About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி தனியன் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தனியன் 3

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை 
(இரு விகற்ப நேரிசை வெண்பா)

பாண்டியன் கொண்டாடப்* 
பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்து ஊத* 
வேண்டிய வேதங்கள் ஓதி* 
விரைந்து கிழி அறுத்தான்* 
பாதங்கள் யாமுடைய பற்று|

  • பாண்டியன் - ஸ்ரீ வல்லப தேவன் எனகிற பாண்டிய ராஜன்
  • கொண்டாட - மேன்மேல் ஏத்த
  • பட்டர்பிரான் - ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
  • வந்தான் என்று - எழுந்து அருளினான் என்று
  • ஈண்டிய - கூடின அநேகமான
  • சங்கம் எடுத்து - சங்குகளைக் கொண்டு
  • ஊத - அநேகர் சப்திக்க
  • வேண்டிய - அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
  • வேதங்கள் - வேதார்தங்களை
  • ஓதி - தெரியச் சொல்லி
  • விரைந்து- தாமசியாமல்
  • கிழி - வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
  • யறுத்தான் - அறுத்தவனுடைய
  • பாதங்கள் - திருவடிகளே
  • யாமுடைய - நாங்கள் ஆஸ்ரயமாக உடைய

பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் “நமக்குப் பரதத்வ நிர்ணயம் பண்ணிக் கொடுக்க பட்டர்பிரான் வந்தார்” என்று கொண்டாட, அங்கிருந்தவர்கள் சங்கங்களை முழங்கி வெற்றி கோஷமிடும்படி, வேதத்தில் தேவையான ப்ரமாணங்களை எடுத்து விளக்கி ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தை நிலை நாட்டி, பொற்கிழி அறுந்து விழும்படி செய்த பெரியாழ்வாரின் திருவடிகளே நமக்குத் தஞ்சம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment