About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 March 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 124

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 94

விஹாய ஸக³திர் ஜ்யோதி: 
ஸூருசிர் ஹுதபு⁴க்³ விபு⁴:|
ரவிர் விரோஸ²நஸ் ஸூர்ய: 
ஸவிதா ரவி லோசந:||

  • 880. விஹாய ஸக³திர் - பரம பதத்தை அடைவிப்பவர். மோட்சத்தை அடைவதற்கான வழிமுறையாக இருப்பவர். சூரியனின் வடிவில் பயணிப்பவர். பறவைகளின் ராஜாவாகிய கருடன் வாகனத்தின் மூலம் விண்வெளியில் பயணிப்பவர். துறவிகள் தங்கள் தவம் மூலம் அடைந்தவர்.
  • 881. ஜ்யோதிஸ் - ஒளி மயமாய் இருப்பவர். ஸ்ரீ வைகுந்தத்திற்கு செல்லும் ஒளி. 
  • 882. ஸுருசிர் - அழகாக ஒளிர்பவர். எல்லா பிரகாசங்களுக்கும் காரணமானவர். உலகைப் பாதுகாக்கும் நல்ல விருப்பமும் விருப்பமும் கொண்டவர். எல்லாவற்றிலும் எல்லா பிரகாசங்களுக்கும் காரணமானவர். பக்தர்களிடம் தீவிர பற்று கொண்டவர்.
  • 883. ஹுதபு⁴க்³ விபு⁴ஹு - ஸுக்ல பட்சமாய் இருப்பவர்.  அக்னியில் அவியாகச் சேர்க்கப்பட்டதை உண்பவர்.  எல்லா யாகங்களையும் அனுபவிப்பவர். எங்கும் நிறைந்திருப்பவர். எல்லா தியாகங்களையும் அனுபவிப்பவர்.
  • 884. ரவிர் - உத்தராயணமாகக் கொண்டாடப்படும் சூரியன். சூரியனின் சாரம் கொண்டவர். அனைத்து பொருட்களிலிருந்தும் அனைத்து அடிப்படை சாரங்களையும் பிரித்தெடுத்து உறிஞ்சுகிறார்.
  • 885. விரோஸ²நஸ் - ஒளி தருபவர். பல சிறப்புகளை உடையவர். உலகத்தை ஒளிரச் செய்பவர். பலவிதமான மகிமைகளைக் கொண்டவர். பல்வேறு வழிகளில் அனைவருக்கும் இன்பம் தருகிறார்.  
  • 886. ஸூர்யஸ் - வாயு லோகமாக இருப்பவர். (சூரியன் - வாயு லோகம்). புத்திசாலித்தனத்தையும் செல்வத்தையும் உருவாக்குபவர். பிரகாசத்தை உருவாக்குபவர். 
  • 887. ஸவிதா - உண்டாக்குபவர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் கொண்டு வருபவர். 
  • 888. ரவி லோசநஹ - சூரிய கிரணங்களின் மூலம் சந்திரன் முதலானோரை ஒளிரச் செய்பவர். சூரியனைக் கண்ணாகக் கொண்டவர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.61

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.61 

தாநி ஸர்வாணி ஸம்யம்ய 
யுக்த ஆஸீத மத்பர:|
வஸே² ஹி யஸ் யேந்த்³ரியாணி 
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா||

  • தாநி - எவரது புலன்கள் 
  • ஸர்வாணி - அனைத்தும் 
  • ஸம்யம்ய - அடக்கப்பட்டனவோ 
  • யுக்த - ஈடுபட்டதால் 
  • ஆஸீத - நிலைபெற்று  
  • மத்பரஹ - என்னைப் பரமாகக் கொண்டு 
  • வஸே² - முழுமையாக 
  • ஹி - நிச்சயமாக  
  • யஸ்ய - எவனது 
  • இந்த்³ரியாணி - புலன்கள் 
  • தஸ்ய - அவனது 
  • ப்ரஜ்ஞா - உணர்வு 
  • ப்ரதிஷ்டி²தா - நிலைபெறுகின்றது

எவரது புலன்கள் அனைத்தும் யோகத்தில் அமர்ந்து அடக்கப்பட்டனவோ, அவரது புலன்கள், , இறைவனிடத்தில் முழுமையாக ஈடுபடுமாயின், அவனது உணர்வு நிலைபெறுகின்றது.

இந்த ஸ்லோகத்தில் மனிதன் அழிவிற்கான காரணத்தை பகவான் கிருஷ்ணன் அர்ஜுநனுக்கு விளக்குகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.14

ஸூத உவாச|
த்³வாபரே ஸமநு ப்ராப்தே 
த்ருதீயே யுக³ பர்யயே|
ஜாத: பரா ஸ²ராத்³ யோகீ³ 
வாஸவ்யாம் கலயா ஹரே:||

  • ஸூத உவாச - ஸூதர் கூறுகிறார்
  • யுக³ பர்யயே - யுகக் கணக்கில்
  • த்ருதீயே  த்³வாபரே - மூன்றாவதான துவாபர யுகம்
  • ஸமநு ப்ராப்தே - ஏற்பட்ட அளவில்
  • வாஸவ்யாம் - வாஸவி என்கிற சத்யவதியிடம்
  • பரா ஸ²ராத்³ - பராஸர மஹரிஷிக்குப் புத்திரராக
  • ஹரேஹே கலயா - ஸ்ரீ ஹரியினது
  • யோகீ³ -  ஞானியான வியாஸர்
  • ஜாதஃ - தோன்றினார்  

ஸூதர் கூறுகிறார்: யுகங்களின் வரிசையில் மூன்றாவதான துவாபரயுகக் கடைசியில், உபரிசரன் என்ற வசுவின் மகளான வாஸவி என்கிற சத்யவதியிடம் பராஸர மஹரிஷிக்குப் புத்திரராக, பகவான் வாசுதேவரின் அம்சத்துடன் பரம ஞானியான வியாஸ பகவான் தோன்றினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.59

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.59

ஹநுமத்³ வசநாச் சைவ 
ஸுக்³ரீ வேண ஸமா க³த:|
ஸுக்³ரீவாய ச தத் ஸர்வம் 
ஸ²ம்ஸத்³ ராமோ மஹா ப³ல:|| 

  • ஹநுமத்³ வசநாச் - ஹநுமாருடைய வார்த்தையால்
  • ஸுக்³ரீ வேண ஏவ - ஸுக்ரீவனோடும்
  • ஸமா க³தஹ ச - கூட்டுறவானார்
  • மஹா ப³லஹ - பலசாலியான
  • ராமோ - ஸ்ரீராமர்
  • ஸர்வம் - எல்லாவற்றையும்
  • தத் ச - விவரங்களையும்
  • ஸுக்³ரீவாய - ஸுக்ரீவருக்கு
  • ஸ²ம்ஸத்³ - சொன்னார்

ஹனுமானின் சொல்லால் ஸுக்ரீவனைச் சந்தித்தார். பெரும் பலவானான ராமன், நடந்தவை அனைத்தையும் ஸுக்ரீவனிடம் விரிவாகச் சொன்னார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்  

திவ்ய ப்ரபந்தம் - 102 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 102 - பார்த்தனுக்கு சாரதியானவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

போர் ஒக்கப் பண்ணி* இப் பூமிப் பொறை தீர்ப்பான்* 
தேர் ஒக்க ஊர்ந்தாய்!* செழுந்தார் விசயற்காய்* 
கார் ஒக்கும் மேனிக்* கரும் பெருங் கண்ணனே!* 
ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ* 
ஆயர்கள் போரேறே! அச்சோ அச்சோ!

  • இப் பூமி - இந்தப் பூமியினுடைய
  • பொறை - பாரத்தை
  • தீர்ப்பான் - தீர்ப்பதற்காக
  • போர் - யுத்தத்தை
  • ஒக்க - கௌரவர்களோடு ஸமமாக 
  • பண்ணி - செய்து
  • செழு - செழுமை தாங்கிய
  • தார் - தும்பை மாலையை அணிந்துள்ள
  • விசயற்கு ஆய் - அர்ஜுநனுக்காக
  • தேர் - அவனுடைய தேரை
  • ஒக்க - எதிரிகள் தேர் பலவற்றிற்கும் இது ஈடாகும்படி
  • ஊர்ந்தாய் - பாகனாய்த் தேரைச் செலுத்தினவனே!
  • கார் ஒக்கும் - மேகம் போன்ற நிறமுடைய
  • மேனி - திருமேனியில்
  • கரும் பெருங் - கரிய பெரிய கண்களை உடைய 
  • கண்ணனே - கண்ணழகனே!
  • வந்து - ஓடி வந்து
  • ஆர - நெஞ்சார
  • தழுவா - தழுவி 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • ஆயர்கள் - இடையர்களுக்கு அடங்கி நிற்கின்ற
  • போர் ஏறே - போர் செய்யும் தன்மையுள்ள ரிஷபம் போன்றவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

இந்த பூமியின் பாரத்தை தீர்ப்பதற்காக பல யுத்தங்களைப் புரிந்தவனும், சிறந்த மாலைகளை அணிந்தவனான அர்ஜுநனுக்காக தேரோட்டியானவனும், மேகம் போன்ற திருமேனியில் விசாலமான கரிய கண்களை உடையவனுமான கண்ணனே! என்னை கட்டியணைக்க ஓடி வர வேண்டும். ஆயர்களின் காளையே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 030 - திரு வண்புருஷோத்தமம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

030. திரு வண்புருஷோத்தமம் (திருநாங்கூர்)
முப்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் – 10

001. திவ்ய ப்ரபந்தம் - 1258 - காளியன் மீது நடனமாடியவன் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன்* 
கதிர் முடி அவை பத்தும் அம்பினால் அறுத்து* 
அரசு அவன் தம்பிக்கு* அளித்தவன் உறை கோயில்*
செம் பலா நிரை செண்பகம் மாதவி* சூதகம் வாழைகள் சூழ்*
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1259 - ஆநிரை காத்தவன் உறையும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி* அக் காளியன் பணவு அரங்கில்*
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த* உம்பர் கோன் உறை கோயில்*
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறு அங்கம்*
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1260 - கம்சனைக் கொன்றவன் உறையும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று* 
அமைத்த சோறு அது எல்லாம் உண்டு* 
கோ நிரை மேய்த்து அவை காத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
கொண்டல் ஆர் முழவில் குளிர் வார் பொழில்* குல மயில் நடம் ஆட*
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்* வண் புருடோத்தமமே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1261 - வாணாசுரனை வென்றவன் உறைவிடம் இக்கோயில்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து* அதன் பாகனைச் சாடிப் புக்கு*
ஒருங்க மல்லரைக் கொன்று* பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு* கழனியில் மலி வாவி*
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1262 - கண்ணன் உறை கோயில் வண்புருடோத்தமம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து* ஈசன் தன் படையொடும் கிளையோடும்
ஓட* வாணனை ஆயிரம் தோள்களும்* துணித்தவன் உறை கோயில்*
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்* பகலவன் ஒளி மறைக்கும்*
மாட மாளிகை சூழ் தரு நாங்கூர்* வண் புருடோத்தமமே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1263 - இரணியனைக் கொன்றவன் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று* அயன் அலர் கொடு தொழுது ஏத்த*
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய* கண்ணன் வந்து உறை கோயில்*
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட* மா பதுமங்கள்*
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்* வண் புருடோத்தமமே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1264 - மேக வண்ணன் மேவும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்* தனது உரம் பிளந்து உதிரத்தை
அளையும்* வெம் சினத்து அரி பரி கீறிய* அப்பன் வந்து உறை கோயில்*
இளைய மங்கையர் இணை அடிச் சிலம்பினோடு* 
எழில் கொள் பந்து அடிப்போர்* 
கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்* வண் புருடோத்தமமே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1265 - நான்முகனைப் படைத்தவன் உறையும் கோயில் இது
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
வாளை ஆர் தடங் கண் உமை பங்கன்* வன் சாபம் மற்று அது நீங்க*
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த* எம் முகில் வண்ணன் உறை கோயில்*
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்* வண் பழம் விழ வெருவிப் போய்*
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்* வண் புருடோத்தமமே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1266 - இவற்றைப் படிப்போர் தேவரோடு கூடுவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
இந்து வார் சடை ஈசனைப் பயந்த* நான் முகனை தன் எழில் ஆரும்*
உந்தி மா மலர் மீமிசைப் படைத்தவன்* உகந்து இனிது உறை கோயில்*
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து* தன் குருளையைத் தழுவிப் போய்*
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்* வண் புருடோத்தமமே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1267 - திருநாங்கூர்ச் செம்பொன் செய் கோயில்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்* வண்புருடோத்தமத்துள்*
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்* ஆலி மன் அருள் மாரி*
பண்ணுளார் தரப் பாடிய பாடல்* இப் பத்தும் வல்லார்* 
உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று* இமையவரோடும் கூடுவரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 68

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 13

ஸ்கந்தம் 03

வராஹ அவதாரக் கதையைக் கேட்ட விதுரர், மேலும் ஸ்ரீ ஹரியின் லீலைகளைக் கேட்க விரும்பி, மைத்ரேயரிடம் கேட்டார்.

"முனி ஸ்ரேஷ்டரே, யக்ஞ வராஹ மூர்த்தியினால், ஹிரண்யாக்ஷன் கொல்லப்பட்டான் என்று சொன்னீர்கள். பகவானுக்கும் அவனுக்கும் ஏன் போர் மூண்டது? என்ன காரணம்? விளக்கிக் கூறுங்கள்" என்றார்.

மைத்ரேயர் சொல்லத் துவங்கினார். 


"விதுரரே, உங்கள் கேள்வி மிகவும் ஆழமானது. மனிதர்களின் யம பயத்தை நீக்க வல்ல ஸ்ரீ ஹரியின் அற்புதமான லீலையைக் கேட்கிறீர்கள். ஸ்வாயம்புவ மனுவின் புதல்வரான உத்தான பாதனின் மகன் துருவன் என்பவர் பகவானின் கதைகளைக் கேட்டு, அதன் மகிமையால் யமனின் தலையில் கால் வைத்து ஏறி த்ருவ பதம் பெற்றார்.

இந்தக் கதையை நான் தேவர்களுக்கு ப்ரும்மா கூறினார்.

ஒரு சமயம் கச்யபர், ஸ்ரீமன்  நாராயணனை அக்னி ஹோத்ரத்தினால்  ஆராதனை செய்து விட்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது,  தக்ஷ ப்ரஜாபதியின் மகளான திதி என்பவள், தன் கணவரான கச்யபரிடம் காமாத்தினால் சென்று மாலை வேளையில் அவரோடு இன்புற்றிருக்க விரும்பினாள். கச்யபர் அவளைப் பார்த்து, மிகவும் பொறுமையுடன் கூறினார். நீ விரும்பியவாறு செய்கிறேன். ஒருவன் மனைவி மூலம் தான் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பேறுகளைப் பெறுகிறான். அப்படியிருக்க, மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? இல்லறத்தான் மற்ற மூன்று ஆசிரமத்தில் ஒழுகுபவர்களையும்  ஆதரித்து, இல்வாழ்வில் விருந்தோம்பல் என்னும் உயர்ந்த கடைமையாற்றி அதன் மூலமே பிறவிக் கடலைக் கடந்து விடுகிறான். 


மனைவி மீது இல்லறக் கடைமைகளைச் சுலபமாக ஏற்றி விட்டு கணவன் நிம்மதியாகத் திரிகிறான். இல்லறத்தான் மனைவியின் துணையோடு, பொறிகளையும் அடக்கி ஆள்கிறான். உன்னைப் போன்ற மனையாள் செய்யும் உதவிக்கு, என்னைப் போன்ற நற்குண சீலர்கள் கூட, எத்தனை பிறவி எடுத்தாலும் கைம்மாறு செய்ய இயலாது. ஆனால், இப்போது மாலை வேளை. மாலை வேளையில் பரமேஸ்வரன், தம் பூத கணங்களோடு நந்தி மேலேறி வலம் வருகிறார். இந்நேரத்தில் கூடுவது தவறு. எனவே, நல்ல முஹூர்த்தம் வரும் வரை சற்று பொறுத்திரு. பரமேஸ்வரன் நமக்கு உறவினர் தானே என்று நினைத்து விடாதே. அவர் மாயைத் திரையைக்  கிழித்து அற்ப சுகங்களை வெறுத்தவர். அனைவரும் அவர் புகழைப் பாடுகின்றனர். மிகவும் பெருமை வாய்ந்தவர். என்றாலும், யாராலும் விரும்பத் தகாத வேஷத்தை வேண்டுமென்றே ஏற்றிருக்கிறார். நாய்க்கு இரையாகும் இவ்வுடலை அறிவிலிகள் 'தான்', 'ஆத்மா' என்று எண்ணி, நல்லாடைகள், நறுமணப் பூச்சுக்கள், அணிகலன்கள், பகவான் மற்ற அனைத்து போகப் பொருள்களும் கொண்டு அழகு செய்து கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

அவையெல்லாம் இந்தப் பாம்புகள் போன்றவை என்று வெளிக்காட்டவே பரமேஸ்வரன் பாம்புகளை அணிந்து கொள்கிறார். அவர் ப்ரபஞ்சத்தின் காரணர் ஆவார். (ஹரியும், சிவனும் ஒன்று என்பதாக) அவரது திருவிளையாடல்கள் நம் அறிவுக்கு எட்டாதவை." என்று அழகாக எடுத்துரைத்தார்.

கணவர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேளாமல்,  பொறிகளின் வசம் ஆட்பட்ட திதி, கச்யபரைப் பிடித்திழுத்தாள். தவறான செயலுக்குத் தம்மையும்‌ பிடிவாதமாய் இழுப்பது கண்டு, கச்யபர் இது விதி வழியென்று நினைத்து, அவள் விருப்பத்திற்கு உட்பட்டார்.

பின்னர் நீராடி, மூச்சையும் பேச்சையும் விடுத்து, தனிமையில் ப்ரும்மத்தை த்யானம் செய்து காயத்ரி ஜபம் செய்யத் துவங்கினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 123

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 93

ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்ய: 
ஸத்ய த⁴ர்ம பராயண:|
அபி⁴ப்ராய: ப்ரியார் ஹோர்ஹ 
ப்ரியக்ருத் ப்ரீதி வர்த்த⁴ந:||

  • 871. ஸத்வவாந் - சுத்த சத்வ மயமாய் இருப்பவர். விடுதலைக்கு வழி வகுக்கும் சத்வ குணத்தை கட்டுப்படுத்துபவர். ஞானம், சக்தி, பலா, ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களுடனும் இறைவன் முழுமை பெற்றவர். முக்திக்கு தேவைகளான பளபளப்பு, ஒளி, பேரின்பம் ஆகிய குணங்களை நேரடியாகத் தலைமை தாங்குகிறார். 
  • 872. ஸாத்விக - சத்வ குணம் உடையவர். சத்வ குணத்தின் பலன்களை வழங்குபவர். 
  • 873. ஸத்ய - மெய்யனாய் இருப்பவர். புண்ய ஆத்மாக்கள் மீது நல்ல மனப்பான்மை கொண்டவர். மிகவும் நல்லவர். சத்யத்தில் நிலைபெற்றவர். உண்மையானவர், தனியாக இருப்பவர். பிராணன், அன்னம், சூரியன் ஆகிய வடிவங்களில் இருப்பவர்.
  • 874. ஸத்ய தர்ம பராயண - உண்மையான தர்மங்களைக் கடைப்பிடிப்பதனால் மகிழ்பவர். சத்யத்தை உள்ளடக்கி, சத்யத்தையும் தர்மத்தையும் உறுதியாகக் கடைப்பிடிக்கிறார். அவரது பக்தர்கள் கடைப்பிடிக்கும் உண்மையான தர்மத்தில் அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் எப்போதும் உண்மை மற்றும் தர்மத்தில் அர்ப்பணிப்புடன், நிலைநிறுத்தப்பட்டவர். தர்மத்தின் மேன்மையான வழியைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஆதரவு அளித்து வழி காட்டுகிறார். அறம் சார்ந்த கடமைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டும் பக்தர்களின் அடைக்கலம் அவர்.
  • 875. அபிப்ராய - மேலான உபேயமாக நினைக்கப்படுகிறவர். மோட்சத்தை விரும்பும் பக்தர்களால் ஆவலுடன் தேடப்படுகிறார்.  தர்மம் (சரியான நடத்தை), அர்த்த (செல்வம்), ஆசை (காமம்) மற்றும் விடுதலை (மோக்ஷம்) ஆகிய நான்கு புருஷார்த்தங்களை (வாழ்க்கை நோக்கங்களை) தேடுபவர்களால் அவர் ஆவலுடன் தேடப்படுகிறார். ஜலப்பிரளயத்தின் போது அனைத்து உயிரினங்களும் அவரை நோக்கி விரைகின்றன.
  • 876. ப்ரியார்ஹ - அன்பின் பொருளாக இருப்பவர். அன்பிற்கு தகுதியானவர். அன்பின் பொருட்களில் மிகவும் பொருத்தமானவர். அன்பு செய்யத் தகுந்தவர்.
  • 877. அர்ஹ - வணங்கப்பட வேண்டியவர். ஆசனம், துதி, அர்க்கியம் அல்லது நீர், பால் போன்றவற்றால் வழிபடத் தகுதியானவர்.
  • 878. ப்ரியக்ருத் - அன்புக்குரியவர். அவர் தனது பக்தர்களால் விரும்பியதைச் செய்கிறார். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி மகிழ்ச்சியடையச் செய்கிறார். 
  • 879. ப்ரீத வர்த்தந - பக்தியை மேலும் மேலும் வளர்ப்பவர். பக்தர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்துபவர். பக்தர்களின் அன்பை நிறைவேற்றுபவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.60

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.60
 
யததோ ஹ்யபி கௌந்தேய 
புருஷஸ்ய விபஸ்²சித:|
இந்த்³ரியாணி ப்ரமாதீ²நி 
ஹரந்தி ப்ரஸப⁴ம் மந:||

🎵ஸ்ரீமத் பகவத் கீதை - 2.60🙏

  • யதத: - முயற்சி செய்கையில் 
  • ஹி - நிச்சயமாக 
  • அபி - இருந்தும் கூட  
  • கௌந்தேய - குந்தியின் மகனே  
  • புருஷஸ்ய - மனிதனின் 
  • விபஸ்²சிதஹ - பகுத்தறிவு நிறைந்த 
  • இந்த்³ரியாணி - புலன்கள் 
  • ப்ரமாதீ²நி - கிளர்ச்சியுட்டும்  
  • ஹரந்தி - வாரிச் செல்கின்றன  
  • ப்ரஸப⁴ம் - வலுக்கட்டாயமாக 
  • மநஹ - மனதை 

குந்தியின் மகனே! தவ முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும் போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.13

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.13

தத் ஸர்வம் ந: ஸமாசக்ஷ்வ 
ப்ருஷ்டோ யதி³ஹ கிஞ்சந|
மந்யே த்வாம் விஷயே வாசாம் 
ஸ்நாதமந் யத்ர சா²ந்த³ ஸாத்||

  • இஹ - இது விஷயமாக
  • யத்³ கிஞ்சந - யாதொன்றை
  • ப்ருஷ்டோ - தாங்கள் கேட்கப்பட்டீரோ
  • தத் ஸர்வம் - அவை எல்லாவற்றையும்
  • நஸ் ஸமா சக்ஷ்வ - எங்களுக்கு சொல்வீராக!
  • வாசாம் - வார்த்தைகளை விவரிக்கும்
  • விஷயே - விஷயத்தில்
  • சா²ந்த³ ஸாத் - வேதத்தை தவிர
  • அந்யத்ர - மற்ற விஷயத்தில்
  • த்வாம் - தங்களையே
  • ஸ்நாதம் - ஸாமர்த்தியம் உள்ளவராக
  • மந்யே - எண்ணுகிறேன்

வேதத்தைத் தவிர மற்ற இதிகாச புராணங்களின் கருத்துக்களைத் தெளியச் சொல்வதில் தாங்களே கரை கண்டவர் என்று நினைக்கிறேன். ஆகையால், நான் கேட்பதனைத்தையும் எங்களுக்குக் கூற வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.58

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.58

ஸ²ப³ர்யா பூஜித: ஸம்யக்³ 
ராமோ த³ஸ²ரதா²த் மஜ:|
பம்பா தீரே ஹநுமதா 
ஸங்க³தோ வாநரேண ஹ|| 

  • த³ஸ²ரதா²த் மஜஹ - தசரத புத்ரரான
  • ராமோ - ஸ்ரீ ராமர்
  • ஸ²ப³ர்யா - சபரியினால்
  • ஸம்யக்³ - யத யோக்யமாய்
  • பூஜிதஸ் - பூஜிக்கப்பட்டார்
  • பம்பா தீரே - பம்பா நதிக்கரையில்
  • ஹநுமதா - ஹநுமார் என்கிற
  • வாநரேண - வானரரால்
  • ஸங்க³தோ - கண்டு கொள்ளப்பட்டார் 
  • ஹ - ஸந்தோஷம்

தசரதனின் மகனுமான அந்த ராமன், சபரியை அடைந்து, அந்தச் சபரியால் முழுமையாகப் பூஜிக்கப்பட்டார். பம்பா நதிக்கரையில் ஹநுமார் என்கிற வானரரால் கண்டு கொள்ளப்பட்டார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 101 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 101 - துர்யோதனனை உஷ்ணமாகப் பார்த்தவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

கழல் மன்னர் சூழக்* கதிர் போல் விளங்கி*
எழலுற்று மீண்டே* இருந்து உன்னை நோக்கும்*
சுழலை பெரிது உடைத்* துச்சோதனனை*
அழல விழித்தானே! அச்சோ அச்சோ* 
ஆழி அங்கையனே! அச்சோ அச்சோ!

