஜீவ ஸ்ருஷ்டியைத் துவக்கினார். இதன் பின், வேதங்கள், வேள்விகள் (ஷோடஸி, உக்தம், அக்னிஷ்டோமம், சயனம், அப்தோர்யாமம், அதிராதரம், வாஜபேயம், கோஸவம்), அவற்றின் விரிவுகள், உபவேதங்கள், ப்ரும்மசர்யம், இல்லறம், வானப்ரஸ்தம், துறவறம், ஆகிவற்றின் நெறிகள், ரித்விக்குகளின் வகைகள், அவர்களின் நெறிகள், ஆயுர்வேதம் (மருத்துவம்), தனுர்வேதம் (ஆயுதங்கள், போர் வகைகள்) காந்தர்வ வேதம் (இசை, பரதம் முதலையன) ஸ்தாபத்ய வேதம் (வீடு கட்டுதல் முதலியன), ஐந்தாவது வேதமான இதிஹாஸ புராணங்கள், தர்மத்தின் நான்கு பாதங்களான வித்யை, தானம், தவம், ஒழுக்கம், அவற்றின் நெறிமுறைகள் ஆகியவற்றைப் படைத்தார். உஷ்ணீக், காயத்ரி, த்ரிஷ்டுப், அனுஷ்டுப், ஜகதீ, பங்க்தீ, ப்ருஹதீ ஆகிய சந்தங்கள் ப்ரும்மாவின் உடலிலிருந்து தோன்றின.

அ முதலான உயிழுத்துக்கள், க முதல் ம வரையிலான மெய் எழுத்துக்கள், ஶ, ஷ, ஸ, ஹ, முதலிய ஊஷ்ம எழுத்துக்கள், ய,ர, ல, வ என்ற அந்தஸ்த (இடையின) எழுத்துக்கள் ஆகியவையும் ப்ரும்மாவிடமிருந்து வந்தன. அவரது திருவிளையாடல்களில் இருந்து ஸப்த ஸ்வரங்களின் த்வனி தோன்றியது.

ப்ரும்மா வெளிப்படையாக ஸப்த ப்ரும்மத்தின் எழுத்துக்களின் ஒலிகளாகவும், உள் முகமாக ஓம் எனும் ப்ரணவத்தின் த்வனியாகவும் இருக்கிறார். இவ்வளவு செய்தும் படைப்பு பெருகாததைக் கண்டு வருத்தமுற்றார் ப்ரும்மா.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்