||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
024. திருசிறுப்புலியூர் (திருவாரூர்)
இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ கிருபா சமுத்திரப் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ திருமாமகள் தாயார் ஸமேத ஸ்ரீ அருள்மாகடல் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: அருள்மா கடல் அமுதன்
- பெருமாள் உற்சவர்: ஸ்தல ஸயனன், கிருபா சமுத்திரன்
- தாயார் மூலவர்: திருமாமகள்
- தாயார் உற்சவர்: தயாநாயகி
- திருமுக மண்டலம் திசை: தெற்கு
- திருக்கோலம்: புஜங்க ஸயனம்
- புஷ்கரிணி: மானச
- தீர்த்தம்: திருவனந்த
- விமானம்: நந்த வர்த்தன
- ஸ்ஸ்தல விருக்ஷம்: வில்வம்
- ப்ரத்யக்ஷம்: வ்யாஸ முனி, பால வ்யாக்ர முனி
- ஆகமம்: பாஞ்சராத்ரம்
- ஸம்ப்ரதாயம்: தென் கலை
- மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
- பாசுரங்கள்: 10
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த ஸ்தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் ஸ்தலமான ஸ்ரீரங்கமும், 11வது ஸ்தலமான திருச்சிறுபுலியூருமே அவை. ஸ்ரீரங்கத்தில் மிகப் பெரிய வடிவில் ஸயனித்திருக்கும் பெருமாள், திருச்சிறுபுலியூரில் பாலகனாக ஸயனத்தில் உள்ளார் என்பது இன்னொரு விசேஷம். நடராஜரை வணங்கும் வியாக்ர பாதரும், பதஞ்சலியும் மூலஸ்தானத்திலேயே உள்ளனர்.
புலிக்கால் முனிவராகிய வியாக்ர பாதர் தில்லை நடராஜப் பெருமானிடம் பல்லாண்டு காலம் தவமிருந்து முக்தி வேண்டினார். இவரது வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான், சிறுபுலியூர் சென்று பெருமாளை வணங்க ஆணை இட்டார். அதன்படி இந்த ஸ்தலம் வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் அவருக்கு முக்தி கொடுத்து மூலஸ்தானத்தில் தன் அருகில் வைத்து கொண்டார். நடராஜரின் அருகில் இருக்கும் பதஞ்சலியும் (ஆதிசேஷன்), வியாக்ர பாதரும் மூலஸ்தானத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கன்வ முனிவருக்கும் இந்த ஸ்தலத்தில் பெருமாள் அனுக்கிரஹம் புரிந்தார். இந்த ஸ்தலத்தில் ஆதிசேஷனுக்கும் தனி கோயில் உள்ளது. பெருமாள் பள்ளி கொண்ட ஸ்தலங்களில் இங்கு மட்டும் தான் குழந்தை வடிவில், ஸயன நிலையில் உள்ளார்.
புலிக்கால் முனிவராகிய வியாக்ர பாதர் வழிபட்டதாலும், பெருமாள் அவருக்கு பாலனாக ஸயன கோலத்தில் காட்சி தந்ததாலும் இந்த ஸ்தலம் "திருச்சிறுபுலியூர்' எனப்படுகிறது.
முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் பகை ஏற்பட்டது. இந்த பகை நீங்க ஆதிசேஷன் இந்த ஸ்தல பெருமாளை நோக்கி தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம், வளர்பிறை ஏகாதசி தினத்தன்று ஆதிசேஷனுக்கு காட்சி கொடுத்தார். அத்துடன் ஆதிசேஷனை அனந்த ஸயனமாக்கி கொண்டு, குழந்தை வடிவில் ஸயன கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment