About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 20 December 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 86

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 56

அஜோ மஹார் ஹ: ஸ்வாபா⁴வ்யோ
ஜிதா மித்ர: ப்ரமோ த³ந:|
ஆநந்தோ³ நந்த³நோ நந்த³:
ஸத்ய த⁴ர்மா த்ரிவிக்ரம:||

  • 524. அஜோ - அ எனும் அகாரத்தால் பேசப்படும் நாராயணன். அவர் பிறக்காதவர், மாறாதவர். 
  • 525. மஹார் ஹஸ் - வழிபாட்டுக்கு மிக உரியவர். மகாபூஜைக்கு தகுதியானவர், பிரபத்தி (சரணடைதல்) பெற தகுதியானவர். 
  • 526. ஸ்வாபா⁴வ்யோ - தியானிக்கத் தக்கவர். ஆரம்பமும் முடிவும் இல்லாதவர். அவரது இயல்பில் வேரூன்றிய அவர் நித்யமானவர். 
  • 527. ஜிதா மித்ரஃ - பகைவர்களை வென்றவர். கோபம், பேராசை, காமம், பொறாமை போன்ற உள் (அகம்) எதிரிகளும் மற்றும் அசுரர்களைப் போன்ற வெளிப் புறம்பான எதிரிகள் அனைவரையும் அவர் வென்றார். 
  • 528. ப்ரமோ த³நஹ - மகிழ்பவர். பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவர். தன்னை உணர்ந்து கொள்வதற்கான தடைகளை நீக்கி பேரின்பத்தை அளித்து தனது பக்தர்களை மகிழ்விக்கிறார். 
  • 529. ஆநந்தோ³ - ஆனந்தமே வடிவானவர். 
  • 530. நந்த³நோ - ஆனந்தம் அளித்து நிரப்புபவர்.  பக்தர்களுக்கு தூய மகிழ்ச்சி அளிப்பவர்.
  • 531. நந்த³ஸ் - எல்லாம் நிரம்பியிருப்பவர். பக்தர்களுக்கு பேரின்பக் கோபுரமாக இருப்பவர். ஆனந்தமான பொருட்களால் நிறைந்தவர்.
  • 532. ஸத்ய த⁴ர்மா - தர்மத்தை உண்மையுடன் நடத்திச் செல்பவர். தனது தர்மத்தை உண்மையாகச் செய்யும் (நிறைவேற்றும்) பேரின்ப காரியங்களால் நிறைந்தவர். 
  • 533. த்ரிவிக்ரமஹ - மூவுலங்களையும் அளந்து கொண்டவர். வாமன அவதாரத்தில் திரிவிக்கிரமனாக மூன்று பிரமாண்டங்களை எடுத்து மூன்று உலகங்களையும் மறைத்தார். மூன்று வேதங்களிலும் வியாபித்திருப்பவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.23 

நைநம் சி²ந்த³ந்தி ஸ²ஸ்த்ராணி 
நைநம் த³ஹதி பாவக:|
ந சைநம் க்லேத³யந்த் யாபோ 
ந ஸோ² ஷயதி மாருத:||

  • ந - என்றுமில்லை 
  • ஏநம் - இந்த ஆத்மாவுக்கு 
  • சி²ந்த³ந்தி - துண்டுகளாக வெட்டுதல் 
  • ஸ²ஸ்த்ராணி - ஆயுதங்கள் 
  • ந - என்றுமில்லை 
  • ஏநம் - இந்த ஆத்மாவை 
  • த³ஹதி - எரித்தல் 
  • பாவகஹ - நெருப்பு 
  • ந - என்றுமில்லை 
  • ச - மற்றும் 
  • ஏநம் - இந்த ஆத்மாவுக்கு 
  • க்லேத³யந்தி - ஈரமாக்குதல் 
  • ஆபோ - நீர் 
  • ந - என்றுமில்லை 
  • ஸோ²ஷயதி - உலர்தல் 
  • மாருதஹ - வீசும் காற்று

ஆயுதங்கள், இந்த ஆத்மாவை, துண்டுகளாக வெட்டுவதும் இல்லை. சுடும் நெருப்பு இந்த ஆத்மாவை, எரிப்பதும் இல்லை. நீர் இந்த ஆத்மாவை, ஈரம் ஆக்குவதும் இல்லை. வீசும் காற்றும் இந்த ஆத்மாவை, உலர்த்துவதும் இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.21

தத: ஸப்த த³ஸே² ஜாத: 
ஸத்ய வத்யாம் பராஸ²ராத்|
சக்ரே வேத³ தரோ: ஸா²கா² 
த்³ருஷ்ட்வா பும்ஸோல்ப மேத⁴ஸ:||

  • தத: ஸப்த த³ஸே² - பிறகு பதினேழாவது அவதாரத்தில் 
  • பும்ஸோ அல்ப மேத⁴ஸஹ - ஜனங்களை மந்த புத்தியை உடையவர்களாய் 
  • த்³ருஷ்ட்வா - பார்த்து 
  • பராஸ²ராத் - பராசரரிடத்திலிருந்து 
  • ஸத்ய வத்யாம் - ஸத்யவதியினிடத்தில் 
  • ஜாதஹ - உண்டானவராய் 
  • வேத³ தரோஸ் - வேதமாகிய பெரிய விருக்ஷத்தின்
  • ஸா²கா² - கிளைகளை 
  • சக்ரே - செய்தார். அதாவது வேத விபாகம் செய்தார் என்பது அர்த்தம்

மானிடர்கள் அறிவு குன்றியிருப்பது கண்டு, பராசரருக்கு சத்யவதியிடம் வியாசர் என்ற திருப்பெயருடன் பதினேழாவதாக அவதாரம் செய்து, வேதமாகிய பெரிய மரத்தைக் கிளை (சாகை) களாகப் பிரித்தார். வேத சாகைகளை ஏற்படுத்தினார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.21

யௌவ ராஜ்யேந ஸம்யோக்தும் 
ஐச்ச²த் ப்ரீத்யா மஹீபதி:|
தஸ்யா பி⁴ஷேக ஸம்பா⁴ராந் 
த்³ருஷ்ட்வா பா⁴ர்யாத² கைகயீ||

  • மஹீபதி ஹி - மஹாராஜா
  • யௌவ ராஜ்யேந - யுவராஜ்ய அதிகாரத்தை
  • ஸம்யோக்தும் - அளிக்க
  • ப்ரீத்யா - அபிமானத்தால் 
  • ஐச்ச²த் - இச்சித்தார்
  • அத² - அப்பொழுது
  • அபி⁴ஷேக ஸம்பா⁴ராந் - அபிஷேகத்திற்குரிய உபகரணங்களை
  • த்³ருஷ்ட்வா - பார்த்து
  • தஸ்ய - அவருடைய
  • பா⁴ர்யா - பாரியையான
  • கைகயீ - கைகேயி

யுவராஜனாக்க {இளவரசனாக்க} விரும்பினார். தசரதனின் மனைவியான கைகேயி தேவி, ராமனின் இளவரசு பட்ட அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைக் கண்டு,

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 67 - பெரியாழ்வார் திருமொழி - 1.5.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 67 - அசுரர்களை அழித்தவனே!
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - ஐந்தாம் திருமொழி - நான்காம் பாசுரம்

வானவர் தாம் மகிழ வன் சகடமுருள* 
வஞ்ச முலைப் பேயின் நஞ்சமது உண்டவனே!* 
கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்* 
கன்றது கொண்டெறியும் கரு நிற என் கன்றே!* 
தேனுகனும் முரனும் திண் திறல் வெந்நரகன்* 
என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்* 
ஆனை! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை* 
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே|

