About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 4

குலசேகராழ்வார்

053. திவ்ய ப்ரபந்தம் - 652 - என் மனம் உருகும் நாள் எந்நாளோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு* 
ஏனை அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் உந்தித்* 
திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறிக்* 
கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும்*
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டு கொண்டு* 
என் உள்ளம் மிக என்று கொலோ உருகும் நாளே|

054. திவ்ய ப்ரபந்தம் - 653 - அரங்கனைக் கண்டு அகம் நெகிழ்தல் எந்நாளோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி* 
வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம் துறந்து* 
இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண்* 
நிலை நின்ற தொண்டரான*
அறம் திகழும் மனத்தவர் தம் கதியை பொன்னி* 
அணி அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்* 
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே|

055. திவ்ய ப்ரபந்தம் - 654 - அரவணையானைக் கண்டு இன்பக் கலவி எய்துவேனோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்* 
கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்* 
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்* 
கடும் பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப*
சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த* 
திருவரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்* 
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி* 
வல்வினையேன் என்று கொலோ வாழும் நாளே|

056. திவ்ய ப்ரபந்தம் - 655 - திருவரங்கத்தில் துள்ளிப் புரள வேண்டும்
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித்* 
திருப்புகழ்கள் பலவும் பாடி* 
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்* 
மழை சோர நினைந்து உருகி ஏத்தி* 
நாளும் சீர் ஆர்ந்த முழவுஓசை பரவை காட்டும்* 
திருவரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்* 
போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்* 
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே|

057. திவ்ய ப்ரபந்தம் - 656 - அரங்கன் அடியார்களுடன் அமரும் நாள் என்று?
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய* 
மண் உலகில் மனிசர் உய்ய*
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர* 
அகம் மகிழும் தொண்டர் வாழ *
அன்பொடு தென் திசை நோக்கிப் பள்ளி கொள்ளும்* 
அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு* 
யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே| (2)

058. திவ்ய ப்ரபந்தம் - 657 - நாரணன் அடிக்கீழ் நலமுற நண்ணுவர்
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டுத்* 
திருவரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்* 
கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னைக்* 
கண்ணாரக் கண்டு உகக்கும் காதல் தன்னால்*
குடை விளங்கு விறல் தானைக் கொற்ற ஒள் வாள்* 
கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த* 
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்* 
நலந்திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே| (2)

059. திவ்ய ப்ரபந்தம் - 658 - கண் பெற்ற பயன்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தேட்டு அருந் திறல் தேனினைத்* தென் அரங்கனைத்* 
திருமாது வாழ் வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி* 
மால் கொள் சிந்தையராய்* 
ஆட்டம் மேவி அலந்து அழைத்து* அயர்வு எய்தும் மெய்யடியார்கள் தம்* 
ஈட்டம் கண்டிடக் கூடு மேல்* அது காணும் கண் பயன் ஆவதே| (2)

060. திவ்ய ப்ரபந்தம் - 659 - கங்கா ஸ்நானத்தை விடச் சிறந்தது
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தோடு உலா மலர் மங்கை தோளிணை தோய்ந்ததும்* சுடர் வாளியால்* 
நீடு மா மரம் செற்றதும்* நிரை மேய்த்ததும் இவையே நினைந்து*
ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும்* 
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில்* 
கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை* என் ஆவதே?

061. திவ்ய ப்ரபந்தம் - 660 - தொண்டர் அடிச்சேற்றைச் சென்னியில் அணிவேன்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்* முன் இராமனாய்* 
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்* சொல்லிப் பாடி* 
வண் பொன்னிப் பேர் ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு* 
அரங்கன் கோயில் திருமுற்றம்* 
சேறு செய் தொண்டர் சேவடிச்* செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே|

062. திவ்ய ப்ரபந்தம் - 661 - என் மனம் தொண்டர்களையே வாழ்த்தும்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்* 
உடன்று ஆய்ச்சி கண்டு* 
ஆர்த்த தோள் உடை எம்பிரான்* என் அரங்கனுக்கு அடியார்களாய்*
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து* மெய் தழும்பத் தொழுது ஏத்தி* 
இன்பு உறும் தொண்டர் சேவடி* ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே|

063. திவ்ய ப்ரபந்தம் - 662 - தொண்டர்களை நினைத்து என் மெய் சிலிர்க்கிறது
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பொய் சிலைக் குரல் ஏற்று எருத்தம் இறுத்தப்* போர் அரவு ஈர்த்த கோன்* 
செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்* திண்ண மா மதில் தென் அரங்கனாம்*
மெய் சிலைக் கருமேகம் ஒன்று* தம் நெஞ்சில் நின்று திகழப் போய்* 
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என் மனம் மெய் சிலிர்க்குமே|

064. திவ்ய ப்ரபந்தம் - 663 - தொண்டர்களையே என் மனம் பக்தி செய்யும்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன* வானவர் தம்பிரான்* 
பாத மா மலர் சூடும் பத்தி இலாத* பாவிகள் உய்ந்திடத்* 
தீதில் நன்னெறி காட்டி* எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே* 
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்* காதல் செய்யும் என் நெஞ்சமே|

065. திவ்ய ப்ரபந்தம் - 664 - அரங்கன் அடியாருக்கே அன்பு காட்டுவேன்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
கார் இனம் புரை மேனி நற் கதிர் முத்த* வெண்ணகைச் செய்ய வாய்*
ஆர மார்வன் அரங்கன் என்னும்* அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்*
சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து* கசிந்து இழிந்த கண்ணீர்களால்*
வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே|

066. திவ்ய ப்ரபந்தம் - 665 - தொண்டர்களிடமே என் மனம் மயங்கியது
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மாலை உற்ற கடற் கிடந்தவன்* வண்டு கிண்டு நறுந்துழாய்*
மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை* மலர்க் கண்ணனை*
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்* திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு* மாலை உற்றது என் நெஞ்சமே|

067. திவ்ய ப்ரபந்தம் - 666 - தொண்டர்கள் பித்தர்கள் அல்லர்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப* ஏங்கி இளைத்து நின்று* 
எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து* ஆடிப் பாடி இறைஞ்சி* 
என்அத்தன் அச்சன் அரங்கனுக்கு* அடியார்கள் ஆகி* 
அவனுக்கே பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்* மற்றையார் முற்றும் பித்தரே|

068. திவ்ய ப்ரபந்தம் - 667 - அடியார்க்கு அடியார் ஆவர்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
அல்லி மா மலர் மங்கை நாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம்* 
எல்லை இல் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்* 
கொல்லி காவலன் கூடல் நாயகன்* கோழிக் கோன் குலசேகரன்*
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்* தொண்டர் தொண்டர்கள் ஆவரே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment