About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 30 July 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 142

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 4

ர்மார்தீ² ப்ராப்நுயாத்³ தர்ம
மர்த்தா²ர்த்தீ² சார்த்த² மாப்நுயாத்|
காமா வாப்நுயாத் காமீ 
ப்ரஜார்தீ² சாப்னுயாத் ப்ரஜா꞉||


ப்ரஜா꞉ - ப்ரஜாஹ

இந்தப் பெயர்களைக் கேட்பதாலோ, உரைப்பதாலோ, ஒருவன் அறத்தகுதியீட்ட விரும்பினால் தருமத்தை அடைகிறான். ஒருவன் செல்வத்தை விரும்பினால், அவன் இவ்வழியில் செயல்பட்டு செல்வத்தை ஈட்டுவதில் வெல்வான். புலனின்பங்களில் ஆசை கொண்ட மனிதனும் அனைத்து வகை இன்பங்களையும் அனுபவிப்பதில் வெல்கிறான். சந்ததியை விரும்பும் மனிதன் இவ்வொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் சந்ததியை அடைகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.6 

கர்மேந்த்³ரியாணி ஸம்யம்ய 
ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்|
இந்த்³ரியார் தா²ந் விமூடா⁴த்மா 
மித்²யா சார: ஸ உச்யதே||

  • கர்மேந்த்³ரியாணி - ஐந்து செயற் புலன்களை 
  • ஸம்யம்ய - கட்டுப்படுத்தி  
  • ய - எவனொருவன் 
  • ஆஸ்தே - இருக்கிறானோ 
  • மநஸா - மனதால் 
  • ஸ்மரந்- எண்ணிக் கொண்டு  
  • இந்த்³ரியார் தா²ந் - புலனுகர்ச்சிப் பொருட்கள் 
  • விமூட⁴ - முட்டாள் 
  • ஆத்மா - ஆத்மா 
  • மித்²யா சாரஸ் - பொய்யான நடத்தையுடையவன் (போலி மனிதன்) 
  • ஸ - அவன் 
  • உச்யதே - அழைக்கப்படுகின்றான்

எவனோருவன், ஐந்து செயற் புலன்களை கட்டுப்படுத்தி, மனதால் புலனுகர்ச்சிப் பொருட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறானோ, அவன் தன்னையே முட்டாளாக்கிக் கொள்கிறான். அவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.32

தஸ்யை வம் கி²லமாத் மாநம் 
மந்ய மாநஸ்ய கி²த்³யத:|
க்ருஷ்ணஸ்ய நாரதோ³ப்⁴ யாகா³த்³
ஆஸ்²ரமம் ப்ராகு³தா³ ஹ்ருதம்|| 

  • ஏவம் ஆத்மாநம் - இவ்வாறு தன்னை 
  • கி²லம் மந்ய மாநஸ்ய - குறை உள்ளவராக எண்ணுகின்றவரும் 
  • கி²த்³யதஹ - அதனால் வருந்துகின்றவருமான 
  • தஸ்யை க்ருஷ்ணஸ்ய - அந்த வியாஸருடைய 
  • ப்ராக்³ உதா³ ஹ்ருதம் - முன்பு கூறப்பட்ட ஸரஸ்வதீ நதிக் கரையில் இருக்கும் 
  • ஆஸ்²ரமம் - ஆஸ்ரமத்திற்கு 
  • நாரத³ - நாரத மஹரிஷி 
  • அப்⁴யாகா³த்³ - வந்தார் 

இவ்வாறு அமைதியின்றித் தம்மைச் சூன்யமாகக் கருதி, வருத்தமுறும் வியாஸ முனிவரது ஆசிரமத்திற்கு நாரத முனிவர் வந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.77

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.77

ததோ த³க்³த்⁴வா புரீம் லங்காம்
ருதே ஸீதாம் ச மைதி²லீம்|
ராமாய ப்ரிய மாக்²யாதும் 
புநரா யாந் மஹா கபி:|| 

  • மஹா கபி: - பெரிய வாநரர் 
  • மைதி²லீம் - மிதிலை மன்னர் மகளான
  • ஸீதாம் ருதே - ஸீதையைத் தவிர 
  • லங்காம் - இலங்கை என்ற 
  • புரீம் - பட்டணத்தை 
  • த³க்³த்⁴வா - தீயிட்டுக் கொளுத்தி 
  • ச - உடனே 
  • ததோ - அவ்விடத்திலிருந்து 
  • ராமாய - ஸ்ரீராமருக்கு 
  • ப்ரியம் -  ப்ரியமான வார்த்தையை 
  • ஆக்²யாதும் - சொல்வதற்காக 
  • புநர் ஆயாந் - திரும்பி வந்தார்

அந்தப் பெரும் வாநரரான அவர் மிதிலையின் சீதையை நெருப்பில் இருந்து தவிர்த்து, லங்காபுரியை எரித்து விட்டு, அந்த இனிய செய்தியை ராமனுக்குச் சொல்லத் திரும்பினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 118 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 118 - சங்கமிடத்தான்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்

மெச்ச ஊது சங்கம் இடத்தான்* நல் வேய் ஊதி*
பொய்ச் சூதில் தோற்ற* பொறை உடை மன்னர்க்காய்*
பத்து ஊர் பெறாது அன்று* பாரதம் கை செய்த*
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்*

  • மெச்ச - அனைவரும் கொண்டாடும்படி
  • ஊது - ஊதுகின்ற
  • சங்கம் - ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை
  • மிடத்தான் - இடக் கையில் ஏந்தியுள்ளவனும்
  • நல்வேய் - நல்ல வேய்ங் குழலை
  • ஊதி - ஊதுபவனும்
  • பொய் சூதில் - க்ருத்ரிமமான சூதிலே
  • தோற்ற - தம்முடைய சொத்துக்களை எல்லாம் இழந்தவர்களாய்
  • பொறை உடை - பொறுமை சாலிகளான
  • மன்னர்க்கு - பாண்டவர்கட்கு
  • ஆய் - தான் எல்லா வகைத் துணையுமாய் இருந்து துர்யோதநாதிகளிடத்துத் தூது போய்க் கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்
  • பத்து ஊர் - பத்து ஊரையும்
  • பெறாது - அடைய முடியாமல்
  • அன்று - அக் காலத்திலே
  • பாரதம் - பாரத யுத்தத்தை
  • கை செய்த - அணி வகுத்துச் செய்து
  • அத் தூதன் - அந்தப் பாண்டவ தூதனான கண்ணன்
  • அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்;
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

அனைவராலும் போற்றும்படி ஊதும் பாஞ்சஜந்யத்தை இடக்கையில் பிடித்தவனும், நல்ல மூங்கிலால் செய்யப்பட்ட குழலை ஊதியும், முன்பொரு சமயம், பொய்ச் சூதில் பாண்டவர்கள் சொத்துக்களை இழந்து, பத்து ஊர்களை மட்டுமே துர்யோதனாதிகளிடம் கேட்டும் பெற முடியாமல் துன்பப்பட்ட போது, பாண்டவர்களுக்குத் துணையாய் நின்று பாரதப் போர் செய்த அப்பாண்டவத் தூதனான கண்ணன், ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 036 - திருத்தெற்றியம்பலம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

036. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)
முப்பத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

1. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் – 1278 – 1287 - நான்காம் பத்து - நான்காம் திருமொழி

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்

மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி

சென்றது காலம் திரை நரை மூப்பு ஆன இனி*
என்று கொல் சாவு அறியேன் என் நெஞ்சே கன்றால்*
உருத்து ஏற்றி அம்பலத்தை ஓர் விளவின் வீழத்தான்*
திருத் தெற்றி யம்பலத்தைச் சேர்* 

  • என் நெஞ்சே – எனது மனமே!
  • சென்றது காலம் – நமக்கோ வாழ்நாள் பெரும்பாலும் கழிந்திட்டது
  • திரை – தோல் சுருக்கமும்
  • நரை – மயிர் வெளுத்தலும்
  • மூப்பு – கிழத்தனமும்
  • ஆன – தோன்றியுள்ளன
  • இனி – இனிமேல்
  • சாவு – மரணம்
  • என்றுகொல் – என்றைக்கோ?
  • அறியோம் – அறிந்திலோம். ஆதலால் நமது ஆயுள் முடிவதற்குள்
  • ஓர் விளவின் அம் பலத்தை – ஒரு விளாமரத்தில் உள்ள அழகிய பழத்தைக் கண்டு
  • உருத்து – கோபித்து
  • கன்றால் – அசுர ஆவேசம் கொண்ட இளங்கன்றைக் கொண்டு
  • எற்றி – வீசியெறிந்து
  • வீழ்த்தான் – விழச் செய்தவனான திருமாலினது
  • திருத்தெற்றியம்பலத்தை – திருத்தெற்றியம்பலம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • சேர் – இடைவிடாது தியானிப்பாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 86

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 31

ஸ்கந்தம் 03

பஞ்சபூதங்களும், புலன்களும் அவற்றின் தன்மாத்திரைகளில் இருந்து வெளி வந்ததை விவரித்தார் கபிலர்.

ஐந்து பூதங்களும் ஒன்றிலிருந்து ஒன்று உண்டானதால், அவற்றிற்கு தாயான வஸ்துவின் குணமும் உண்டு. அதாவது ஆகாயத்தின் குணம் ஒலி. அதிலிருந்து தோன்றிய வாயுவிற்கு ஒலியும் உண்டு, தொடுவுணர்வும் உண்டு. வாயுவிலிருந்து தோன்றிய அக்னிக்கு ஒலி, தொடுவுணர்வு, ஒளி (ரூபம் - கண்ணுக்குப் புலப்படும்) ஆகியவை உண்டு.


அக்னியிலிருந்து தோன்றிய நீருக்கு ஒலி, தொடுவுணர்வு, உருவம், சுவை ஆகியவை உண்டு.

