About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 8 April 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 135

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 105

யஜ்ஞ ப்⁴ருத்³ யஜ்ஞ க்ருத்³ யஜ்ஞி 
யஜ்ஞ பு⁴க்³ யஜ்ஞ ஸாத⁴ந:|
யஜ்ஞாந்த க்ருத்³ யஜ்ஞ கு³ஹ்யம் 
அந்ந மந்நாத³ ஏவ ச||

  • 976. யஜ்ஞ ப்⁴ருத்³ - யாகங்களை நிறைவிப்பவர். யாகத்தின் நிறைவைக் கொண்டு வருபவர்.
  • 977. யஜ்ஞ க்ருத்³ - யாகங்களை உண்டாக்கியவர்.    
  • 978. யஜ்ஞீ - வேள்விகளால் ஆராதிக்கப்படுபவர். 
  • 979. யஜ்ஞ பு⁴க்³ - வேள்விகளை அநுபவிப்பவர். யாகத்தை அனுபவிப்பவர். பாதுகாவலர்.
  • 980. யஜ்ஞ ஸாத⁴நஹ - வேள்விகளை உபாயமாக்குபவர். யக்ஞங்களின் மூலம் சாதனாவாக அடையப்படுபவர். 
  • 981. யஜ்ஞாந்த க்ருத்³ - வேள்வியின் பலனை உண்டாக்குபவர். யாகங்களின் பலனைத் தருபவர்.
  • 982. யஜ்ஞ கு³ஹ்யம் - வேள்விகளின் அடிப்படை ரகசியமாக உள்ளவர். யாகத்தின் ரகசியம்.
  • 983. அந்நம் - உண்ணும் சுவை அமுதாக உள்ளவர். அவர் இன்பப் பொருள்.
  • 984. அந்நாத³ ஏவ ச - தன்னை அநுபவிப்பவனைத் தான் இனிதாக அநுபவிப்பவர். அவரை அனுபவிப்பவர்களை மகிழ்விப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment