||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.2
ஸொ²நக உவாச
ஸூத ஸூத மஹா பா⁴க³
வத³ நோ வத³தாம் வர|
கதா²ம் பா⁴க³வதீம் புண்யாம்
யதா³ஹ ப⁴க³வாஞ்ஸு²க:||
- ஸொ²நக உவாச - சௌனக முனிவர் கூறுகிறார்
- ஸூத ஸூத - ஹே! ஸூத மஹரிஷியே
- மஹா பா⁴க³ - பெரும் பாக்யத்தை உடையவரே!
- வத³தாம் - நன்கு சொல்கிறவர்களில்
- வர - சிறந்தவரே!
- யத்³ - எந்த கதையை
- ப⁴க³வான் ஸு²க: ஸ்ரீ பகவானான ஸுகர்
- ஆஹ - சொன்னாரோ
- புண்யாம் - அந்தப் புண்ணியத்தை தரத்தக்க
- ப⁴க³வதீம் - இறைவனான வாஸுதேவனின்
- கதா²ம் - ஸ்ரீமத் பாகவதம் என்னும் கதையை
- ந - எங்கள் பொருட்டு
- வத³ - சொல்வீராக
சௌனக முனிவர் கூறுகிறார் - ஓ! ஸூத மஹரிஷியே! நீங்கள் பெரும் புண்ணியம் செய்தவர். கதை சொல்வதில் தாங்கள் திறமை பெற்றவர். மகாத்மாவான ஸ்ரீஸுகர், பரீஷித் மகாராஜனுக்குக் கூறிய, புண்ணியத்தைத் தரத்தக்க 'ஸ்ரீமத் பாகவதம்' என்னும் கதையை, எங்களுக்குச் சொல்ல வேண்டுகிறோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment