About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 8 April 2024

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.25

ஸ்த்ரீ ஸூ²த்³ர த்³விஜ ப³ந்தூ⁴ நாம் 
த்ரயீ ந ஸ்²ருதி கோ³சரா|
கர்ம ஸ்²ரேயஸி மூடா⁴ நாம் 
ஸ்²ரேய ஏவம் ப⁴வேதி³ ஹ|
இதி பா⁴ரத மாக்²யா நம் 
க்ருபயா முநிநா க்ருதம்||

  • ஸ்த்ரீ - ஸ்த்ரீகள்
  • ஸூ²த்³ர - ஸூத்ரர்கள்
  • த்³விஜ -  மூன்று வர்ணத்தவர்க்குள்
  • ப³ந்தூ⁴ நாம் -  தாழ்ந்தவர்கள், இவர்களுக்கு
  • த்ரயீ ந ஸ்²ருதி கோ³சரா - வேதத்தை அத்யயனம் செய்யத் தக்கதன்று
  • கர்ம ஸ்²ரேயஸி -  ஸ்ரேயஸைக் கொடுக்கும் கர்மாக்களில்
  • மூடா⁴ நாம் -  அதிகாரம் இல்லாத மேலே கூறியவர்களுக்கு
  • இஹ - இவ்வுலகில்
  • ஏவம் -  இந்த பாரதம் முதலான இதிஹாசங்களால்
  • ஸ்²ரேய ப⁴வேத்³ -  ஸ்²ரேயஸ் ஏற்படும்
  • இதி -  என எண்ணியே
  • முநிநா -  மஹரிஷிகளால்
  • பா⁴ரதம் ஆக்²யாநம் -  மஹாபாரதம் என்ற நூலானது 
  • க்ருபயா க்ருதம் - கருணையால் செய்யப்பட்டது

மாதர்கள், நான்காம் வருணத்தவர், மற்ற மூவர்ணத்தாரிலும், குணம், செயல் இவற்றால் தாழ்ந்தவர்கள் ஆகிய இவர்கள் வேதத்தை அத்யயனம் செய்தல் கூடாது. ஆகவே, அவர்கள் உயர்ந்த நற்செயல்களைச் செய்வதற்கு இயலாது. அதனால், அவர்களும் நன்மை பெற வேண்டும் என்று எண்ணியே, வியாச முனிவர் கருணை கொண்டு 'மஹாபாரதம்' என்னும் நூலை எழுதினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment