About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 20 September 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.35

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.35

ஏதாந்ந ஹந்து மிச்சா²மி 
க்⁴ நதோபி மது⁴ஸூத³ந|
அபி த்ரை லோக்ய ராஜ்யஸ்ய 
ஹேதோ: கிம் நு மஹீக்ருதே||

  • ஏதாந்ந - இவர்களெல்லாம் 
  • ந - என்றுமில்லை 
  • ஹந் தும் - கொல்ல 
  • இச்சா²மி - எனக்கு விருப்பம் 
  • க்⁴நத - கொல்லப்படுவதால் 
  • அபி - கூட 
  • மது⁴ஸூத³ந - மது என்ற அரக்கனைக் கொன்ற கிருஷ்ணரே 
  • அபி - ஆனாலும் கூட 
  • த்ரைலோக்ய - மூவுலகிற்குள் 
  • ராஜ்யஸ்ய - ஆட்சிக்காக 
  • ஹேதோஹ் - மாற்றத்தில் 
  • கிம் நு - சொல்வதற்கு என்ன இருக்கின்றது 
  • மஹீக்ருதே - நாட்டிற்காக 

மதுசூதனா! என் முன் நிற்கும் உறவுகள் எல்லாம் சுயமிழந்து என்னை கொல்லும் பட்சத்திலும் நான் ஏன் அவர்கனை கொல்ல விரும்ப வேண்டும் மதுவை அழித்த மதுசூதனரே! ஆட்சிக்காக மூவுலகமும் கிடைப்பதாயினும் நான் போர் புரிய விரும்பவில்லை கௌரவர்களை கொல்வதால் எவ்விதானந்தம் பெறப் போகிறேன் ஜனார்தனரே!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.19

ததா³ரஜஸ் தமோ பா⁴வா: 
காம லோ பா⁴த³ யஸ்²சயே|
சேத ஏதைர நாவித்³த⁴ம் 
ஸ்தி²தம் ஸத்வே ப்ரஸீ த³தி||

  • ததா³ - அப்படிப்பட்ட நிச்சல பக்தி ஏற்பட்ட அளவில்
  • ரஜஸ் தமோ பா⁴வாஹா - ராஜோ குணம் தமோ குணம் இவைகளில் இருந்து உண்டான
  • யே காம லோ பா⁴த³ யஸ்²ச - எந்த காமலோபாதிகள் உண்டோ
  • ஏதைர் - மேற் கூறியவைகளால்
  • அநாவித்³த⁴ம் - தீண்டப்படாததாய்
  • சேத - மனமானது
  • ஸத்த்வே ஸ்தி²தம் - ஸத்வ மூர்த்தியான இறைவனிடத்தில் லயித்ததாய்
  • ப்ரஸீ த³தி - அமைதியை அடைகின்றது

அப்போது ரஜோ குணம், தமோ குணம் ஆகியவற்றால் உண்டாகும் காம இச்சை, பேராசை (காமம், லோபம்) முதலியவைகளால் மனம் கெடுதலுறாமல், சத்துவ மூர்த்தியான இறைவனிடத்தில் ஒன்றுபட்டு அமைதியை பெறுகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 50

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 20

மஹேஸ்² வாஸோ மஹீ ப⁴ர்தா 
ஸ்ரீநிவாஸ: ஸதாம் க³தி:|
அநிருத்³த⁴: ஸுரா நந்தோ³ 
கோ³விந்தோ³ கோ³விதா³ம் பதி:||

  • 183. மஹேஸ்² வாஸோ - சர மழை பொழிபவன் (வில்லாளி)
  • 184. மஹீ ப⁴ர்தா - பூமியைத் தாங்குபவன்.
  • 185. ஸ்ரீநிவாஸஸ் - அலர்மேல் மங்கை உறைமார்பன்.
  • 186. ஸதாம் க³திஹி - பக்தர்களுக்குப் புகலிடமாக உள்ளவன்.
  • 187. அநிருத்³த⁴ஸ் - ஒருவராலும் தடைசெய்ய முடியாதவன்.
  • 188. ஸுரா நந்தோ³ - அமரர்களுக்கு ஆனந்தம் அருளுபவன்.
  • 189. கோ³விந்தோ³ - தேவர்களால் துதித்தற்குரியவன், ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்
  • 190. கோ³விதா³ம் பதிஹி - வேதத்தை அறிந்த ஞானிகளால் ஆராதிக்கப்படும் பகவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - நாற்பத்தி ஏழாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

