About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 3 February 2024

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 105

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 75

ஸத்³க³திஸ் ஸத் க்ருதிஸ் ஸத்தா 
ஸத்³ பூ⁴திஸ் ஸத் பராயண:|
ஸூர ஸேநோ யது³ ஸ்ரேஷ்ட³ஸ் 
ஸந் நிவாஸஸ் ஸுயா முந:||

  • 704. ஸத்³க³திஸ் - சாதுகளுக்குப் புகலிடமாயிருந்து காப்பவர். நன்மைக்கான சரியான பாதையை வழங்குபவர். உயர்ந்த புத்தி உள்ளவர். நல்லவர்களால் அடையக் கூடியவர்.
  • 705. ஸத் க்ருதிஸ் - விந்தையான செயல்களைச் செய்பவர். அன்பான செயல்கள் மற்றும் நல்ல செயல்கள் நிறைந்தவர்.
  • 706. ஸத்தா - உலகம் உளதாவதற்குக் காரணமானவர். தூய்மையான இருப்பைக் கொண்டவர்.
  • 707. ஸத்³ பூ⁴திஸ் - சாதுக்களுக்கு ஐஸ்வர்யமாக உள்ளவர். அவர் எல்லா வடிவங்களிலும், நல்லவர்களுக்கான செல்வம். வளமான மகிமைகளை உடையவர். 
  • 708. ஸத் பராயணஹ - சாதுக்களைத் தனக்கு உயிராக உள்ளவர். நன்மைக்கான ஆதரவு. நன்மைக்கான உச்ச இலக்கு. 
  • 709. ஸூர ஸேநோ - சூரர்களைச் சேனையாக உடையவர். 
  • 710. யது³ ஸ்ரேஷ்ட³ஸ் -  யது குல திலகன். யாதவர்களில் முதன்மையானவர்.
  • 711. ஸந் நிவாஸஸ் - சாதுக்களுக்கு இருப்பிடமாக உள்ளவர். புனிதர்களின் இருப்பிடம்.
  • 712. ஸுயா முநஹ - யமுனைத் துறைவர். ஆன்மாக்களை மங்களகரமான முறையில் உயர்த்துபவர். யமுனை நதியில் விளையாட்டில் மகிழ்ந்தவர். கண்களில் அழகான கோலிரியம் (காஜல்) உள்ளது. பிரளய காலத்தில் ஜீவர்களை உயர்த்தி பாதுகாப்பவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.42

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.42 

யாமி மாம் புஷ்பி தாம் வாசம் 
ப்ரவ த³ந்த்ய விபஸ்² சித:|
வேத³ வாத³ ரதா: பார்த² 
நாந் யத³ஸ் தீதி வாதி³ந:||

  • யாம் இமாம் - இவ்வெல்லா 
  • புஷ்பிதாம் - மலர் போன்ற 
  • வாசம் - சொற்கள் 
  • ப்ரவ த³ந்தி - கூறுகின்றன 
  • அபி பஸ்² சிதஹ - சிற்றறிவுடையோர் 
  • வேத³ வாத³ ரதாஃ - வேதங்களை பின்பற்றுவோர் எனக் கூறப்படுபவர் 
  • பார்த² - பிருதாவின் மகனே 
  • ந - என்றுமில்லை 
  • அந்யத்³ - வேறேதும் 
  • அஸ்தி - உள்ளது 
  • இதி - இவ்வாறாக 
  • வாதி³ நஹ - வாதிடுபவர்கள்

பார்த்தா! வேதங்களின் புகழ்பெற்ற வார்த்தைகளில் மகிழ்ச்சி அடைகிறார்கள் சிலர், பூக்களைப் போன்ற அலங்காரச் சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழை என்கிறார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.3.40

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்ருதீயோ அத்⁴யாய꞉||
||பகவதஸ்² சதுர் விம்ஸ²த் யவதாராணாம் 
ஸம்க்ஷேபதோ வர்ணம்||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||மூன்றாம் அத்யாயம்||
||ஸ்ரீ பகவானது திரு அவதாரங்களைக் கூறுதல்||

ஸ்லோகம் - 1.3.40

இத³ம் பா⁴க³வதம் நாம 
புராணம் ப்³ரஹ்ம ஸம்மிதம்|
உத்தம ஸ்²லோக சரிதம் 
சகார ப⁴க³வாந் ருஷி:||

  • உத்தம ஸ்²லோக சரிதம் - புண்ணிய புருஷரது சரிதத்தை உடையதும்
  • ப்³ரஹ்ம ஸம்மிதம் - வேத துல்லியமானதும்
  • பா⁴க³வதம் நாம - ஸ்ரீமத் பாகவதம் என்கிற
  • இத³ம் புராணம் - இந்த புராணத்தை
  • ப⁴க³வாந் - பகவத் ஸ்வரூபரான
  • ருஷிஹி - வ்யாஸர் என்ற மஹரிஷி
  • சகார - செய்தார்

இந்த புராணம் 'ஸ்ரீமத் பாகவதம்' என்றழைக்கப்படுகிறது. இது வேதத்திற்குச் சமமானது. மேலான புகழ் வாய்ந்த பகவானுடைய திரு விளையாடல்களைத் தன்னுள் கொண்டது. இதை வியாச மகாமுனிவர் அருளிச் செய்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.40

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.40

ராமஸ்து புநரா லக்ஷ்ய 
நாக³ ரஸ்ய ஜநஸ்ய ச|
தத்ராக³மநமே காக்³ரோ 
த³ண்ட³காந் ப்ரவி வேஸ² ஹ|| 

  • ஏகாக்³ர - ஒரே உறுதியை உடையவரான
  • ராமஸ்து -  ஸ்ரீ ராமர்
  • தத்ர -  அவ்விடத்தில்
  • நாக³ ரஸ்ய - பட்டணத்து
  • ஜநஸ்ய - ஜனங்களுடைய
  • புநரா ச -  மறுபடியும்
  • ஆக³மநம் -  வரவை
  • ஆலக்ஷ்ய -  எதிர்பார்த்து
  • த³ண்ட³காந் - தண்டகாரண்யத்தை
  • ப்ரவி வேஸ² ஹ - ப்ரவேசித்தார்

ஒரே உறுதியை உடையவரான ராமன், குடிமக்கள் மீண்டும் மீண்டும் சித்ரகூடத்திற்கு வருவார்கள் என்றெண்ணி,  குவிந்த கவனத்துடன் தனித்து இருப்பதற்காகத் தண்டக வனத்திற்குள் நுழைந்தார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 85 - பெரியாழ்வார் திருமொழி - 1.6.11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 85 - பாவங்கள் அழியும்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - பதினொன்றாம் பாசுரம்

தரவு கொச்சகக் கலிப்பா

ஆட் கொள்ளத் தோன்றிய* 
ஆயர் தம் கோவினை* 
நாட் கமழ் பூம்பொழில்* 
வில்லிபுத்தூர்ப் பட்டன்* 
வேட்கையால் சொன்ன* 
சப்பாணி ஈரைந்தும்* 
வேட்கையினால் சொல்லுவார்* 
வினை போதுமே| (2)

  • ஆள் கொள்ள - அனைவரையும் அடிமை படுத்திக் கொள்வதற்காக
  • தோன்றிய - திரு ஆய்ப்பாடியிலேயே திருவவதரித்த 
  • ஆயர் தம் கோவினை - இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
  • நாள் - நாள்தோறும்
  • கமழ் - மணம் வீசுகின்ற
  • பூ - புஷ்பங்கள் நிறைந்துள்ள
  • பொழில் - சோலைகளாலே சூழ்ந்த
  • வில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
  • பட்டன் - பெரியாழ்வார்
  • வேட்கையினால் - ஆசையினால்
  • சொன்ன - அருளிச் செய்த
  • சப்பாணி - சப்பாணி கொட்டுதலைக் கூறிய 
  • ஈர் ஐந்தும் - பத்துப் பாசுரங்களையும்
  • வேட்கையினால் - இஷ்டத்தோடு
  • சொல்லுவார் - அனுசந்திப்பவர்களிளுடைய
  • வினை - பாபங்கள் (துன்பங்கள்)
  • போம் - தானாகவே அழிந்து போய் விடும் 

அனைவரையும் அடிமை படுத்திக் கொள்வதற்காக  திரு ஆய்ப்பாடியிலேயே அவதரித்தவனும்,  இடையர்களின் தலைவனுமான திருக்கண்ணபிரான் சப்பாணி கொட்டி அநுக்கிரகம் செய்ததை, நாள்தோறும் மணம் கமழும் பூக்களால் திகழும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெரியாழ்வார் ஆசையினால் அருளிச் செய்த இப்பத்து சப்பாணி பாசுரங்களை அன்போடு சொல்லுபர்வகளின் பாபங்கள் விலகும்.

அடிவரவு: மாணிக்கம் பொன் பன் தூநிலா புட்டியில் தாரித்து கரந்து குரக்கினம் அளந்து அடைந்து ஆட்கொள்ள - தொடர்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 024 - திருசிறுப்புலியூர் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

024. திருசிறுப்புலியூர் (திருவாரூர்)
இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ கிருபா சமுத்திரப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ திருமாமகள் தாயார் ஸமேத ஸ்ரீ அருள்மாகடல் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: அருள்மா கடல் அமுதன் 
  • பெருமாள் உற்சவர்: ஸ்தல ஸயனன், கிருபா சமுத்திரன் 
  • தாயார் மூலவர்: திருமாமகள்
  • தாயார் உற்சவர்: தயாநாயகி
  • திருமுக மண்டலம் திசை: தெற்கு
  • திருக்கோலம்: புஜங்க ஸயனம்
  • புஷ்கரிணி: மானச 
  • தீர்த்தம்: திருவனந்த  
  • விமானம்: நந்த வர்த்தன
  • ஸ்ஸ்தல விருக்ஷம்: வில்வம்
  • ப்ரத்யக்ஷம்: வ்யாஸ முனி, பால வ்யாக்ர முனி
  • ஆகமம்: பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த ஸ்தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் ஸ்தலமான ஸ்ரீரங்கமும், 11வது ஸ்தலமான திருச்சிறுபுலியூருமே அவை. ஸ்ரீரங்கத்தில் மிகப் பெரிய வடிவில் ஸயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக ஸயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். நடராஜரை வணங்கும் வியாக்ர பாதரும், பதஞ்சலியும் மூலஸ்தானத்திலேயே உள்ளனர்.

புலிக்கால் முனிவராகிய வியாக்ர பாதர் தில்லை நடராஜப் பெருமானிடம் பல்லாண்டு காலம் தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான், சிறுபுலியூர் சென்று பெருமாளை வணங்க ஆணை இட்டார். அதன்படி இந்த ஸ்தலம் வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் அவருக்கு முக்தி கொடுத்து மூலஸ்தானத்தில் தன் அருகில் வைத்து கொண்டார். நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும் (ஆதிசேஷன்), வியாக்ர பாதரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கன்வ முனிவருக்கும் இந்த ஸ்தலத்தில் பெருமாள் அனுக்கிரஹம் புரிந்தார். இந்த ஸ்தலத்தில் ஆதிசேஷனுக்கும் தனி கோயில் உள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட ஸ்தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில், ஸயன நிலையில் உள்ளார்.

புலிக்கால் முனிவராகிய வியாக்ர பாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக ஸயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இந்த ஸ்தலம் "திருச்சிறுபுலியூர்' எனப்படுகிறது.

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்க ஆதிசேஷன் இந்த ஸ்தல பெருமாளை நோக்கி தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகாதசி தினத்தன்று ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்தார். அத்துடன் ஆதிசேஷனை அனந்த ஸயனமாக்கி கொண்டு, குழந்தை வடிவில் ஸயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

லீலை கண்ணன் கதைகள் - 96

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுதாமரின் மனநிலை|

அப்பொழுது மாளிகையிளிருந்து அவர் மனைவி ஓடி வந்து, அவர் காலில் விழுந்து கண்ணீர் விட்டாள், அவள் மிகவும் அழகாக மாறி, மிகவும் உயர்ந்த உடைகள் அணிந்திருப்பதைப் பார்த்தார். அந்த வீடு இந்திரனுடைய மாளிகை போலச் செல்வச் செழிப்புடன் ஒளி வீசியது. மிக்க விலையுயர்ந்த பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 


ஆனால் சுதாமர் இந்தப் பொருள்களை கண்டு மயங்கவில்லை. கிருஷ்ணரோடு தாம் இருந்த நேரங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று கிடைத்த இந்தப் பொருள்களை விடக் கிருஷ்ணருடைய கமல பாதங்களைத் தியானிப்பதே அவருக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. அவருடைய மனைவியும் மிகுந்த உத்தமி. அவளும் கிருஷ்ணரைத் தியானிப்பதில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது என்று அறிந்து கொண்டாள். 


ஆகவே பகவத் அனுக்கிரகம் பெற்ற இந்தத் தம்பதிகள், திரண்ட செல்வத்திற்கு இடையே இருந்தாலும், இப்பொழுதும் கிருஷ்ணரையே தியானித்துக் கொண்டு, மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 49

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

படைப்பின் முறை

ஸ்கந்தம் 02

தனித்து நீரில் யோக சயனத்தில் இருந்த விராட் புருஷன் விழித்துக் கொண்டதும், ஒவ்வொரு அங்கமும் செயல் படுவதற்கேற்ப அவற்றின் அதிஷ்டான தேவதைகளும், புலன்களின் சக்திகளும் உயிர் பெறுகின்றன. 


அவர் பார்க்க நினைத்த போது சூரியன் தோன்றினான். அவரே கண்ணின் அதிஷ்டான தேவதை. கரங்களை அசைத்த போது அவற்றின் அதிஷ்டான தேவதையான இந்திரன் தோன்றினான். மாயை பற்றி நினைத்த போது இதயமும் அதை ஒட்டி மனமும், அதன் அதிஷ்டான தேவதையான சந்திரனும் தோன்றின. இவ்வாறு ஒவ்வொரு தேவதையாக விராட் புருஷனின் செயல்பாடுகளுக்கேற்பத் தோன்றின.

இவ்வுருவத்திற்கப்பாலும் இறைவன் சூக்ஷ்ம ரூபமாக நீக்கமற நிறைந்திருக்கிறான். அது சொல்லுக் கெட்டாதது. மனத்திற்கும் எட்டாதது. இறைவனின் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்கள் இரண்டுமே மாயையின் தோற்றங்கள். உண்மையில் இறைவன் தானாக எச்செயலும் செய்வதில்லை. மாயையைக் கொண்டே அத்தனை செயல்களையும் நிகழ்த்துகிறான்.

ப்ரும்மா விராஜன் என்ற உருவிலும், வாச்யன் (சொல்லப்படுபவன்), வாசகன் (சொல்பவன்) என்ற உருவிலும் விளங்குகிறார். அதாவது சொல், பொருள் இரண்டு உருவிலும் இருக்கிறார். இன்னும் பல திருமேனிகளையும், திருப் பெயர்களையும் கொள்கிறார்.

மரீசி முதலிய ப்ரஜாபதிகள், மனுக்கள், தேவர்கள், ரிஷிகள், பித்ரு தேவதைகள், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள்,  வித்யாதரர்கள், குஹ்யகர்கள், கின்னரர்கள், அப்ஸரஸ்கள், நாகர்கள், சர்ப்பங்கள், கிம்புருஷர்கள், உரகர்கள், மாத்ரு தேவதைகள், அரக்கர்கள், பிசாசர்கள், ப்ரேதங்கள், விநாயகர்கள், கூஷ்மாண்டர்கள், உன்மாதர்கள், வேதாளர்கள், யாதுதானர்கள், கிரகங்கள், பறவைகள், விலங்குகள், பசுக்கள், மரங்கள், செடி கொடிகள், மலைகள், ஊர்வன, அசைவன, அசையாதன, கருவில் தோன்றுவன, முட்டையிலிருந்து வெளிவருவன, அழுக்கிலிருந்து தோன்றும் புழுக்கள், நீர், நிலம் ஆகாயத்தில் வசிப்பன அனைத்தையும் ப்ரும்மாவே படைக்கிறார்.

இவற்றில் சான்றோர்களிடம் ஸத்வ குணமும், தீயோர்களிடம் தமோ குணமும், இரண்டும் கெட்டு நடுவிலிருப்போரிடம் குணக் கலப்பும் இருப்பது அவரவரின் பாவ புண்ய கர்மாக்களினாலேயே ஆகும். ஸத்வ, ரஜஸ், தமஸ் அடிப்படையில் மூன்று இடங்கள் உள்ளன. அவை, தேவர்கள் அனுபவிக்கும் ஸ்வர்கம், மனிதர் அனுபவிக்கும், செல்வம் மக்கள் முதலியவை, நரகம் ஆகியவை.  இவற்றிலும் குண பேதங்களால் பிரிவுகள் உண்டு.

இறைவனே உலகைக் காக்க அறமே உருவெடுத்த மஹா விஷ்ணுவாகவும், மீனம், வராகம் போன்றவையாகவும், ராமன் கிருஷ்ணன் போன்ற மானுட வடிவிலும் அவதாரம் செய்கிறார். இறைவன் ப்ரளய காலத்தில் காலாக்னி ருத்ர ரூபியாகவும் இருந்து தம்மிடம் தோன்றிய ப்ரபஞ்சத்தைத் தானே சிதறடிக்கிறார். இப்படியெல்லாம் சொன்ன போதிலும், வேதங்களாலும், சான்றோர்களாலும் இறைவனின் மகிமைகளையும், ஸ்வரூபத்தையும் முழுதும் கூற இயல்வதில்லை. பகவானே எல்லாவற்றையும் செய்வதாகக் கூறும் வேதங்கள், பின்பு, அவையனைத்தும் மாயையின் செயல், பகவானிடம் ஏற்றிச் சொல்லப்பட்டது என்கின்றன.

கல்பம் என்பது இருவிதங்கள். ஒன்று ப்ரும்மாவின் ஆயுள் காலம் முடியும் வரை உள்ள மஹா கல்பம். இன்னொன்று ப்ரும்மாவின் பகல் பொழுது முடியும் வரை உள்ள அவாந்தர கல்பம். இதுவரை சொன்னது இரண்டு கல்பங்களின் துவக்கத்திலும் நிகழ்பவை. எல்லா கல்பங்களிலும் படைப்பு என்பது ஒரே மாதிரி தான் நிகழும்.  மஹா கல்பத்தில் ப்ரக்ருதி, மஹத் என்பவற்றிலிருந்து துவங்குகிறது. அவாந்தர கல்பத்தில் ஜீவராசிகளிலிருந்து படைப்பு துவங்குகிறது. ஒன்று புதிதாகத் துவங்குவது. மற்றொன்று திருத்தியமைப்பது. இதன் பின் சௌனகர் விதுரரின் தீர்த்த யாத்திரை பற்றி வினவுகிறார்.

இரண்டாவது ஸ்கந்தம் முற்றிற்று.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்