  • வானவர் தாம் - தேவர்கள்
  • மகிழ - மகிழும் படியாகவும்
  • வல் சகடம் - சக்கர வடிவில் வந்த வலிமை மிக்க சகடாஸுரன்
  • உருள - உருண்டு தூள் தூளாக நொறுங்கிப் போகும் படியாகவும்
  • வஞ்சம் - வஞ்சக எண்ணம்  உடையளான
  • பேயின் - பூதனையினுடைய
  • முலை - முலை மேல் தடவிக் கிடந்த
  • நஞ்சு - விஷத்தை
  • அமுது உண்டவனே - அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய்தருளினவனே!
  • கானகம் - காட்டிலுள்ள 
  • வல் - வலிமை பொருந்திய
  • விளவின் - விளா மரத்தினுடைய
  • காய் -  காய்கள்
  • உதிர - உதிரும் படி
  • கருதி - திருவுள்ளத்தில் கொண்டு
  • கன்று அது கொண்டு - பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த வத்சாசுரன் என்னும் அசுரனை கையில் கொண்டு
  • எறியும் - விளவின் மேல் எறிந்தவனாய்
  • கருநிறம் - மை வண்ண தேகம் கொண்ட என் கரிய நிற  
  • என் கன்றே - என் கன்னுக் குட்டியே! 
  • தேனுகனும் - தேனுகாஸுரனும் 
  • முரனும் - முராஸுரனும்
  • திண்திறல் - திண்மையான வலிமை உடைய
  • வெம் - கொடுமையானவனான
  • நிரகன் - நிரகாஸுரனும்
  • என்பவர் தாம் - போன்ற அனைவரும் 
  • மடிய - மாளும் படியாக
  • செரு - யுத்தத்திலே
  • அதிர - மிடுக்கை உடையனாய் 
  • செல்லும் - எழுந்தருள்பவனான
  • ஆனை - ஆண் யானை போன்ற கண்ணனே!
  • எனக்கு - எனக்காக
  • ஒருகால் - ஒரு முறை
  • செங்கீரை ஆடுக - செங்கீரை ஆடியருள வேணும்
  • ஆயர்கள் - இடையர்களுக்காக 
  • போர் ஏறே - போர் செய்ய, ரிஷபம் போலே நின்ற கண்ணனே! 
  • ஆடுக ஆடுகவே - ஆடிக் காட்டுவாயாக

வானுலகத்து தேவர்கள் மகிழும்படி, தீய எண்ணம் கொண்டு சக்கர வடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உருட்டி உதைத்து அழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே!, காட்டில் இருந்த வலிமை மிக்க விளா மரத்தினுடைய காய்கள் உதிரக் கல் எறிவது போல், பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த வத்சாசுரன் என்னும் அசுரனை தூக்கி மரத்தின் மேல் எறிந்து, விழச் செய்து, கொன்ற மை வண்ண தேகம் கொண்ட என் கரிய நிறக் கன்னுக் குட்டியே! தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினம் எனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் கொன்று வானோர்களையும் விண்ணோர்களையும் காப்பாற்றிய, எதிரிகளுக்கு மரண பயத்தைத் தந்து நடுக்கம்  கொள்ள, அதிரச் செய்யும் வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே, ஆயர்களின் காளையே , பசுக்களின் ரக்ஷகனே, எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடி விடு என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

108 திவ்ய தேசங்கள் - 018 - திருக்கண்ணங்குடி 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

018. திருக்கண்ணங்குடி
க்ருஷ்ணாரண்ய க்ஷேத்ரம் - நாகப்பட்டினம்
பதினெட்டாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ லோகநாதப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ அரவிந்தவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஷ்யாமளமேனி பெருமாள் 
திருவடிகளே சரணம்


  • பெருமாள் மூலவர்: லோகநாதன், ஷ்யாமளமேனி
  • பெருமாள் உற்சவர்: தாமோதர நாராயணன் - ஸ்ரீதேவி - பூதேவியுடன்                                               கையை இடுப்பில் கொண்டு கண்ணன் நிற்பதைப்                                            போல்
  • தாயார் மூலவர்: லோகநாயகி
  • தாயார் உற்சவர்: அரவிந்தவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு 
  • திருக்கோலம்: நின்ற 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: ஷ்ரவண
  • விமானம்: உத்பல 
  • ஸ்தல விருக்ஷம்: மகிழம்
  • ப்ரத்யக்ஷம்: ப்ருகு சைத்யர், கௌதம முனி
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 1. திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3. கபிஸ்தலம். 4. திருக்கோவிலூர். 5. திருக்கண்ணங்குடி. இத்தல தீர்த்தத்தின் பெயரைக் கேட்டாலே சகல பாவங்களும் விலகி விடும் என்பதால் இப்பெயர் பெற்றது. இத்தல பெருமாளின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம். தாயார் லோக நாயகி முகமும், உற்சவர் அரவிந்த நாயகி முகமும் ஒரே மாதிரி இருப்பது சிறப்பு. எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார் கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளி இருப்பதைப் போல் அருள் பாலிக்கிறார். "ஊராக் கிணறு, உறங்காபுளி, தேரா வழக்கு திருக்கண்ணங்குடி' என்று இத்தலத்திற்கு திவ்ய தேச சிறப்பு பழமொழி உண்டு.

கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். "கிருஷ்ண பிரேமை வசிஷ்டாய நாமா' என்று சொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில் கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்தி மேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தை வடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம் சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்து கொண்டு இருந்த வெண்ணெய்யை,  கண்ணன் அப்படியே எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக் கண்ட வசிஷ்டர், "அடே! அடே!''என விரட்டி சென்றார். திருக்கண்ணங்குடியை "கிருஷ்ணாரண்யம்' என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம் செய்து கொண்டு இருந்தார்கள். வசிஷ்டரால் விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்த ரிஷிகள் கிருஷ்ணனை பாசக் கயிற்றால் கட்டிப் போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்ட கண்ணன், "வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப் பெறுங்கள்''என்றார். அதற்கு ரிஷிகள், "கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம் தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்கு தரிசனம் கொடுத்து அருள வேண்டும்,'' என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கு இணங்க கண்ணன் இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர் கண்ணனது பாதங்களை பற்றிக் கொண்டார். உடனே கோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதை அறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்து பிரமோற்சவம் நடத்தினர். கண்ணன் கட்டுண்டு நின்ற படியால் "கண்ணங்குடி' ஆனது.

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் "திருநீரணி விழா' என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவசு மன்னனுக்காக இந்த விழா எடுக்கப்பட்டது. சைவ வைணவ ஒற்றுமைக்கு இந்த விழா எடுத்துக் காட்டாகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 77

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

கிருஷ்ணர் சத்யபாமாவின் திருமணம்|

கிருஷ்ணருடன் வந்த நண்பர்கள் குகைக்கு வெளியே பன்னிரண்டு நாட்கள் காத்திருந்தார்கள். ஆனால் கிருஷ்ணர் வராமல் போகவே வருத்தத்தோடு வீடு திரும்பினார்கள். கிருஷ்ணரின் குடும்பத்தினர் கிருஷ்ணருக்கு என்ன ஆயிற்றோ என்று நடுங்கினார்கள். கிருஷ்ணர் நலமாகத் திரும்பி வர வேண்டும் என்று துர்க்கா தேவியை வேண்டிக் கொண்டார்கள். அப்பொழுது கிருஷ்ணர் ஜாம்பவதியுடன் வீடு திரும்பினார். அவரைக் கண்டு எல்லோரும் எல்லையற்ற ஆனந்தம் அடைந்தார்கள். அவருடைய புது மனைவியையும் அவர் தம் கழுத்தில் அணிந்திருந்த ஸ்யமந்தக மணியையும் கண்டு அவர்கள் பூரிப்பு அடைந்தார்கள்.


அந்த மணியைக் கிருஷ்ணர் தாம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. சத்ராஜித்தை அரசவைக்கு வர வழைத்து, அந்த மணி எப்படி தமக்கு கிடைத்தது என்ற விவரத்தைச் சொல்லி, அதைச் சத்ராஜித்திடம் கொடுத்தார். சத்ராஜித், மிக்க அவமானம் காரணமாக, ஸ்யமந்தக மணியைத் தன் தலையைக் குனிந்து கொண்டு கிருஷ்ணரிடமிருந்து வாங்கிக் கொண்டார். தாம் செய்த தவற்றை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே அவர் வீடு திரும்பினர்.

கிருஷ்ணருக்கு நன்றியை எப்படித் தெரிவிப்பது என்று சத்ராஜித் யோசித்தார். அவரோடு நட்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். தமது மகள் சத்யபாமாவைக் கிருஷ்ணருக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்றும், அப்பொழுது ஸ்யமந்தக மணியைக் கிருஷ்ணருக்குக் கொடுப்பதென்றும் தீர்மானித்தார். ஆனால், சத்யபாமாவை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணர், அந்த மணியை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். "சூரிய பகவான் கொடுத்த அதைத் தாங்கள் வைத்துக் கொள்வது சரி தான், அந்த மணியினால் எங்களுக்குப் பின்பு அனுகூலம் கிடைக்கும், சத்யபாமா தங்களின் ஒரே குழந்தையாதலால், தங்களுக்குப் பிறகு அந்த மணி சத்யபாமாவுக்குத் தானே கிடைக்க போகிறது?" என்றார்.

கிருஷ்ணர் தனக்குக் கணவனாகக் கிடைத்ததைப் பற்றி நினைத்து சத்தியபாமா மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 30

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

அந்தணச் சிறுவனின் சாபம்

ஸ்கந்தம் 01

சான்றோனான பரீக்ஷித் இவ்வுகில் அரசனாக விளங்கிய வரை கலியின் ஆட்டம் செல்லவில்லை.

பகவான் பூமியிலிருந்து கிளம்பியதுமே கலி புருஷன் வந்து விட்டான்.

