About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 4

குலசேகராழ்வார்

053. திவ்ய ப்ரபந்தம் - 652 - என் மனம் உருகும் நாள் எந்நாளோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு* 
ஏனை அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் உந்தித்* 
திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறிக்* 
கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும்*
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டு கொண்டு* 
என் உள்ளம் மிக என்று கொலோ உருகும் நாளே|

054. திவ்ய ப்ரபந்தம் - 653 - அரங்கனைக் கண்டு அகம் நெகிழ்தல் எந்நாளோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி* 
வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம் துறந்து* 
இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண்* 
நிலை நின்ற தொண்டரான*
அறம் திகழும் மனத்தவர் தம் கதியை பொன்னி* 
அணி அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்* 
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே|

055. திவ்ய ப்ரபந்தம் - 654 - அரவணையானைக் கண்டு இன்பக் கலவி எய்துவேனோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்* 
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்* 
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்* 
கடும் பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப*
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த* 
திருவரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்* 
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி* 
வல்வினையேன் என்று கொலோ வாழும் நாளே|

056. திவ்ய ப்ரபந்தம் - 655 - திருவரங்கத்தில் துள்ளிப் புரள வேண்டும்
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித்* 
திருப்புகழ்கள் பலவும் பாடி* 
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்* 
மழை சோர நினைந்து உருகி ஏத்தி* 
நாளும் சீர் ஆர்ந்த முழவுஓசை பரவை காட்டும்* 
திருவரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்* 
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்* 
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே|

057. திவ்ய ப்ரபந்தம் - 656 - அரங்கன் அடியார்களுடன் அமரும் நாள் என்று?
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய* 
மண் உலகில் மனிசர் உய்ய*
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர* 
அகம் மகிழும் தொண்டர் வாழ *
அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்* 
அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு* 
யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே| (2)

058. திவ்ய ப்ரபந்தம் - 657 - நாரணன் அடிக்கீழ் நலமுற நண்ணுவர்
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத்* 
திருவரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்* 
கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னைக்* 
கண்ணாரக் கண்டு உகக்கும் காதல் தன்னால்*
குடை விளங்கு விறல் தானைக் கொற்ற ஒள் வாள்* 
கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த* 
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்* 
நலந்திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே| (2)

059. திவ்ய ப்ரபந்தம் - 658 - கண் பெற்ற பயன்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தேட்டு அருந் திறல் தேனினைத்* தென் அரங்கனைத்* 
திருமாது வாழ் வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி* 
மால் கொள் சிந்தையராய்* 
ஆட்டம் மேவி அலந்து அழைத்து* அயர்வு எய்தும் மெய்யடியார்கள் தம்* 
ஈட்டம் கண்டிடக் கூடு மேல்* அது காணும் கண் பயன் ஆவதே| (2)

060. திவ்ய ப்ரபந்தம் - 659 - கங்கா ஸ்நானத்தை விடச் சிறந்தது
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தோடு உலா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததும்* சுடர் வாளியால்* 
நீடு மா மரம் செற்றதும்* நிரை மேய்த்ததும் இவையே நினைந்து*
ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும்* 
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில்* 
கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை* என் ஆவதே?

061. திவ்ய ப்ரபந்தம் - 660 - தொண்டர் அடிச்சேற்றைச் சென்னியில் அணிவேன்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்* முன் இராமனாய்* 
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்* சொல்லிப் பாடி* 
வண் பொன்னிப் பேர் ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு* 
அரங்கன் கோயில் திருமுற்றம்* 
சேறு செய் தொண்டர் சேவடிச்* செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே|

062. திவ்ய ப்ரபந்தம் - 661 - என் மனம் தொண்டர்களையே வாழ்த்தும்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்* 
உடன்று ஆய்ச்சி கண்டு* 
ஆர்த்த தோள் உடை எம்பிரான்* என் அரங்கனுக்கு அடியார்களாய்*
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து* மெய் தழும்பத் தொழுது ஏத்தி* 
இன்பு உறும் தொண்டர் சேவடி* ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே|

063. திவ்ய ப்ரபந்தம் - 662 - தொண்டர்களை நினைத்து என் மெய் சிலிர்க்கிறது
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பொய் சிலைக் குரல் ஏற்று எருத்தம் இறுத்தப்* போர் அரவு ஈர்த்த கோன்* 
செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்* திண்ண மா மதில் தென் அரங்கனாம்*
மெய் சிலைக் கருமேகம் ஒன்று* தம் நெஞ்சில் நின்று திகழப் போய்* 
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என் மனம் மெய் சிலிர்க்குமே|

064. திவ்ய ப்ரபந்தம் - 663 - தொண்டர்களையே என் மனம் பக்தி செய்யும்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன* வானவர் தம்பிரான்* 
பாத மா மலர் சூடும் பத்தி இலாத* பாவிகள் உய்ந்திடத்* 
தீதில் நன்னெறி காட்டி* எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே* 
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்* காதல் செய்யும் என் நெஞ்சமே|

065. திவ்ய ப்ரபந்தம் - 664 - அரங்கன் அடியாருக்கே அன்பு காட்டுவேன்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கார் இனம் புரை மேனி நற் கதிர் முத்த* வெண்ணகைச் செய்ய வாய்*
ஆர மார்வன் அரங்கன் என்னும்* அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்*
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து* கசிந்து இழிந்த கண்ணீர்களால்*
வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே|

066. திவ்ய ப்ரபந்தம் - 665 - தொண்டர்களிடமே என் மனம் மயங்கியது
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மாலை உற்ற கடற் கிடந்தவன்* வண்டு கிண்டு நறுந்துழாய்*
மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை* மலர்க் கண்ணனை*
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்* திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு* மாலை உற்றது என் நெஞ்சமே|

067. திவ்ய ப்ரபந்தம் - 666 - தொண்டர்கள் பித்தர்கள் அல்லர்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப* ஏங்கி இளைத்து நின்று* 
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து* ஆடிப் பாடி இறைஞ்சி* 
என்அத்தன் அச்சன் அரங்கனுக்கு* அடியார்கள் ஆகி* 
அவனுக்கே பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்* மற்றையார் முற்றும் பித்தரே|

068. திவ்ய ப்ரபந்தம் - 667 - அடியார்க்கு அடியார் ஆவர்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
அல்லி மா மலர் மங்கை நாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம்* 
எல்லை இல் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்* 
கொல்லி காவலன் கூடல் நாயகன்* கோழிக் கோன் குலசேகரன்*
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்* தொண்டர் தொண்டர்கள் ஆவரே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் – 2 - திருப்பல்லாண்டு 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 2 - பாஞ்ச சன்னியத்தை பாடு
திருப்பல்லாண்டு - இரண்டாம் பாசுரம் 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அடியோமோடும் நின்னோடும்* 
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின் வல மார்பினில்* 
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்* 
சுடராழியும் பல்லாண்டு*
படை போர் புக்கு முழங்கும்* 
அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே| (2)


இதில் எம்பெருமான் பரமபதம் ஸம்ஸாரம் என்னும் இரண்டு உலகங்களுடன் இருக்கும் இருப்புக்கு மங்களாசாஸனம் செய்கிறார்.

  • அடியோமோடும் - அடியவர்களான எங்களோடும் 
  • நின்னோடும் - ஸ்வாமியான உன்னோடும் 
  • பிரிவின்றி - பிரிவில்லாமல் 
  • ஆயிரம் பல்லாண்டு - எந்நாளும் நித்தியமாய் 
  • வடிவாய் - அழகே உருவெடுத்தவளான 
  • நின் வல மார்பினில் - உன் வலது திரு மார்பினில் 
  • வாழ்கின்ற - பொருந்தி  நின்றுள்ள 
  • மங்கையும் - பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும் 
  • பல்லாண்டு - பல்லாண்டு இருக்க வேண்டும் 
  • வடிவார் - உன் திருமேனியை வ்யாபித்திருக்கிற
  • சோதி - சோதி மயமான வடிவுடைய  
  • வலத்து - உனது வலக்கையில் 
  • உறையும் - நித்யவாஸம் பண்ணுமவனாய் 
  • சுடர் - பகைவரை எரிக்குமவனான 
  • ஆழியும் – சக்கரமும் (திருவாழியாழ்வானும்)  
  • பல்லாண்டு - நீடூழி வாழ்க! 
  • படை - ஸேனைகளையுடைய 
  • போர் - யுத்தங்களில் 
  • புக்கு - புகுந்து 
  • முழங்கும் - கோஷிக்கின்ற 
  • அ - அளவற்ற பெருமையுடைய 
  • பாஞ்ச சன்னியமுன் – சங்கும் (ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானும்) 
  • பல்லாண்டே - நீடூழி வாழ்க

அடியார்களான எங்களுக்கும் ஸ்வாமியான உனக்கும் உள்ள ஸம்பந்தம் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய திருமார்பிலே எப்பொழுதும் இருப்பவளான அழகும் ஆபரணங்களும் இளமையும் பொருந்திய பெரிய பிராட்டியார் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய வலது திருக்கையிலே அழகும் ஒளியும் பொருந்தி இருக்கும் திருசக்கரத்தாழ்வானும் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய இடது திருக்கையிலே இருக்கும், யுத்தங்களிலே ஆயுதமாகப் புகுந்து எதிரிகளின் உள்ளத்தை சிதறடிக்கும் பெருத்த கோஷத்தை எழுப்பும் அந்த பாஞ்சஜந்யம் என்னும் திருச்சங்கம் எப்பொழுதும் இருக்க வேண்டும். ஆழ்வார் அடியார்களைச் சொல்லுவதன் மூலம் ஸம்ஸாரத்தையும், பிராட்டி, திருவாழி, திருச்சங்கத்தைச் சொல்லுவதன் மூலம் பரமபதத்தையும் சொல்லுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - முதலாம் அத்யாயம் அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

குருஷேத்திரத்தில் நடக்கும் போர்களத்துக் காட்சிகளைத் திருதராஷ்டிரனுக்கு, ஸஞ்ஜயன் விவரிக்கிறான். துரியோதனன் அங்கே அணிவகுத்து நிற்கும் இரண்டு படைகளையும் ஒப்பிட்டு, தன் படை அளவிடக்கரிதென பெருமை கொள்கிறான். போர் சங்குகள் முழுங்கப் போர் தொடங்க இருக்கையில் அர்ஜுனன் தன் தேரை இரண்டு படைக்களுக்கு நடுவே நிறுத்த சொல்கிறான். தன் முன்னால் போர் புரிய உள்ள கெளரவப் படைகளைப் பாச பந்தத்தினால் எதிர்களாகப் பார்க்காமல் உறவினர்களாகப் பார்க்கிறான். 


ஏர்க்காலிலும், தன் காலிலும் மிதிபட்டு இறக்கும் புழுக்களையும், பயிர்களையும் நாசம் செய்யும் பூச்சிகளையும் கொல்வது பாவமென்று விவசாயம் செய்ய மறுக்கின்ற விவசாயியைப் போல், பட்டுப் புழுக்களைக் கொள்வது பாவமென்று தன் பணியைச் செய்ய மறுக்கின்ற நெசவாளியைப் போல், தவறு செய்யும் உறவினர்களைத் தண்டிக்க மறுக்கும் நீதிபதியைப் போல், தப்பிக்க விடும் காவலாளியைப் போல், தன் கடமையை மறந்து, கடமையைத் தவிர்க்க காரணங்களை கற்பிக்கும் சராசரி மனிதனைப் போல், உறவினர்களைத் தானே கொல்லப் போவதாக நினைத்து, அதனால் பாவம் வரும் என்று அஞ்சி, ராஜ போகம் வேண்டி, குலநாசம் செய்து, அதனால் வரும் பாவங்களினால் நரகத்திற்குச் செல்ல தான் விரும்பவில்லை. அதை விட நிராயுதபானியாகக் கொல்லப் படுவதே மேல். இதனால் மூவுலகமே கிடைத்தாலும் தனக்கு வேண்டாம் என்று ஒரு போர் களத்தில் போர் வீரனுக்குப் பொருந்தாத நியாங்களை கூறிக் கவலையுடன் உடல் தளர, ஏந்திய வில் கை நழுவ அப்படியே தேர் தட்டிலேயே அமர்ந்து விடுகிறான். விஷாத யோகம் ஒரு போர்வீரனின் போர்களத்து தயக்கம் .

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.7

யாநி வேத³ விதா³ம் ஸ்²ரேஷ்டோ² 
ப⁴க³வாந் பா³த³ ராயண꞉|
அந்யே ச முநய꞉ ஸூத 
பராவர விதோ³ விது³꞉||

  • விதா³ம் - புராணம் முதலியவற்றை அறிந்தவருள் 
  • ஸ்²ரேஷ்டோ² - ஸ்ரேஷ்டரான
  • பா³த³ ராயணஹ ப⁴க³வாந் - வியாஸ பகவான்
  • யாநி வேத³ - எந்த இதிஹாசம் முதலானவற்றை அறிந்தாரோ
  • அந்யே பராவர விதோ³ - மற்ற நிர்குண ஸகுண ப்ரம்மங்களை அறிந்த
  • முநயஸ் ச - மஹரிஷிகளும்
  • விது³ஹு - அறிந்தார்களோ
  • ஸூத - மகரிஷே|

ஓ! ஸ்ரீல ஸூத கோஸ்வாமி! கடவுளின் அவதாரமான வியாச தேவரிடம் நீங்கள் கற்றுக் கொண்டீர்கள். இதன் மூலம், நீங்கள் வேதம் கற்றவர்களில் மூத்தவர், கற்றறிந்த பண்டிதர்களில், மற்றவர்களை விடவும், எல்லா முனிவர்களை விடவும், உடல் மற்றும் மனோதத்துவ அறிவைக் கொண்டவராகவும் இருப்பவர் என்பதை நாங்கள் அறிவோம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஏஷ மே ஸர்வ தர்⁴மாணாம் 
த⁴ர்மோ தி⁴கதமோ மத:|
யத் ப⁴க்த்யா புண்டரீகாக்ஷம் 
ஸ்தவைர் ரச்சைந் நர: ஸதா||


மத: - மதஹ
நர: - நரஸ்

செந்தாமரைக் கண்ணனான பகவானை, மனிதனாகப் பிறந்தவன் எப்போதும் பக்தியுடன் அவனது பெருமைகளைச் சொல்லும் தோத்திரங்களால் வழிபாடு செய்யக் கடமைப் பட்டிருக்கிறான். இவ்வாறு வழிபாடு செய்யும் தருமத்தையே எல்லாத் தருமங்களிலும் சிறந்த தருமமாக நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - பன்னிரெண்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

012 எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே|

ஆழ்வார்களில் பட்டர்பிரான் என்றால் அது பெரியாழ்வார் எனப் போற்றப்படும் விஷ்ணு சித்தரையே குறிக்கும். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார். வேறு எந்த ஆழ்வாருக்கும் இல்லாத பெருமை இவருக்கு உண்டு. பெரிய பிராட்டியை மகளாகவும், ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாகவும் அடையும் பேறு பெற்றவர், கருடனின் அம்சம் எனக் கருதப் பட்டார். எப்போதும் வில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரி பெருமானைச் சிந்தனையில் கொண்டு இருந்ததால் விஷ்ணு சித்தர் என்று பெயர் பெற்றார். 


தாய் மாமன் கம்சனின் அழைப்பை ஏற்று கண்ணன், பலராமனுடன் கோகுலத்தில் இருந்து புறப்பட்டார். வழியில் ஒருவர் கண்ணனுக்கும், பலராமனுக்கும் மாலைகள் அணிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட கண்ணன், அந்த பூ வியாபாரிக்கு அருள் செய்தார். அவ்வியாபாரி வீடு பேறு பெற்றார் என்ற கதையைக் கேட்ட விஷ்ணு சித்தரும், தானும் பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியம் செய்ய விரும்பினார். அதனால், தன் குடிலை ஒட்டி பூந்தோட்டம் அமைத்து. பூக்களை இறைவனுக்கு சமர்ப்பித்து வந்தார்


வல்லபதேவ பாண்டிய மன்னன் ஒரு வைணவ பக்தன். ஒருநாள் அவன் மாறு வேடத்தில் இரவில் நகர்வலம் வந்தான். அப்போது வைதீக அந்தணன் ஒருவன் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். வேறு ஊர்க்காரன் என்பதால் மன்னன் அவனை எழுப்பி, அவன் யார்? என விசாரித்தார். அதற்கு அவன் காசி சென்று விட்டு திரும்புவதாகவும், சேதுவிற்கு செல்வதாகவும் கூறினான் மன்னனும் "பல ஊர்களுக்கு சென்றுள்ள நீ, எனக்கு ஏதேனும் நன்மொழிக் கூறு" என்றார்.

அந்தப் பயணியும், "மழை காலத்திற்கு வேண்டியவற்றை மற்ற எட்டு மாதங்களிலும் இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் சேர்த்து வைப்பவனே புத்திசாலி" என்றிட்டான். மன்னன் அதை மனதில் இருத்திக் கொண்டான்.

அரண்மனை வந்ததும் யோசித்த மன்னன், தன்னிடம் செல்வம் இருந்தாலும், மறுமை உலகிற்கு ஏதும் சேர்க்காமல் வறியனாக இருக்கிறேனே என எண்ணினான். . உடனே, தன் நண்பரும், சிறந்த வேதவித்துவுமான செல்வநம்பி என்பவரை அழைத்து" மறுமைக்கு உண்டானதைச் சேர்த்துத் தருபவன் யார்?" என்றான்

செல்வநம்பியும், இதை ஒரு போட்டியாக அறிவித்தார். சரியான விடை கூறுபவருக்கு, கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள பொற்கிழி பரிசளிக்கப்படும் என அறிவித்தார்.

