About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 12 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 112

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 82

சதுர் மூர்த்திஸ்² சதுர் பா³ஹுஸ்² 
சதுர் வ்யூஹஸ்² சதுர் க³தி:|
சதுராத்மா சதுர் பா⁴வஸ்² 
சதுர் வேத³ விதே³க பாத்||

  • 771. சதுர் மூர்த்திஸ்² - மூர்த்திகள் நான்காக விளங்குபவர். அவருக்கு நான்கு வடிவங்கள் உள்ளன.
  • 772. சதுர் பா³ஹுஸ்² - கைகள், தோள்கள் நான்கினை உடையவர்.
  • 773. சதுர் வ்யூஹஸ்² - வியூஹ வடிவங்கள் நான்கினை உடையவர். அவருக்கு நான்கு வ்யூஹ வடிவங்கள் உள்ளன - வாசுதேவன், சம்கர்ஷனா, பிரத்யும்னன் மற்றும் அநிருத்தன்.
  • விபவ வடிவில் - கிருஷ்ணன், பலராமன், பிரத்யும்னன், அனிருத்தன் மற்றும் ராமர், லக்ஷ்மணன், பரதன் மற்றும் சத்ருகனா என நான்கு வெளிப்பாடுகளைக் கொண்டிருந்தவர்.
  • புருஷனாகவும், சந்த புருஷனாகவும், வேத புருஷனாகவும், மகா புருஷனாகவும் தன்னை வெளிப்படுத்துகிறவர்.
  • நால்வகை வேதங்களால் யாருடைய மேன்மை நிறுவப்பட்டிருக்கிறதோ அவர் பேச்சின் நான்கு பிரிவுகளின் வடிவத்தில் இருப்பவர். (மூன்று வேதங்கள் மற்றும் சாதாரண பேச்சு)
  • 774. சதுர் க³திஹி - பலன்கள் நான்கினைத் தருபவர். 
  • 775. சதுர் ஆத்மா - ஜாக்ரத, ஸ்வப்ந, ஸுஷுப்தி, துரியம் ஆகிய நான்கு விதமாகத் தன்னைக் காட்டுபவர். அவர் நான்கு நிலைகளிலும் இருக்கிறார் - விழிப்பு, கனவு, தூக்கம் மற்றும் தியானம் 
  • 776. சதுர் பா⁴வஸ்² - நான்கு பயன்களை - படைத்தல், இருத்தல், காத்தல், நெறி வழங்குதல் ஆகியவற்றை வெளிப்படுத்துபவர்.
  • 777. சதுர் வேத³ வித்³ - நான்கு வேதங்களையும் அறிந்தவர். நான்கு வேதங்களையும் அறிந்தவர்களுக்கு ஞானப் பொருளாய் இருப்பவர். 
  • 778. ஏக பாத் - ஒரு பகுதியாக அவதரித்தவர். அவர் ஒரே பாதுகாவலர்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.49

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.49 

தூ³ரேண ஹ்யவரம் கர்ம 
பு³த்³தி⁴ யோகா³த்³ த⁴நஞ்ஜய|
பு³த்³தௌ⁴ ஸ²ரணமந் விச்ச² 
க்ருபணா: ப²ல ஹேதவ:||

  • தூ³ரேண - வெகு தொலைவில் புறக்கணித்து 
  • ஹி - நிச்சயமாய் 
  • அவரம் - மோசமான 
  • கர்ம - செயல்கள் 
  • பு³த்³தி⁴ யோகா³த் - புத்தி யோகத்தின் பலத்தில் 
  • த⁴நஞ்ஜய - செல்வத்தை வெல்பவனே 
  • பு³த்³தௌ⁴ - அத்தகு உணர்வில் 
  • ஸ²ரணம் - முழு சரணாகதி 
  • அந்விச்ச² - முயற்சிக்கும் 
  • க்ருபணா ஃ  - கஞ்சர்கள் 
  • ப²ல ஹேதவஹ - பலனை விரும்புவோர்

தநஞ்சயா! மோசமான செயல்களை வெகு தொலைவில் புறக்கணித்து, விருப்பு வெறுப்பற்று புத்தியுடன் செய்யும் செயலே மேலானது. முழு சரணாகதி அடைவாயாக. செயல்களின் பலனை விரும்புவோர் பேதைகள் ஆவார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.4.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||

ஸ்லோகம் - 1.4.2

ஸொ²நக உவாச
ஸூத ஸூத மஹா பா⁴க³ 
வத³ நோ வத³தாம் வர|
கதா²ம் பா⁴க³வதீம் புண்யாம் 
யதா³ஹ ப⁴க³வாஞ்ஸு²க:||

  • ஸொ²நக உவாச - சௌனக முனிவர் கூறுகிறார்
  • ஸூத ஸூத - ஹே! ஸூத மஹரிஷியே
  • மஹா பா⁴க³ - பெரும் பாக்யத்தை உடையவரே!
  • வத³தாம் - நன்கு சொல்கிறவர்களில்
  • வர - சிறந்தவரே!
  • யத்³ - எந்த கதையை
  • ப⁴க³வான் ஸு²க: ஸ்ரீ பகவானான ஸுகர்
  • ஆஹ - சொன்னாரோ
  • புண்யாம் - அந்தப் புண்ணியத்தை தரத்தக்க
  • ப⁴க³வதீம் - இறைவனான வாஸுதேவனின்
  • கதா²ம் - ஸ்ரீமத் பாகவதம் என்னும் கதையை
  • ந - எங்கள் பொருட்டு
  • வத³ - சொல்வீராக

சௌனக முனிவர் கூறுகிறார் - ஓ! ஸூத மஹரிஷியே! நீங்கள் பெரும் புண்ணியம் செய்தவர். கதை சொல்வதில் தாங்கள் திறமை பெற்றவர். மகாத்மாவான ஸ்ரீஸுகர், பரீஷித் மகாராஜனுக்குக் கூறிய, புண்ணியத்தைத் தரத்தக்க 'ஸ்ரீமத் பாகவதம்' என்னும் கதையை, எங்களுக்குச் சொல்ல வேண்டுகிறோம். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.47

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.47

தத: ஸூ²ர்பணகா²வாக்யாது³த்³
யுக்தாந் ஸர்வ ராக்ஷஸாந்|
க²ரம் த்ரி ஸி²ரஸம் சைவ 
தூ³ஷணம் சைவ ராக்ஷஸம்|| 

  • ததஸ் - அப்பொழுது
  • ஸூ²ர்பணகா² - சூர்ப்பணகையின் 
  • வாக்யாத்³ - வார்த்தையால்
  • உத்³யுக்தாந் -  ஸன்னத்தர்களான
  • ஸர்வ ராக்ஷஸாந் ச - ஸமஸ்த ராக்ஷஸர்களையும்
  • க²ரம் ஏவ - கரன் என்பவனையும்
  • த்ரி ஸி²ரஸம்  ச - த்ரசிரஸ் என்பவனையும்
  • தூ³ஷணம் -  தூஷணன் என்கிற
  • ராக்ஷஸம் ஏவ - ராக்ஷஸனையும்

அதன்பிறகு, சூர்ப்பணகையின் சொற்களால் தூண்டப்பட்டு, ஸன்னத்தர்களான ஸமஸ்த ராக்ஷஸர்களையும், ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் போரிட்ட கரன் என்பவனையும் த்ரசிரஸ் என்பவனையும் தூஷணன் என்கிற இராக்ஷஸனையும், 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 91 - பெரியாழ்வார் திருமொழி - 1.7.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 91 - காலில் சங்கு சக்கர ரேகை
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம்* 
உள்ளடி பொறித்தமைந்த* 
இரு காலுங் கொண்டு அங்கங்கு எழுதினாற் போல்* 
இலச்சினை பட நடந்து* 
பெருகா நின் இன்ப வெள்ளத்தின் மேல்* 
பின்னையும் பெய்து பெய்து* 
கரு கார்க் கடல் வண்ணன் காமர் தாதை* 
தளர் நடை நடவானோ!

  • ஒரு காலில் - ஒரு பாதத்திலே
  • சங்கு - சங்கமும்
  • ஒரு காலில் - மற்றொரு பாதத்தில்
  • சக்கரம் - சக்கரமும்
  • உள் அடி - பாதங்களின் உட் புறத்திலே
  • பொறித்து - ரேகையின் வடிவத்தோடு கூடி
  • அமைந்த - பொருந்தி இருக்கப் பெற்ற
  • இரு காலும் கொண்டு - இரண்டு பாதங்களினாலும்
  • அங்கு அங்கு - அடி வைத்த அந்த அந்த இடங்களிலே
  • எழுதினால் போல் – சித்திரித்தது போல
  • இலச்சினை பட – முத்திரை படியும்படி 
  • நடந்து - அடி வைத்து 
  • பெருகா நின்ற - அவனது வடிவழகைக் கண்டு பூரித்து  பொங்குகிற
  • இன்பம் வெள்ளத்தின் மேல் - ஆனந்தம் என்ற ஸமுத்ரத்துக்கு மேலே
  • பி்ன்னையும் - மேலும் ஆனந்தத்தை 
  • பெய்து பெய்து - மிகுதியாக உண்டாக்கிக் கொண்டு
  • கரு கார் கடல் வண்ணன் - மிகவும் கருநிறமுள்ள ஸமுத்ரம் போன்ற திருநிறமுடையவனும்
  • காமர் தாதை - காமதேவனுக்குப் பிதாவுமான இப்பிள்ளை  
  • தளர் நடை - அழகிய இளம் நடையை
  • நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்

கண்ணனின் திருப்பாதங்களில் சங்கு சக்கர ரேகைகள் பதிந்திருந்த படியால், அவன் இரு கால்களாலும் அடி மேல் அடி வைத்து நடக்கும் போது அந்தந்த இடங்களில் வரைந்தாற் போல் அடையாளங்கள் எற்பட்டிருந்தனவாம். கரு நிறக் கடல் போல் நிறத்தை உடையவனும், காம தேவனின் பிதாவுமான கண்ணன், பொங்கி வரும் ஆனந்த சமுத்திரத்திற்கும் மேலான ஆனந்தமுடையவனாய் தளர் நடை நடந்து வருவானோ என ஆவலுடன் காத்திருக்கிறார் ஆழ்வார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 026 - திரு இந்தளூர் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

026. திருஇந்தளூர் (மாயவரம்)
இருபத்தி ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 11

திருமங்கையாழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 1328 - திரு இந்தளூர்ப் பெருமானே! எம்மைக் காப்பாற்று
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
நும்மைத் தொழுதோம்* நும் தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்*
இம்மைக்கு இன்பம் பெற்றோம்* எந்தாய் இந்தளூரீரே*
எம்மைக் கடிதாக் கருமம் அருளி* ஆ ஆ என்று இரங்கி*
நம்மை ஒருகால் காட்டி நடந்தால்* நாங்கள் உய்யோமே?

002. திவ்ய ப்ரபந்தம் - 1329 - இந்தளூராய்! இரக்கம் காட்டு
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே* 
மருவினிய மைந்தா* அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே*
நந்தா விளக்கின் சுடரே* நறையூர் நின்ற நம்பீ* 
என் எந்தாய் இந்தளூராய்* அடியேற்கு இறையும் இரங்காயே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1330 - அயலார் ஏசுகின்றனர்: அருள் செய்வாய்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பேசுகின்றது இதுவே*  வையம் ஈர் அடியால் அளந்த*
மூசி வண்டு முரலும்* கண்ணி முடியீர்!*  
உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து* இங்கு அயர்த்தோம்* 
அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்* இந்தளூரீரே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1331 - எம்பெருமானே! நீரே வாழ்ந்து போம்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
ஆசை வழுவாது ஏத்தும்* எமக்கு இங்கு இழுக்காய்த்து* 
அடியோர்க்கு தேசம் அறிய* உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
காசின் ஒளியில் திகழும் வண்ணம்* காட்டீர் எம் பெருமான்*
வாசி வல்லீர் இந்தளூரீர்!*  வாழ்ந்தே போம் நீரே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1332 - எங்களுக்கு நீரே பெருமான்!
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்* திசையும் இரு நிலனும் ஆய்* 
எம் பெருமான் ஆகி நின்றால்* அடியோம் காணோமால்*
தாய் எம் பெருமான்* தந்தை தந்தை ஆவீர்* 
அடியோமுக்கே எம் பெருமான் அல்லீரோ நீர்?*  இந்தளூரீரே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1333 - எல்லோரையும் போல் என்னையும் நினையாதீர்!
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
சொல்லாது ஒழியகில்லேன்* அறிந்த சொல்லில்* நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க* எண்ணியிருந்தீர் அடியேனை*
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்* நமக்கு இவ் உலகத்தில்*
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்* இந்தளூரீரே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1334 - பெருமானே! நாங்கள் உன் தொண்டர்கள்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள* எம்மைப் பணி அறியா வீட்டீர்* 
இதனை வேறே சொன்னோம்* இந்தளூரீரே*
காட்டீர் ஆனீர்* நும் தம் அடிக்கள் காட்டில்* 
உமக்கு இந்த நாட்டே வந்து தொண்டர் ஆன* நாங்கள் உய்யோமே?

