||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.72
ஏஷா ப்³ராஹ்மீ ஸ்தி²தி: பார்த²
நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி|
ஸ்தி²த் வாஸ் யா மந்த காலேபி
ப்³ரஹ்ம நிர்வாணம் ருச்ச²தி||
- விமுஹ்யதி- ஒருவன் குழம்புகிறான்
- ஸ்தி²த்வா - இவ்வாறு நிலைபெற்று
- அந்தகாலே - வாழ்வின் இறுதிக் காலத்தில்
- ப்³ரஹ்ம நிர்வாணம் - இறைவனின் ஆன்மீகத் திருநாட்டை
பார்த்தா!, இந்த ஆன்மீக நிலையை, அடைந்த ஒருவன் குழப்பமடைவது இல்லை. இவ்வாறு இதில் நிலைபெற்று, வாழ்வின் இறுதி காலத்திலும், இறைவனின் ஆன்மீக திருநாட்டை அடைகிறான்.
ஓம் தத் ஸதி³தி ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா ஸூப நிஷத்ஸு
ப்³ரஹ்ம வித்³யாயாம் யோக³ ஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுந ஸம்வாதே³
ஸாங்க்²ய யோகோ³ நாம த்³விதீயோ அத்⁴யாய꞉|| - 2
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஸாங்க்ய யோகம்' எனப் பெயர் படைத்த இரண்டாவது அத்யாயம் நிறைவுற்றது.
விளக்கம்:
மனிதன் (அல்லது) ஒரு ஜீவன் (அல்லது) ஒரு உயிரி என்பது ஜட உடல் மற்றும் ஆன்மா இவை இரண்டின் கூட்டமைப்பே மனிதன் அல்லது உயிரி. இதில் மனிதன் இறந்து விட்டால் மனித உடல் மட்டுமே அழியும் அதில் உள்ளே இருக்கும் ஆன்மா அழியாது.
நிர்ணயிக்கப்பட்ட கர்மத்தை (அல்லது) வேலையை ஒருவன் செய்தே ஆகவேண்டும். வேலை (அல்லது) கடமை செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்பதால் அதை செய்யாமல் விட்டால் அவனை பாவம் வந்து சேரும். மேலும் அனைத்து கொடுக்கப்பட்ட வேலையை / கடமையை செய்ய வெறுப்போ விருப்போ கொள்ள கூடாது. அவ்வாறு விருப்பு வெறுப்பு கொள்ளாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். மனம் அமைதியாக இருந்தால் தான் புத்தி விழித்தெழும். புத்தி விழித்தெழுந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவனை நோக்கி முன்னேறலாம். ஆசை, காமம், கோபம் இவற்றை முற்றிலும் விட வேண்டும். இவை மூன்றும் தான் மனிதனை அங்கும் இங்கும் இழுத்து அலைக்கழிக்கிறது. ஆகையால் இந்த மூன்றையும் விட்டு மனத்தை அமைதியாக நிலையாக வைத்து தனது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.
ஒரு வேலையை செய்து விட்ட பிறகு அந்த வேலையின் முடிவு தோல்வியாக இருந்தாலும் அதற்காக மிகுந்த வருத்தம் கொள்ள வேண்டாம். ஏனெனில் அந்த வேலையை அவன் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் முழுமையாக செய்து இருக்கிறான். அதன் பலனில் முடிவில் அவனின் அதிகாரம் இல்லை. இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
“கடமையை கண்ணும் கருத்துமாக செய்வதற்கு மட்டுமே நமக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலனில் எந்த வித அதிகாரமும் இல்லை.”
இன்பம் - துன்பம், சூடு - குளிர், கோடை - மழை, சுகம் - துக்கம் இவை இயற்கையிலிருந்து தோன்றுகின்றன. இவற்றால் மனம் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதாவது இவை நிலையானவை அல்ல. தோன்றி மறைபவை.
இன்பம் வரும் போது மிகுந்த இன்பத்தை அடைவதும் துன்பம் வரும்போது மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்து விடுவதும் நல்ல கதிக்கு ஒரு மனிதனை கொண்டு செல்லாது. இங்கே ஏற்படுகின்ற இன்பமும் துன்பமும் தற்காலிகமானவை. அவற்றில் ஆழ்ந்துவிட கூடாது. இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை இயற்கையிலிருந்து தோன்றுபவை. இறைவனை அடைந்த பிறகு கிடைக்கும் இன்பமே நிரந்தரமானது. அந்த நிரந்தரமான இன்பத்தை அடைய இறைவனை நோக்கி முன்னேற வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்