யார் யாரோ வந்து என்னென்னவோ சொல்லியும் மன்னன் மனம் அவற்றை ஏற்கவில்லை. இந்நிலையில், இறைவன் விஷ்ணு சித்தரின் கனவில் வந்து, பாண்டிய மன்னன் வல்லப தேவன், யார் பரதேவதை என்று ஸ்தாபிப்பதற்காக எல்லா பட்டர்களையும் கூப்பிட்டு இருக்கிறான். "இம்மைக்கும், மறுமைக்கும் உள்ள செல்வம் நான் தான் என உன் திறமையால் நிரூபித்து, பொற் கிழியைப் பெற்று செல்" என்றார்

இந்த ஸ்ரீமன் நாராயணன் தான் எம்பெருமான் என்று வெளிபடுத்தி, சாஸ்திரம் அனைத்தையும் இதை தான் சொல்கிறது என்று எடுத்துக் காட்டி, இந்த எம்பெருமானுக்கு தான் பல்லாண்டு பாட வேண்டும் என்று அவர் பல்லாண்டு பாடி வெளிச்சம் போட்டு காட்டினார் பெரியாழ்வார். "என்றைக்கும், ஏழேழு பிறவிக்கும் உள்ள செல்வன் நாராயணனே: என மன்னனுக்கு விளக்கிவிட்டு, பொற்கிழி கட்டியிருக்கும் கம்பத்தின் அருகேச் சென்றார். கம்பம், அவர் பொற்கிழியை எடுக்கும் விதத்தில் வளைந்து கொடுத்தது. அதைக் கண்டு மன்னனும், மற்றோரும் மகிழ்ந்தனர்.

பொற்கிழியை எடுத்துக் கொண்டு விஷ்ணு சித்தர் கிளம்பினார். இதனால் பாண்டிய தேவன், பெரியாழ்வாரை தன் பட்டத்து யானை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து கொண்டு போக, அப்பொழுது ஆகாசத்தில், கருட வாகனத்தில் எம்பெருமான் அவருக்கு சேவை சாதித்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படிப்பட்ட பட்டர்பிரானாகிய விஷ்ணு சித்தர் சொன்னதைப் போல, ‘எம்பெருமான் நாராயணனே பரம்பொருள்’ என்றேனா...இல்லையே? எம்பெருமானை வெளிச்சம் போட்டு காட்டலையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பகவானின் பிறவி விளையாட்டு|

சில வருடங்களில் கம்சன் தேவகியின் ஆறு குழந்தைகளைக் கொன்று விட்டான். ஏழாவது குழந்தை தேவகியின் கருவில் வளர்ந்து கொண்டிருந்தது. விஷ்ணுவின் ஓர் அம்சமான ஆதிசேஷன் தான் அந்த ஏழாவது குழந்தை. உலகில் தாம் அவதாரம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்று மகாவிஷ்ணு உணர்ந்தார். 


தம்முடைய பெரும் சக்தியான யோக மாயையை அவர் அழைத்தார். "தேவி, ஆயவர்களும், ஆய்ச்சியர்களும் வாழும் கோகுலத்திற்கு நீ உடனே செல். வசுதேவருடைய மற்றோரு மனைவி ரோகினி அங்கே தான் இருக்கிறாள். என்னுடைய ஆன்மீக அம்சமான ஆதிசேஷன் தேவகியின் கருவில் வளர்ந்து கொண்டிருக்கிறான். நீ கோகுலத்திற்கு சென்று தேவகியின் கருவில் உள்ள ஆதிசேஷனை ரோகிணியின் கருவில் வைத்து விடு. பிறந்த பிறகு அந்த குழந்தை பலராமன் என்று அழைக்கப் படுவான். நான் கிருஷ்ணன் என்ற பெயரில் தேவகியிடம் எட்டாவது குழந்தையாக பிறப்பேன். அதே சமயம் நீ நந்தருக்கும் யசோதைக்கும் மகளாகப் பிறப்பாய்" என்றார். 


பகவானின் கட்டளையை நிறைவேற்ற யோகமாயை பூமிக்கு இறங்கி வந்தாள். தேவகியை மயக்கத்தில் ஆழ்த்தி அவள் கருவில் இருந்த குழந்தையை ரோகிணியின் கருவுக்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் சிதைந்து விட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள். "ஐயோ! தேவகியின் குழந்தை போய் விட்டதே!" என்று அங்கு இருந்தவர்கள் ஓலமிட்டார்கள்.