008. திவ்ய ப்ரபந்தம் - 1335 - தங்கள் வண்ணத்தைக் காட்டக் கூடாதா?
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
முன்னை வண்ணம் பாலின் வண்ணம்* முழுதும் நிலை நின்ற*
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்* வண்ணம் எண்ணுங்கால்*  
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்* புரையும் திருமேனி*
இன்ன வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1336 - எந்தையே! திருமேனி வண்ணத்தைக் காட்டுங்கள்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
எந்தை தந்தை தம்மான் என்று என்று* எமர் ஏழ் அளவும்*
வந்து நின்ற தொண்டரோர்க்கே* வாசி வல்லீரால்*
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர்* சிறிதும் திருமேனி*
இந்த வண்ணம் என்று காட்டீர்* இந்தளூரீரே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1337 - அமரர்க்கும் அமரராவர்
பெரிய திருமொழி - நான்காம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
ஏர் ஆர் பொழில் சூழ்* இந்தளூரில் எந்தை பெருமானை*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலி செய்த*
சீர் ஆர் இன் சொல் மாலை* கற்றுத் திரிவார் உலகத்தில்*
ஆர் ஆர் அவரே* அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே|

011. திவ்ய ப்ரபந்தம் - 2779 - மண்ணுலகில் மாயவன் தரும் காட்சிகள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - ஏழாம் பாசுரம் (67)
கோட்டியூர் அன்ன உருவின் அரியை* 
திருமெய்யத்து இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை*
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை*
மன்னிய பாடகத்து எம் மைந்தனை*

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 103

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணரின் யோசனை| 

தாம் அவதாரம் எடுத்த நோக்கம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று கிருஷ்ணர் நினைக்க ஆரம்பித்தார். அரசர்களின் உருவத்தில் இருன்ஷா அரக்கர்களை அழிக்கத் தான் அவர் வந்தார். 


கிருஷ்ணராகப் பிறப்பதற்கு முன்பு அவர் பகவான் நாராயணனாக இருந்தார். அப்பொழுது தம் உதவிக்காக தேவர்கள் அனைவரையும் பூலோகத்தில் யாதவர்களாகப் பிறக்கும்படி சொன்னார். கிருஷ்ணர் வந்த காரியம் முடிந்ததும், அவர்களும் தேவலோகத்துக்குத் திரும்ப வேண்டியவர்கள்தாம். 

அவர்கள் தேவர்களானதாலும், அவர்கள் எப்பொழுதும் கிருஷ்ணனுடனே இருந்ததனாலும், யாராலும் அவர்களைக் கொல்ல முடியாது. கிருஷ்ணர் இவ்விதம் நினைக்க ஆரம்பித்தார். "நான் போனதும் துவாபரயுகம் முடிந்து கலியுகம் ஆரம்பிக்கும். கலியுகத்தில் இந்த யாதவர்கள் தங்கள் தர்மங்களை மறந்து எல்லோருக்கும் இடைஞ்சலாக இருப்பார்கள். ஆகவே நான் வைகுண்டத்திற்குத் திரும்புவதற்கு முன்பு யாதவர்கள் இறந்தாக வேண்டும். அவர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளும் ஒரு நிலைமையை நான் ஏற்படுத்துவேன். அது அவர்களை அழித்துவிடும்".

இதைக் சாதிக்க அவர்களுக்குப் பிராம்மண சாபம் ஏற்படுவது தான் சரியான வழி என்று கிருஷ்ணர் நினைத்தார். ஆகவே ஒரு யாகத்திற்குப் பல ரிஷிகளை அவர் துவாரகைக்கு அழைத்தார். 