  • கழல் - வீரக் கழலை அணிந்த
  • மன்னர் - அரசர்கள்
  • சூழ - தன்னைச் சுற்றியிருக்க அவர்கள் நடுவில்
  • கதிர்போல் - ஸூரியன் போல
  • விளங்கி - ப்ரகாசமாயிருந்து 
  • எழல் உற்று - முதலில் எழுந்திருந்து
  • மீண்டு - மறுபடியும்
  • இருந்து - தானெழுந்தது தெரியாதபடி உட்கார்ந்து கொண்டு
  • உன்னை - உன்னை
  • நோக்கும் - பொய்ய ஆஸனம் இடுதல் முதலியவற்றால் கொல்வதாகப் பார்த்த
  • பெரிது - மிகவும் 
  • சுழலை உடை - வஞ்சனையான ஆலோசனையை உடைய
  • துச்சோதனனை - துர்யோதனனை திரு உள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி
  • அழல விழித்தானே - உஷ்ணமாகப் பார்த்தவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • ஆழி - திரு சக்கரத்தை 
  • அம் கையனே - அழகிய கையிலேந்தியவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

வெற்றிப் பதக்கங்களைச் சூடிய மன்னர்கள், சூரியக் கதிர்கள் போல் துர்யோதனனை சூழ்ந்திருக்க, கண்ணனே! நீ பாண்டவ தூதனாய் அவன் சபைக்குச் சென்றபோது, உன்னுடைய அபரிமிதமான தேஜஸ்ஸால், தன்னை அறியாமல், மரியாதை நிமித்தம் சற்றே எழுந்து நின்று மீண்டும் அகந்தையால் அமர்ந்த துர்யோதனன் உன்னை சூழ்ச்சியுடன் நோக்க, நீயும் அவனை கண்களில் அனல் பொறி பறக்க கோபமாய் பார்த்தாய்! என்னை அணைத்துக் கொள்ள நீ ஓடி வர வேண்டும், உன் அழகிய கையில் சக்ராயுதம் ஏந்தியவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 030 - திரு வண்புருஷோத்தமம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

030. திரு வண்புருஷோத்தமம் (திருநாங்கூர்)
முப்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1258 - 1267 - நான்காம் பத்து - இரண்டாம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

சாய்ந்த திரு அரங்கம் தண் வேங்கடம் குடந்தை*
ஏய்ந்த திரு மால் இருஞ்சோலை பூந்துவரை*
வண் புருடோத்தமம் ஆம் வானவர்க்கும் வானவன் ஆம்*
ஒண் புருடோத்தமன் தன் ஊர்*

  • வானவர்க்கும் வானவன் ஆம் – தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய
  • ஒள் புருடோத்தமன்தன் – அழகிய புருஷோத்தமன் என்னும் திருமாலினது
  • ஊர் – திருப்பதிகளாவன
  • சாய்ந்த திருவரங்கம் – எம்பெருமான் பள்ளி கொண்டிருக்கின்ற ஸ்ரீரங்கமும்
  • தண் வேங்கடம் – குளிர்ந்த திருவேங்கட மலையும்
  • குடந்தை – திருக்குடந்தையும்
  • ஏய்ந்த திருமாலிருஞ்சோலை – எம்பெருமானது திரு உள்ளத்துக்குப் பாங்காகப் பொருந்திய திருமாலிருஞ் சோலை மலையும்
  • பூ துவரை – அழகிய துவாரகையும்
  • வள் புருடோத்தமம் – திருவண்புருடோத்தமம்
  • ஆம் – ஆகும்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 67

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 12

ஸ்கந்தம் 03

வராக அவதாரம் - 2

ப்ரும்மாவின் மூக்கிலிருந்து கட்டை விரல் அளவிற்கு வெளியே வந்த அந்த வராகம், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மலையளவிற்குப் பெரிதாகி நின்றது. யார் இது என்று எல்லோரும் குழம்பிய வேளையில், ஒரு கர்ஜனை செய்தது. அதைக் கேட்டதும் அனைவர் மனத்திலும் இருந்த பயமும் குழப்பங்களும் நீங்கின.


ப்ரும்மாவும், மற்ற அந்தண ஸ்ரேஷ்டர்களும் மகிழ்ந்து அவரை பகவான் என்று உணர்ந்து, மிகவும் தூய்மையான வேத மந்திரங்களால் துதிக்கலாயினர். வேத ஸ்வரூபமான பகவான் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார். திரும்பவும் கர்ஜித்துக் கொண்டு, விளையாடுவது போல் ப்ரளய நீரில் நுழைந்தார்.தன் வாலை உயரத் தூக்கி ஆகாயத்தில் சுழற்றிக் கொண்டு, பிடறி மயிர்களை உதறிக் கொண்டு குளம்புகளால் மேகக் கூட்டங்களை ச் சிதறடித்தார். மிகவும் கடினமான திருமேனியும், குத்திட்டு நிற்கும் ரோமங்களும், வெண்மையான தெற்றிப் பற்களும், சிவந்த கண்களும் கொண்டு மிகவும் அழகாக விளங்கினார். வேள்வித் திருவுருவாக இருப்பினும், முகர்ந்து பார்த்து பூமியைத் தேடினார். பயங்கரமான தெற்றிப் பற்கள் இருந்தாலும், கண்களில் கருணை வழிய தன்னைத் துதித்த ரிஷிகளைக் கடாக்ஷித்துக் கொண்டு ஜலத்தினுள் நுழைந்தார்.

வஜ்ர மலை போன்று நீரில் யக்ஞ வராஹ மூர்த்தி குதிக்கவும், ஸமுத்திர ராஜனின் வயிறு கிழிக்கப்பட்டது போல் நீரில் பெரிய பிளவு ஏற்பட்டது. இடி போன்று பெரிய சத்தம் கேட்டது. உயரக் கிளம்பிய அலைகளைக் கண்டால், ஸமுத்தி ரராஜன், கைகளைத் தூக்கி, ப்ரபோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறுவது போல் இருந்தது. குளம்புகளால் கத்தி போல் நீரைக் கிழித்துக் கொண்டு, அடி வரை சென்றார். அங்கு ஜீவன்களின் இருப்பிடமான பூமியைக் கண்டார். உடனே, தன் தெற்றிப் பல்லால், அழகாக பூமிப் பந்தைத் தூக்கிக் கொண்டு ரஸா தலத்திலிருந்து மேலெழுந்தார்.

மிக மிக அழகான காட்சி அது. அப்போது, மிகுந்த பராக்ரமம் மிக்க ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் கையில் கதையுடன் அவரை வழி மறித்தான். உடனே, பொங்கிய சீற்றத்துடன், சிங்கம் யானையைக் கொல்வதுபோல் அவ்வசுரனை விளையாட்டாகக் கொன்றார் பகவான். அவனது செங்குருதி பகவானின் உடலிலும், கன்னங்களிலும் படிந்திருந்தது, வெண்மை நிற யானை சேற்றில் விளையாடியது போல் இருந்தது. யானை தந்தத்தினால் தாமரையைத் தாங்கி வருவது போல், தெற்றிப் பற்களால் பூமியைத் தாங்கி வந்தார். முனிவர்களும் ப்ரும்மாவும் இருகரங்களையும் சிரமேற் குவித்து வேத மந்திரங்களால் பகவானைத் துதித்தனர். யக்ஞவராஹத்தின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் விளங்கும் வேள்வியின் அங்கங்களை விரிவாகக் கூறி மிகவும் விரிவாகத் துதி செய்தனர். பலவிதமாக பகவானை அவர்கள் துதி செய்ய, பகவான் அவற்றைக்‌ கேட்டுக் கொண்டே, பூமியை அதனிடத்தில் வைத்து விட்டு மறைந்தார்.

அனைத்து ஜீவன்களின் துன்பங்களையும் களையும் பகவான் ஸ்ரீ ஹரியின் மனம் கவரும் இத்திருவிளையாடலைச் சொல்பவர், கேட்பவர் ஆகியோரிடம் பகவான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். ஒருவர் பகவானை மகிழ்ச்சி கொள்ளச் செய்து விட்டால், அவருக்கு என்ன தான் கிடைக்காது? அவருடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேறெதிலும் விருப்பம் இல்லாதவருக்கு, பகவான் தன்னையே தந்து விடுகிறார். இறைவனது திருவிளையாடல்களைக் கூறும் கதைகள்‌ நம்மைப் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுவிக்கின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்