பகவான் தேவகியின் கர்ப்பத்திற்குள் புகுந்தார். உடனே அவள் மிக்க அழகுடன் ஒளிர ஆரம்பித்தாள். மகாவிஷ்ணுவுக்கு தாயாக போகிறவள் அல்லவா அவள்! சிறையே அவள் ஒளியினால் பிரகாசிப்பதை கண்டு ஆச்சரியப்பட்டான் கம்சன். "நிச்சியமாக என்னுடைய மிகப் பெரிய எதிரியான நாராயணன் தான் அவளுடைய வயிற்றுக்குள் இருக்க வேண்டும். அவள் இத்தனை தெய்விக ஒளியுடன் விளங்கியதை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. நான் இப்பொழுது என்ன செய்வது? அவளைக் கொன்று விடட்டுமா! ஆனால் அவளோ ஒரு பெண்; அதிலும் என் தங்கை; அதோடு கர்ப்பமாக வேறு இருக்கிறாள். இந்த நிலையில் நான் அவளைக் கொன்றால் உலகம் என்னை நிந்திக்கும். இந்த பாவத்தினால் என் புகழ், செல்வம், ஆயுள் எல்லாம் மங்கி விடும்" என்று இப்படிப் பலவாறாகச் சிந்திக்க ஆரம்பித்தான். 


கடைசியில் அவளைக் கொல்லுவதில்லை என்று தீமானித்து எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று வெகு ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தான். பிறக்க போகும் குழந்தையைப் பற்றியே அவன் எப்பொழுதும் அச்சத்துடன் சிந்தித்துக் கொண்டு இருந்தான். ஏதாவது ஓர் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கு போது திடீரென்று தன் ஆசனத்தை உற்றுப் பார்ப்பான். ஆசனத்தில் எதோ ஒரு குழந்தை இருப்பது போல அவனுக்கு தோன்றும். "ஐயோ! குழந்தை மீது உட்கார இருந்தேனே! என்ன கோரம்!" என்று நினைப்பான். பிறகு தூங்குவதற்காக படுக்கையில் படுப்பான். அங்கும் ஒரு குழந்தை இருப்பது போலத் தோன்றும். இப்படியாக குழந்தையின் நினைவு அவனை வாட்டிக் கொண்டே இருந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 3

ஸ்ரீ ஆண்டாள் 

038. திவ்ய ப்ரபந்தம் - 607 - என் சங்கு வளைகளைத் திருவரங்கர் கவர்ந்து விட்டாரே!
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தாம் உகக்கும் தம் கையிற்* சங்கமே போலாவோ* 
யாம் உகக்கும் எம் கையில்* சங்கமும்? ஏந்திழையீர்!* 
தீ முகத்து நாகணை மேல்* சேரும் திருவரங்கர்* 
ஆ! முகத்தை நோக்காரால்* அம்மனே! அம்மனே| (2)

039. திவ்ய ப்ரபந்தம் - 608 - என் வளைகள் சுழல்கின்றனவே!
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
எழில் உடைய அம்மனைமீர்!* என் அரங்கத்து இன்னமுதர்* 
குழல் அழகர் வாய் அழகர்* கண் அழகர் கொப்பூழில்* 
எழு கமலப் பூ அழகர்* எம்மானார்* 
என்னுடைய கழல் வளையைத் தாமும்* கழல் வளையே ஆக்கினரே|

040. திவ்ய ப்ரபந்தம் - 609 - என் இடரை அவர் தீர்ப்பாரா?
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பொங்கு ஓதம் சூழ்ந்த* புவனியும் விண் உலகும்* 
அங்கு ஆதும் சோராமே* ஆள்கின்ற எம்பெருமான்* 
செங்கோல் உடைய* திருவரங்கச் செல்வனார்* 
எம் கோல் வளையால்* இடர் தீர்வர் ஆகாதே? (2)

041. திவ்ய ப்ரபந்தம் - 610 - என் வளை மீது அவருக்கு என்ன ஆசை?
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
மச்சு அணி மாட* மதில் அரங்கர் வாமனனார்* 
பச்சைப் பசுந் தேவர்* தாம் பண்டு நீர் ஏற்ற* 
பிச்சைக் குறையாகி* என்னுடைய பெய்வளை மேல்* 
இச்சை உடையரேல்* இத் தெருவே போதாரே?

042. திவ்ய ப்ரபந்தம் - 611 - என் பொருள் அவருக்கு எதற்கு?
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பொல்லாக் குறள் உருவாய்ப்* பொற் கையில் நீர் ஏற்று* 
எல்லா உலகும்* அளந்து கொண்ட எம்பெருமான்* 
நல்லார்கள் வாழும்* நளிர் அரங்க நாகணையான்* 
இல்லாதோம் கைப்பொருளும்* எய்துவான் ஒத்து உளனே|

043. திவ்ய ப்ரபந்தம் - 612 - நான்மறையின் சொற்பொருளாய் நின்றவரன்றோ அவர்?
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கைப் பொருள்கள் முன்னமே* கைக்கொண்டார்* 
காவிரிநீர் செய்ப் புரள ஓடும்* திருவரங்கச் செல்வனார்
எப் பொருட்கும் நின்று ஆர்க்கும்* எய்தாது*
நான் மறையின் சொற்பொருளாய் நின்றார்* 
என் மெய்ப்பொருளும் கொண்டாரே|

044. திவ்ய ப்ரபந்தம் - 613 - தம் நன்மைகளையே அவர் எண்ணுகிறாரே!
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
உண்ணாது உறங்காது* ஒலி கடலை ஊடறுத்துப்* 
பெண் ஆக்கை யாப்புண்டு* தாம் உற்ற பேது எல்லாம்* 
திண்ணார் மதில் சூழ்* திருவரங்கச் செல்வனார்* 
எண்ணாதே தம்முடைய* நன்மைகளே எண்ணுவரே|

045. திவ்ய ப்ரபந்தம் - 614 - அவர் எவ்வளவெல்லாம் பேசினார்!
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பாசி தூர்த்தக் கிடந்த* பார்மகட்குப்*
பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா* மானம் இலாப் பன்றி ஆம்* 
தேசு உடைய தேவர்* திருவரங்கச் செல்வனார்* 
பேசியிருப்பனகள்* பேர்க்கவும் பேராவே| (2)  

046. திவ்ய ப்ரபந்தம் - 615 - அவரது ஊர் அரங்கமே
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கண்ணாலம் கோடித்துக்* கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்* 
திண் ஆர்ந்து இருந்த* சிசுபாலன் தேசு அழிந்து* 
அண்ணாந்து இருக்கவே* ஆங்கு அவளைக் கைப்பிடித்த* 
பெண்ணாளன் பேணும் ஊர்* பேரும் அரங்கமே|

047. திவ்ய ப்ரபந்தம் - 616 - அவர் சொல் பொய்க்காது
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
செம்மை உடைய* திருவரங்கர் தாம் பணித்த* 
மெய்ம்மைப் பெரு வார்த்தை* விட்டுசித்தர் கேட்டிருப்பர்* 
தம்மை உகப்பாரைத்* தாம் உகப்பர் என்னும் சொல்* 
தம்மிடையே பொய்யானால்* சாதிப்பார் ஆர் இனியே| (2) 

குலசேகராழ்வார்

048. திவ்ய ப்ரபந்தம் - 647 - கண்கள் திருவரங்கனைக் கண்டு என்று களிக்குமோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி* 
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த*
அரவு அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும்* 
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி* 
திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்*
கரு மணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு* 
என் கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே? (2)

049. திவ்ய ப்ரபந்தம் - 648 - பள்ளி கொண்டானை வாயார என்று வாழ்த்துவேனோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த* 
வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்* 
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை* 
கடி அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
மாயோனை மணத்தூணே பற்றி நின்று* 
என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே|

050. திவ்ய பிரபந்தம் - 649 – அரங்கனடியார்களோடு நெருங்கி வார்வேனோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி* 
ஈரிரண்டு முகமும் கொண்டு*
எம்மாடும் எழிற் கண்கள் எட்டினோடும்* 
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற* 
செம்பொன் அம்மான் தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* 
அணி அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
அம்மான் தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு* 
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே|

051. திவ்ய பிரபந்தம் - 650 – அரங்கனை அருச்சிக்கும் நாள் எந்நாளோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை* 
வேலை வண்ணனை என் கண்ணனை* 
வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர் ஏற்றை* 
அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப் பாவினை* 
அவ் வடமொழியை பற்று அற்றார்கள்* 
பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்* 
கொய்ம் மலர் தூய் என்று கொலோ கூப்பும் நாளே|

052. திவ்ய பிரபந்தம் - 651 – மணிவண்ணனை வணங்கும் நாள் எந்நாளோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி* 
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த*
துணையில்லாத் தொல் மறை நூல் தோத்திரத்தால்* 
தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த*
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ* 
மதில் அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
மணிவண்ணன் அம்மானைக் கண்டு கொண்டு* 
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் – 1 - திருப்பல்லாண்டு 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 1 - பல்லாண்டு வாழ்க
திருப்பல்லாண்டு - முதலாம் பாசுரம் 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பல கோடி நூறாயிரம்*
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா!* 
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு| (2)


அழகு முதலிய கல்யாண குணங்களுடன் கூடிய எம்பெருமானை, இந்த ஸம்ஸாரத்திலே கண்டு, அந்த எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயந்து, கால தத்வம் உள்ளவரை இப்படியே நன்றாக இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.

  • பல் ஆண்டு பல் ஆண்டு - பல பல வருஷங்களிலும் 
  • பல் ஆயிரத்து ஆண்டு - அநேக ப்ரஹ்ம கல்பங்களிலும் 
  • பல கோடி நூறு ஆயிரம் - இப்படி உண்டான காலமெல்லாம் 
  • மல் ஆண்ட - சாணூரன் முஷ்டிகன் ஆகிய மல்லர்களை வீழ்த்திய
  • திண் தோள் - வலிமை மிக்கத்  தோள்களை உடையனாய் 
  • மணி வண்ணா - நீல மணிபோன்ற திருநிறைத்தை உடையனானவனே!
  • உன் - உன்னுடைய 
  • செவ்வடி - சிவந்த திருவடிகளினுடைய 
  • செவ்வி - அழகுக்கு 
  • திருக்காப்பு - எக்குறையும் ஏற்படாததாக குறைவற்ற ரக்ஷை உண்டாயிடுக

வைகுண்டநாதனும், சர்வலோக ரக்க்ஷகனுமான எம்பெருமானுக்கே மங்களாஸாஸநம் பாடுகிறார் பெரியாழ்வார். நீல நிற மணி போன்ற எம்பெருமானுக்கு எந்த வகையிலும் ஆபத்து வந்து விடக் கூடாதே என்கிற அச்சத்தினால் விளைந்தது தான் இப்பல்லாண்டு பாசுரங்கள். மல்லர்களை அடக்கிக் கொன்ற பலம் பொருந்திய திருத்தோள்களையும் மாணிக்கத்தைப் போன்ற நிறத்தையும் உடைய எம்பெருமானே! உன்னுடைய சிவந்த திருவடிகளுக்குப் காலம் உள்ளவரை குறைவற்ற ரக்ஷை இருக்க வேண்டும். ஆழ்வார், முதலில் மனிதர்களின் காலக் கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, பிறகு தேவர்களின் காலக் கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, பிறகு ப்ரஹ்மாவின் காலக் கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, இறுதியாக பல பல ப்ரஹ்மாக்களின் காலக் கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, காப்பிடுகிறார் (ரக்ஷை செய்கிறார்). ஆழ்வாருக்கு எம்பெருமானிடம் இருக்கும் அலாதியான பிரேமையையும், பக்தியையுமே காட்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 9

யம் ப்³ரம்ஹா வருணேந்த்³ர ருத்³ர மருதஸ், 
ஸ்துன் வந்தி தி³வ்யைஸ் ஸ்தவைஹி
வேதை³ஸ் ஸாங்க³ பத³ க்ரமோப நிஷதை³ர், 
கா³யந்தி யம் ஸாம கா³ஹ|
த்⁴யானா வஸ்தி² ததத்³ க³தேன மனஸா, 
பஷ்யந்தி யம் யோகி³ னஹ
யஸ் யாந்தம் ந விது³ஸ் ஸுரா ஸுர க³ணாஹ, 
தே³வாய தஸ்மை நமஹ|| 

இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனை பரப்ரம்மமாகவே வந்தனை செலுத்துகிறார். பிரம்ம ருத்ரன் வருணன் இந்திரன் வாயு முதலியோர் யாரை திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ, சாம வேத கானம் செய்வோர் வேதாங்கங்கள், உபநிஷத் இவைகளுடன் கூடிய வேதத்தால் கானம் செய்கிறார்களோ, யோகிகள் த்யானத்தின் மூலம் மனதால் யாரைப் பார்க்கிறார்களோ எவருடைய ஆதியும் அந்தமும் தேவர்களும் அசுரர்களும் அறியார்களோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

கீதா ஸுகீதா கர்தவ்யா கிமந்யை: 
ஸாஸ்த்ர ஸங்க் ரஹைஹி|
யா ஸ்வயம் பத்ம நாபஸ்ய, 
முகபத் மாத் விநி:ஸ்ருதா||

ஸ்ரீ கீ³தா பூர்ண ஸ்லோகம்
பூர்ண மதஹ் பூர்ண மிதம், 
பூர்ணாத் பூர்ண முதச்யதே, 
பூர்ணஸ்ய பூர்ண மாதாய,
பூர்ண மேவ அவ சிஷ்யதே, 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்