இந்த ரிஷிகளைக் கிருஷ்ணரும் பலராமரும் மிகவும் மரியாதையுடன் வரவேற்றார்கள். அவர்களில் விசுவாமித்திரர், அஸிதர், கண்வர், துர்வாசர், நாரதர் முதலானோர் இருந்தனர். அவர்கள் எல்லோரையும் கிருஷ்ணர் அரண்மனைத் தோட்டத்தில் தங்க வைத்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 56

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 1

ஸ்கந்தம் 03

பரீக்ஷித் கேட்டார், ‘அந்தணரது சாபத்தால் போஜ மற்றும் வ்ருஷ்ணி குலத்தின் சிறந்த வீரர்கள், சேனைத் தலைவர்கள், மஹாரதர்கள் அனைவரும் இறந்து விட்டனர்.  க்ருஷ்ணனே உடலை மறைத்துக் கொண்டார். அப்படியிருக்க, அவர்களில் ஒருவரான உத்தவர் மட்டும் எவ்வாறு மீதமானார்? அவருக்கு எதுவும் ஆகவில்லையா?”


ஸ்ரீ சுகர் பதிலுரைத்தார். ‘பகவான் க்ருஷ்ணன் அந்தணரது சாபம் என்ற சாக்கில் தன் குலத்தையே அழித்து, தானும் இவ்வுலகை விடுத்துக் கிளம்பும் போது, என்னைப் பற்றிய ஆத்ம ஞானத்தைப் பெற தகுதியானவன் உத்தவர் ஒருவரே. அவர் எனக்கு நிகரானவர். தன்னைத் தானே வெற்றி கொண்டவர். புலனடக்கம் உள்ளவர். ஆகவே, என்னைப் பற்றிய தத்துவ ஞானத்தை உலகோர்க்கு அளித்துக் கொண்டு இங்கேயே இருக்கட்டும்.” என்று நினைத்தார். எனவே உத்தவரை பதரிகாஸ்ரமம் சென்று தன்னை ஆராதித்து வரும்படி கட்டளையிட்டார். விதுரர் உத்தவர் கூறியபடி மைத்ரேயரைத் தேடி ஹர்த்துவாரத்தை அடைந்தார்.

விண்ணுலகிலிருந்து விழும் கங்கை மண்ணுலகைத் தொடும் இடம் ஹரித்துவாரம் ஆகும். க்ருஷ்ண பக்தியால் மனத் தூய்மை பெற்ற விதுரர், மைத்ரேயரின் நற்குண சீலங்களால் ஈர்க்கப்பட்டு அவரிடம் தன் ஐயங்களைக் கேட்டார்.

“1. உலகில் அனைத்து மக்களும் சுகம் வேண்டி பற்ப்பல காரியங்களைச் செய்கின்றனரே. அதனால் இன்பம் அடைகிறார்களா? அல்லது மேலும் பல துன்பங்கள் வருகின்றனவா? உண்மையில் எது செய்தால் நலம்?

2. எந்த நல்வழிச் சென்றால் இறைவன் மகிழ்ந்து பக்தனின் தூய்மையான உளத்தில் அமர்வான்? அமைதி நல்கும் நல்வழி எது?

3. பகவான் ஸ்வதந்த்ர புருஷர். மூவுலகங்களையும் அடக்கி ஆள்பவர். அவர் என்னென்ன அவதாரம் செய்து என்னென்ன திருவிளையாடல்கள் புரிந்தார்?

4. எவ்வாறு செயலற்ற யோக மாயையால் உலகங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார்?

5. பகவான் ஒருவராக இருந்தும் ப்ரும்மாண்டத்தின் அனைத்து உயிர்களிலும் அந்தர்யாமியாக ஊடுருவிப் பல்வேறு உருவங்களாகக் காட்சியளிக்கிறாரே. அதெப்படி?

6. பகவான் எந்தெந்த தத்துவங்களை ஏற்று இவ்வுலகங்களையும், அதன் தலைவர்களையும், படைத்தார்?

7. ஒவ்வொரு ஜீவனுக்கும் இயற்கையாகவே இயல்பு, செயல், மேனி ஆகியவை வருமாறு படைக்கிறாரே. அதெப்படி?

அனைத்து நெறி முறைகளையும் தங்களின் உற்ற நண்பரான வியாசர் சொல்லிப் பலமுறை கேட்டுள்ளேன். கண்ணனின் கதையமுதம் எவ்வளவு கேட்டாலும் திகட்டுவதில்லை. நீங்கள் தேனீயைப் போல் அனைத்துக் கதைகளிலிருந்தும் ஸாரமான தேன் போன்ற க்ருஷ்ண கதைகளைச் சேகரித்துள்ளீர்கள். எனக்கு அவைகளைச் சொல்லுங்கள்” என்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்