ஆனால், வண்டு மலரிலுள்ள தேனை மட்டும் பருகுவது போல், பரீக்ஷித் எல்லாவற்றிலும் உள்ள நன்மைகளை மட்டும் பார்த்ததால், கலியிடம் வெறுப்புக் கொள்ளாமல் அவனை விட்டு விட்டான்.


கலியுகத்தில் புண்ய கர்மாக்கள் செய்ய வேண்டுமென்று நினைத்தாலே போதும், அவற்றின் நற்பலன் கிடைத்து விடும். தீய செயல்களை நினைத்தால் பயனில்லை. செய்தால் மட்டுமே அதன் பலன் கிட்டும்.

கலிபுருஷன் அறிவிலிகளிடம்தான் தன் கைவரிசையைக் காட்டுவான். விவேகிகளை அவனால் ஒன்றும் செய்ய இயலாது.
ஒருநாள் பரீக்ஷித் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குள் சென்றான்.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வேட்டையாடுவது அரச தர்மம். காடுகள் அதிகம். அவற்றில் விலங்குகளும் அதிகம். அரசனுக்குத்தான் வேட்டையாடும் அதிகாரம் வழங்கப்பட்டது. அப்போது தான் துஷ்ட மிருகங்களின் எண்ணிக்கை அதிகமாகாமல், அவற்றால், நாட்டு மக்களுக்கு துன்பம் ஏற்படாமல் காக்கமுடியும். அரசர்களும் வேட்டையாடும் தர்மம் அறிந்தவர்கள். இஷ்டம் போல் கொன்று குவிக்க மாட்டார்கள்.

காட்டில் அலைந்தலைந்து மிகவும் களைத்துப் போன பரீக்ஷித் தன் படைகளைப் பிரிந்து வெகுதூரம் சென்று விட்டான். பசியும் தாகமும் அவனை மிகவும் வாட்டியது.

நீர் நிலைகள் ஏதும் தென்படவில்லை.

ஒரு குடிசை கண்ணில் பட்டது.

அதன் வாயிலில் முனிவர் ஒருவர் கண்களை மூடி த்யானத்தில் ஆழ்ந்து நிர்விகல்ப ஸமாதியில் இருந்தார்.

அரசன் அவரருகில் சென்று அழைத்தான்
பதில் இல்லை.

மீண்டும் அழைத்தான். 

ம்ஹூம். அவர் ஏனென்று கேட்கவில்லை.

மறுபடி மறுபடி அழத்துப் பார்த்தான். முனிவரிடம் அசைவே இல்லை.

குடிசைக்குள் சென்று பார்த்தான். நீர் இருக்கும் இடமும் தெரியவில்லை.

தெரிந்தோ தெரியாமலோ துஷ்டர்களிடம் சிறிது நேரம் பழகினாலும், அதன் பாதிப்பு விடாமல் தொடரும். அரசனோ கலிபுருஷனைச் சந்தித்து விட்டு வந்திருக்கிறானே.

பசியோடும் தாகத்தோடும் அலைந்து அரசன் பலவீனமான தருணத்தில் கலி தன் வேலையைத் துவங்கினான்.
தன்னை அடக்கி விட்ட அரசனை வீழ்த்தத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான் கலி.

பொதுவாகவே, எதைக் கேள்விப்பட்டாலும் பரீக்ஷித் அதை ஆராய்ந்து சோதித்த பின்னரே ஏற்றுக் கொள்வான். அதாலேயே அவனுக்கு பரீக்ஷித் என்ற பெயர் மிகவும் பொருத்தம்.

இப்போது விநாச காலே விபரீத புத்தி என்று முனிவரைச் சோதிக்கும் எண்ணம் வந்து விட்டது.

இவர் நிஜமாகவே தியானத்தில் இருக்கிறாரா? அல்லது நடிக்கிறாரா? என்று சந்தேகம் வந்தது.

எப்போதும் மேலோரோடு பழகி, சான்றோனாக விளங்குபவன், கர்பத்திலேயே பகவத் தரிசனம் பெற்றவன், புகழ் பெற்ற பரம்பரையைச் சேர்ந்தவன் பரீக்ஷித்.

அரசனே தவம் செய்பவர்களைக் காக்க வேண்டும். அவனே புத்தி தடுமாறி ஒரு காரியம் செய்தான்.

சுற்று முற்றும் பார்த்தான். ஒரு செத்த பாம்பின் உருவில் கலியே கிடந்தான் போலும். அதை ஒரு அம்பினால் எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டான். அப்போதும் அவர் அசையவில்லை.

நிஜமாகவே தியானத்தில் தான் இருக்கிறார் என்று புரிந்துகொண்டு அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்துக் கிளம்பினான். அவர் நடிக்கவில்லை என்று தான் தெரிந்து விட்டதே. 

போகும் போது பாம்பை எடுத்துக் கீழே போட்டு விட்டுப் போயிருக்கலாம். ஜடாமுடியும், மரவுரியும், ருத்ராக்ஷங்களும் அலங்கரிக்க, அந்த சமீகர் என்ற மஹரிஷியைப் பார்த்தால் பரமேஸ்வரன் என்று நினைத்தானோ, கழுத்தில் பாம்பு தான் குறை. இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படியே விட்டு விட்டுக் கிளம்பினான்.

சற்று நேரத்தில் சமீக மஹரிஷியின் புதல்வன் ச்ருங்கி என்ற சிறுவன் அங்கு வந்தான்.

தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைப் பார்த்ததும் வெகுண்டான். யார் இதைச் செய்திருப்பார்கள் என்று சுற்று முற்றும் தேடினான். ஒருவரும் காணவில்லை.

சிறுவனாக இருப்பினும் உபநயனம் ஆகியிருந்தது. காயத்ரி ஜபத்தின் பலனால் மஹா தேஜஸ்வியாய் இருந்தான். அவனுக்கு ஞான த்ருஷ்டியும் இருந்தது. கண்களை மூடி த்யானத்தில் என்ன நிகழ்ந்ததென்று அறிந்தான்.

சிறுவனாயிற்றே. தந்தைக்கொரு அவமானம் என்றதும் தாங்க முடியவில்லை. அவனிடம் தபோபலம் மிகுந்திருந்தது.

"தபோதனர்களாலேயே நாடு செழிக்கிறது. வீட்டில் சோறு உண்ணும் நாய், எஜமானனையே கடிப்பதுபோல, மஹான்களின் தவத்தால் நாட்டை சுபீக்ஷமாக வைத்திருக்கும் அரசன், அவர்களைக் காக்காமல், தொல்லை கொடுப்பானா? அரசனான நீ பலவான், என்று தானே இக்காரியம் செய்யத் துணிந்தாய்? உன் அஸ்திரம் பெரிதா? இந்த அந்தணச் சிறுவனின் வஜ்ராயுதம் போன்ற வாக்கு பெரியதா? என்று பார்க்கலாமா? செத்த பாம்பைத் தானே உன்னால் போட முடிந்தது. இதோ என் சாபம்! ஓ பரீக்ஷித்தே! இன்றிலிருந்து ஏழாம் நாள், பாம்புகளிலேயே உயர்ந்ததும் தேவ லோகத்தில் வசிப்பதுமான தக்ஷகன் என்ற பாம்பு கடித்து நீ இறக்கக் கடவாய்!" என்று சாபமிட்டான்.

சற்று நேரம் கழித்து தியானம் கலைந்த சமீகர், ச்ருங்கியின் முகத்தைப் பார்த்தார். சாபமிட்டு விட்டதால், அவனது தேஜஸ் குறைந்திருந்தது.

புத்திசாலியான தபோதனர்கள் சாபமிட்டு தவத்தின் சக்தியைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள். தீங்கு நேரும் போது, இறைவனிடம் சரணாகதி செய்து விட்டு அவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால், பகவானால் சும்மா இருக்க முடியாது. ஓடோடி வருவான் என்று தெரியும் அவர்களுக்கு.

இவ்விஷயத்தை ஏராளமான மஹான்களின் சரித்ரத்தில் காணலாம். விஸ்வாமித்திரரும் ஒவ்வொரு முறையும் தவத்தின் சக்தியை வெவ்வேறு விதமாக விரயம் செய்து விட்டு மீண்டும் தவம் செய்து கொண்டிருந்தார். ஆனால், ஞானத்தை அடைந்ததும், தாடகையும், மாரீசனும், சுபாகுவும் எவ்வளவு தொந்தரவுகள் கொடுத்த போதும் சாபம் கொடுக்காமல், ராமனை அழைத்து வந்தார். தண்டகாரண்ய காட்டில் இருந்த முனிவர்களும் அவ்வாறே இருந்ததைக் காணலாம்.

ஞான த்ருஷ்டியால் அனைத்தையும் அறிந்தார் சமீகர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்