நீரிலிருந்து தோன்றிய மண்ணுக்கு ஒலி, உருவம், தொடுவுணர்வு, உருவம், சுவை, மணம் ஆகிய ஐந்து குணங்களும் உண்டு.

மஹத் தத்வம், அஹங்காரம், மற்றும் ஐம்பூதங்கள் ஆகிய இந்த ஏழு தத்வங்களும் ஒன்றோடொன்று சேராமல் தனித்து நின்றன.

பகவான் அந்த தத்வங்களினுள் காலம், கர்மம் ஆகியவற்றுடன் நுழைந்தார். அதனால் உந்தப்பட்ட அவை, ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்தன. அப்போது உயிற்ற முட்டை வடிவிலான அண்டம் தோன்றியது.

இந்த அண்டத்திற்கு விசேஷம்‌ என்ற பெயர் உண்டு. இது நாற்புறங்களிலும் ஜலம், அக்னி, காற்று, ஆகாயம், மஹத் தத்வம் ஆகிய ஆறு ஆவரணங்களால் சூழப்பட்டுள்ளது. இவை மேல் நோக்கு வரிசையில் ஒவ்வொன்றும் முன்னதைக் காட்டிலும் பத்து மடங்கு பெரியது. ஆறு ஆவரணங்களையும் (மறைப்புகள்) தாண்டி ஏழாவதாக ப்ரக்ருதி உள்ளது.


பகவான் ஸ்ரீ ஹரியின் உருவமான ஈரேழு பதினான்கு லோகங்களும் இந்த அண்டத்தில் அடங்கியுள்ளன.

ஒளி மயமான அண்டத்திலிருந்து விராட் புருஷன் தன்‌ உறக்கத்தை விட்டு எழுந்து உயிரற்ற அண்டத்தினுள் சக்தியாய் நுழைந்தார். இந்திரியக் கூட்டங்களைப்‌ பிரித்து ஸ்தூலமாகத் தனக்கு ஒரு ரூபம் ஏற்படுத்திக் கொண்டார்.

தன் ஒவ்வொரு இந்திரியத்திற்கும் ஒரு அதிதேவதையைப் படைத்தார். வாக்கின் அதிதேவதை அக்னி. மூக்கின் அதிதேவதை வாயு. கண்களின் அதிதேவதை சூரியன். காதுகளின் அதிதேவதை திக் தேவதைகள்.

தோல், ரோமங்கள், மீசை, கேசம்‌முதலியவற்றின் அதிதேவதை மூலிகைகள்.

ஜனனேந்த்ரியத்தின் அதிதேவதை நீர். கழிவுகளை அகற்றும் இந்திரியத்தின் தேவதை ம்ருத்யு.

கைகளின் தேவதை இந்திரன். கால்களின் தேவதை மஹாவிஷ்ணு. நாடி நரம்புகளின் அதிதேவதை நதிகள்.

வயிற்றின் தேவதை ஸமுத்ரம். ஹ்ருதயம், மனம் ஆகியவற்றின் தேவதை சந்திரன். புத்தியின் அபிமான தேவதை ப்ரும்மா. அஹங்கார தத்வத்தின் அதிதேவதை ருத்ரன். சித்தம் எனும்‌ பகுத்தறிவின் அபிமான தேவதை க்ஷேத்ரக்ஞன்.

அனைத்திற்கும் காரணமான விராட்புருஷன் யோகத்தில் இருந்தார்.

இவ்வளவு இந்திரியங்களும் தேவதைகளும் தோன்றி விராட்புருஷனை யோகத்திலிருந்து எழுப்ப முயன்றனர்.

அத்தனையும் தோன்றக் காரணமாய் இருந்த சக்தியான விராட்புருஷன், க்ஷேத்ரக்ஞனைத் தவிர மற்ற அனைத்து தேவர்களும் அவற்றின் இந்திரியங்களுள் உந்து சக்தியாய் நுழைந்து எழுப்பியும்‌ எழவே இல்லை.

பின்னர் அந்தராத்மாவான க்ஷேத்ரக்ஞன், சித்தத்தின் அதிஷ்டான தேவதையான வாசுதேவனுடன் இதயத்தில் நுழைந்தார். அக்கணமே விராட்புருஷன் ப்ரளய ஜலத்திலிருந்து வெளி வந்தார்.

இதுவே நம் விஷயத்திலும்‌ நடக்கிறது. புத்தியும் அந்தராத்மாவும் விழித்துக் கொள்ளும் வரை ஒருவன் தூக்கத்திலிருந்து விடுபடுவதில்லை.

அந்தராத்மாவான வாசுதேவனே அனைத்துயிர்களிலும் விளங்குகிறார்.

ஜலத்தில் ப்ரதிபலிக்கும் சூரியன், நீரின் குளிர்ச்சி, அசைவு முதலியவற்றால் பாதிக்கப்படுவதில்லை. அதுபோல்‌ பரமாத்மா இவ்வுடலினுள் இருப்பினும் உடலின் இன்ப துன்பங்கள் அவரைப் பாதிப்பதில்லை. அதனால் எந்தச் செயலுக்கும் அவர் சாட்சியே தவிர கர்த்தா இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்