047 அக்கரைக்கே விட்டேனோ குஹப் பெருமாளைப் போலே|

குகன், கங்கை ஆற்றின் கரையில் இருந்த சிருங்கிபேரபுரம் என்ற பகுதியின் நிசாதார்களின் வேடுவ மன்னர் ஆவார். பொய் நீங்கிய மனத்தினன். இராமனிடம் அன்பு கெள்ளும் குணத்தினன். யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப் பெற்றவன். அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்.


இராமன், சீதை மற்றும் இலக்குமணனுடன் 14 ஆண்டு வனவாசத்தை கழிக்கும் பொருட்டு, அயோத்தி நகரத்தை விட்டு வெளியேறி, கங்கை ஆற்றை கடப்பதற்கு தேரில் வந்து கொண்டிருப்பதை அறிந்த குகன், தன் படை வீரர்களிடம், வருபவர்களை வரவேற்க உரிய ஏற்பாடுகளை செய்ய வைத்தான். ராமருடன் வரும் மக்கள், மந்திரிகள் என அனைவருக்கும் உண்ண உணவும், தங்க இடமும் தயார் செய்து வைத்தான்.


இராமன் சிரிங்கிபேரபுரம் வந்ததும், அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான். கானகம் சென்று வாழ்வதற்கு பதில், இங்கு தங்கிக்கொள்ளுமாறு வேண்டினான். 'உங்களை வைத்துத் தாங்க, நாங்கள் இருக்கிறோம். விளையாட மான்களும், கங்கை நதியும் உண்டு. நீங்கள் இங்கேயே தங்கி இருக்கலாம்" என்றான். புன்முறுவலுடன் அதை கேட்ட இராமன், “உன் நண்பன் தந்தைக்கும் தாய்க்கும் கொடுத்த சத்தியத்தை மீற விடுவாயா? இரவாகிவிட்டதால் இன்றிரவு இங்கு தங்கிக் கொள்கிறோம். நாளை காலை கங்கையை கடப்போம். நீ எங்களை கங்கையின் தென் கரையில் கொண்டு சேர்ப்பாய். அங்கு இருக்கும் முனிவர்களுடன் எங்கள் வாழ்வை மேற்கொண்டு விடுகிறோம்.”, என்றார். அன்று இரவு இராமர் முதலானவர்களுக்கு உண்பதற்கு குகன் உணவு வழங்கி உபசரித்தார்.


மறுநாள் காலையில் கங்கை ஆற்றை கடக்க, குகன் தனது படகில் சீதை மற்றும் இராம-இலக்குமணர்களை அமர வைத்து, கங்கை ஆற்றின் மறு கரை வரை படகோட்டிச் சென்றார். பின்னர் இராமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, குகன் சித்திரகூடம் செல்லும் வழி கூறினார். ராமனும் குகனுடன் ஐவரானோம் என குகனை தன் சகோதரனாக ஏற்கிறான்

வனவாசம் சென்ற இராமரை காண்பதற்கு கங்கை ஆற்றின் கரைக்கு வந்த பரதன் முதலானவர்கள் கங்கை ஆற்றைக் கடக்க காத்து நிற்க, அடியார்களுக்கு செய்யும் சேவையாய் கருதி, அவர்கள் ஆற்றை கடக்க உதவி புரிந்தான் குகன்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "குகன் போல் சேவை செய்து, பரமாத்மாவையும், அவரது அடியார்களையும் ஆற்றை கடக்க உதவி புரிந்தேனா? அந்த பாக்கியம் கிடைத்ததா இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்